Sunday 27 September 2020

கர்துங்லா சென்னையில் இருந்து லடாக்

நூல்          : கர்துங்லா சென்னையில் இருந்து லடாக்

ஆசிரியர்   : இரா.கோகிலா பாபு

பதிப்பு.       : அமேசான் மின்நூல்


இந்த மின்னூலின் வழியே சகோதரி இரா.கோகிலா பாபு சென்னையில் இருந்து லடாக் வரை ஒரு சாலைப் பயணம் நம்மை அழைத்து செலகிறார் வாருங்கள் நாமும் தொடருவோம்....


சாலை வழியாக இவ்வளவு தூரம் சொந்தக் காரில் பயணிப்பதுதான் முதன்மை நோக்கம், என்பதால் சுற்றுலாவை போல் ஆங்காங்கே நிறுத்தி ஊர்சுற்றி பார்த்து விட்டு செல்லும்படி திட்டமிடவில்லை. தங்குமிடத்தையும் முன்கூட்டியே பதிவு செய்யவில்லை. சென்னையிலிருந்து பஞ்சாப். அங்கே வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்வு, அங்கிருந்து லே லடாக்கில் உலகின் உயரமான வாகனம் பயணிக்கும் இடங்களில் ஒன்றான கர்துங்லா பாஸ். இந்த இரண்டு இடங்கள் மட்டுமே கண்டிப்பாக பார்க்க வேண்டியவை என்றும் மற்றவை வழியில் திட்டமிட்டுக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தோம். கூகுள் மேப் பஞ்சாப் செல்வதற்கு நாக்பூர் வழியாக செல்வது சுலபம் என்றது. ஆனால் ஏற்கனவே லே சென்றுவந்த ரமேஷ் முரளி அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் மும்பை வழியாக செல்வது நல்லது என முடிவு செய்தோம். 350 கிலோமீட்டர்கள் அதிகம் இருந்தாலும் சாலை நன்றாகவும் தங்குவதற்கான வாய்ப்புள்ள இடங்கள் அதிகம் இருக்கும் என்பதாலும் இந்த வழியை தேர்வு செய்தோம்.


அகமதாபாத்தில் உள்ள காந்தியின் சபர்மதி ஆசிரமம் ஒரு மணி நேர டி டூரில் இருந்தது. மாலை 3 மணி அளவில் ஆசிரமத்தை அடைந்தோம் நுழைவு கட்டணம் ஏதுமில்லை. முதலில் நம்மை வரவேற்பது வினோபாவும் மீராவும் தங்கியிருந்த எளிமையான குடில். அருகிலேயே காந்தியடிகளும் கஸ்தூர்பாவும் தங்கியிருந்த ஹிருதயகஞ்ச் எனும் இல்லம் இருக்கிறது. வாசலில் வலதுபுறத்தில் காந்தியடிகள் பயன்படுத்திய ராட்டையுடன் கூடிய வரவேற்பரை இருக்கிறது. இங்கேதான் பொதுவாக தன்னைச் சந்திக்க வருவர்களிடம் பேசுவார் காந்தி. உள்ளே நுழைந்ததும் வலதுபக்கம் கஸ்தூர்பாவின் அறையும் இடது பக்கம் காந்தியடிகளின் அறையும் இருக்கிறது. நடுவில் வெளிச்சம் வரும்படி திறந்தவெளி முற்றம் உள்ளது. காந்தி, மோகனிலிருந்து மகாத்மாவாக மாறிய சம்பவங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. காந்தியின் அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் சில காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சில பொருட்கள் அவர் பயன்படுத்திய பொருட்களைப் போலவே (ரெப்ளிகா) செய்து வைக்கப்பட்டுள்ளன.


காட்டில் திரியும் மான்கள், பெருங்காது எருமைகள், ஒட்டகம், மயில் மற்றும் பறவைகள் என கவிதையாக விடிந்தது அந்தக்காலை. எவ்வளவு தூரம் ஓட்டினாலும் நல்ல கழிவறைகளுடன் கூடிய உணவகமோ அல்லது பெட்ரோல் பங்க்கோ வருவதற்கு வாய்ப்பே இல்லை போல் தோன்றியது.


ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை அடைந்தோம். நாம் சிறுவயதில் இருந்து அதிகம் கேட்ட தேசபக்தி சம்பவம் நிச்சயம் இதுவாகத்தான் இருக்க முடியும். கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்லும் குறுகிய வழி, பீரங்கியை நிறுத்தி வைத்து சுட்ட இடம், தப்பிப்பதற்காக மக்கள் குதித்து மாண்ட கிணறு அனைத்தையும் பார்வையிட்டோம். மாண்டவர்களின் நினைவாக நினைவுத் தூண் ஒன்று உள்ளது. சுவற்றில் 36 இடங்களில் குண்டு துளைத்த பகுதி அடையாளப் படுத்தப்பட்டு வேலியிட்டு பாதுகாக்கப் படுகிறது.


இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்லும் பேருந்து கேட்டினை கடந்து சென்றபின்னர் நிகழ்ச்சியை துவக்குகிறார்கள். முதலில் தேசபக்தி பாடல்கள் ஒலிபரப்பாகிறது. பிறகு அந்த தேசபக்தி பாடல்கள் பிண்ணனியில் ஒலிக்க நிகழ்ச்சியை காணவந்த பெண்கள் சிலரை அழைத்து தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு வரிசையாக செல்ல வைத்தார்கள். பிறகு அவர்களே உற்சாக நடனம் ஆடினார்கள். இந்தப் பக்கம் 5000 பேருக்கு மேல் அமர்ந்திருக்கும் இந்திய அரங்கில் இப்படி கொண்டாட்டம் அரங்கேறிக் கொண்டிருக்க அந்தப் பக்கம் பாகிஸ்தான் அரங்கத்தில் மிகச் சில பேர் வந்து அமர்கிறார்கள். பெரிய அளவிலான மூவர்ணக் கொடி ஒன்றினை மக்கள் அனைவரும் தங்கள் கைகளில் இருந்து அடுத்தவர் கைக்கு மாற்றி அரங்கு முழுவதும் ஒரு சுற்று சுற்றி வர வைத்தனர். நிகழ்ச்சி முழுவதையும் பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸ் ஆபிசர் ஒருவர் ஒழுங்குடன் நடத்திச் சென்றார். ஹிந்தி மட்டும்தான் பெயரளவிற்கு கூட ஆங்கிலத்தில் எந்த அறிவிப்பும் இல்லை.  பணம் மற்றும் மொபைலை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்ற அறிவிப்பை தொடர்ந்து நிகழ்ச்சி முடியும்வரை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.


1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களை போற்றும் விதமாகவும் வெற்றியை நினைவு கூறும் விதமாகவும் அந்த நினைவிடம் அமைந்திருந்தது. கார்கில் போரில் பங்கேற்ற சிறிய ரக போர் விமானங்கள், ஆயுதங்கள், சிதைந்த ஆயுதங்கள் மற்றும் குண்டுகளின் பாகங்கள், எந்தெந்த மலைச் சிகரங்களை எப்படி மீட்டோம் என்று விளக்கும் படியான மினியேச்சர்கள், வீர மரணம் எய்திய வீரர்களின் பெயர்களை தாங்கிய நினைவு கற்கள், அவர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட சுவர்கள் பார்கலாம் வாருங்கள்.


அதீத தலைவலி, மூக்கில் நீர்வடிதல், காது அடைத்தல், வாந்தி, மயக்கம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஆல்ட்டிடியூட் பிரச்சனையின் பொதுவான அறிகுறிகள். ஆல்டிடியூட் பிரச்சனைக்காக டையாமாக்ஸ் எனும் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். முடிந்த அளவு அதிகம் தண்ணீர் குடிப்பதும், பதட்டமின்றி அமைதியாக இருப்பதும், ஒரே நாளில் அதிக உயரத்தை ஏறி உடலை துன்புறுத்தாமல் பாதி உயரம் ஏறி ஒரு நாள் ஓய்வெடுத்து விட்டு மறுநாள் மிச்ச உயரத்தை ஏறுவதும் சிறந்த தீர்வாகும். இந்த மாத்திரையை பயன்படுத்துவதால் பக்க விளைவாக உடலில் பொட்டாஷியம் பற்றாக்குறை ஏற்படலாம். எனவே வாழைப்பழம் ஆரஞ்சு முதலியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.


கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 18000 அடி உயரம் என்பதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்படலாம் என்பதால் 30 நிமிடத்திற்கு மேல் அங்கே இருப்பது நல்லதல்ல. அங்கிருந்து தொடர்ந்து பயணித்து நர்பா வேலியை அடையலாம் அல்லது திரும்ப லே நகருக்கு வந்துவிடலாம்.  


