Monday 31 May 2021

1984

 # கிண்டில் பதிப்பு

#எழுத்தாளர்_ஜார்ஜ் ஆர்வெல் - தமிழி்ல் க.நா.சு
பக்கங்கள் 295



சமீபத்தில் கிண்டிலில் இலவசமாக கிடைத்த “1984" என்ற பிரபலமான நாவல். ஏற்கனவே கிடைத்த விலங்கு பண்ணையும் வாங்கிவைத்திருந்தேன். நமது குழுவில் அதிமாக வாசிக்க பட்ட இந்த இரண்டு நாவல்களையும் ஒருசேர வாசித்தாக வேண்டும் என்று ஆரம்பித்தேன்.

வாசித்து முடிந்த பிறகு, முதலில் நான் இந்த கதையின் ஆசிரியர் "ஜார்ஜ் ஆர்வெல்" நினைத்து ஆச்சரியப்படுகிறேன். இப்படியொரு மகத்தான சிந்தனையை அந்த காலகட்டத்தில் வெளிப்படையாக தனது எழுத்து மூலமாக மக்களுக்கு சொல்லியிருப்பது ஒரு மாபெரும் காரியம்தான், அவரை எப்படி பாராட்டுவது? - என்னவென்று சொல்வது!!!

கிட்டத்தட்ட 1940 காலவாக்கில் எழுதப்பட்ட இவ்விரு புதினங்களும் உலக அளவில் அனைத்து மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு எல்லா மொழிகளிலும் இந்த இரண்டு நாவல்களும் பிரபலமானவை. நான் இன்னும் விலங்கு பண்ணை வாசிக்கவில்லை.

இனி 1984 நாவலுக்கு வருவோம். இந்த நாவல் முக்கியமாக, அந்த காலகட்டத்தில் வேகமாக பரவிவந்த பொதுவுடைமை மீதான எதிர்ப்பு கருத்தினை மையமாக கொண்டு புனையபட்ட ஒரு சிறப்பான நாவல். சர்வாதிகாரத்துக்கு எதிராக எழுதப்பட்டிருந்தாலும் இந்த புதினம் புரட்சி எனும் பாதை இத்தகைய சர்வாதிகாரத்தை நோக்கியதுதான் என்று நேரடியாக சொல்பவை. இந்த கருத்துக்கள் வழியே தி நடைமுறைகளை நவீனமாக சொல்லியிருப்பார்.
1940 களில் எழுதப்பட்ட, இந்த புதினத்தில் இடம்பெறும் காட்சிகள், சொல்லாடல்கள் , நடைமுறை சித்தாந்தம் மேலும் வாழ்வியல் முறைகள் என எல்லாமே அவரின் கற்பனையாக கூட எடுத்துகொண்டாலும் அத்தனையுமே இன்றைய நிலையினை பற்றிய மிக துல்லியமாக விவரித்து இருக்கிறார். ஆனால் என்ன ஒரு வித்தியாசம் இன்று நாம் அனைவரும் "ஸ்மார்ட் போன்" இல்லாமல் யாரும் இல்லை நமக்கு தெரிந்தோ அல்லது தெரியமலோ இந்த உலகம் நம்மை கண்காணிக்கின்றது எனபது ஒரு மோசமான செயல் தான் இது என்றாலும் நாம் ஒருமுறை இணையத்தில் எதாவது ஒன்றை பார்த்தாலோ அல்லது வாங்கினாலோ நம்மை கண்கானிக்க தொடங்குகின்றனர். இவ்வளவு ஏன் நாம் எங்கெல்லாம் பயணிக்கின்றோம் என்பது வரை உலகின் மிகபெரிய நிறுவனம் நம்மை கண்காணிக்கிறது உன்மையே!! இந்த அளவுக்கு நமது சுதந்திரம் பறிபோனதிற்கு இன்றய வாழ்வியல் முறை மட்டும் இல்லாமல் நாம் பன்னாட்டு பண்பாட்டின் மீது கொண்ட மோகமும் கூட ஒரு காரணம்.
இந்த கதையின் களமாக, இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வந்த சர்வாதிகார ஆட்சி நடக்கும் என்ற ஒரு கற்பனையான தேசம், அங்கு நடக்கும் "ஒற்றை கட்சி" ஆட்சி முறை, அதன் பிரதான தலைவரான "பிக் பிரதர்" எனப்படும் "மூத்த அண்ணன்", தமிழ் மொழிப்பெயர்ப்பில் முத்தண்ணா என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . அந்த காலத்தின் வாழும் குறைந்தது 15% மக்களை மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள் கட்சியின் வேலைகளை செய்வதற்காக அடிமைகளாக ஆக்கப்படுகின்றனர். மற்ற 85% மக்களை "ப்ரோல்கள்" என்கின்ற சாமானி மனிதர்களாக வாழ்கின்றனர். இவர்கள் பொதுவாக அடிமை தனமான வாழ்க்கியினையே வாழ்கின்றார்கள் இவர்களின் வாழ்க்கை ஒரு இரண்டகாலமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
"வின்ஸ்டன்" என்கின்ற அந்த கட்சி சார்ந்த ஒரு அரசு ஊழியன் தனது வாழ்க்கையை கதைகளாக சொல்லும் விதமாக இந்த கதை செல்கிறது. அவனுக்கு இந்த கட்சியின் கட்டமைப்பும் கொள்கைகளும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையினை அவன் செவ்வனே செய்து வந்தான். அவனின் வேலையே பழைய வரலாறுகளை திருத்தி அமைக்க செய்வதே அவனின் முழுநேர வேலை. அதனால் அவனுக்கு தெரியவரும் பொய் வரலாறை தாண்டி உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலைக்கு அவன் மனம் அவனை தள்ளிவிடுகிறது, ஆனால் அப்படி செய்வது அல்லது அப்படி நினைப்பது கூட சட்டவிரோதம் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் இருந்தாலும் இந்த கட்டமைப்புகளில் இருந்து வெளிவர ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று அவன் எந்நேரமும் யோசித்துக்கொண்டேயிருக்கிறான்.

அந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கும் "டெலிஸ்க்ரின் & ஒலிவாங்கிகளை" தாண்டி, அரசுக்கு எதிராக சிந்திப்பவர்களை கைது செய்ய உளவு பார்க்கும் சிந்தனை குற்றத்துறை, அதற்கு உளவாளிகளாக செயல்படும் குழந்தைகள் என அந்த வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. தங்கள் பெற்றோர்களையே காட்டிக்கொடுக்கும் குழந்தை உளவாளிகள் என வாசிக்கும் போது அந்த நிமிடம் நம்மை மிரள வைக்கும் ஏகப்பட்ட கற்பனை காட்சிகள். அப்படித்தான் 9 வயது மகள் தனது தந்தையை, அவர் தூங்கும் பொழுது அரசுக்கு எதிராக தூக்கத்தில் ஏதோ குரல் எழுப்பினார் என்று அரசாங்கத்திடம் காட்டிகொடுப்பது என்கிற போது எப்படி சின்ன குழைந்தைகளை கூட மூளைச்சலவை செய்யப்பட்டு அரசாங்கத்திற்கு உளவாளி யாக செயல்பட வைத்துள்ளனர் என்றால் அது எப்படி இருக்கும்.

மொத்தத்தில் இந்த கதை ஒரு சர்வாதிகாரத்தின் உச்ச நிலை என்று தான் சொல்லவேண்டும். இங்கு பெரும்பாலும் குடும்பம், பாசம், காதல், உறவுமுறைகள், என்கின்ற மனித வர்க்கம் சார்ந்த எந்த மனித நேயமிக்க செயலும் மற்றும் நிலையும் இல்லமால் இருக்கவேண்டும் என்றே அந்த ஒற்றை கட்சியின் நிர்வாகத்தின் பிரதான முடிவாகயிருக்கிறது.

மக்களை எப்படி சிந்தனையற்ற அடிமைகளாக மாற்ற வேண்டும் அதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என தெளிவாக திட்டமிடும் அதிகார வர்க்கம் ஒரு பக்கம் திட்டம் தீட்டிக்கொண்டே தான் இருக்கிறது. அந்த கட்சியை பொறுத்தமட்டில் ஆண் பெண் கூடல் என்பது கூட தங்கள் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை உருவாக்குவதற்காக மட்டும்தான் இருக்க வேண்டுமே தவிர அவற்றில் எந்த விதமான ஆசையும் பாசமும் அல்லது காதலுடன் சேர்ந்த கூடல் இருந்தால் அது அவர்கள் அரசுக்கு இழைக்கும் தேச துரோகமாகும்.

இந்த கடுமையான காலத்திலும் கதையின் நாயகன் "வின்ஸ்டன்" கூடவே வேலை செய்யும் "ஜூலியா" என்ற ஒரு பெண்ணை காதலிக்கிறான். இவர்கள் இருவரும் அரசுக்கு தெரியாமல் பல்வேறு இடங்களில் கூடுகின்றனர். இவர்கள் வாழ்க்கையில் கிடைக்கும் இந்த சொற்ப நேரங்களை தங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்திற்க்காக இணைகிறார்கள் இந்த உறவு நீடிக்கிறது ஆனாலும் இருவருக்கும் தெரியும் என்றாவது ஒரு நாள் மாட்டிக்கொள்வோம் இருந்தாலும் இன்று கிடைக்கும் இன்பம் போதும் என்று அவர்களின் காலம் செல்கிறது. காலப்போக்கில் நாயகன் அவளுடன் இணைந்து தேசத்துக்கு எதிரான புரட்சியில் ஈடுபட விரும்புகிறான்.
இந்த நாவலின் மூலமாக அன்று சொல்லவந்த நிறைய, இன்று நாம் வாழும் நாட்களில் சில சர்வாதிரிகளால் நமது பழமைகளும், பழைய வரலாற்றை மாற்றப்படுவது மூலம் சுவடு தெரியாமல் செய்யப்படுகிறது. ஏராளமான பழமை நம்மில் இருந்து தொலைந்து போய்விட்டது அதற்க்கு சில சர்வாதிகார அரசியல்தான் காரணம் என்றுதான் சிந்திக்க தோன்றுகிறது.

அரசுக்கு எதிராக புரட்சி செய்ய போக அவர்கள் நாடும் ஒரு அதிகாரி முதலில் நன்றாக நம்ப வைத்து பின்னர் இவர்களை வஞ்சம் தீர்க்கிறேன். இந்த இருவரும் தங்கும் ஒரு வீட்டில் இவர்களை அறியாமலே இவர்கள் வாழும் வாழ்க்கையினை மறைத்து வைத்த சாதனைகள் வழியே கண்காணிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்படுகிறார்கள். இதற்க்கு பிறகு இவர்கள் படும் கொடுமைகள் வாசிக்கும் போதே மனம் கலங்குகிறது எண்ணிலடங்கா சித்திரவதைகள் என கொடுமையின் உச்சம்.


இறுதியில் இருவரும் விடுதலை பெற்று வாழும்போது ஒருவரை ஒருவர் சந்திக்கும் அந்த தருணம் எத்தனையோ வேறுபாடுகளை மீறி ஒரு மனித இனத்தின் காதல் மீண்டும் தழைத்தோங்குவதினை மனிதநேயமிக்க மனிதகுலத்தின் அன்பின் மாறாத இயல்பாக சொல்லியிருக்கிறார்.

