Friday, 8 August 2025

ஜீன் திருத்தம் -

 நூல் : ஜீன் திருத்தம்

ஆசிரியர் : ஈ. கோலை 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 99

பக்கங்கள் 45



ஜீன் திருத்தும் என்றதுமே கொஞ்சம் கடினமான புத்தகமாக இருக்குமோ என்ற எண்ணத்துடனே வாசிக்க ஆரம்பித்தேன். எனக்கும்  அறிவியலுக்கும் அவ்வளவு தூரம். புரியாத ஒரு புதிராகவே தான் இருக்கும். ஆனால் ஆசிரியர் இந்த புத்தகத்தினை மிக எளிய தமிழில் சுலபமாக வாசிக்கும் வகையில் மிக அற்புதமாகப் படைத்திருக்கிறார்.

இந்த நூலினை வாசித்ததில் தெரிந்து கொண்டது பல புதிய  அறிவியல் சார்ந்த வார்த்தைகள் மற்றும் ஜீன் பற்றிய பல்வேறு விதமான விவரங்களுடன் பல்வேறு புதிய தகவல்கள் அறிந்துகொள்ளமுடிந்தது.

இத்தகைய ஜீன் பிழைகளைத் திருத்தப் பாக்டீரியாக்களை டீச்சராக பயன்படுத்தலாம் என்பதுதான் இந்த கண்டுபிடிப்பு நோக்கமாகும் என்கிறார் ஆசிரியர்.

மனிதனின் உடலில் ஏறக்குறைய நூறு ட்ரில்லியன்  செல்கள் இருப்பதாகவும் அப்படியிருக்கும் ஒவ்வொரு செல்லிலும் உட்கரு என்கிற மூளை பகுதி இருக்கும் அதற்குள் தான் குரோமோசோம்கள் இருக்கின்றன எனவும் அந்த குரோமோசோம்களுக்குள்தான் DNA பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது  என்பதை மிக எளிமையாக விளக்கியுள்ளார்.

அறிவியல் என்றாலே ஆராய்ச்சி என்பதும் தான் நமக்கு எல்லோருக்கும் நினைவில் வரும் ஆனால் அவற்றில் அடிப்படை அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் என்றும் இரண்டு வகை உண்டு என்பதை மிக அருமையான விளக்கங்களுடன் விவரித்துள்ளார்.

பாக்டீரியாவிற்கு "பாக்ட்ரியா"  என்ற பெயர் வைத்தற்கு  பின்னால் இருக்கும் சுவாரசியமான தகவல்களையும் தெளிவாக சொல்லியிருக்கிறாரா. கூடவே நம் உடலிலிருக்கும் பாக்டீரியாக்கள் எத்தகையது, மேலும் அது எத்தனை கிலோ இருக்கும் என்பதையும் சொல்லியிருக்கிறார்.

மேலும்,  ஜீன் என்றால் என்ன, பாக்டீரியாக்கள் என்றால்  என்ன என்பது பற்றிய விவரங்களையும் கூடவே ஜீன் திருத்தும் எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதும் அதனால் என்ன என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் என மிக எளிய முறையில் விவரித்துள்ளார்.

மொத்தத்தில் இந்த கண்டுபிடிப்பின் வழியே எதிர்காலத்தில் மரபியல் நோய்களில் இருந்து தப்பிக்கவும் அது வராமலே பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற தகவலுடன் மலேரியா போன்ற நோய்ப்பரப்பும் கடத்திகளான கொசுக்களுக்கு இதனை வைத்து மலேரியா பரவாமல் தடுத்திருக்கிறார்கள் என்கிறார்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

18 ஆகஸ்ட் 2023