உலகின்  அதிக உயரத்தில் உள்ள வாகனங்கள் செல்லக்கூடிய பாதை என இந்த இடம், உச்சியை அடைந்ததும் நீங்கள் 18 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறீர்கள் என்று எழுதப்பட்டிருந்த அறிவிப்பு பலகையின் அருகே நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொன்டனர்கள்


பன்னிரண்டாம் நாள் காலை அங்கிருந்து கிளம்பி இரவு தங்காமல் தொடர்ந்து தோராயமாக 2000 கி.மீ. பயணித்து பதிமூன்றாம் நாள் காலை சென்னை வந்து சேர்ந்தோம். மொத்த பயண தூரம் கிட்டத்தட்ட 8000 கி.மீட்டர்கள். பதின்ம வயதுக் குழந்தைகளுடன் குடும்ப சகிதமாக, மண் சரிவினால் ஏற்பட்ட தடைகளை மீறி இப்படி ஒரு சாகசப் பயணம் சாத்தியமானதில் மிக்க மகிழ்ச்சி. எப்போதும் போன்ற ஒரு பயணமாக இல்லாமல் என்றென்றும் மகிழ்வுடன் நினைவுகூரத் தக்க நிறைவான சாகசமாக அமைந்துவிட்டது இப்பயணம்.


மிக்க மகிழ்ச்சி, இப்படியொரு சாலைபயணத்தினை முன்னெடுத்து செயத்து மற்றும் வெற்றிகரமாக முடித்துவந்த சகோதரி இரா. கோகிலா பாபு எனது வாழ்த்துக்கள் 💐💐


அருமையான பயணநூல் 


வாசித்த மகிழ்ச்சியடன் 

நன்றி 

ராம தேவேந்திரன் 

வெள்ளயங்கிரி மலை பயணம்

 நூல்          : வெள்ளயங்கிரி மலை பயணம்

ஆசிரியர்   : தாமோதரன் சாது

பதிப்பு.       : அமேசான் மின்நூல்


இந்த மின்னூலின் வழியே நம்மை வெள்ளயங்கிரி மலை பயணத்திற்க்கு அழைத்து செல்கிறார். வாருங்கள் நாமும் கூடவே மலையேறுவோம் ....


கொங்கு நாட்டின் தலைநகரமான கோயம்பத்தூர் தொழில் நகரம் என்பதனை தாண்டி தமிழகத்தின் முக்கியமான திருக்கோயில்கள் அமைந்திருக்கும் நகரமாகவும் இருக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோயில், அவினாசியில் உள்ள அவிநாசியப்பர் திருக்கோயில், முருகனின் ஏழாம் படைவீடு என்று போற்றப்படும் மருதமலை முருகன் கோயில், மேட்டுப்பாளையம் பத்திரகாளியம் கோயில், கோனியம்மன்கோனியம்மன் கோயில் போன்ற பழமையான ஆன்மீகத் தலங்கள் கோவையில் அமைந்திருக்கின்றன. இவ்வரிசையில் கோவையில் தமிழகத்தின் மிக முக்கியமான சைவ திருத்தளங்களில் ஒன்றான வெள்ளியங்கிரி மலை அமைந்திருக்கிறது. தரையிலிருந்து கிட்டத்தட்ட 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த வெள்ளயங்கிரி மலைக் கோவில். இந்த கோவிலுக்கு செல் வதற்காகவே இந்த மலையில் ஏறி செல்கின்றனர் பக்தர்கள். சாகச விரும்பிகளும் இந்த மலை ஏற்றத் தை மிகவும் விரும்புகின்றனர்.


இரண்டாம் மலை பயணத்தை ஆரம்பித்தோம். இந்த மலையில் ஒருசில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. அடர்ந்த மரங்கள் நிறைந்திருக்கும் பகுதி,  இம்மலையில் மிளகு திப்பிலி மூங்கில் வேங்கை போன்ற தாவர மர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சித்தர் குகை மற்றும் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.


மூன்றாவது மலையில் சில சரிவு பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும் . சரிவான பாறையில் ஏறி வழுக்கி விழுவதால் இதற்கு வழுக்குப்பாறை என பெயரிடப்பட்டது . அப்பாறைகளில் இலகுவாக ஏறிச்செல்ல படி வடிவத்தில் செதுக்கி அமைத்துள்ளனர் . மரத்தின் வேர்களுக்கு இடையே பாதை அமைந்துள்ளது . நடக்கும் போது மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். இங்கு வாழும் மக்கள் வேங்கை மரத்திலிருந்து வடியும் பாலை சிறிய தேங்காய் ஓடுகளில் சேகரித்து கடைகளில் விற்கின்றானர் . வேங்கைப் பாலால் கைக்குழந்தைகளுக்கு திலகம் இட்டால் வசீகர என்பதுடன் திருஷ்டி பாதிக்காது என இன்றும் கிராமங்களில் நம்புகின்றனர் . இம் மலையில் கைதட்டிச் சுனை என்ற தீர்த்தம் உள்ளது.  கைதட்டி சுனை என்பது மூன்று பெரிய பாறைகளுக்கு நடுவில் ஒரு மூங்கில் தப்பையைச் சொருகி வைத்துருப்பார்கள். அதில் குழாயில் கொட்டுவது போல தண்ணீர் கொட்டும். இந்த தண்ணீர் பாம்பாட்டி சுனைத் தண்ணீரை விட சுவையாகவும் ,  அதிகமாகவும் வருகின்றன,. கை தட்டினால் தண்ணீர் வேகமாக வரும் என கூறுவது உண்டு.


நான்காவது மலை ஈச்சல் திட்டு. இதமான தென்றல் வீசும் மலை, திருநீர் மலை ,ஒட்டன் சமாதி மலை , எனவும் கூறினார்கள்.


ஐந்தாவது மலை பீமன் களியுருண்டை மலை என அழைப்பர் பெரிய களியுருண்டை வடிவில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இம்மலையில் குறிஞ்சிப் பூ செடிகள்  செண்பக மரங்கள் , அதிக அளவில் தென்படுகின்றன . பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது .


ஆறாவது மலை, இதை சந்தன மலை எனவும் அடுத்து ஏழாவது மலை வெள்ளங்கிரி மலை.  வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த மலையேறி போய்  வெள்ளங்கிரி சிவனை தரிசிக்கவேண்டும்.


அருமையான பயணநூல் 


வாசித்த மகிழ்ச்சியடன் 

நன்றி 

ராம தேவேந்திரன்

திருவாரூர் டூ திருவாரூர்

நூல்          : திருவாரூர் டூ திருவாரூர்

ஆசிரியர்   : இரா.அபர்ணா

பதிப்பு.       : அமேசான் மின்நூல்


இந்த மின்னூலின் வழியே சகோதரி அபர்ணா திருவாருரிலிருந்து நம்மை கண்களை கட்டி அழைத்து செலகிறார் வாருங்கள் நாமும் தொடருவோம் தொடர் வண்டியினுடன்....

'திருவாரூர் டூ திருவாரூர்'னு இருக்கே, ஒருவேள திருவாரூர் பத்தின புத்தகமா இருக்குமோ! அதுவும் பயண நூல்னு வேற இருக்கு, அப்பனா திருவாரூர் முழுக்க சுத்துனத புத்தகமா எழுதிருப்பாங்களோ என்ற ஆவலுடன் பக்கத்து ஊர்காரனாகிய நான் வாசிக்க தொடங்கினேன் ஆனால் சகோதரியின் வேண்டுகோளின் பட “கண்டிப்பா எனக்கு நீங்க மன்னிப்பு குடுக்கனும்” ஆகவே மறப்போம் மன்னிப்போம் என்று தொடருவோம் தொடர்வண்டியின் கூடவே..,,


ஓடி ஓடி களைச்சு போன தொடர்வண்டி தன்னோட வேகத்த கொறச்சு மெதுவா ஒட ஆரம்பிச்சது. அந்த சன்னல் தொலைக்காட்சில ரொம்பவே அழகான ஒரு காட்சிய பார்த்தோம். பிரம்மாண்டமான ரெண்டு மலைகள், அதுக்கு நடுல மிகப்பெரிய ஆறு, இதுக்கு பக்கத்துல ரொம்பவே அழகான ஒரு கோவில். கைகளும் கால்களும் சிறைக்குள்ள அடைபட்ட மாதிரி இந்தத் தொடர்வண்டி கம்பிகளுக்குள்ள சிறைபட்டுப் போக, கண்கள் மட்டும் துரிதமா செயல்பட்டு அந்தக் காட்சிகள காணொலி எடுத்து காலத்துக்கும் அழியாத நினைவா அத பாதுகாப்பா மூளைங்கற ஹார்ட்டிஸ்க்ல சேமித்தது. 