எனக்கு மிகவும் பாதித்த பகுதியாக "வின்ஸ்டன்" சிறையில் படும் சித்திரவதைகள் வாசிக்கும்போதே மனம் கணக்க ஆரம்பித்துவிட்டது. இதுபோல சம்பவங்கள் இன்றளவும் சிறைகளிலும் காவல்துறையிலும் நடக்கிறதென்பது நாம் பார்த்தும் பார்க்காமலும் செல்ல முடியுமே தவிர வேறென்ன செய்ய முடியும்?

மொத்தத்தில் இன்றைய உலகின் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் எதார்த்த வாழ்வியலை மிக தெளிவாக "வின்ஸ்டன்" என்ற கதாபாத்திரத்தின் மூலமாக அவனின் நாட்குறிப்பில் எழுதி சென்றுள்ளார் ஆசிரியர் ஜார்ஜ் ஆர் வெல்.

அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
16 ஏப்ரல் 2021

Saturday 29 May 2021

வெட்கமறியாத ஆசைகள்

 நூல்        : வெட்கமறியாத ஆசைகள் 

                  (சிறுகதை தொகுப்பு)

ஆசிரியர் : சிவஷங்கர் ஜெகதீசன்

அமேசான் மின்னூல்.

விலை : ₹99


நண்பர் சிவஷங்கர் ஜெகதீசன் அவர்களின் இரண்டாவது சிறுகதை தொகுப்பான  "வெட்கமறியாத ஆசைகள்" இந்த தொகுப்பில் மொத்தம் 11 சிறுகதைகளை தொகுத்து கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதையினையும் நடப்பு காலகட்டத்தில் இருக்கும் சில சமூக அவலங்களையும், சமுதாய வாழ்வியலையும் கொண்டு மிக அழகாகவும் சில கேள்விகளை சமுதாயத்திற்கும் கேட்டு தனது கதையின் ஊடே நமக்கு கொடுத்திருக்கிறார். நண்பரின் எழுத்து எதார்தத்தின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது. 

1. வெட்கமறியாத ஆசைகள்:   

இன்றைய சூழலில் எப்படியாவது பிரபலமாகவேண்டும் என்று ஆசை எல்லோருக்குள்ளும் துளிர்விட ஆரம்பித்தவுள்ளது. அப்படிதான் இந்த கதையில் வரும் நாயகி பரதம் கற்றுக்கொண்டு பள்ளிநாட்களில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை பெறுகிறாள். அப்படியே தான் வாழ்க்கையை ஓட்டி கொண்டிருந்தாள், அவளின் விதி அவளிடன் கூடவே இருந்த தோழிகளின் வழிகாட்டி படி அவள் எப்படியாவது திரையில் தோன்றி பிரபலமாக வேண்டும் என்று. அதற்காக அவள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுத்தாலும் அந்த வெற்றி நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை. இவளின் நாகரீக வளர்ச்சியினால் பெற்றோர்களையே பிரிந்து தனிமையில் தள்ள பட்டாள். சமூக வலைத்தளத்தில் இவளின் புகைப்படம் பலரால் விரும்பப்பட்டது. அடுத்த கட்டத்திற்கு அவளின் வாழ்க்கை நகர்கிறது ஆனால் கூடவே இன்னல்களும் இலவசமாக இணைந்து கொள்ள வாழ்வின் வழி தெரியாமல் வாழ்க்கையினை முடித்துக்கொள்கிறாள். நண்பர் சமுதாயத்தில் உலவும் நடப்பு காரியத்தை ஆவணப்படுத்தியிருக்கிறார்.        

2. த்ரில் : 

இன்றைய இளைஞர்கள் பெரிதும் கவர்ந்து உள்ள இந்த த்ரில் வண்டி பந்தயம். இந்த பந்தயத்திற்க்காக இளைஞர்கள் எவ்வாறு தங்கள் உயிரையும், தங்கள் பெற்றோரையும் பற்றி கவலைப்படாமல் தங்கள் இலக்கு மட்டும் தான் ஒரே குறிக்கோள்களாக இருப்பது கொஞ்சம் வருத்தம் தரக்கூடிய விஷயம் தான். நண்பர் இந்த கருத்தினை மையமாக வைத்து இந்த கதை நரகர்த்தியுள்ளார். தடம் மாறி போகும் இந்த இளைஞனில் வாழ்க்கை விபத்தில் முடிகிறது. அவன் எப்போதும் தனது ஒரே இலக்கு பந்தயத்தில் வெற்றிபெறுவது மட்டுமே அதற்காக எவ்வாறெல்லாம் தன் பெற்றோரை துன்பப்படுத்தி பந்தயத்திற்கு வண்டி வாங்கி அதே வண்டியில் உயிரை விட்டதும் பல இளைஞர்களின் இன்றைய அவலம்.      

 3. நூதனத்திருட்டு:  

பெட்ரோல் பங்கில் நடக்கும் பல்வேறுவிதமான மோசடிகளை மையமாக கொண்டு இந்த கதை செல்கிறது. இந்த கதை நம்மில் பெரும்பாலோனோர் ஓடிக்கொண்டே இருக்கிறோம், அந்த வேக பயணத்தில் நம்மை அறியாமலே நம்மை சுற்றி நடக்கும் பல்வேறு நிகழ்வுகளை கவனிக்காமல் சென்றுவிடுகிறோம், அவற்றில் சில நேரம் நாம் பணத்தை கூட இழந்துவிடுகிறோம். அப்படிதான் எப்படியெல்லாம் நாம் நம்மை அறியாமல் சுரண்டப்படுகிறோம் என்பதை மிக தெளிவாக ஆவணப்படுத்தியுள்ளார் நண்பர்.     

4. ஜே ஃஎப் சி:   

நாம் நமது பாரம்பரியத்தை விட்டு வெளிநாட்டு பழக்கவழங்கள் மீது கொண்டுள்ள ஒரு மாயையான மோகத்தினை முன்னிறுத்தி இந்த கதை நரகர்கிறது. நாம் எவ்வாறு மேலைநாட்டு துரித உணவின் மீது கொண்ட ஆர்வத்தால் எவ்வாறு நமது உடல் நலம் மற்றும் நமது பாரம்பரியம் சிதைந்து போவதை தனது ஆதங்கத்தினை ஒரு நிகழ்வின் ஊடாக வெளிப்படுத்தியிருக்கிறார் நண்பர்.  

5. நேரக்கடத்தி :  

நேரக்கடத்தி நல்ல பொருத்தமான தலைப்பு. இன்றைய சமூக நிலையில் நாம் வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கும் நேரத்தில் நமது வாழ்க்கை முறை பெரும்பாலும் இணையத்தின் உதவியோடு நடந்தேறுகிறது. அப்படியாக நமது குழந்தைகளின் படிப்பு முழுவதும் இணையத்தின் வழியே என்பதால் பெரும்பாலும் திறன் பேசி இல்லாத வீடே இல்லை என்று சொல்லுமளவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சூழலிலே நமது குழந்தைகள் எவ்வாறெல்லாம் தடம் மாறி செல்கின்றனர் என்று பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை  என்று தான் சொல்லவேண்டும். அப்படி இங்கே ஒரு  மாணவன் தனது தந்தையின் திறன்பேசியில் விளையாட்டு விளையாடி தந்தையின் வங்கி கணக்கில் இருந்து அதற்க்கு தொகையும் செலுத்தி அதற்க்கான தடயத்தினை தெளிவாக மறைத்து தான் ஏதும் செய்யாத நல்ல பிள்ளைபோலவே வளம் வருகிறான்.  நீண்ட நாட்களுக்கு பிறகு தெரிய வர அப்பாவுக்கு பெருத்த அவமானம் காரணம் அவர் கொடுத்த காசோலை திரும்பியது வங்கி கணக்கில் பணம் இல்லையென்று. இவையெல்லாம் நாம் நம் குழந்தைகளை கவனிக்காமல் இருந்ததனால் மட்டுமல்ல குழந்தையின் மீது ஒவ்வொரு பெற்றோரும் வைக்கும் நம்பிக்கைக்கு அவர்கள் செய்யும் கைமாறு தான் இந்த அவலம்.  


6. நிராசை:   

திறமை மட்டும் நம்மை மேலே எடுத்து செல்லும் என்பது ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு ஆகாது என்பதற்கு சமம். ஆம் இந்த கதை ஒரு நிராசையாகவே இருக்கிறது. விளையாட்டில் திறமை இருந்தும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்து அதை சரியாக பயன்படுத்தி தனது திறமையினை வெளிப்படுத்தியும் மீண்டும் அந்த வாய்ப்பு வராமலே போகும்போது அந்த திறமையுள்ள இளைஞனின் வாழக்கை எந்த பக்கம் நோக்கி பயணப்படுவது என்று திசை தெரியாமல் போவது இன்றைய நிலையில் பெரும்பாலான   இளைஞர்களின் நிலை தான். அதற்க்கான தீர்வு தற்கொலை என்பதுதான் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை, உலகில் வாழ எத்தனையோ நேர்வழி இருக்கிறது அதற்க்கு ஏற்றாற்போல ஒரு முடிவிருந்திருந்தால்  நன்றாக இருந்திருக்கும். 

7. ஏளனம் :  

வாழ்க்கை என்ற பயணத்தில் காசு பணம் இன்று வரும் நாளை போகும் என்பது ஒரு பெரிய எதார்த்தம். அதை புரிந்துகொண்டு வாழ்பவர்கள் இந்த உலகில் தடம் பதித்து போகிறார்கள்.  புரியாமல் வாழ்பவர்கள் தண்டனை பெற்று போகிறார்கள். ஆம் நாம் அன்றாடம் பார்க்கும் பலரது நடவடிக்கை, அவர்கள் காசு பணம் சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் அவரகள் வாழ்க்கை முறை மாறுவதும் ஏழைகளை உதாசின படுத்துவதும் அவர்களின் நட்பு வட்டாரங்கள் செல்வந்தர்களாக இருப்பவர்களை தேடி போய் உறவாடுவதும் என அவர்களின் அன்றாட நடவடிக்கை நம்மை சில நேரம் நெருடதான் செய்யும் என்ன செய்வது அதுதான் இன்றைய நிலவரம். அப்படி சமுதாயத்தில் முளைத்த ஒரு புல்லுருவியின் கதைதான் இந்த ஏளனம்.    


8. சிம்னி அன்ட் ஹாப்:   

நாகரீக வாழ்வின் எல்லாமே புதுமைகள் தான் என நினைக்கும் இன்றைய மக்களின் நிலையில் இருந்து இந்த கதை பயணிக்கிறது. மனைவி தனக்கு பழக்கமான பக்கத்து வீட்டு சமையலறை போலவே நாமும் மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை ஒரு நாள் கணவனால் நிறைவேற்ற படுகிறது. ஆனால் அதற்குள் அவர்களுக்குள் எத்தனை போராட்டம், சச்சரவு, கருத்து வேறுபாடுகள் என பல பிரச்சினைகள் இடை இடையே வந்து வந்து போகிறது ஆனால் காரியத்தில் கண்ணாக இருந்து தனது தேவையினை பெற்றுக்கொள்ளும் மனைவி. ஆனால் அதற்காக தன் கணவன் எத்தனை கடன் பட்டான் என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்றே. நான் எல்லோரையும் குறை சொல்லவில்லை, கதையின் கருத்து அதைத்தான் இங்கே என் மொழியில் சொல்லிச்செல்கிறேன்.        


