செவ்வாழை - சிறுகதைகள் வாசிப்பு அனுபவம்
நான்கு சிறுகதைகளை கொண்ட ஒரு அழகான தொகுப்பு .
அறிஞர் அண்ணா என்றாலே அவர் எழுத்துக்கும் பேச்சுக்கும் யாரும் இணையில்லை என்றே சொல்லலாம். அதுபோலவே தான் இந்த நான்கு சிறுகதைகளுக்குள் எத்தனை அரசியல் மற்றும் சமுதாய அக்கறை கொண்ட சிந்தனைகளை நமக்குக் கொடுத்துச் சென்றுள்ளார்.
செவ்வாழை:
ஒரு ஏழை விவசாயி செங்கோடன் தினக்கூலிக்குப் பண்ணையார் வீட்டில் வேலைசெய்கிறான், தனது வீட்டில் கொள்ளையில் ஒரு செவ்வாழை கன்று வைத்து அதை செல்லப் பிள்ளை போல வளர்த்து வந்தான். பண்ணையில் நாள் முழுவதும் கடினமாக வேலை செய்து வந்தாலும் அவன் வீட்டுக்கு வந்தவுடன் தனது செவ்வாழை கன்றைப் பார்த்தாலே அத்தனை கடினமும் மறைந்து விடும்.
அவனது நான்கு குழந்தைகளையும் சேர்த்து அந்த கன்றை நன்றாகக் கவனித்து வந்தார்கள். செவ்வாழை கன்று சாதாரணமில்லை அது மிகப் பெரிய கொலை கொடுக்கும் அது அத்தனை சுவையாக இருக்கும் என்று தனது குழந்தைகளுடன் பேசி கலிப்பான்.
கன்று வளர்ந்தது ஒரு கொலையும் வந்தது. குழந்தைகள் எல்லோருக்கும் பெருத்த மகிழ்ச்சி, நமது வீட்டில் ஒரு செவ்வாழை கொலை இருக்கிறது அது நல்ல சுவையான பழம் தரும் என்று , அருகில் உள்ள நண்பர்களிடம் எல்லாம் சொல்லி மகிழ்ந்தார்கள். சில குழந்தைகள் செவ்வாழை பழம் கொடுக்க வேண்டும் என்று இப்போது வேறு பொருள்களைக் கொடுத்தும் வசப்படுத்திக் கொண்டார்கள்.
பண்ணை வீட்டுப் பிள்ளைகள் பல கனிகளை உண்பார்கள் ஆனால் என் பிள்ளைகளுக்கு என்னால் அவற்றெல்லாம் வாங்கி தர முடியாது ஆனால் என் வீட்டுத் தோட்டத்தில் தனித்திருக்கும் இந்த செவ்வாழையினை ஆசை தீர உன்ன கொடுப்பேன் என்று மனதுக்குள் ஆசையினை வளர்த்து வந்தான். பின்ன என்ன செய்யமுடியும் தான் பண்ணையில் செய்யும் வேலைக்குக் கிடைக்கும் கூலியினை வைத்துக் கொண்டு வயிறார சாப்பிடவே முடியாது பின்னர் எப்படி குழந்தைகளுக்கு பல்வேறு விதமாகப் பண்டங்கள் வாங்கி தர முடியும் என்ற எண்ணம் அவன் மனதிலே அவ்வப்போது அசைந்தாடிக்கொண்டேதான் இருந்தது.
செவ்வாழையும் கனிந்தது ஆனால் செங்கோடனின் வாழ்க்கையின் இயலாமையும் சேர்ந்து கனிந்தது.
இன்னும் இரண்டு நாளில் குலையை வெட்டி விடலாம் என்று தனது பிள்ளைகளிடம் சொல்லிக்கொண்டு இருந்த சமயம் பிள்ளைகள் எல்லோரும் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தனர்.
பண்ணை பரந்தாமன் முதலியார், தமது மருமகள் முத்துவிஜயாவின் பிறந்த நாள் விழாவினை விமரிசையாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார். அதற்காக இரண்டு சீப் செவ்வாழை பழம் வாங்கி வர தனது கணக்கு பில்லியிடம் சொல்கிறார் ஆனால் அதற்க்கு அவர் இப்போது செவ்வாழை கடையிலே இல்லையாம் என்று சொல்வதுடன் நில்லாமல் நமது கூலி செங்கோடன் வீட்டில் ஒரு செவ்வாழை குலை இருக்கிறது அதில் வேண்டுமென்றால் வாங்கி வருகிறான் என்று சொல்ல உடனே பண்ணையாரும் நம்ம செங்கோடன் வீட்டில் தானே என்று சொல்லி வாங்கி வர சொல்கிறார்.