விஜயவாடாவோட செழிப்புக்குக் காரணம்னு சொல்லப்படற 'கனக துர்கா கோவில'தான் நம்ம இப்ப கடந்து வந்தோம்.

இன்ப அதிர்ச்சியா சுவையான சிக்கன் பிரியாணி எங்களுக்குக் கெடச்சது. எங்க இருந்து கிடைச்சுதுனு கேக்குறிங்களா, எங்க கூட பயணிச்சுட்டு இருந்த தோழி விஜயவாடாவ சேர்ந்தவங்க. விஜயவாடா நிறுத்தத்துல அவங்கள வந்து சந்திச்ச அவங்க அப்பா அம்மா, ஆனா 'கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல'னு சொல்வாங்களே, அதுதான் என் நிலைமை. புரட்டாசி பரிதாபங்கள்ல இதுவும் ஒன்னு.


இந்த சன்னல் தொலைக்காட்சி அப்படி ஒரு காட்சியதான் காட்டிட்டு இருக்கு. திரும்புற பக்கமெல்லாம் பச்சை வயல்கள். அத குறுக்கிடற ஆறுகள். தூரத்துல தெரியுற மலைகள். இதெல்லாம் பார்த்துட்டு வந்ததுல என் வயிறு கூட பசிய மறந்திடுச்சு.


இந்தத் தொடர்வண்டி கடைல உங்க பயணத்துக்குத் தேவையானது எல்லாம் நீங்க இருக்க இடம் தேடி வரும்.  அப்படி அந்தக் கடைல எங்கள ரொம்ப கவர்ந்த பொருள் அல்வா. நம்ம ஊர்ல கெடைக்காத அல்வாவானு கேக்குறிங்களா. ஆமாங்க இது மாம்பழ அல்வாவாம். அதுவும் ரெண்டு வகை. ஒன்னு பழுத்த மாம்பழ அல்வா, இன்னொன்னு பழுக்காத மாம்பழ அல்வா. இந்தத் தொடர்வண்டி கடைல நாங்க வாங்குன முதல் பொருள் இதுதான். ஆகா ஓகோன்னு புகழ்ற அளவுக்கு இல்லைனாலும் வித்தியாசமான ஒரு சுவை. கண்டிப்பா மகாராஷ்டிரா போனிங்கனா சாப்ட்டு பாருங்க. இது மாதிரி விதவிதமான உணவ சாப்ட்டு பாக்குறதுக்காச்சும் எல்லாரும் கண்டிப்பா ஒரு பயணம் போகனும்.


வேற்றுமையில் ஒற்றுமைங்கறத பறைசாற்றிக்காட்றது தொடர்வண்டி. எத்தனை விதமான மனிதர்கள். எத்தனை வேறுபட்ட மொழிகள். பல வருசத்துக்கு அப்றம் சொந்த ஊருக்கு போற எதிர்பார்ப்போட சிலர். எங்கள மாதிரி சுற்றுலா போற குதூகலத்தோட பலர். புத்தக வாசிப்பில் சிலர், உரையாடலில் சிலர், விளையாட்டில் சிலர், வேடிக்கையில் சிலர், உறக்கத்தில் சிலர், உணவோடு சிலர், கைபேசியில் தொலைந்து போன பலர்.


இந்தப் பயணம்தான் பாருங்களேன் எத்தன நமக்கு சொல்லித் தருதுனு. வேறுபட்ட மனிதர்களோட அறிமுகம், அறியாத பல இடங்கள கண்ணால பார்க்கக் கூடிய வாய்ப்பு, நண்பர்கள் பத்தின புரிதல் இப்படி ஏராளமா அடுக்கிட்டே போகலாம்.

வாங்கிட்டு இருக்கைக்கு வந்த அப்றம்தான், கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம் அவசரப்பட்டு வாங்கிட்டோம்னு தோணுச்சு. நேத்து ஆந்திராவுல இருந்து சிக்கன் பிரியாணி வந்த மாதிரி, இன்னைக்கு ஜெய்ப்பூர்ல இருந்து சூடான சுவையான கச்சோரியும், ஜிலேபியும் நமக்காக வந்திருக்கு. நம்ம கூட பயணிச்சுட்டு இருக்க ஜெய்ப்பூர பூர்வீகமா கொண்ட தோழியோடு விருந்து இது. ஊரு ஊருக்கு ஏதாவது ஒண்ணு கெடச்சு போய்டுதே. அப்படி எத்தன பேர்தான் போறீங்க? யாரெல்லாம் போறீங்கனு கேக்குறிங்களா, சொல்றேன், அதுக்கு முன்ன கச்சோரியும் ஜிலேபியும் சாப்டுவோம். நல்லதோர் ஆரம்பம் இனிப்போட தொடங்குவோம்.


சரியா 05:40 நம்ம நிறுத்ததுல இறங்குறப்ப. மூணு நாள் பயணத்துக்கு அப்பறம் நம்ம இலக்க அடைஞ்சாச்சு. நீங்கா நினைவுகளோட அங்கமா இந்தக் காட்சிய ஒரு தாமி எடுத்துப்போம்.


மனம் மயக்கும் இயற்கை வண்ண ஓவியங்கள். பல வகையான கற்கள ஒரச்சுதான் இந்த ஓவியங்கள்லாம் வரஞ்சிருக்காங்க. எந்த எந்த நிறம் எப்படி உருவாக்கபட்டதுங்கற குறிப்பும் இதுல இருக்கு. இராஜ்தானி கட்டிடக்கலையப் போல, ஓவியங்களும் ரொம்பவே வித்தியாசமானது. சின்னச் சின்ன வடிவங்கள் கொண்டது. அதுலயும் ஒட்டு மொத்த ராமாயணத்தையும் காட்ற மாதிரி ஒரு ஓவியம், பாலைவன தோற்றத்த காட்ற மாதிரி ஒரு ஓவியம், இப்படி அங்க இருக்க ஒவ்வொரு ஓவியமும் விவரிக்க முடியாத அழகு. எதுக்காக இல்லைனாலும் இந்தக் கண்கவரும் ஓவியங்களப் பார்க்குறதுக்காச்சும் நீங்க கண்டிப்பா இந்த இடத்துக்குப் போய்ட்டு வரணும்.


எத்தனை எத்தனையோ ஆண்டுகளா பல வம்ச மன்னர்கள வாழ வச்ச இடம். பல சாம்ராஜ்யங்களுக்கு அடித்தளம் வகுத்த கட்டிடங்கள். எத்தனையோ இளவரசிகளும் இளவரசர்களும் ஓடி விளையாடின இடம். பல போர் வீரர்களுக்கு உத்வேகம் கொடுத்த இடம். பல மக்களோட நம்பிக்கையா விளங்கிய இடம். இப்ப புறாக்களோட வாழ்விடமா, அதுங்களோட எச்சங்கள தாங்குற இடமா, ஆயிரத்து நானூறு ஆண்டுகளோட நினைவுகள சுமந்துட்டு  வெறும் கட்டிடங்களா நம்ம முன்னாடி நிற்குது. இந்த இடம் கைவிடப்பட்டாலும் மறக்கப்படல. ரதோர் மன்னர்கள் பலரோட நினைவிடங்கள் இங்கதான் இருக்கு.

தூரம் தூரமா அங்கொன்னும் இங்கொன்னுமா வீடுகள். கண்ணுக்கு எட்டுன வர காஞ்சு போன பூமி. அதுல கோரப் புற்கள் மாதிரி சில புற்கள். அந்த புற்களத் தின்னும் உயிர் வாழ்ந்துட்டு இருக்க அடர்ந்த முடி வெச்சிருக்க ஆடுகள், பெரிய திமில் கொண்ட மாடுகள், அதுங்கள வாழ்வாதாரமா கொண்டு வாழ்ந்துட்டு இருக்க மக்கள். தலைய விட பெரிய முண்டாசு கட்டிட்டு எங்கள வெறிச்சு பார்த்துட்டு உட்காந்திருக்க முதியவர். இவ்வளவுதான் அந்த இடம்.


அது கூடாரம் இல்ல, சொகுசு அறை. நட்சத்திர விடுதில இருக்க மாதிரி எல்லா வசதிகளும் அந்தக் கூடாரத்துல நமக்கு உண்டு. அது உண்மைல கூடாரமே இல்ல, ஜிப் கதவு வச்ச துணி வீடு. சன்னல்லாம் கூட இருக்கு.   ​ஒரு பெரிய மெத்தை, மின்விசிறி, இருக்கைகள், விளக்குகள், பிளக்பாய்ண்ட் அப்றம் இந்த அறையோட இணைக்கப்பட்ட குளியலறை. தண்ணி கிடைக்காத இந்தப் பாலைவனத்துலயும் குழாயத் திறந்தோனே நமக்குத் தண்ணி வருது. இதே இடத்துல ஒரு கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் மக்கள் தண்ணிக்காக அல்லல் பட்டுட்டு இருக்கலாம். நமக்கு எவ்ளோ ஆடம்பர வசதிகள் பார்த்திங்களா.