9. விபரீத ராஜயோகம்:   

இந்த கதை நடப்பு நாட்களில் பெரும்பாலும் எல்லோராலும் தெரிந்த ஒரு சம்பவமே என்று தான் தோன்றுகிறது. வாழக்கை என்பது கண்ணாடி போன்றது அதை எவ்வாறு பாதுகாத்து கொள்ளவேண்டும் என்பதை பலரும் நன்றாக தெரிந்து பார்த்துக்கொள்கின்றனர். பராமரிக்க தெரியாதவர்கள் அந்த கண்ணாடியை தவற விட்டு சிதைந்து போன பிறகு அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முனைகிறார்கள் அது ஒருக்காலும் இயலாத ஒன்றே என்று அவரகள் அடைந்த தோல்வியின் மூலமாகவே தெரிந்துகொள்ள முடியும் என்பது நிதர்சனமான உண்மை. சுயநலமிக்க சிலர் நாம் நன்றாக வாழ எதைவேண்டும் என்றாலும் செய்யலாம் சமூகத்தின் மீதோ அல்லது சுற்றம் மற்றும் அக்கம் பக்கத்தினர் பற்றியோ எந்த கவலையும் இல்லாமல் தான் இவ்வாறு வாழ்கிறார்கள். சுயநலத்தின் உச்சம் தான் இந்த கதையின் கருத்து.    

10. ஸ்டைரீன்:  

வணிகம் செய்கிறோம் என்ற போர்வையில் மக்களுக்கு உகந்து வராத பல கொடிய செயல்களை எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் துணிந்து செய்யும் சிலரின் செயல்களை படம் பிடித்து காட்டுகிறது இந்த கதை. சரியான உரிமம் பெறாமல் ரசாயன நிறுவனம் செயல்படுகிறது. இது ஒரு தனிமனிதனின் செயல் அல்ல இதற்க்காக பலர் பின்னாடி இருந்து இயக்குகின்றனர் ஏனெனில் ஏழைகளின் உயிர் அவர்களுக்கு விலையில்லா ஒரு பொருள் அவ்வளவுதான். இந்த கதையின் மூலமாக ரசாயன கசிவு ஏற்பட்டு எண்ணற்ற உயிர்கள் போனதும் ஆனால் அதற்க்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் என்பதே விடையில்லை கேள்வியாகத்தான் தெரிகிறது.     

11. உப்பரிகை:  

பள்ளி காலத்தில் இருந்து ஒன்றாக படித்த இருவரும் தீடீரென விழும் காதல் வாழக்கை எப்படி கொரோனா காலத்தில் நடக்கிறது என்பதுதான் இந்த உப்பரிகை சொல்லும் செய்தி. இரண்டு வருடமாக தாங்கள் இருவரும் சுற்றி திரிந்த இடங்களெல்லாம் இப்போது ஊரடங்கால் மீண்டும் மீண்டும் சுற்றி திரிய முடியவில்லை என்ற வருத்தத்துடன், சமூகத்தில் பலபேர் ஒரு வேளை உணவிற்கு என்ன செய்வதென்று அறியாமல் இருக்கும் இந்த சூழலில் இவர்களுக்கு காதல் லீலை பாட களமும் காலமும் தடையாக இருக்கிறதே என்ற வேதனையுடன் நாட்களை நகர்த்தி மீண்டும் ஊரடங்கு முடிந்து ஆரம்பமாகிறது அவர்களின் காதல் காட்சி 2.0.....

 

மொத்ததில் ஒவ்வொரு கதைகளும் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்கால செயல்களை அடிப்படியாக கொண்டு மிக அழகாவும்  தெளிவாகவும் சொல்ல வந்ததை ஆசிரியர்  சொல்லியிருக்கிறார்.


ஒரே ஒரு குறைதான் சொல்லவேண்டும், பெரும்பாலான இடங்களில் ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது, வளரும் ஆசிரியர் ஆதலால் தாய்மொழியின் ஆதிக்கம் அதிகமிருந்தால் அனைவராலும் வரவேற்கப்படும் என்பது என் கருத்து.   

ஒரு முறை வாசித்து பாருங்கள் ..

வாழ்த்துகள் சகோ 💐💐💐

தொடரட்டும் தங்கள் எழுத்து பயணம்.....


அன்புடன்,

 

தேவேந்திரன் ராமையன் 

30 மே 2021

மரபும் புதுமையும்

 # காலச்சுவடு பதிப்பகம்

பக்கங்கள் 113
மரபும் புதுமையும் .





பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்கள் இந்த கட்டுரைகள் மூலமாக நாம் நமது மரபுகளை முற்றிலுமாக மறைந்து போய்க்கொண்டிருக்கிறோம் என்பதைத் தனது கேள்விகளாலும் சொல் திறமையாலும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். நமது உணவு முறையாகட்டும், விருந்தோம்பல் முறையாகட்டும், மருத்துவமாகட்டும், விவசாயமாகட்டும், உறவுமுறையாகட்டும், அல்லது வாழ்வியல் முறையாகட்டும் அனைத்தைதயும் நாம் எல்லாவகையிலும் சற்றே பாதை மாறிப் போகிறோம் என்பதை மிகத் தெளிவாக விளக்குகிறார் இந்த மரபும் புதுமையும் என்ற கட்டுரையின் வழியாக.

தமிழ்ப் புத்தாண்டு.
பேராசிரியர் பொங்கல் அதாவது அறுவடை திருவிழாவினையே நமது புத்தாண்டு என்று மிகத் தெளிவாக விளக்கத்துடன் விவரித்துள்ளார். நமக்குக் கிடைத்து உணவுப் பொருள்களுக்கு அதை அறுவடை செய்ய இருக்கும் எல்லாவற்றுக்கும் நன்றி சொல்லும் விதம் கொண்டாடப் படுகிற விழாதான் இந்த பொங்கல் திருவிழா அதுவே நமது புத்தாண்டு.
பொதிய மலை பிறந்த மொழி வாழ்வறியும் காலம் எல்லாம் - ஆதியிலே கல்வி கற்பது எல்லாருக்கும் சமமானது இருக்கவில்லை அதுவும் ஒரு சில வகுப்பினர்களே படிக்க வேண்டும் என்ற காலத்திலிருந்து உ வே சா பலவகையான இலக்கியங்களை மீட்டு எடுத்து அச்சிட்டு நமக்குக் கொடுத்திருக்கிறார் என்ற ஒரு விவரத்தையும் அவரின் செயல்பாடுகளையும் இந்த கட்டுரை வழியாக விளக்கியுள்ளார்.

வைதீகத்தின் இருண்ட முகம்:
துறவு என்பது ஆண்களுக்கு மட்டுமே என்றிருந்த காலத்தில் துறவறம் செல்லும் பெண்களுக்கு மரியாதைகள் இல்லாமல் அவமானப்பட்டார்கள் என்பதையும் சமணர்களின் கோயில்கள் பறிக்கப்பட்டது பற்றியும் தெளிவாகவும் முழுமையாகவும் விளக்கும் ஒரு கட்டுரை.
ராசராசன் சோழன் ஏக ஆதிபத்தியம் மற்றும் ராசராசனை கொண்டாடுவதும் என இரண்டு கட்டுரைகளில் ராசராச சோழனின் பல அறியத் தகவல்களை விளக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார் பேராசிரியர். ராசராசன் பயன்படுத்திய உத்திகள், ஆட்சிமுறை, பயன்படுத்திய அளவுமுறைகள், கோயிலுக்குத் தேவையான பொருள்களைத் தடை இன்றி கிடைக்கச் செய்த முன்னேற்பாடுகள் அவற்றைச் சரிபார்க்க வைத்திருந்த காரிய கர்த்தாக்கள் எனப் பல விவரங்கள் இந்த இரண்டு கட்டுரையில் அடங்கியிருக்கிறது.

அன்னம் பஹி கூர்வீத:

இந்த கட்டுரையில் நமது உணவு முறைகளும் அவற்றை நாம் எவ்வாறு உற்பத்தி செய்கிறோம் என்பதையும் என்ன என்ன உணவுகளை நாம் பாரம்பரியமாக உண்டு வந்தோம். எப்படி உணவு பற்றிய சடங்குகள் நடந்தன, நடைமுறைகள் மற்றும் நம்பிக்கைகள் என ஏராளமான விவரமும் ஆனால் இப்போது அயல்நாட்டு துரித உணவு முறை நமக்குள் ஆட்சி செலுத்துவதையும் அதனால் நாமும் நமது சங்கதிகளும் எவ்வாறெல்லாம் பாதிக்கின்றன என மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

தெய்வங்களின் உணவுரிமை.

நாம் நமது தெய்வங்களுக்கு காணிக்கையாக வெகுகாலங்களாகவே ஆடு வெட்டி படையல் வைத்ததும் அதற்காக உற்றார் உறவினர் என கூட்டம் கூடி கொண்டாடி மகிழ்வதும் என நாம் நமது பாரம்பரியத்தின் அடையாளமாக வாழ்ந்து வந்தோம் என்பதையும் விளக்கியுள்ளார். இன்றோ வஞ்சகத்தினால் ஐம்பது வருசத்துக்கு முன்னாள் போட்ட ஒரு சட்டம் இப்போது நடைமுறைக்கு வந்து உயிர்ப் பலி கொடுக்கக் கூடாது ஏன் கட்டளை போட்டது அரசாங்கம். எவ்வளவோ சட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படாமல் இருக்கும் போது ஏன் எங்கள் தெய்வநம்பிக்கையில் கைவைக்கவேண்டும் என கேள்விகளைக் கொண்டு மேலும் பல தகவல்களை கொண்டுள்ளது இந்த கட்டுரை.

இராமர் பாலம்:

இராமர் பாலம் என்பது மணல் திட்டா அல்லது பாலம் என்று சில விவரங்களைச் சொல்லியிருக்கிறார். சேது என்றால் தென்னாடு என்பது வட நாட்டில் பயன்படுத்தும் ஒரு சொல் அதுபோல அவர்களின் இராமாயணத்தில் ராமரின் முடிவு வேறுமாதிரியாகவும் தென்னகத்தில் வேறுமாதிரியாகவும் இருப்பதால் இந்த பாலம் என்பது வெறும் கதைதான் என்கிறார் பேராசிரியர். ஏன் இராமாயணத்தில் ஒரே தேசத்தில் இரண்டு வேறுபட்ட முடிவு என்பது ஒரு பெரிய கேள்விக்குள்ளானதே. அதைத்தான் மிக தெளிவாகவும் பல விளக்கத்துடன் சொல்லியிருக்கிறார்.