ஆனால் கணக்கு பிள்ளை இரண்டு சீப்புக்கு பதிலாக முழு குலையையும் வாங்கி சென்று விடுகிறான் அதில் இரண்டு சீப்பு மற்றும் பண்ணையார் வீட்டில் கொடுத்து விட்டு மீதத்தை கடையில் விற்றுவிடுகிறான்.
ஆசை ஆசையாய் வளர்த்த வீட்டு செவ்வாழை இப்படி போய்விட்டதே என்பர் மனம் உடைந்த செங்கோடன் சொல்வதறியது திகைத்து நின்றான். மறுநாள் செங்கோடனின் மகன் கடைக்கு தின்பண்டம் வாங்க செல்கிறான் அங்கு அவன் வீட்டில் வளர்ந்த அந்த அதே செவ்வாழை குலை தொங்குகிறது, அதில் ஒரு பழத்துக்கு கடைகாரன் கேட்டும் காசு இவனிடம் இல்லாமல் திகைத்து வீடு திரும்புகிறான்.
என்னதான் செய்தாலும் ஏழை ஏழையாக தான் வாழ வேண்டிய சூழல் தவிக்கும் செங்கோடன் போல எத்தனையோ கூலிகளின் வாழ்வில் எப்போது ஒரு புதிய சுதந்திர ஒளி வீசும் ???
இறுதியில் அந்த செவ்வாழை மரமும் வெட்டப்பட்டது, பாட்டி செத்துப்போனதுக்கு பாடையிலே கட்டவேண்டும் என்று சொல்கிறான் செங்கோடன். அந்த ஏழை பாட்டியின் பாடையிலே அலங்காரமாக செல்கிறது ஆசை ஆசையா வளர்த்த செவ்வாழை...
சரோஜா ஆறணா!!
நகத்துக்குள் செல்லும்போது, அங்கே ஒருவன் "சரோஜா ஆறணா" என்று கூவி கூவி விற்கிறான். அதை கண்டதும் கோபம்கொண்டு அவனிடம் சண்டை போடுகிறான்.
சண்டைக்கு வந்தவரிடம் வீதியில் கூவிக் கூவி விற்றவன் சொல்கிறான் இது என்ன அற்புதம் இன்று பங்கஜா என்ன விலை தெரியுமா என்கிறான் மேலும் கோபமடைந்தவன் அவனைத் தாக்க ஆரம்பித்தான். இருவருக்கும் கைகலப்பு ஆனதால் அருகிலிருந்தவர்கள் சண்டையினை சமாதானம் செய்தனர். கிராமத்தில் இருந்து வந்தவனுக்கு பிறகு தான் தெரிகிறது அவன் கூவிக் கூவி விற்றது "நங்கையை" அல்ல ஒரு மில்லின் நூல் என்பது தெரியவந்தது.
நூல் அங்காடியில் மில்லின் பெயரினை கொண்டே விற்கப்படும் என்பது, ஆனால் இங்கே அண்ணா சொல்லிச் செல்கிறார், நூலினை நெய்யும் மில்லும் இல்லாமல் அதை வாங்கி துணி நெய்யும் வாடிக்கையாளர்களுக்கும் இல்லாமல் இடையில் இடைத் தரகர் எப்படி நூலினை வாங்கி பதுக்கி வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதை மிக அருமையாகச் சொல்கிறார்.
நெசவு செய்யும் நெசவாளர்களின் ஏழ்மை நிலையினை இந்த கதையின் மூலமாக மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். நெசவு செய்யும் குப்புசாமி என்பவர் தனக்குப் பிறந்த செக்க சிவந்த பெண் குழந்தையை ஆறணாவுக்கு விற்றுவிடுகிறார். குடும்ப கஷ்டம் கிடைக்கும் பத்தணா வருமானம் குடும்பம் நடத்த போதவில்லை அதனால் தன குழந்தையை அகிலாண்டத்துக்கு விற்று விட்டார், ஐயோ பாவம் என்று மனைவி சொல்கிறாள்.
அகிலாண்டம் அந்த குழந்தைக்கு "சரோஜா" என்று பெயர் வைத்துவிட்டார் என்று மனைவி சொன்னதும் சென்னையிலே "சரோஜா ஆறணா " என்று கேட்டதும் இங்கு விற்ற அந்த பெண் குழந்தையின் பெயரும் சரோஜா என்றதைக் கேள்விப்பட்டு அதே ஆறணாவுக்கு விற்றார் என்றதும் மனமுடைந்து போனான்.
ஆடை நெய்பவருக்கும், ஆடை வாங்குவருக்கும் கஷ்டம் தான் ஆனால் இடையில் இருக்கும் தரகர்கள் நூலினை மரிசத்து வைத்துக்கொண்டு விலையினை தீர்மானிக்கின்றனர் அதனால் அவதிப்படும் நெசவாளர்கள் ஏழ்மை நிலையினை யாரும் ஏன் இந்த உலகமே கவனிக்கிறதில்லை என்று தன ஆதங்கத்தினை ஆணித்தனமாக சொல்லியிருக்கிறார்.