சகோதரி அபர்ணா நம்மை ராஜஸ்தான், குஜராத் மற்றும் மும்பை என பத்துநாட்கள் சுற்றி சுற்றி பயணபடுத்தியது மிகவும் அருமையானதொரு சுற்றுலாதான்.


ஒவ்வொரு முறையும் சென்ற இடங்களையெல்லாம் பற்றி விவரிக்கும் போது எனக்குள் எழுந்த ஒரு கேள்விக்கு சரியான பதில் இறுதியில் கிடைத்தது.


அருமையான பயணநூல் 


வாசித்த மகிழ்ச்சியடன் 

நன்றி 

ராம தேவேந்திரன் 

Friday 25 September 2020

ஊர் திரும்புதல் - 24

ஆற்று மீன்களும்  வயல்  நண்டுகளும் 


விக்ரமன் ஆற்றில், முழங்கால் அளவுக்கு மட்டும் தண்ணீர் சல சலவென்று  சங்கீதத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் உள்ள மண் சாலையில் மாட்டு வண்டிகள்  நெல்மூட்டைகளுடன் மேற்கு நோக்கி, கிக்  கிக்கென்ற  சத்தத்துடன் சென்றுகொண்டிருந்தன. அரையில்  அழுக்கு வேட்டிகளுடன் வயல்வெளி வேலைகளை  முடித்துக்  கொண்டு வந்த  ஆட்கள், ஆற்றில் இறங்கி  துணி துவைத்து, குளித்துக்  கரையேறி கொண்டிருந்தனர். 

சூரியன் அந்த கிராமத்துக்கு ஓய்வு கொடுத்து  மேற்கு நோக்கி பயணமானது. பிள்ளையார் கோவில் அரச மரத்தில் இரைத்தேட போய் திரும்பி வந்த குருவிகள் ஒன்றுக்கொன்று பேசிக்கொண்டு இளைப்பாறத் தொடங்கின.  நடவாட்கள் நெல் அறுவடை செய்த வயல்களில் உதிர்ந்து கிடக்கும் நெற்கதிற்களை ஒவ்வொன்றாய் சேகரித்து, கட்டுகளாகக் கட்டி தலையில் சுமந்து கொண்டு ஒய்யாரமாக ஆற்றின் கரையில் நடந்து கொண்டிருந்தனர்.   

வயல்வெளிக்கு மேய்ச்சலுக்கு சென்ற ஊர் ஆடு மாடுகள்  அவரவர் வீட்டுத்  தொழுவத்துக்கு வரும் வழியில் ஆற்றில் முங்கிக் குளித்துக் கரையேறிக்கொண்டிருந்தன.   

பிள்ளையார் கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள சிமெண்ட் தரையில் ஊர் நாட்டாமை சில சிறுவர்களுடன் அரசியல் பேசிக்கொண்டிருந்தார். 

நாட்டாமை, "பயத்தியக்கார உலகமடா ராமா!", என்று பேச்சினிடையே சொல்லுவார். தொடர்ந்து,  "என்ன சொன்னேன்?", என்றும்  சிறுவர்களிடம் கேட்பதும் வழக்கமாக  இருக்கும். அந்த  உரையாடலினுடே பலமுறை அவரே "பயத்தியக்கார உலகமடா ராமா" என்று திரும்பவும்   சொல்வதுமாக அந்த மாலை பொழுது கழிந்து கொண்டிருக்கும்.

எப்போதும் கலகலப்பாக  சிறுவர்களுடன் பேசுவது அவருக்கு மிகவும்  பிடித்தமான விஷயம். அவர் அந்த காலத்தில் நடந்தே மாயவரம் போய் தியாகராஜ பாகவதர் படம் பார்த்துவந்த கதையும், அவர் இளம் வயதில் செய்த சின்ன சின்ன விளையாட்டுகளையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வார். அதுபோன்ற  அனுபவங்களையும் மற்ற சுவாரஸ்யமான நிகழ்கால அரசியல் பற்றியும் பேசிப்  பேசி அவருடைய  மாலைப்பொழுதுகள்  கழியும். 


இதெல்லாம் ஒருபக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கையில், மேற்கிலிருந்து சிவந்த வானம், போய் வரட்டுமா என்று கேட்கும்  தொனியில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது. ஊர் இருளத்  தொடங்கியது. அந்த ஊரின் இளைஞர்கள் ஆற்றின் மீன் வேட்டையாடுவது வழக்கம். அதுவும் கொஞ்சம் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் போது மீன்கள் எதிர்த்து நீந்தி செல்லும்.  அந்த வேளையில் நீந்தும் மீன்களை யுக்தி  செய்து  பிடிப்பார்கள்.  அதற்காக பழைய சைக்கிள் டயர்களை இரண்டாக  வெட்டி பந்தம் போல  கொளுத்தி ஒரு  கையில் பிடித்துக்கொள்வார்கள். மற்றொரு கையில் நீண்ட இரும்பு கத்திகளை பிடித்துக்கொள்வார்கள்.  முழங்காலளவு ஆற்று  நீரில்  மெல்ல மெல்ல சளக் சளக் என்று மெல்லிய சத்தத்துடன்  மீன்களை தேடிப்  போவார்கள். சைக்கிள்  டயர்  எரியும்  வெளிச்சத்திற்கு வெளியே  வந்த  மீன்கள், வேட்டையாளர்களின்  கத்திகளுக்கு   வெட்டுப்படும். குரவை மீன்களும், கெண்டை மீன்களும், கெளுத்தி மீன்களும், விரால் மீன்களும் சிலநேரம் இறால்களும் கூட  அகப்படும்.  

சிறுவர்கள் பழைய மூங்கில் கூடை கொண்டு நீந்தும் மீன்களை கூடையில் பிடிப்பதும் வழக்கம். ஆற்றில் தண்ணீர் வந்த ஓரிரு மாதங்களில்  புதிய மீன்கள் வளரும்.  அந்த சமயத்தில் ஆற்றில் குஞ்சுக் கெண்டை  மீன்கள் பெருவாரியாக கிடைக்கும்.  ஆற்றில் இருந்து பிரியும் அனைத்து வாய்க்கால்  மதகுகளிலும் காலையிலும் மாலை வேளையிலும் பழைய மூங்கில் கூடையில் வைக்கோல் கூளங்களை  நிரப்பி அதனை நீண்ட கயிற்றில் கட்டி தொங்கவிடுவார்கள். ஆற்று வெள்ளம் மதகுகள்  வழியாக பீறிட்டுப்பாயும்போது, கெண்டைக்குஞ்சுகள் அந்த வெள்ளத்தை எதிர்த்து  துள்ளி  விளையாடி கடக்க எண்ணிக்கொண்டு,  ஆனந்தத் துள்ளலில் எகிறி   அங்கிருக்கும் கூடையில் விழுந்துவிடும். கூடையில் மாட்டிக் கொண்ட மீன்கள் வெள்ளியை உருக்கி சின்ன சின்னதாய் செய்த சிற்பங்கள் போல அழகு அழகாய் மின்னும். 

இந்த கெண்டைகுஞ்சுகளை எடுத்து தலையையும் வாலையும் கிள்ளி எறிந்துவிட்டு, அடுப்புச்சாம்பலில் பிரட்டி, உரசிக் கழுவி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிய வெங்காயம் போட்டு, அம்மியில்  அரைத்த  மசாலாக்கள்  சேர்த்து  மண் சட்டியில் வைக்கும் மீன்குழம்பு தேனை விட சுவையாக இருக்கும்.

அந்த நாட்களில் பெரும்பாலான வீடுகளில் இரவு ஆற்று மீன் குழம்புதான். அதுவும் அந்த ரோட்டில் நடந்து போனால், குழம்பின் வாசத்தை பிடிக்காத ஆட்கள் இருக்கவே முடியாது. விறகு அடுப்பில்,  மண் சட்டியில் கொதிக்கும் ஆற்று மீன் குழம்பின் மணத்தை  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.






நடவு செய்த வயல்களில் (ரசாயன உரம் வருவதற்கு முன்னர்) வளரும் குரவை மீன்களும், வயல் நண்டுகளும் உணவில்  சேரும்போது அது இயற்கை  மருத்துவம்.  ஆனால் இதெல்லாம் இல்லாமல் போய்விட்டது இன்று.