சாதிய ஆய்வுகள் நேற்றும் இன்றும்:

இந்த கட்டுரையில் சாதிகள் பற்றி பலர் செய்த ஆய்வுகளையும் அவற்றின் தீர்வுகளையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் தங்களின் அடையாளம் தெரியாமல் போன பல சிறிய சாதிகளைப் பட்டியலிடுகிறார் பேராசிரியர். நடந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் எவ்வாறும் பலர் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து இன்று வாழ்வின் வழிதெரியாமல் இருப்பதையும் அவர்கள் எப்படி மற்றவருக்குள் மறைந்தும் உடைந்தும் போனார்கள் என்று சொல்கிறார்.

உலகமயமாக்கல் பின்னணியில் பண்பாடும் வாசிப்பும்:
புத்தகங்கள் வெறும் காகிதமும் மையும் மட்டுமல்ல அதற்குள் எழுதியவரின் ஆன்மாவும் இருக்கிறது, ஒரு செடியின் வேருக்கும் விழுத்துக்கும் உள்ள தொடர்பு போலப் புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு என்கிறார் பேராசிரியர். வாசிப்பு என்பது யோசிப்பைத் தரவேண்டும் அதன் மூலம் சமூக மாற்றம் வர வேண்டும் என்பதையும் உலகமயமாக்கலின் மூலம் ஒரு பொருளைப் பழசாக்கி நம்மை மீண்டு மீண்டும் வாங்கத் தூண்டுவதே ஆகும். அதுபோல உலகத்தின் எல்லா சந்தை பொருள்களும் நம்மிடையே வந்து நமது அடையாளத்தினை தொலைத்துவிட்டுத் தேடிக்கொண்டிருக்கிறோம். நாம் வாழ்ந்த பாரம்பரியத்தின் அடையாளங்களை அடகுவைத்து விட்டோம் என்பதை விளக்கமாக விளக்கியுள்ளார்.

டங்கள் என்னும் நயவஞ்சகம்..:

இந்த கட்டுரை என்று சொல்வதைவிட இதை ஒரு தனி நூலாகவே வெளியிடலாம். எண்ணிலடங்கா தகவல்களைக் கொண்ட இந்த ஒரு கட்டுரை “டங்கள் திட்டம்” அதாவது “காட் ஒப்பந்தத்தின்” வழியாக உலகமயமாக்கமும் அதனால் நம் நாட்டுப் பொருளாதாரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்றும் இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு விடையாகப் பல தகவல்களை இந்த கட்டுரையில் விவரமாக விவரித்துள்ளார் பேராசிரியர். நமது நாடு பல்வேறுபட்ட சிறு தொழில்களினால் கட்டிய சிலந்தி வலைப்போல பின்னி பிணைந்து இருக்கும் ஒரு முறையான தொழில்முறை தான் நமது முறை. ஆனால் இன்று வந்த இந்த உலகமயமாக்கலின் விளைவாக சின்ன சின்ன தொழில் நசுங்கி போய் விட்டது. ஒரு காலத்தில் தனக்கு தேவையான வருமானத்தை தான் செய்யும் தொழிலில் ஈட்டினார்கள் ஆனால் இன்றோ அவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் சிதைந்து போனார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
09 ஏப்ரல் 2021

விலங்கு பண்ணை

 விலங்கு பண்ணை

எழுத்தாளர்_ஜார்ஜ் ஆர்வெல் - தமிழி்ல் க.நா.சு
பக்கங்கள் 172



சமீபத்தில் கிண்டலில் இலவசமாக கிடைத்த “1984" என்ற பிரபலமான நாவல். ஏற்கனவே கிடைத்த விலங்கு பண்ணையும் வாங்கிவைத்திருந்தேன். நமது குழுவில் அதாவ்து "வாசிப்பை நேசிப்போம்" குழுவில் அதிமாக வாசிக்க பட்ட இந்த இரண்டு நாவல்களையும் ஒருசேர வாசித்தாக வேண்டும் என்று தான் ஆரம்பித்தேன்.
முதலில் நான் இந்த கதையின் ஆசிரியர் "ஜார்ஜ் ஆர்வெல்" நினைத்து ஆச்சரியப்படுகிறேன். இப்படியொரு மகத்தான சிந்தனையை தனது நாவல் மூலமாக அந்த காலகட்டத்தில் சொல்லியிருப்பது ஒரு மாபெரும் காரியம்தான், அவரை எப்படி பாராட்டுவது? - அவரின் சிந்தனையினை என்னவென்று சொல்வது!!!

1940 களில் எழுதப்பட்ட இவ்விரு புதினங்களும் உலக அளவில் அனைத்து மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு பிரபலமானவை.

இன்றைய காலகட்டத்தில், பல்வேறு கருத்துக்களை கொண்ட எண்ணிலடங்கா நூல்கள் இருக்கின்றன, ஆனால் அவை அனைத்தும் வாசிப்போரின் கவனத்தில் படுகிறதா என்றால் அது ஒரு ஆச்சரியத்துக்குரிய கேள்விக்குறியாக தான் இருக்கும் என்பதில் ஐயமேதில்லை.

அப்படித்தான் தான் சமீபத்தில் நான் வாசித்த "1984" மற்றும் "விலங்கு பண்ணை" என்ற இந்த மகத்தான சிந்தனை கொண்ட இந்த இரண்டு நூல்கள். வாசித்த பின்னர் என்னை ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது இந்த நூல்கள் . ஆம் அதில் வியப்பேதுமில்லை.
"ஜார்ஜ் ஆர்வெல்" அவர்கள் எழுதிய இந்த இரண்டு நூல்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. அதில் ஒன்றான " விலங்கு பண்ணை (Animal Fram)" என்ற நூல் கம்யூனிச எதிர்ப்பு நாவலாக விமர்சனம் செய்யப்பட்டாலும் இன்று கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்பட்டு இருக்கிறது. இன்றைய அரசியல் சூழலில், ஆதிக்கவாதிகள் எதை ஏதேச்சதிகார ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற வினாவை எழுப்பி ஒரு அரசியல் விவாதத்தை தொடங்க இந்த நாவல் உதவியாக இருக்கும். புரட்சியில் ஆரம்பித்து ஒரு பெரிய நோக்கத்திற்காக செயல்பட்ட அந்த புரட்சி பின்னாளில் எப்படி மாறுகிறது எனபதை ஒரு பண்ணையின் விலங்குகளை மையமாக வைத்து மிக அழகாக சித்தரித்து உள்ளார்.

"ஜோன்ஸ்" என்ற ஒரு பண்ணையார் தன்னுடைய பெரிய பண்ணையில் பல்வேறு மிருகங்களைக் கொண்டு தனது நிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். ஒவ்வொரு சராசரி மனிதனின் சாதாரணமான நோக்கமே இலாபம் ஈட்டுவதுதானே? ஆனால் இந்த நோக்கத்திற்க்காக, தொடர் உழைப்புக்கு ஆட்படும் விலங்குகள் தங்களுக்குத் தேவையான மற்றும் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வது எப்படி என முடிவெடுக்கவும், அந்த முயற்சியாக ஒருநாள் அணைத்து விலங்குகளும் சேர்ந்து "ஜோன்ஸ்" அவர்களை பண்ணையை விட்டு வெளியேற்றிவிட்டு தங்களாவே பண்ணையை நிர்வாகம் செய்ய ஆரம்பிக்கிறது ஆரம்பத்தில் குழப்பங்கள் இருந்தாலும் அதிவிரைவில் நிர்வாகத்தில் வெற்றியும் கொண்டு மற்ற பண்ணையாளர்கள் மிரளவும் வைக்கின்றது இந்த விலங்குகள்.

மற்ற பண்ணைகளிலும் இந்த புரட்சி ஏற்படுத்த ஏற்ற நேரம் எப்போது வரும் என்பதை குறித்தும் விவாதிக்க பண்ணைக் கொட்டிலில் விலங்குகள் அனைத்தும் ஒன்றுகூடுகின்றன. விவாதக் கூட்டம், பண்ணைக் கொட்டிலில் மூத்த மற்றும் அறிவார்ந்த மிருகங்களாக ‘கிழட்டு மேஜர்’ நெப்போலியன் மற்றும் ஸ்நோபாலின் பன்றிகளின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தின் முடிவாக, நமக்கு ஏற்பட்ட இன்னல்களுக்கும் காரணமாக இருப்பது நம் உழைப்பை சுரண்டி கொண்டு நம்மை வதைபடுத்தி சுகமாக வாழும் மனிதர்களாகிய பண்ணை உரிமையாளர்களே. அதன்பின் பண்ணையின் பெயர் பலகையை “விலங்கு பண்ணை” என மாற்றப்படுகிறது. புரட்சிகரமான “இங்கிலாந்தின் மிருகங்கள்” என்ற பாடலை இசைக்கின்றன. இந்த பாடலை எல்லா விலங்குகளும் மனப்பாடம் செய்துகொள்கிறது. தங்களுக்கான கல்வி, விவசாய உற்பத்தி, உழைப்பு நேரம் முதலானவற்றை அமைத்துக் கொள்கின்றன. இந்த் நிர்வாகத்தில் இருந்து நிறைய விதிமுறைகள் சொல்லப்படுகிறது. வயதான காலத்தில் உழைப்புக்கு ஓய்வு அதற்காக தனி ஒரு நிலம் அதில் வரும் வருமானம் எல்லாம் ஓய்வூதியத்திற்கு பயன்படுத்தபடும் என்ற திட்டம் மற்றும் தங்களுக்கு தேவையான அனைத்தும் நாமே உற்பத்திக்கொள்ள வேண்டும் என பல்வேறு கொள்கைகள் வாசிக்கும் போதே மிரளவைக்கிறது.
எப்படி ஒரு அதிகாரத்தில் இருந்த மனிதன் தனது அதிகாரம் பறிபோனதும் அதை எப்படியாவது மீட்டெடுக்க முற்படுவான் அதுபோல தான் சில நாட்களுக்குப்பின் மீண்டும் ஜோன்ஸ், சில மனிதர்களின் உதவியுடன் பறிபோன ப ண்ணையினை கைப்பற்ற வருகிறார். எப்படியும் மனிதர்கள் நம்மை விரட்ட வருவார்கள் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த விலங்குகள் தகுந்த முன்னேற்பாடுக ளுடன் தங்களுக்கு ஏற்பட்ட போரில் மிக அருமையான வெற்றியும் பெறுகின்றன.

வஞ்சகமும், பதவியாசையும் யாரைத்தான் விட்டது எப்படி தனக்கு அடுத்த போட்டியாக இருப்பவனை ஒழித்துக்கட்டவேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது அப்படித்தான் இங்கு அந்த பிரச்சினை ஆரம்பமாகிறது, எவ்வாறு ஒரு புரட்சி ஒரு கொள்கையினை நோக்கியிருந்தாலும் பதவி ஆசையினால் நெப்போலியன் பன்றி, ஸ்நோபாலை விரோதியாக எண்ணி அதற்கு எதிராகக் கருத்துக்களைப்பரப்பி துரோகி என்று சொல்லி ஸ்நோபாலை தீர்த்துக்கட்ட தான் ரகசியமாக வளர்த்த வெறி நாய்களையே அனுப்புகிறது. எப்படியோ இந்த சூழ்ச்சியில் இருந்து உயிர் தப்பித்த ஸ்நோபால் பண்ணையை விட்டே ஓடிவிடுகிறது.


ஸ்நோபால் வெளியில் சென்றபின் நெப்போலியன் ஓர் சர்வாதிகாரிகாரியாகவே செயல்படத் தொடங்குகிறது. அதற்காக மற்ற விலங்குகள் மனதை மாற்றுதல், பயத்தை உண்டாக்குதல், புரட்சிக்குப்பின் எழுதப்பட்ட அனைவருக்குமான சட்டத்தில் இரவோடு இரவாக மாறுதல் கொண்டு வருவது, ஸ்நோபாலின் பல அரிய திட்டங்களைத் தான் ஏற்படுத்தியது போன்ற தோரணையைக் காட்டிக்கொள்வது, தற்போது அனுபவித்து வரும் இன்னல்களுக்கும் ஸ்நோபாலின் திட்டம்தான் காரணம் எனத் தவறாகக் கருத்துப் பரப்புவது என அனைத்து தவறான காரியங்களை செய்கிறது. இதற்குத் துணையாக தான் அடியாளாக வளர்த்த வெறிநாய்கள், ஸ்க்வீலர் மற்றும் பன்றி இனத்தைத் துணைக்கு வைத்துக்கொள்கிறது. எப்போதுமே பொதுக்கூட்டம் ஒருவனின் பின் செல்வதையே செய்கிறது அதுவும் கண்மூடித்தனமாக நம்பி அந்த ஒருவன் செய்யும் அக்கரமங்களை எல்லாம் தெரிந்தும் தெரியாதது போலவே பின்தொடரும் கூட்டம் போலத்தான் இங்கே மற்ற விலங்குகள் சென்றன...
காலப்போக்கில் புரட்சிக்குப்பின் எழுதப்பட்டுக் கடைபிடிக்கப்பட்ட அனைத்து விதிகளிலும் மாற்றத்தைச் செய்து பன்றி இனமே உயர்ந்தது என்ற கருத்தை விலங்குகளின் மத்தியில் விதைத்துவிடுகிறது நெப்போலியன். அதோடு மனிதர்கள் அனைவரும் தீயவர்கள் அல்ல எனவும், நெப்போலியன் ஒருவரே தலைவர் அவர் என்ன சொன்னாலும் எதிராகக் கேள்வி கேட்கக்கூடாது என்ற மனப்பான்மையையும் வளர்த்து விடுகிறது. நெப்போலியன் இரண்டு காலில் நடக்கும் மனித உருவமாக மாறி மாறி தெரிவதுடன் மட்டுமல்லாமல் தான் ஒரு சர்வாதிகாரியாவே உருவெடுத்திருப்பதை கண்டு மற்ற விலங்குகள் ஒன்னும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறது என்ற சிந்தனையுடன் நாவல் முடிகிறது.

விலங்குகளை கொண்டு மிக ஆழந்த சிந்தனையின் ஒரு நாவல் மூலமாக சொல்வதென்பது ஒரு பெரிய செயல். இந்த நாவல் வாசிக்க ஆரமித்தது முதல் முடியும் வரை அடுத்தென்ன என்ற ஆர்வமும் ஒரு விதமான எதிர்பார்ப்பும் இருந்துகொண்டே தான் இருந்தது.

நமக்குள் எப்படி ஒரு சிறிய குழுவில் இருந்துகொண்டு தலைவர் யாரென்று தேடுகிறோம் அப்படி யாரவது ஒருவனை தலைவன் என்று சொல்லி நாம் அவனை கண்டு பயப்படுகிறோம் நாம் அவனுக்கு அடிமையாகிவிடுகிறோம் காலப்போக்கில் அந்த அடிமைத்தனம் பொது சட்டமாக மாறுகிறது.

அப்படிப்பட்ட அடிமைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அல்லாமல் தங்கள் சந்ததிகளையும் அந்த அடிமை சங்கிலியில் பூட்டி போட்டு கடைசிவரைக்கும் அடிமையாகவே இருந்து மடிகிறார்கள் என்பதை இந்த நாவல் மூலமாக சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில் இன்றைய உலகின் எதார்த்த வாழ்வியலை மிக தெளிவாக ஒரு பண்ணையில் இருக்கும் விலங்குகளை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்டு நமக்கு தெளிவான சிந்தனையினை சொல்லியிருக்கிறார்.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன்
22 ஏப்ரல் 2021

Thursday 27 May 2021

செவ்வாழை, சரோஜா ஆறணா!!, மதுரைக்கு டிக்கெட் இல்லை மற்றும் நாக்கிழந்தார் - சிறுகதைகள் வாசிப்பு அனுபவம்

 செவ்வாழை - சிறுகதைகள் வாசிப்பு அனுபவம் 

நான்கு சிறுகதைகளை கொண்ட ஒரு அழகான தொகுப்பு .


அறிஞர் அண்ணா என்றாலே அவர் எழுத்துக்கும் பேச்சுக்கும் யாரும் இணையில்லை என்றே சொல்லலாம். அதுபோலவே தான் இந்த நான்கு சிறுகதைகளுக்குள் எத்தனை அரசியல் மற்றும் சமுதாய அக்கறை கொண்ட சிந்தனைகளை நமக்குக் கொடுத்துச் சென்றுள்ளார்.


செவ்வாழை:

ஒரு ஏழை விவசாயி செங்கோடன் தினக்கூலிக்குப் பண்ணையார் வீட்டில் வேலைசெய்கிறான், தனது வீட்டில் கொள்ளையில் ஒரு செவ்வாழை கன்று வைத்து அதை செல்லப் பிள்ளை போல வளர்த்து வந்தான். பண்ணையில் நாள் முழுவதும் கடினமாக வேலை செய்து வந்தாலும் அவன் வீட்டுக்கு வந்தவுடன் தனது செவ்வாழை கன்றைப் பார்த்தாலே அத்தனை  கடினமும் மறைந்து விடும்.  

அவனது நான்கு குழந்தைகளையும் சேர்த்து அந்த கன்றை நன்றாகக் கவனித்து வந்தார்கள். செவ்வாழை கன்று சாதாரணமில்லை அது மிகப் பெரிய கொலை கொடுக்கும் அது அத்தனை சுவையாக இருக்கும் என்று தனது குழந்தைகளுடன் பேசி கலிப்பான்.

கன்று வளர்ந்தது ஒரு கொலையும் வந்தது. குழந்தைகள் எல்லோருக்கும் பெருத்த மகிழ்ச்சி, நமது வீட்டில் ஒரு செவ்வாழை கொலை இருக்கிறது அது நல்ல சுவையான பழம் தரும் என்று , அருகில் உள்ள நண்பர்களிடம் எல்லாம் சொல்லி மகிழ்ந்தார்கள். சில குழந்தைகள் செவ்வாழை பழம் கொடுக்க வேண்டும் என்று இப்போது வேறு பொருள்களைக் கொடுத்தும் வசப்படுத்திக் கொண்டார்கள்.  

செங்கோடன்பண்ணையின் வேலைப் பளுவும் பண்ணை மேலாளரின் ஆர்ப்பாட்டமும் அறவே மறந்து போவான் தனது வீடு செவ்வாழை கொலையினை கண்டவுடன் அவனுக்கு அதின் மீது அதீத ஆசையும் பரிவும் இருந்தது.

பண்ணை வீட்டுப் பிள்ளைகள் பல கனிகளை உண்பார்கள் ஆனால் என் பிள்ளைகளுக்கு என்னால் அவற்றெல்லாம் வாங்கி தர முடியாது ஆனால் என் வீட்டுத் தோட்டத்தில் தனித்திருக்கும் இந்த செவ்வாழையினை ஆசை தீர உன்ன கொடுப்பேன் என்று மனதுக்குள் ஆசையினை வளர்த்து வந்தான்.  பின்ன என்ன செய்யமுடியும் தான் பண்ணையில் செய்யும் வேலைக்குக் கிடைக்கும் கூலியினை வைத்துக் கொண்டு வயிறார சாப்பிடவே முடியாது பின்னர் எப்படி குழந்தைகளுக்கு  பல்வேறு விதமாகப் பண்டங்கள் வாங்கி தர முடியும் என்ற எண்ணம் அவன் மனதிலே அவ்வப்போது அசைந்தாடிக்கொண்டேதான் இருந்தது.

செங்கோடன் தனது வீட்டுச் செவ்வாழையினை பார்த்துக் கொள்வதை "அண்ணா" எவ்வளவு அழகாக விவிரிக்கிறார் பாருங்கள். பண்ணை பரந்தாமன் முதலியார், தமது மருமகள் முத்துவிஜயாவின் பொன்னிற மேனியை அழகுபடுத்திய   வைர மாலையைக்கூட அவ்வளவு பெருமையுடன் பார்த்திருக்கமாட்டார்"  ஆனால் செங்கோடன் தனது வீடு செவ்வாழையின் அவ்வளவு தூரம் பார்த்து வருகிறான் என்று சொல்கிறார்

செவ்வாழையும் கனிந்தது ஆனால் செங்கோடனின் வாழ்க்கையின் இயலாமையும் சேர்ந்து கனிந்தது.

இன்னும் இரண்டு நாளில் குலையை வெட்டி விடலாம் என்று தனது பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டு இருந்த சமயம் பிள்ளைகள் எல்லோரும் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தனர்.  

பண்ணை பரந்தாமன் முதலியார், தமது மருமகள் முத்துவிஜயாவின் பிறந்த நாள் விழாவினை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார். அதற்காக இரண்டு சீப்  செவ்வாழை பழம் வாங்கி வர தனது கணக்கு பில்லியிடம்  சொல்கிறார் ஆனால் அதற்க்கு அவர் இப்போது செவ்வாழை கடையிலே இல்லையாம் என்று சொல்வதுடன் நில்லாமல் நமது கூலி செங்கோடன் வீட்டில் ஒரு செவ்வாழை குலை இருக்கிறது அதில் வேண்டுமென்றால் வாங்கி வருகிறான் என்று சொல்ல உடனே பண்ணையாரும் நம்ம செங்கோடன் வீட்டில் தானே என்று சொல்லி வாங்கி வர சொல்கிறார்.

ஆனால் கணக்கு பிள்ளை இரண்டு சீப்புக்கு பதிலாக முழு குலையையும் வாங்கி சென்று விடுகிறான் அதில் இரண்டு சீப்பு மற்றும் பண்ணையார் வீட்டில் கொடுத்து விட்டு மீதத்தை கடையில் விற்றுவிடுகிறான்.

ஆசை ஆசையாய் வளர்த்த வீட்டு செவ்வாழை இப்படி போய்விட்டதே என்பர் மனம் உடைந்த செங்கோடன் சொல்வதறியது திகைத்து நின்றான். மறுநாள் செங்கோடனின் மகன் கடைக்கு தின்பண்டம் வாங்க செல்கிறான் அங்கு அவன் வீட்டில் வளர்ந்த அந்த அதே செவ்வாழை குலை தொங்குகிறது, அதில் ஒரு பழத்துக்கு கடைகாரன் கேட்டும் காசு இவனிடம் இல்லாமல் திகைத்து வீடு திரும்புகிறான்.