  



வயல் நண்டு அளவில் சிறியதாய் இருக்கும். சுவையானது  மட்டுமல்ல, மருத்துவ குணம்களும்  கொண்டது. அதனால் வயல்களில் வேலை செய்யும் ஆட்கள் அந்த நண்டுகளை பிடித்து சமைத்து சாப்பிடுவது இயல்பானது.

நண்டுகள், ஆண்–பெண் என்ற பாகுபாடின்றி மலட்டுத்  தன்மையை போக்கும் குணம் கொண்டது. நண்டுகளை மிளகுடன் ரசம் வைத்துக் கொடுக்கும்போது, நெஞ்சுச்சளி, ஒற்றைத்தலைவலி, காய்ச்சல், தாம்பத்தியத்தில் நாட்டமின்மை போன்ற பிரச்சனைகள் தீரும். 

நண்டுகள்  பக்கவாட்டில்  நகரும். அதன்  பார்வை  முன்பக்கத்தில்  இருக்கும். அதன்  கொடுக்குகள்  வலிமையானவை.   நண்டுகளை  பிடிக்க  அவைகளின்  பார்வையில்  படும்படி  விரல்களை  விட்டால், அவைகளின்  கொடுக்குகள்  விரல்களை  காயப்படுத்திவிடும்.  அதனால் அவைகளை  பிடிக்கும்போது  லாவகமாக  பின் பக்கத்தில்  இருந்து  பிடிக்கவேண்டும். அவனும்  சில நேரங்களில் வயல் நண்டுகளைப்  பிடித்து,  சமைத்துச்  சாப்பிட்டிருக்கிறான். 





இன்றளவு பெரும்பாலும் வயல்களில் ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும்  பயன்படுத்துவதால்,  இந்த வகை உயிரனங்கள் அழிந்து வருகின்றன. மேலும் இப்போதெல்லாம் அவ்வளவாக வயல் நண்டுகளை உணவாக எடுத்துக்கொள்கிறார்களா என்று ஒரு பக்கம் கேள்வி  எழுகிறது.   


ஊர் திரும்புதல் - 1



Friday 11 September 2020

மணிபல்லவம் - வாசிப்பு அனுபவம்

மணிபல்லவம் - வாசிப்பு அனுபவம் 


ஆசிரியர் : நா. பார்த்தசாரதி   


இது ஒரு வரலாற்று (சரித்திர) நாவல்





மணிபல்லவம் நூலினை படிக்கும் போது நான் படித்த பூம்புகார் கலை கல்லூரிதான் நினைவிற்கு வருகிறது.

ஆசிரியர், காவேரி பூம்பட்டினத்தினை மிக அழகாகவும் பல வருடங்களுக்கு முன்பே ஒரு பெரிய வாணிப நகராகவும் செல்வ செழிப்புள்ள பட்டினமாகவும்  மிக அழகாக வர்ணித்திருக்கிறார். 

இந்த நூலில் கதாநாயகன் இளம்குமாரனையம், கதையின் நாயகிகளாக சுரமஞ்சரியும் மற்றும் முல்லையும்  இவர்கள் கூடவே எட்டி பட்டம் பெற்ற வெல்வந்தராக சுரமஞ்சரியின் தந்தையும் அவரின் நண்பர் ஒற்றை கண் நகைவேழம்பரும், இளம்குமாரனை வளர்த்தெடுக்கும் அருச்செல்வ முனிவர், வீர தீரராக திகழும் நீலநாக மறவரும், முல்லையின் தந்தையாக வீரசோழியா வளநாடுடையாரும், முல்லையின் சகோதரனும் கதக்கண்ணனும் இவர்களுக்கு மத்தியில் ஓவியன் மணி மார்பனும் சுரமஞ்சரியின் சகோதரியான வானவல்லியும் மற்றும் சுரமஞ்சரியின் தோழி வசந்தமலையும் கதை முழுவதும் நம் கூடவே பயணித்துக்கொண்டே வருகின்றனர். கதையின் இறுதி பாகத்தில் மூவர்களை அறிமுகப்படுகிறார் அவர்களின் கதையின் இறுதி பாகத்தில் வந்தாலும் இந்த கதையின் ஆதி அந்தமே அவர்கள் தான் என்பது இறுதி பகுதி வாசித்த பின்னர் தான் தெரியவரும் அளவிற்கு மிக சாமர்த்திய மாகவும் அழகாகவும்  நகர்த்தி இருப்பது இந்த கதையின் பெரிய பலம்.  

கதையின் களமாக எழில் கொஞ்சும் காவேரி பூம்பட்டினம் முக்கியமாக திகழ்கிறது என்றாலும் மணிபல்லவம் தீவு தான் கதையின் முக்கிய இடமாக திகழ்கிறது. காவேரி பூம்பட்டினத்தின் இன்றளவும் நடக்கும் இந்திர விழாவில் தான் கதை ஆரம்பிக்கிறது.

பெரு வீரராகிய நீலநாக மறவர் இளங்குமரனிடம் சிரித்துப் பேசிப் பழகுவதும் வெளிப்படையாக அன்பு செலுத்துவதும் மற்றவர்களுக்கு வியப்பாயிருந்ததற்குக் காரணம் உண்டு ஆனால் இளங்குமரன் அழகே உருவானதாகவும் மட்டற்ற வீரரானாகவும் வளம் வந்த காலம் அப்போது நடந்த இந்திர விழாவில் சக்கரவாள கோட்டத்தின் அருகே நடந்த மறவர் போட்டியில் பங்குகொண்டு எதிரியினை பந்தாடிய அழகையும் அவனது அழகில் மயங்கி அவனுக்கு தனது மணிமாலையினை அன்பாக கொடுக்க முயன்றாள் சுயமஞ்சரி ஆனால் சற்றும் அவள் எதிர்பாராத வகையில் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான் இளங்குமரன்.

தனது பரிசினை ஏற்று கொள்ளாததால் கோவம் கொண்ட சுரமஞ்சரி அவனது ஓவியத்தினை எழுதிக்கொடுக்க ஓவியன் மணிமார்பனிடம் வேண்டினாள் அதற்காக ஓவியன் மணிமார்பன் இளம்குமாரினிடம் வேண்டிக்கொண்டதற்காக இளங்குமரன் பாண்டிய நாட்டில் இருந்த ஓவியனின் வருமானத்திற்காக ஒரு பேருதவியாக இருக்குமென்று இணங்கினான் இதற்காக அவன் சரமஞ்சரி வீட்டிற்கே போகவேண்டிய சூழல் உருவாகிறது அப்போதுதான் சுரமஞ்சரியின் தந்தை இளம்குமாரனை பார்க்க நேரிடுகிறது.

இளம்குமாரனை சந்தித்த சுரமஞ்சரியின் தந்தையும் அவரது நண்பனான நகைவேழம்பரும்  அவனை ஒரு ஜென்ம எதிரியாக பார்த்தது அவனுக்கு சற்றே வியப்பாக இருந்தது.

இளம்குரனுக்கு தனது பிறப்பை ரகசியம் ஏதும் தெரியாமலே  சிறுவயதிலிருந்தே அருச்செல்வ முனிவரின் தவச்சாலையில் தான் வளர்ந்து வருகிறான் ஆனால் முனிவர் அவனை ஒரு வீரனாக வேண்டும் என்று நீல நாக மறவரின் ஆலமர முற்றத்தில் இருக்கும் படைக்கல சாலைக்கு வீர தீர  பயிற்சிக்கு அனுப்பிவிடுகிறார்  அபப்டியே அவனும் ஒப்பற்ற ஒரு வீரனாக வளம் வருகிறான்.  இதற்கிடையே பெருசெல்வரும் நகைவேழம்பரும் சேர்ந்து அருள்செல்வ முனிவரையும் இளம்குமாரனையும் தீர்த்துக்கட்ட ஆட்கள் அனுப்பிறார்கள் ஆனால் அந்த சமயம் நண்பன கதக்கண்ணன் அவ்விடம் வருகவே அந்த திட்டம் அடித்து நொறுக்கப்பட்டு முனியவரையும் இளம்குமாரனையும் தனது வீட்டிற்கே அழைத்து வந்து விடுகிறான் ஆனால் மறுநாள் அவர்கள் அருள்செல்வ முனிவரின் தவ சாலைக்கு தீ வைக்க திட்டமிடுகின்றனர் இதனை அறிந்த முனிவர் அவர்களுக்கு முன்னரே தவ சாலைக்கு தீ வைத்துவிட்டு வளநாடுடையாரின் உதவியோடு மணிபல்லவம் தீவிற்கு இரவோடு இரவாக பயணித்து விடுகிறார் ஆனால் வளநாடுடையரிடம் ஒரு வாக்கு வாங்கிக்கொள்கிறார் அதாவது உலகுக்கு நான் தீயில் இறந்தாகவே இருக்கட்டும் என்றும் கண்டிப்பாக அடுத்த இளம்குமாரனை மணிபல்லவத்திற்கு அழைத்து வரவேண்டும் என்றும்.   