என்னதான் செய்தாலும் ஏழை ஏழையாக தான் வாழ வேண்டிய சூழல் தவிக்கும் செங்கோடன் போல எத்தனையோ கூலிகளின் வாழ்வில் எப்போது ஒரு புதிய சுதந்திர ஒளி வீசும் ???

இறுதியில் அந்த செவ்வாழை மரமும் வெட்டப்பட்டது, பாட்டி செத்துப்போனதுக்கு பாடையிலே கட்டவேண்டும் என்று சொல்கிறான் செங்கோடன். அந்த ஏழை பாட்டியின் பாடையிலே அலங்காரமாக செல்கிறது ஆசை ஆசையா  வளர்த்த செவ்வாழை...

 சரோஜா ஆறணா!!

நகத்துக்குள் செல்லும்போது, அங்கே ஒருவன் "சரோஜா ஆறணா" என்று கூவி கூவி விற்கிறான். அதை கண்டதும் கோபம்கொண்டு அவனிடம் சண்டை போடுகிறான்.        

சண்டைக்கு வந்தவரிடம் வீதியில் கூவிக் கூவி விற்றவன் சொல்கிறான்  இது என்ன அற்புதம் இன்று பங்கஜா என்ன விலை தெரியுமா என்கிறான் மேலும் கோபமடைந்தவன் அவனைத் தாக்க ஆரம்பித்தான். இருவருக்கும் கைகலப்பு ஆனதால் அருகிலிருந்தவர்கள் சண்டையினை சமாதானம் செய்தனர். கிராமத்தில் இருந்து வந்தவனுக்கு பிறகு தான் தெரிகிறது    அவன் கூவிக் கூவி விற்றது "நங்கையை" அல்ல   ஒரு மில்லின் நூல் என்பது தெரியவந்தது. 

நூல் அங்காடியில் மில்லின் பெயரினை கொண்டே விற்கப்படும் என்பது, ஆனால் இங்கே அண்ணா சொல்லிச் செல்கிறார், நூலினை நெய்யும் மில்லும் இல்லாமல் அதை வாங்கி துணி நெய்யும் வாடிக்கையாளர்களுக்கும் இல்லாமல் இடையில் இடைத்  தரகர் எப்படி நூலினை வாங்கி பதுக்கி வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதை மிக அருமையாகச் சொல்கிறார்.

நெசவு செய்யும் நெசவாளர்களின் ஏழ்மை நிலையினை இந்த கதையின் மூலமாக மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். நெசவு செய்யும் குப்புசாமி என்பவர் தனக்குப் பிறந்த செக்க சிவந்த பெண் குழந்தையை ஆறணாவுக்கு விற்றுவிடுகிறார். குடும்ப கஷ்டம் கிடைக்கும் பத்தணா வருமானம் குடும்பம் நடத்த போதவில்லை அதனால் தன குழந்தையை அகிலாண்டத்துக்கு விற்று விட்டார், ஐயோ பாவம் என்று மனைவி சொல்கிறாள். 

அகிலாண்டம் அந்த குழந்தைக்கு "சரோஜா" என்று பெயர் வைத்துவிட்டார் என்று மனைவி சொன்னதும் சென்னையிலே "சரோஜா ஆறணா" என்று கேட்டதும் இங்கு விற்ற அந்த பெண் குழந்தையின் பெயரும் சரோஜா என்றதைக் கேள்விப்பட்டு அதே ஆறணாவுக்கு விற்றார் என்றதும்  மனமுடைந்து போனான்.

ஆடை நெய்பவருக்கும், ஆடை வாங்குவருக்கும்  கஷ்டம் தான் ஆனால் இடையில் இருக்கும் தரகர்கள் நூலினை மரிசத்து வைத்துக்கொண்டு விலையினை தீர்மானிக்கின்றனர் அதனால் அவதிப்படும் நெசவாளர்கள் ஏழ்மை நிலையினை யாரும் ஏன் இந்த உலகமே கவனிக்கிறதில்லை என்று தன ஆதங்கத்தினை ஆணித்தனமாக சொல்லியிருக்கிறார்.


மதுரைக்கு டிக்கெட் இல்லை:

மதுரை ஒரு வாலிபன் கல்யாண வயது வந்து விட்டது ஆனால் அவன் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறான். அவன் தான் தங்கி வேலை செய்யும் இடத்திலே இருந்து விட்டுப் போகலாம் என்று முடிவாக இருக்கிறான்.

வேலையுண்டு, தாங்குகிற இடத்திற்கு வந்தால் நிம்மதியாக இருக்கும் கேள்வி கேட்க யாருமில்லை அப்படிப்பட்ட சுதந்திரம் இங்கு இருக்கிறது கல்யாணம் செய்து கொண்டால் இவளையெல்லாம் பறி போய்விடும் என்றும் பிறகு மனைவிக்காக வாழ வேண்டும் என்று தனது கல்யாணத்தைத் தள்ளிப் போடுகிறான் மதுரை. வேலை செய்யும் இடத்திலே எஜமானர் மட்டும் மிரட்டுவார் ஆனால் வீட்டுக்காரமா தனது கண்ணீரினாலே எல்லாவற்றையும் காட்டி விடுவாள் என்று அழகா சொல்லியிருப்பார்.      

தனிக்காட்டு ராஜாவாக இருக்கலாம் என்று நினைத்த மதுரையின் மனதில் வரும் ஒரு மாற்றத்தின் காரணம் இல்வாழ்க்கையின் உள்ளே வருகிறான். கல்யாணம் ஆகிறது பிறகு தனி குடித்தனம் போகிறான் தான் வாழ்ந்த அந்த தனியறை விட்டு குடும்ப  தலைவனாகிறான்.  ஆரம்பத்தில் எல்லாம் சுகமாகப் போகிறது.

நான்கு குழந்தைகள் என குடும்பம் பெரிசாக மாறுகிறது, ஆரம்பத்தில் குழந்தைகள் கடத்துவது அழகாக இருந்தது ஆனால் இப்போது அது அலுத்துப் போய்விட்டது அவனுக்கு. மதுரையின் மனைவி பெரிய நாயகி ஒரு பிரசவத்தில் இறந்து போய்விட்டாள்.  வாழ விரும்பாத மதுரை தனது நண்பனிடம் தனது குழந்தைகளை அடைக்கலம் செய்துவிட்டுப் பெற்றோர்களை விட்டுவிட்டு கூலி வேலைக்குப் பர்மாவுக்கு ரப்பர் தோட்டத்துக்குச் செல்கிறான்.

தான் பர்மாவுக்குப் போன பிறகு ஒவ்வொரு குழந்தையும் திசை மாறிப்போனதும், இறந்து போனது கேட்டு மனம் உடைந்து போகிறான். 

தொழில் பெறுக வேண்டும், தேசத்தில் வளம் பெறுக வேண்டும் என்று ஏதேதோ பேசுகிறார்கள் ஆனால் பாட்டாளி படும் கஷ்டம் அவன் பசியால் வாடும் அவஸ்தை எனச் சமுதாயத்தை மிக அருமையாகச் சாடுகிறார்.    

நாக்கிழந்தார்: 

இந்த சிறுகதை சமூக கருத்தினை மிக ஆணித்தனமாக சொல்லிச் செல்கிறது.
ஆம், ஒரு பிச்சைக்காரர் தனக்குப் பிச்சை வேண்டி தர்ம பிரபுவே, கோடை வள்ளலே, எனத் தர்மம் கேட்பது வாடிக்கையே. பஞ்சை என்ற ஓவர் பிச்சைக்காரன் பரிதாமாக கெஞ்சி பிச்சை கேட்கிறான்.

ஆனால் அங்கே வந்து செல்லும் தர்ம பிரபுக்கள் அவரவர் கவலைகளைச் சுமந்து கொண்டு இந்த பஞ்சையைக் கண்டுகொள்ளாமல் சென்றனர். பிச்சையேதும் கிடைக்காமல் பிச்சைக்காரர்கள் சாவடியில் திண்ணையில் கூடுகிறார்கள். இந்த மனிதர்கள் எப்படிக் கெஞ்சிக் கேட்டும் நமக்கு ஏன் எதுவும் கொடுக்க மறுக்கிறார்கள் என்பர் தங்கள் வேதனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

பஞ்சை சொல்கிறான் கேவலம் இந்த மனிதர்களைப் பூஜித்து என்ன பயன் அதனால் இனிமேல் நான் கடவுளைத் தான் பூஜிக்கப் போகிறேன் அவனே எனக்கு எல்லாம் தருவான் என்று பேச சக தோழர்கள் நகைக்கிண்டனர்

மறுநாள் பஞ்சை கோவிலின் முன்பே அமர்ந்து இறைவனைப் பலவாறு துதிக்கிறான் ஆனால் அங்கு வரும் எந்த பக்தர்களும் அவனைக் கண்டுகொள்ளவேயில்லை. பின்ன என்ன செய்ய வரும் பக்தர்கள் அவர்களின் குமுறல்களைக் கொட்டுவதற்கே கோவிலுக்கு வருகின்றனர். பிறகு எப்படி இவனின் துதியினை கேட்பார்கள்.

அண்ணா ஒரு இடத்தில் சொல்கிறார், கடவுள் தன்னிடம் வரும் பக்தர்களிடம் சொல்கிறார், எனது பக்தர்களே, இங்கே நீங்கள் உங்கள் குறைகளையும் குமுறல்களைக் கொட்டி கோரிக்கையாக வைக்கிறீர்கள் ஆனால் கோபுர வாசலிலே ஒருவன் கூவிக்கிடக்கிறானே, அவன் ஐஸ்வர்யம் கேட்கவில்லை, வியாபாரத்தில் அதிக லாபம் கேட்கவில்லை , மகனுக்கு ஜமீன் வீட்டுப் பெண் கேட்கவில்லை, அவன் கேட்பது அவனின் அரை வயிற்றுக்குக் காஞ்சி தான். நான் முதலில் அவன் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு வருகிறேன் என்று இறைவன் சொல்லுகிறாரா இல்லை என்றே தான் சொல்ல வேண்டும் என்று மிகத் தெளிவாகத் தனது ஆழ்ந்த கருத்தினை சொல்லியிருக்கிறார்.

பஞ்சை பகலிலும் இரவிலும் கோவிலை வலம் வருவதாகவே இருந்தான், அவன் கூட்டாளிகள் அவனைத் தொடர்ந்து கேலி செய்து கிண்டல் செய்தார்கள். பஞ்சை இந்த கொடுமையிலிருந்து மாற அவன் எதற்கு முடிவே, அவன் என் முழு நேரமும் தேவனை பூஜித்துக் கொண்டே தான் இருந்தான் ஆனால் இறைவன் அவன் கோரிக்கையினை நிறைவேற்ற முன்வரவில்லை.

தன துதியினை ஏற்காத இறைவனின் என்ன செய்ய முடியும் அதனால் அவன் எடுக்கும் அந்த பயங்கரமான முடிவுதான் தான் இறைவனைத் துதித்த நாவினை வெட்டிக்கொள்கிறேன் என்று பஞ்சை சொல்கிறான். தனது நாக்கை துண்டித்து கோவிலின் முன்னர் வீசப்போகிறேன் என்று அவன் கூறியது சக ஆண்டிகளுக்கு ஒரு வியப்பாகவே இருந்தது.