இரண்டாம் பாகத்தில் திருநாங்கூருக்கு அடிகளார் தமது மாணவனான நீல நாக மற்றவரிடம் இளம்குமாரனை என்னிடம் மறக்காமல் அடுத்த முறை என்னை காண வரும்போது அழைத்து வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறார் தனது ஆசானின் ஆணைக்கிணங்க இளம்குமாரனை அங்கு அழைத்து செல்கிறார். இதுவரையில் ஒரு முரடான திரிந்த இளம்குமார் இந்த தவச்சாலையில் அறிவு மயமாக வளர்கிறான் அவன் இங்கு ஆன்மிகத்தில் அவன் மனம் மலர்கிறது; வளர்கிறது; மணம் விரிக்கிறது. மனிதர்களுக்கு உடலின் செழுமையாலும், தோலின் மினுமினுப்பாலும், அவயவங்களின் அழகாலும் வருகின்ற கவர்ச்சி நிலையற்றது, ஆனால் அறிவினால் வருகிற அழகு நிலையானது; உயர்ந்தது; இணையற்றது. ஏற்கெனவே பேரழகனான இளங்குமரன் இப்போது அறிவின் அழியா அழகையும் எய்தப் போகிறான். அந்த அறிவழகின் மலர்ச்சியில் அவன் ஆனால் அத்தகைய முழுமையான ஆசிரியப் பெருந்தகை ஒருவரை நேற்று வரை அவன் சந்திக்க நேர்ந்ததில்லை. நீலநாகமறவர் அவனுக்குப் போர்த்துறைக் கலைகளைக் கற்பித்த ஆசிரியரானாலும் அவரிடம் நாங்கூர் அடிகளிடமிருந்ததைப் போன்ற மென்மையையும் குழந்தையுள்ளத்தையும் கண்டு இளங்குமரன் நல்லதொரு சிறந்த மாணவனாக விளங்குகிறான் அதனிடையே விசாகை என்னும் ஒரு பெண் துறவி உலகத்தார் இன்பத்திற்காக தனது ஆடம்பர வாழ்வினை துறந்து இப்போது துறவியாக இருப்பதும் இந்த பாகத்தில் சிறப்பாக இருக்கிறது.

மூன்றாம் பாகத்தில்  இளங்குமரன் ஞான அறிவுபெற்று பூம்புகார் நகரில் நடைபெறும் இந்திர விழாவில் கலந்து கொண்டு அறிவு போரில் கலந்து கொண்டு எதிராளிகள் எல்லோரையும் அறிவினால் வீழ்த்தி பெருமையடைந்தான் ஆனாலும் அறிவின் முதிர்ச்சியில் இளம்குமாரன் எந்த வித செருக்கும் இல்லாமல் இருந்தது எல்லோரிடமும் ஒரு வியப்பாக இருந்தது. இந்த  இந்திர விழா நேரத்தில் சொற்போரில் கலந்து கொண்டிருந்த இளம்குமாரனை பார்த்த சுரமஞ்சரியின் தந்தையும் அவரது நண்பர் நகை வேழம்பரும் இந்த முறை ஒரு புதிய யுத்தியை கொண்டு சுரமஞ்சரிக்கே தெரியாமல் அவளிடம் பூ கூடைகளை கொடுத்து அதனுள் பாம்புகளை மறைத்து விட்டு இளம்குமாரனை அழிக்க திட்டம் தீட்டினர் ஆனால் இதிலும் அவன் தப்பித்து விடுகிறான்.

நான்காம் பருவத்தில், இளம்குமாரனை எப்படியோ சமாதன படுத்தி மணிபல்லவத்திற்கு அழைத்து கொண்டு செல்கிறார் ஆனால் அருச்செல்வ முனிவர் உயிருடன் இருக்கிறார் என்பது வளநாடுடையரை தவிர வேறு யாருக்கும் தெரியாத ஒரு விஷயமாக தான் இருக்கிறது.   இளங்குமரன் மற்றும் வளநாடுடையார், மணிமார்பன் அவனது துணைவி பதுமை எல்லோரும் கப்பல் ஏறி மணிபல்லவத்திற்கு செல்வதை கண்ட நகைவேழம்பர் அந்த கப்பலினை தொடர்ந்து சென்று எப்படியாவது இளம்குமாரனை அழிக்க வேண்டும் என்று பின்தொடர்கிறார் ஆனால் இந்த முறையும் தோல்வியுடனே திருப்புகிறார். இந்த தோல்வியின் எதிரொலியாக நகைவேழம்பருக்கும் பெருநிதி செல்வருக்கும் அவ்வப்போது வந்த போகும் கருத்து வேறுபாடும்   சண்டையும் உச்சத்திற்கு சென்று இறுதியில் நகைவேழம்பரையும் தீர்த்து கட்டிவிடுகிறார்.

இறுதி பருவத்தில் அமுதசாகரன் தன் தலைவராகிய பெருவணிகருக்கு வாய்க்கப் போகும் மங்கல மனையாளைக் காண்பதற்கு ஆவல் கொண்டான். கையில் மாலையேந்திக் குனிந்த தலை நிமிராமல் தோழிகளோடு அந்தக் கூடத்துக்குள் நுழைந்த பெண்ணைப் பார்த்தபோது அமுதசாகரனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. 'சற்று முன் பூம்பொழிலில் பந்தாடிக் கொண்டிருந்த அந்தப் பெண்தானா மருதி?' என்று மாலையை ஏந்திக்கொண்டு வரும் மற்றொரு பூமாலையாக அவள் வந்து கொண்டிருக்கும் கோலத்தை நோக்கி அமுதசாகரன் வியந்தான். அவன் வியப்பை அதிர்ச்சியாகவே மாற்றும் எதிர்பாராத காரியத்தைச் செய்தாள் அந்தப் பெண். அருகில் வந்ததும் தைரியமாக நிமிர்ந்து எல்லாரையும் ஏறிட்டுப் பார்த்த பின்பு, அந்த ஏழைக்கவி அமுதசாகரனின் கழுத்தில் மாலையிட்டுவிட்டுச் சிரித்துக்கொண்டே சென்றாள். இப்படியாக இந்த தம்பதிகளின் ஒரே மகன் தான் இந்த இளங்குமரன், தன்னை புறம்தள்ளி விட்டு தனது கவியை மணந்ததால் சினம் கொண்ட பெருநிதி செல்வர் அவர்கள் இருவரையும் கொன்று விட்டு பின்னர் மருதியின் சகோதரனான காலாந்தகரையும் கொன்று தனது பகைமையை தீர்த்துக்கொண்ட பெருநிதி செல்வரைதான் இளங்குமரன் தனது ஞானத்தால் வென்று இறுதியில் சுரமஞ்சரியிடம் தோற்று ஞானரம் விட்டு இல்லறம் தொடங்கினான். 

சோழ நாட்டு நகரங்களில் எல்லாம் பெருநகரமான பூம்புகாரின் செல்வச் செழிப்புமிக்க வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ இந்திர விழாக்களை அறிவித்து வள்ளுவ முதுமகன் நகருக்கு முரசறைவான்! இன்னும் எத்தனையோ ஆடிப்பெருக்குகளுக்குக் காவிரியில் வெள்ளம் வரும்; தணியும். மழை பெய்யும். வெயில் காயும். பருவ காலங்களால் விளையும் புதுப்புது மாறுதல்கள் காவிரிக்கரை வாழ்க்கையில் எத்துணை எத்துணையோ நிகழ்ச்சிகளைப் படைக்கும். சமயவாதிகளும் ஞானிகளும் சந்திப்பார்கள், அளவளாவுவார்கள், பிரிவார்கள். அறிவும் செல்வமும் ஓங்கி வளரும். அந்தக் கோநகரத்துக் கவிகளின் நாவில் புதுப்புதுக் கவிதைகள் பிறக்கும். இளம் பிள்ளைகள் பலர் தோன்று வார்கள். மூத்துத் தளர்ந்தவர்கள். பலர் இறப்பார்கள். அரசர்கள் மாறுவார்கள். அரசாட்சி மாறும், ஏறும், தாழும். வாணிகருடைய வாழ்க்கை வளரும், தளரும், மாபெரும் துறைமுகத்தில் கப்பல்கள் வரும், போகும், நிற்கும், மிதக்கும்.  ஆசிரியரின் இந்த மன ஆசைகள் எல்லாம் இப்போது இல்லாமல் போனதே உண்மை அப்படி சிறப்பாக இருந்த பூம்புகார் பெரு வணிக துறைமுகம் இப்போது வெறும் பூம்புகார் என்றே இருக்கிறது. இப்படி எல்லாம் நடந்ததின் ஒரு சுவடு கூட இல்லையே .......