ஆனால் பஞ்சை தன் நாக்கை அறுத்து வீச போகிறான் என்றதும் தான் எப்போதும் பூஜித்த சீமான் ஒரு திட்டம் போடுகிறான் அதன்படி பஞ்சையை அழைத்து சென்று தனது திட்டத்தை சொல்கிறான். ஆமாம் நீ உண்மையாகவே நாக்கை துண்டிக்க போகிறாயா என்றதும், அது உண்மைதான் என்றதும் வியப்பாக கேட்டான். 

அப்பாவி பஞ்சையை வைத்து எப்படியாவது ஒரு பெரிய பணக்காரன் ஆகவேண்டும் அன்றும் அதற்காக பஞ்சை தன நாக்கினை துண்டித்து கோவிலுக்கு காணிக்கையாக போடா போகிறான் என்று துண்டு நோட்டீசு ஊர் முழுதும் கொடுத்தான் அந்த சீமான்.

பஞ்சை தன நாக்கினை துண்டித்துக்கொண்டான் உடனே தன திட்டப்படி பஞ்சையின் காலில் விழுந்து நான் உன் பக்தர் இந்த அடியவனை தங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான். அப்படியே ஊர்மக்கள் அனைவரும்  பஞ்சையினை தனது குருவாக ஏற்றுக்கொள்கிறார்கள்.

இப்படி போலியாக நடிக்கும் இந்த நாடகத்து மக்கள் எப்படி மயங்கி போய் எல்லாம் செய்கிறார்கள் ஆனால் சீமான் மட்டும் இவனை வைத்து பணம் பார்க்கிறான்.  எல்லோரும் தன்னை ஒரு அவதாரமாக பார்ப்பதும் சீமான் தன்னை பயன்படுத்திவருவதையும் நினைத்து பஞ்சை இந்த கேடுகெட்ட உயிரை வைத்து கொண்டிருப்பதைவிட இறப்பதே மேல் என்று தனது உயிரை விடுகிறான். சீமான் அந்த ஆசிரமத்து அதிபரானார். ஆண்டு தோறும் காணிக்கைகள் வந்து குவிந்துகொண்டே இருக்கிறது.

மூடநம்பிக்கையில் ஊரிக் கிடக்கும் இந்த நாட்டிலே, இது போல சூதுகளுக்கும், சாமியாடிகளுக்கும், அற்புதம் நடத்துவோருக்கும் இன்றும் ஆதிக்கம் நிரம்ப இருக்கிறது. 

மூடநம்பிக்கைகளை களைய மக்களிடையே விழிப்புணர்வு கொடுக்க முன்வராத அனைவரையும் நான் "நாக்கிழந்தார்"  என்றே சொல்வேன் என்று அண்ணா  தனது கருத்தை மிக தெளிவாகவும் எளிமையாக புரியும் வண்ணமும் இந்த கதையில் சொல்லியிருக்கிறார்.


இந்த நான்கு சிறுகதைகளும் ஒவ்வொரு சிந்தனைகளை சிறப்பாக சொல்கிறது.

அன்புடன்.
தேவேந்திரன் ராமையன் 
27 மே 2021                                           
 

  
              

   




Wednesday 26 May 2021

எரியும் பனிக்காடு - நூல் வாசிப்பு அனுபவம்

 எரியும் பனிக்காடு - நூல் வாசிப்பு அனுபவம்


தமிழகத்த்தின் உழைக்கும் மக்களின் வரலாற்றில் மிக இருண்ட ஓர் அத்தியாயத்தைப் பற்றிப் பேசும் ‘ரெட் டீ’ ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பல  ஆண்டுகள் கழித்து முதல்முதலாக ‘எரியும் பனிக்காடாக’த் தமிழில் வந்தது.   


இன்றைக்கு திரைப்படங்களில் மற்றும் மலை நகரங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது  தேயிலைத் தோட்டங்கள் தான். ஆனால் அந்த தேயிலை தோட்டங்களையும் கட்டியமைக்கக் கூட்டங் கூட்டமாகப் பலிகொடுக்கப்பட்ட, அந்தக் கண்கவரும் பசிய சரிவுகளில் புதையுண்டு போன லட்சோப லச்சம்  ஒடுக்கப்பட்ட மக்களின் வாழக்கையில் கலந்த ரத்தத்தின் கதைதான் ‘எரியும் பனிக்காடு.’

இந்த கதையினை படித்த பின்னர் நான் விரும்பி பருகும் தேநீரில் எத்தனையோ இருண்ட முகங்களின் மறைந்த சோகம் இருக்கிறதோ என்ற நடுக்கத்துடன் தான் பருக வேண்டியிருக்கிறது. 

ஒவ்வொரு டீ எஸ்டேட்டும் லட்சக்கணக்கான தொழிலாளிகள் செத்துபோயோ அல்லது கொல்லப்பட்டோ அவர்களின் ரத்தமும் சதையும் உரமாக போட்டுத்தான் இந்த தேயிலை புதர்கள் எல்லாம் வளர்ந்து இருக்கிறது என்றால் அது தவறு இல்லை அதுதான் உண்மையும் கூட.

பிரிட்டிஷ்காரர்களோட நன்மைக்காக இந்தியாவில் தேயிலைத்  தொழிலை உருவாக்கியதில் நம் நாடு எத்தனை பெரிய விலை கொடுத்து இருக்கிறது. மனிதர்களின் ரத்தத்தை உரிஞ்சும் அட்டைகளும் அதைவிட மோசமாக உறிஞ்சும் மேஸ்திரிகளும், தொரைகளும் எப்படி கூலிகள் எல்லோரையும் கொடுமை படுத்தி வாழக்கையை சீரழிக்கிறார்கள் என்பது தான் இந்த கதையின்    
 
கதைக்கு வருவோம்.
 
1925ஆம் ஆண்டு, ஒரு டிசம்பர் இரவு...திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமம் மயிலோடை அங்கு  சுமார் முப்பது வீடுகளே இருந்தன. அவற்றில் ஓடு போடப்பட்ட ஒரேயொரு செங்கல் வீட்டைத் தவிர மற்றவை அனைத்துமே பனையோலையால் வேயப்பட்ட, ஒற்றை அறை களைக் கொண்ட குடிசைகள்தான். சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டவை. சில குடிசைகளில்தான் மலிவான மரங்களாலான கதவுகள் காணப்பட்டன. மற்றவற்றில் மூங்கில் தட்டிகளையும், பனை யோலைகளையும் கொண்டு கைகளால் செய்யப்பட்ட படல்களே கதவுகளாகப் பயன்பட்டு வந்தன. மக்கள் அத்தனை பேரும் தாழ்த்தப் பட்டவர்கள். பக்கத்து ஊர்களைச் சேர்ந்தவர்களின் நிலங்களில் கூலி வேலை செய்தே தங்கள் வயிற்றுப்பாட்டைக் கவனித்து வந்தார் கள்.

அந்த கிராமத்தின்  குடிசைகளில் ஒன்றில் ஒரு கிழிந்த பாயில் கருப்பன் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான். இரவின் நிசப்தத்தினூடே அவ்வப்போது யாரோ உலுக்கி விட்டது போல அவனுடல் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தது. நெடுநேரத்துக்கு முன்பே விழிகளிலிருந்து உறக்கம் விடைபெற்றுச் சென்றிருந்தது. இரவெல்லாம் ஊமை எரிச்சலாக இருந்த பசி அதிகாலை நேரத்தில் புதுவேகம் பெற்று குடல்களைப் பிடுங்கியெடுக்க மனது மட்டும் குடும்பத்தின் அவசரத் தேவைகளுக்காக இரண்டு மூன்று ரூபாய் புரட்டுவதற்கான திட்டங்களைப் பரபரப்புடன் வகுத்துக் கொண்டிருந்தது. ராபட்டினி கிடந்த வாலிபனின் வயறு எத்தனையோ சோக கீதங்களை கதறி கொண்டுயிருந்தது.

வானம் பார்த்த பூமி, வானம் பொய்த்து போனதால் வாழவாதரம் இல்லாமல் போன பல குடும்பங்களின் ஒன்றே இந்த கருப்பன் வள்ளி குடும்பம். இரவு முழுவதும் பசியோடு தூங்க முடியாமல் எப்படியாவது நாளைக்கு உணவுக்கு ஒரு வழி செய்யவேண்டும் என்று ஒரே தீர்மானத்துடன் பொழுது விடிவதற்குள் அவன் கயத்தாறு நோக்கி சென்றான். எங்கு கேட்டும் வேலை கிடைக்க வில்லை பசியின் கொடுமை ஒருபுறம் வேறு வேலை இல்லாமல் எப்படி திரும்புவது என்ற வழி தெரியாமல் அந்த கடைவீதியில்  அவன் தடுமாறிக்கொண்டிருந்தான்.

வாழ வழி தெரியாமல் இருந்த கருப்பனின் வாழ்வில் வந்த ஒரு வசந்தம் போல சில பகடு வார்த்தைகளை கொண்டு அவனை அந்த நகரத்திற்கு வரவழைத்தான் மேஸ்திரி சங்கரபாண்டியன்.

சங்கரபாண்டியனின் ஆசை வார்த்தை கேட்டு எஸ்டேட்டில் பாலும் தேனும் ஓடுவதாக நம்பி தனது மனைவி வள்ளியுடன் அந்த நரகத்தை நோக்கி நகர்வலம் போனான். 

அந்த கிராமத்தில் இருந்து இதுவரைக்கும் நடை பயணத்தை தவிர வேறு எந்த பயணமும் கண்டிராத கருப்பனின் முதல்  பேருந்து பயணம், ரயில் பயணம் செய்வதை மிக அழகா காட்சிப்படுத்த பட்டுள்ளது. அவன் தான் பிறந்து வளர்ந்த வீடும் ஊரும் விட்டு பிரிய மனம் வராமல் தவிக்கும் அவனது தவிப்பு நம்மையும் ஒரு நிமிடம் அந்த இடத்தில் இருந்து யோசிக்க வைக்கிறது.

ஆனைமலைக்கு செல்லும் அந்த பயணம் ஆரம்பத்தில் சுவாரஷ்யமாக இருந்தாலும் கொஞ்சம் போக போக தான் தெரிந்தது. எங்கோ வழி மாறி போன பயணிகள் போல ஒவ்வொருவரும் பட்ட துயரங்கள் எண்ணிலடங்காதவை. அடிமைகளாக சென்று கொண்டிருக்கிறோம் என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு அடிமைகளும் உணர ஆரம்பித்தனர். 

பாலைவனத்தின் பயணம் போல இருந்தது அவர்களின் அந்த பயணம். இறுதியில் ஆனைமலைக்கு வந்து சேர்ந்தனர். 

எண்ணற்ற கனவுகளோடு கூலி அடிமைகளாக வந்த கருப்பன்....  லைனில் ஒரு குடிசையில் மூன்று குடும்பம் வாழ வேண்டிய கட்டாயம், தனக்கு தனி வீடு தருவதாக சொல்லியிருந்த கங்காணி சங்கரபாண்டியனிடம் கேட்ட பொது அவனின் முகமே வேற முகமாக இருந்தது, நா கூசும் வார்த்தைகளால் வசை பாடினான், அதை கேட்டு மிரண்டு போன கருப்பன் முதல் முதலாக உணர்ந்தான் அவன் செய்த தவறை நினைத்து.