நன்றி 
வாசிப்பு அனுபவங்களுடன் 
தேவேந்திரன் ராமையன்  








 
       

Saturday 5 September 2020

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் !

 ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ! 


ஒவ்வொரு தனி மனிதனும் எதாவது ஒரு விதத்தில் பல ஆசிரியர்களை கொண்டுதான் முன்னேறி இருப்பான் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. 

வாழ்வின் முதல் நாள் தொடங்கி இன்றுவரை கற்றுக்  கொடுத்து கொண்டிருக்கும் அம்மா அப்பாவிற்கு முதல் நன்றி. 

அப்படி நான் கடந்து வந்த பாதையில் என்னை மெருகூட்டிய ஆசிரியர்களை நினைவுகூரவே  இந்த பதிவினை இடுகிறேன்.

நான் எனது தொடக்க பள்ளி படிப்பினை செண்பகச்சேரி கிராமத்தில் இருக்கும் அரசினர் ஆரம்ப தொடக்க பள்ளியில்தான் ஆரம்பித்தேன். இந்த பள்ளியில் என்ன ஒரு மாணவனாக செதுக்கியது  இரண்டு ஆசிரியர்கள். அவர்கள்தான்  திரு. வ. கலியமூர்த்தி மற்றும் திரு. கணேசன் அவர்கள்.

பின்னர் திருமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எனது படிப்பினை ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தேன். இங்கு எனக்கு அறிவு புகட்டிய ஆசிரியர்கள்  திரு. ஆறுமுகம் (ஆங்கிலம்), திரு . வே. சம்பந்தம் (கணக்கு), திரு. நடராசர் (தமிழ்) திரு  பி.சௌந்தரராஜன் (அறிவியல்), திரு. பூலோகம் (வரலாறு-புவியியல்) , திரு ஜி.முருகேசன் (GM)  மற்றும்   TR கலியமூர்த்தி (TRK), ஆகியோர்களை  இந்த  நாளில்  நினைவுகூர்வதில்  மகிழ்ச்சி.

தொடர்ந்து குத்தாலம் அரசினர் மேல்நிலை பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தேன். அங்கே எனது வகுப்பாசிரியர் பி.கருணாகரன் - அரசியல் பாடம், தலைமை ஆசிரியர் சம்பந்தம், கணக்கு ஆசிரியர் வி. சண்முகசுந்தரம் (VSS). கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் ஆசிரியர் அமரேசன் ஆகியோர்களையும்  இந்த  நாளில்  வணங்குகிறேன்.  

பூம்புகார் கலை கல்லூரியிலே, வணிகவியல்  இளங்கலை பயின்ற போது வேறொரு விதமாக என்னை உருவாக்கிய  ஆசிரியர்கள் திரு. சக்கரைவேல் (கல்லூரி முதல்வர்), வணிகவியல் துறை தலைவர், திரு எ.பழனிவேல், விரிவுரையாளர்கள் திரு. கணேசன், திரு. பன்னிர்செல்வம், திரு. கிருஷ்ணமூர்த்தி ,    திரு. ராஜாராம், திரு. செல்வராஜ், திரு. ராஜராஜன் மற்றும் அலமேலு அக்கா ஆகியோர்களுக்கு  வணக்கம்.

தினோராம் வகுப்பு தொட்டு கல்லூரி காலம் எனக்கு  பயிற்றுவித்த  ஒவ்வொரு  ஆசிரியரும் ஒரு விதத்தில்  இன்று  என்னை  இன்று  இருக்கும் நானாக  செதுக்கி  இருக்கிறார்கள்.  என்னுள்   ஒரு ஆடிட்டர் ஆக வேண்டும் என்று விதையினை விதைத்த ஆசிரியர் குத்தாலம் சீனிவாசன் அவர்களுக்கும் என்றென்றும்  என்னுடைய  நன்றிகளும்  வணக்கங்களும்.

ஆடிட்டர் படிப்பினை கற்று கொடுத்த திரு. ஜி. சூரியநாராயணன் அவர்களுக்கும் நன்றிகளும்  வணக்கங்களும்.  

எல்லாவற்றுக்கும்  மேலாக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் எனக்கு க்கு எதாவது ஒன்றை கற்று கொடுக்கும் காலத்திற்கும் ஆசிரியர்  தின  வணக்கங்கள்.  

 

நன்றியுடன் ராம. தேவேந்திரன்         



   

Thursday 3 September 2020

சாயாவனம் - வாசிப்பு அனுபவம்

நூல் : சாயாவனம் 

ஆசிரியர் : அமரர் சா. கந்தசாமி  



இந்த நூலினை வாசிக்கும் போது நான் பிறந்து வளர்ந்த மண்ணில் மீண்டும்  ஒரு நடை பயணம் போனது போல ஒரு உணர்வு வந்தது என்றால் அது மிகையாகாது!

கதையின் களமாக இருக்கும் மாங்குடி, மல்லிகை கொல்லை, சீர்காழி , வைத்தீஸ்வரன் கோவில், குத்தாலம், கூறைநாடு,  மாதானம், மாயவரம் மற்றும் கும்மோணம் என சுற்றி உள்ள அனைத்து ஊர்களும் நான் சுற்றி திரிந்த ஊர்களே என்பதால் இந்த கதையின் மீது ஒரு அதீத ஆர்வம்.  ஆனால் கதையில் வரும் முக்கியமான இடம் சாயாவனம் (சீர்காழி - பூம்புகார் சாலையில் இருக்கும் ஒரு சிவன் ஆலயத்தின் ஊர் பெயர் - மயிலாடுதுறையிலிருந்து 20 கிலோ மீட்டர்).

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பான காலத்தில் இந்த கதை தொடங்கிறது, கதையின் நாயகன் சிதம்பரம் தனது சிறுவயதில் தாயுடன் பிழைப்பதற்காக இலங்கை சென்று வெகுநாட்களுக்கு பிறகு  இப்போது ஒற்றை ஆளாய் திரும்பி தனது தாய் மாமன் சிவனாண்டி தேவர் ஊரான சாயாவனத்துக்கு வருகிறான்.  வந்தபின்னர் அந்த ஊரின் பெரிய நிலக்கிழாரான சாம்பமூர்த்தி  ஐயரிடமிருந்து ஒரு பெரிய வனத்தினை வாங்கி அதில் ஒரு சர்க்கரை ஆலை அமைக்கவேண்டி அந்த காட்டினை அழிக்கிறான் அதற்க்கு அவனது மாமா சிவனாண்டி தேவர் பெரும் உதவியாக இருக்கிறார்.

காலம் காலமாக நடப்பது தான்  அப்போதெல்லம் காட்டினை அழித்து விவசாயத்திற்க்காக வயல் வெளிகளை உண்டாக்கினார்கள்  ஆனால் நாமோ இப்போது அந்த வயல்வெளிகளை அழித்து வீடுகளை உண்டாகிறோம்.

ஆசிரியர், இந்த கதையில் பயன்படுத்தியிருக்கும் வட்டார வழக்கு மிக அருமை. ஒரு கிராமத்து திருமணம் நடைபெரும் விதமும் அதற்க்கு வருகை தரும் உறவினர்கள் எவ்வாறு அப்போதெல்லாம் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னேரே வருவதும் வந்து திருமண வேலைகளை கூட நின்று செய்வதும் என நமக்கெல்லாம் கிடைக்காத அந்த தருணத்தினையும் மற்றும் அந்த ஊரின் எல்லாத்திசையிலும் அந்த விழாவின் வீட்டு உறவினர்கள் காணப்படுவதையும் இந்த கதையின் வாயிலாக பல விதமாக சொல்லியிருப்பது வாசிக்கும் நாம் அந்த திருமண விழாவிறக்கு சென்று வந்த ஒரு உணர்வு வருகறது.

குறிப்பாக சிவனாண்டி தேவர் தனது மருமகள் குஞ்சம்மாளையும் மற்றும் தனது பேத்தியையும் பாப்பா என்று செல்லமாக அழைக்கும் விதம் அந்த நிலத்தில் எவ்வாறு பெண்களை பாப்பா என்று வெகுவாக அழைக்கும் குறிப்பினை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஒரு வனத்தை அழித்து ஆலை கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை மிக அழகாக விளக்கியிருக்கிறார். ஒரு வனம் அழியும் பொது அந்த வானத்தையே தனது வாழ்விடமாக எத்தனை பிற உயிரனங்கள் இருந்திருக்கும் அவையெல்லாம் எப்படி அழியும் என்பதையும் மற்றும்  நமக்கு கிடைக்கும் காற்று முதல் என பல வழிகளில் நாம் என்னவெல்லாம் இழப்போம் எல்லாம் ஏராளம் என்பதும் ஆனால் உணவு உற்பத்தி தேவையின் காரணமாக ஆலை கட்டுவதும் தேவை என்பதையும் மறைக்க முடியாது என்பன சில உண்மைகளையும் மிக அழகாக சொல்லியிருக்கிறார்.