வாழ்வதற்கு கொஞ்சம் கூட முடியாத அந்த குடிசைகளில் வாழ கற்று கொண்டனர். தேயிலை தோட்டத்தின் வேலை ஆரம்பத்தில் சிரமமாக இருந்தாலும் பல வித அவஸ்தைகளை அனுபவித்து மெல்ல மெல்ல வேலை கற்று கொள்ள ஆரம்பித்தனர்.    

ஒரே வருடத்தில் நிறைய காசு சம்பாதிச்சு பெரிய பணக்காரனாக திரும்பி ஊருக்கு வந்துவிடலாம் என்ற பெரிய கனவுடன் வந்த கருப்பனுக்கு இங்கு வந்து பார்த்ததும் அது நடக்குமா என்ற சந்தேகம் வந்தது அதுபோலவே பல இடையூறுகளுக்கு இடையே வாழ ஆரம்பித்த அவனின் வாழ்வில் மீண்டும் மீண்டும் வரும் பெரிய இடிகள் சில தங்க கூடியதாகவே இருந்தாலும் சில தாங்க முடியாததாக தான் இருந்துதது.

கடும் குளிர், விட  அடை மழை, இதெல்லாம் புதியது தான் இருந்தாலும் அவற்றை வெற்றி கொள்ள முடியாமல் படும் இன்னல்கள் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போனது. காய்ச்சல் அவற்றிக்கு ஒரு நல்ல வசதி கிடையாது. மருத்துவர் இல்லாமல் வெறும் வார்டு பாய் தான் அங்கே சகலமும் அவன் தான் இந்த அடிமைகளின் வைத்தியர். சுத்தமான தண்ணீர் கிடையாது, வீடு கிடையாது இவற்றால் ஒவ்வொரு வருசமும் வரம் காய்சாலின் விளைவாக எத்தனையோ அடிமைகள் உயிரையே தியாகம் செய்தனர். இந்த நரகத்தில் இருந்து எப்படியாவது வெளியே தப்பித்து போகலாம் என்று நினைக்கும் அடிமைகள் எஸ்டேட்டை விட்டு வெளியே போகாமல் பார்த்துக்கொள்ள காவலாளிகள். ஏன் சில எஸ்டேட்டில் கூலிகளை சங்கிலி போட்டு கட்டி வைத்திருக்கிறார்கள், இந்த கொடுமைகளை எல்லாம் மிக தெளிவாக எல்லா மேஸ்திரிகள் செவ்வனே செய்தனர். 

வருட கடைசியில், ஜனவரி மாதம், கூலிகளுக்கு கணக்கு தீர்க்கப்படும் நேரம் அப்போது வருடம் முழுதும் உழைத்ததற்கு மிகவும் சொற்பமான கூலியே கிடைக்கும் அதுவும் எந்த படிப்பறிவும் இல்லாத இந்த அடிமைகளுக்கு அவர்களின் உரிமை என்ன என்பதுவே தெரியாமல் ஆட்டு மந்தைகள் போலவே அடிமைகள் ஏமாந்து போனார்கள்.  

ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த கூலி நேரம் வந்தது, கருப்பன் எதிர்பார்த்த எந்த ஒரு சந்தோஷமும் அவனுக்கு கிடைக்க வில்லை, நோயினால் வேலை செய்யமுடியாத நாட்களெல்லாம் கூலி இல்லை, ரேஷன் கொடுத்ததற்கு காசு பிடித்தம், கம்பளிக்கு காசு என ஏராளமான பிடித்தம் போக மீதி கிடைத்தது மிக சொற்பமான காசேதான். அதிலிருந்து மேஸ்திரி கொடுத்த முன்பணம் கொடுக்க முடியவில்லை, காலிச்செட்டியாரின் கடைக்கு கொடுக்க வேண்டிய கடன் பலமடங்காக பொய் கணக்கு எழுதி வசூல் செய்து விட்டான். 

பாவம் இந்த அடிமைகள், இவர்களின் ரத்தம் அட்டை உறிஞ்சுவது என்னமோ கொஞ்ச நாட்கள் மட்டுமே ஆனால் அவர்களின் ஒவ்வொரு நிமிடமும் இந்த கள்வர்களால் உரிஞ்சப்படுகிறது. கேட்க ஆளில்லை தொரைகள் முதல், மேஸ்திரி, செட்டி கடைக்காரன் என இவர்களின் வாழ்வில் என்றேற்ற அட்டை பூச்சிகள் நாள் தோறும் உரிஞ்சுகொண்டே தான் இருந்தது.

ஒரு வருடம் முடிந்ததும் கருப்பனுக்கு ஊருக்கு போகவேண்டிய அளவுக்கு பணம் இல்லை, மீண்டும் அவன் கடன் பட்டிருந்தான். அந்த கடனில் இருந்து தப்பிக்க எப்படி முடியும் என்று யோசிக்க கூட முடியமால் மீண்டும் அடுத்த வருஷதிற்கு வேலை செய்ய தயரான நிலையில் கருப்பனுக்கு வள்ளியும்....

தொரைமார்களின் காம விளையாட்டுக்கு உடன்படாத வள்ளியின் நிலை அவள் செய்த வேலைக்கு ஈடான கூலி கொடுக்க வில்லை, மாறாக அவள் வஞ்சிக்கப்ட்டால்.     அவள் கடினமாக உழைத்த உழைப்பை தொரைமார்களின் ஆசை நாயகிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

முள் படுக்கையில் அந்த பரிதாப பட்ட அடிமைகளின் வழக்கை நகர்கிறது. இரண்டு வருடமும் கடந்தது இதில் மீண்டும் மீண்டும் கடன் உயர்ந்து கொண்டே தான் இருந்தது. காய்ச்சலில் இருந்து தப்பிக்க தாயத்து தருவதாக ஏமாற்றும் ஒருவன் என கருப்பன் மேலும் கடன் படவேண்டியிருந்தது.
பல கனவுகளின் இறுதியாக இரண்டாம் ஆண்டும் முடிந்தது ஊருக்கு போக தேவையான காசு கருப்பனுக்கு கிடைக்க வில்லை. மீண்டும் ஒரு பெருத்த ஏமாற்றம் அனால் இந்த வருஷம் வள்ளியின் உடல் நிலை சரியில்லாமல் போனது. மீண்டும்  மூன்றாவது ஆண்டு கருப்பன் அடிமை வாழக்கை முள் மீது நடக்க தொடர்ந்தது. 

ஆனால் இந்த வருடமாவது ஊருக்கு திரும்ப போகவேண்டும் என்ற கனவை நிறைவேற்ற இடைவிடாமல் உழைக்க தொடங்கினார்கள். இந்த வருசமும் ஊருக்கு போக முடியாமல் போக கூடாதென்று முடிவே எடுத்திருந்தார்கள். இந்த வருடம் பலவகையான மாற்றங்கள்.வள்ளியின் உடல் நலம் பாதிக்க தொடங்கியிருந்தது இருந்தாலும் அவள் விடுப்பு எடுக்காமல் உழைத்து கொண்டே தான் இருந்தால். 

வார்ட் பாய் டாக்டராக வேலை பார்த்ததால் தான் நிறைய சாவுகள், காங்கிரசு காரர்கள் எப்போ வேண்டுமானாலும் இங்கே வருவார்கள் என்று பயத்தால் ஒரு படித்த டாக்டரை நியமிக்க வேண்டிய காட்டுயா சூழல் அப்படியாக ஒரு புதிய டாக்டர் வருகிறார் அதற்க்கு பிறகு கொஞ்சம் அடிமைகள் நல்ல மருத்துவம் கிடைத்தது. 

இங்கே கூலிகள் மட்டும் அடிமைகள் இல்லை இங்கு வேலைக்கு வரும் எல்லோருமே அடிமைகள் தான், காலில் செருப்பு போடக்கூடாது, தொப்பி போட கூடாது, தொரைகள் வரும்போது பவ்வியமாக அவர்களை மரியாதையை செலுத்த வேண்டும். இது போல கொடுமைகள் ஒரு முடிவுக்கு வரவே இல்லை.

புதிதாக வந்த டாக்டர் சில மாறுதல்களை கொண்டுவந்தார். எழுத்தர் அப்பாவு, ஜான்சன் இவர்கள் எல்லாம் சேர்ந்து கிறுஸ்துமல் விடுமுறைக்கு அருகில் இருக்கும் மலைக்கு ஒரு பயணம் மேற்கொண்டனர். இது வரை தேயிலை தோட்டத்தின் இரண்டு பக்கம் மட்டுமே தெரிந்த நமக்கு அந்த அழகிய மலையில் எவ்வளவு ரம்யமான காட்சிகள் இருக்கிறது என்று இந்த பயணத்தில், அப்பாவு மிக அழகா விவரிக்கிறார். 

இந்த வருஷம் வள்ளியின் உடல் நிலை படு மோசமாவே இருந்தது இந்த நிலையில் கருவுற்று இருக்கிறாள். பூசாரி இந்த முறையும் தனது பங்குக்கு கருப்பனிடம் ஏமாற்றிகொண்டே தான் இருந்தான்.  வள்ளி இனி நாம இரண்டு பேரும் சேர்ந்து ஊருக்கு போகமாட்டோம் என தீர்மானித்துவிட்டால். இருந்தாலும் புதிய மருத்துவர் கொஞ்சம் நல்ல முறையில் வைத்தியம் பார்ப்பதால் தெரிவிடுவோம் என்ற நம்பிக்கை கருப்பனுக்கும் வள்ளிக்கும் வந்தது. 
ஆனால் விதி அவளின் உயிர் இந்த தேயிலை தோட்டத்துக்கு உரமாக வேண்டும் என்று இருக்கிறது                                            
                                
தமிழ் இலக்கியம் மிக அரிதாகவே தீண்டிய அந்த இருண்ட, இரத்தம் தோய்ந்த வரலாற்றை, அந்த மக்களின் கற்பனைக்கெட்டாத சோகங்களை, அவல வாழ்வை நம் கண்முன் நிறுத்துகிறது ‘எரியும் பனிக்காடு’.பிரிட்டிஷ் அரசும் அந்நாட்டுத் தொழில் நிறுவனங்களும் வேறு வேறு அல்ல என்றிருந்த காலத்தில் அவை ஒன்றிணைந்து அரங்கேற்றிய கொடுமைகள்தான் இந்நவீனமாக உருப்பெற்றன.

இன்று தொழிலாளர்களின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்பட்டு கேம்ப் கூலி முறை போன்ற நவீன கொத்தடிமை முறைகள் பல்வேறு அலங்காரமான பெயர்களில் தொழில் துறையின் மையத்திற்கு வந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் இப்போக்கு நிறுத்தப்படாவிட்டால் அது எதில் சென்று முடியும் என்பதற்கான எச்சரிக்கையே இந்நூல்.

அன்புடன், 
தேவேந்திரன் ராமையன் 
26 மே 2021