ஆசிரியர் ஒரு வனத்தில் இருக்கும் பலவிதமான செடி கொடிகள் முதல் நெடு மரங்கள் வரை ஒவ்வொன்றாய் பெயருடன் கொண்டு சென்ற விதம் அருமை. நாயுருவி செடி நமது உடல்களில் ஒற்றிகொள்ளும் என்றும்,  தேனீக்கள் முதல் எலி, காக்கை மற்ற பறவைகள், சுற்றி திரியும் மாடுகள், நரிகள் என பல்வேறுபட்ட உயிரனங்கள் அந்த வனத்தில் வாழ்வதாகவும் இந்த வனம் அழிந்தால் இவையெல்லாம் எங்கே போகுமே என்று ஒரு கேள்வியுடன் கதையினை நகர்த்தி செல்கிறார்.       

இதற்க்காக இவர்கள் இந்த வனத்தினை அழிக்கும் வேலையினை ஆரம்பித்த விதம் நன்றாக இருந்தது ஆனால் போக போக வனத்தை அழிக்க எடுத்துக்கொண்ட வழியே தவறானதாக ஆகிவிட்டது  அதனால் சிவனாண்டி தேவரின் புளிய  மரங்கள் அழிந்து போனதும், சிதம்பரம் கட்டிய புது வீடு எரிந்து போனதும், பல உயினர்கள் நெருப்போடு சாம்பலாகி போனதும்  அரும்பாடுபட்டு சீர்செய்த மூங்கில் மரங்களும் சாம்பலாகி போனதும் என நினைத்து பார்க்காத அளவுக்கு தீ அவர்களின் கனவை புரட்டி போட்டுவிட்டது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் முடிவில் வனம் அழிந்து சிதம்பரம் தனது இலக்கான சர்க்கரை ஆலையினை கட்டி முடிக்கிறான்.

காலப்போக்கில் அவனது ஆலையின் வெல்லத்திற்கு நல்ல சந்தையும் மதிப்பும் கிடைத்து வியாபாரத்தில் வெற்றி கொள்கிறான் ஆனால் சிவனாண்டி தேவரின் புளியமரங்கள் எரிந்து போனதால் இப்போது அவர் கையிருப்பு புளி தீர்ந்து போனதால் வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, திருவென்காடு மற்றும் காவேரிப்பட்டினம் போய் புளி கொள்முதல் செய்து வாணிபம் செய்யவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார் என்பதும் ஆனால் அவரால் முன்பு போல தரமான சுவையான புளி கொடுக்க முடியவில்லை என்பதே வனத்தினை அழித்ததற்கு வினையாகி போனது......   

  அவரின்  வியாபாரம் சீர்கெட்டு போனதே ஒரு எதிர் வினை.


நாமும் மரம் வளர்ப்போம் - இயற்கை அன்னையினை பாதுகாப்போம்!!

நன்றியுடன் 

ராம. தேவேந்திரன்  

     

யானை டாக்டர் - ஜெயமோகன்

நூல்  :   யானை டாக்டர்

ஆசிரியர்  - ஜெயமோகன்  


இது ஒரு குறு நாவல். தாங்கியிருக்கும் கரு ஒரு மாமனிதனின் வாழ்வினை படம் பிடித்து காட்டுகிறது.  டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை     பற்றிய கதைதான் இந்த நாவல். 

ஆசிரியர் இந்தநூலில் யானைகளையும், அதன் இயற்கையான வாழ்விடமான காடுகளையும் மனிதன் தன் சுயநலத்திற்காக எப்படியெல்லாம் மாற்றிக் கொள்கிறான் என்றும் மிக தெளிவாக விவரித்துள்ளார். மனிதர்கள் உண்டாக்கும் சின்ன சின்ன இயற்கை மாசுபடுத்தலினாலும் எவ்வாறு இயற்கை சார் உயிரினங்கள் பாதிக்கபடுகிறது எனபதை யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நோக்கில் ஆசிரியர் விவரித்துச்செல்கிறார்.

யானை டாக்டர் நூலில் ஆசிரியர் உணர்வுபூர்வமான உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். யானைகளின் டாக்டர்  கிருஷ்ணமூர்த்தி அவர்களின்  வாழ்க்கை, அவரது அர்ப்பணிப்பு  விவரிக்கப்படுகிறது. அர்பணிப்பு பையும் மிக அழகா விவரித்திருக்கிறார். சாதாரணமாக ஒரு படித்த உயர் அதிகாரிக்கு அவருடன் பணி புரியும் சக ஊழியர்களுடன் ஒரு பிணக்கு இருக்கும். இந்த கதையினை ஆசிரியர், நாங்குநேரியில் இருந்து உயர்படிப்பு படித்து டாப்ஸ்லிப்க்கு வன அதிகாரியாக பணிக்கு செல்லும் ஒருவரிடமிருந்து ஆரம்பிக்கிறார். அப்படியாக வந்து சேரும் அதிகாரி கேட்கும் மற்றும் பார்க்கும்  ஒவ்வொருவரும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றி குறைவாக நான்கு ஐந்து வார்த்தைகளாவது  பேசாதோர் இல்லவே இல்லை என்று  அறிகிறார்.  அந்த அதிகாரிக்கு ஒரு பக்கம் அந்த  டாக்டரை பார்க்கவேண்டும் என்றும் ஒரு எண்ணம் வருகிறது. ஆனாலும் இன்னொரு பக்கம் அதை  நிறைவேற்றாமல்  தள்ளிவைக்கும் போக்கும் இருந்துகொண்டிருக்கிறது. 

அந்த அதிகாரிக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தியினை சந்திக்க இரண்டு மூன்று சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது. இருந்தாலும் என்னமோ ஒரு தயக்கம். அதிலும் ஒரு சமயம் காரில்  செல்லும்போது எதிரே  நெருக்கத்தில் டாக்டரை   பார்க்க  நேரிடுகிறது. ஆனாலும் அதிகாரிக்கு டாக்டரிடம் பேச  ஒரு  தயக்கம்.  டாக்டர் அதிகாரியின் உதவியாளர் மாரிமுத்துவிடம் நலம் விசாரித்து விட்டுச் செல்கிறார்.  

ஒரு சமயம் அதிகாரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை  உதவியாளர் மாரிமுத்து யானை டாக்டரிடம் அழைத்து செல்கிறார். வேண்டாம் என்று நினைத்தாலும், போனால் அவரை சந்திக்கலாம் என்று தன் உள்மனம் சொல்வதை கேட்டு மாரிமுத்துவுடன் அதிகாரி யானை டாக்டர் வீட்டிற்கு செல்கிறார். முதலில் தயங்கிய அவர் பின்னர் அந்த சந்திப்பு மிக அழகாக ஆரம்பிக்கிறது. கூடவே டாக்டர் உடனான நட்பு மிக அழகாக பூக்கிறது.

இதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வும் மிக அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் விரிந்து செல்கிறது. வாசிக்கும் நம்மையே அந்த அதிகாரியாக என்னும் அளவிற்கு எழுத்து நடை போடுகிறது.

டாக்டரின்  யானைகளுடனான அனுபவங்கள், அவர்  யானைகளுடன் உறவாடும்  விதம், இறந்த  யானைகளின்  உடல்களை  டாக்டர்  பிரேத பரிசோதனை செய்வது என்று அனைத்தையும் அதிகாரி கூடவே  இருந்து  பார்க்கிறார். நாளடைவில்  அந்த அதிகாரி டாக்டரை  சந்திக்காமல் ஒரு நாள் கூட இருக்கவே முடியவில்லை என்ற  அளவில்  ஆகிவிடுகிறது. 

இந்த  நூலில்  டாக்டரின் நோக்கில் ஆசிரியர்  யானைகளை எப்படி பராமரிப்பது என்றும் அவைகளுக்கு என்ன தேவை என்றும் மிக தெளிவாக எழுதி இருக்கிறார்.    

இறுதியில் அதிகாரிக்கும் டாக்டருக்கும் ஏற்பட்ட நட்பு பெரிதாக வளர்ந்து அவருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு முயற்சி  செய்வதுவரை போகிறது. 

இயற்கையினை போற்றி பாதுகாப்போம்.

வாசிப்பு அனுபவங்களுடன்

ராம. தேவேந்திரன்