மதுரைக்கு டிக்கெட் இல்லை:
மதுரை ஒரு வாலிபன் கல்யாண வயது வந்து விட்டது ஆனால் அவன் கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறான். அவன் தான் தங்கி வேலை செய்யும் இடத்திலே இருந்து விட்டுப் போகலாம் என்று முடிவாக இருக்கிறான்.
வேலையுண்டு, தாங்குகிற இடத்திற்கு வந்தால் நிம்மதியாக இருக்கும் கேள்வி கேட்க யாருமில்லை அப்படிப்பட்ட சுதந்திரம் இங்கு இருக்கிறது கல்யாணம் செய்து கொண்டால் இவளையெல்லாம் பறி போய்விடும் என்றும் பிறகு மனைவிக்காக வாழ வேண்டும் என்று தனது கல்யாணத்தைத் தள்ளிப் போடுகிறான் மதுரை. வேலை செய்யும் இடத்திலே எஜமானர் மட்டும் மிரட்டுவார் ஆனால் வீட்டுக்காரமா தனது கண்ணீரினாலே எல்லாவற்றையும் காட்டி விடுவாள் என்று அழகா சொல்லியிருப்பார்.
தனிக்காட்டு ராஜாவாக இருக்கலாம் என்று நினைத்த மதுரையின் மனதில் வரும் ஒரு மாற்றத்தின் காரணம் இல்வாழ்க்கையின் உள்ளே வருகிறான். கல்யாணம் ஆகிறது பிறகு தனி குடித்தனம் போகிறான் தான் வாழ்ந்த அந்த தனியறை விட்டு குடும்ப தலைவனாகிறான். ஆரம்பத்தில் எல்லாம் சுகமாகப் போகிறது.
நான்கு குழந்தைகள் என குடும்பம் பெரிசாக மாறுகிறது, ஆரம்பத்தில் குழந்தைகள் கடத்துவது அழகாக இருந்தது ஆனால் இப்போது அது அலுத்துப் போய்விட்டது அவனுக்கு. மதுரையின் மனைவி பெரிய நாயகி ஒரு பிரசவத்தில் இறந்து போய்விட்டாள். வாழ விரும்பாத மதுரை தனது நண்பனிடம் தனது குழந்தைகளை அடைக்கலம் செய்துவிட்டுப் பெற்றோர்களை விட்டுவிட்டு கூலி வேலைக்குப் பர்மாவுக்கு ரப்பர் தோட்டத்துக்குச் செல்கிறான்.
தான் பர்மாவுக்குப் போன பிறகு ஒவ்வொரு குழந்தையும் திசை மாறிப்போனதும், இறந்து போனது கேட்டு மனம் உடைந்து போகிறான்.
தொழில் பெறுக வேண்டும், தேசத்தில் வளம் பெறுக வேண்டும் என்று ஏதேதோ பேசுகிறார்கள் ஆனால் பாட்டாளி படும் கஷ்டம் அவன் பசியால் வாடும் அவஸ்தை எனச் சமுதாயத்தை மிக அருமையாகச் சாடுகிறார்.
நாக்கிழந்தார்:
இந்த சிறுகதை சமூக கருத்தினை மிக ஆணித்தனமாக சொல்லிச் செல்கிறது.
ஆம், ஒரு பிச்சைக்காரர் தனக்குப் பிச்சை வேண்டி தர்ம பிரபுவே, கோடை வள்ளலே, எனத் தர்மம் கேட்பது வாடிக்கையே. பஞ்சை என்ற ஓவர் பிச்சைக்காரன் பரிதாமாக கெஞ்சி பிச்சை கேட்கிறான்.
ஆனால் அங்கே வந்து செல்லும் தர்ம பிரபுக்கள் அவரவர் கவலைகளைச் சுமந்து கொண்டு இந்த பஞ்சையைக் கண்டுகொள்ளாமல் சென்றனர். பிச்சையேதும் கிடைக்காமல் பிச்சைக்காரர்கள் சாவடியில் திண்ணையில் கூடுகிறார்கள். இந்த மனிதர்கள் எப்படிக் கெஞ்சிக் கேட்டும் நமக்கு ஏன் எதுவும் கொடுக்க மறுக்கிறார்கள் என்பர் தங்கள் வேதனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
பஞ்சை சொல்கிறான் கேவலம் இந்த மனிதர்களைப் பூஜித்து என்ன பயன் அதனால் இனிமேல் நான் கடவுளைத் தான் பூஜிக்கப் போகிறேன் அவனே எனக்கு எல்லாம் தருவான் என்று பேச சக தோழர்கள் நகைக்கிண்டனர் .
மறுநாள் பஞ்சை கோவிலின் முன்பே அமர்ந்து இறைவனைப் பலவாறு துதிக்கிறான் ஆனால் அங்கு வரும் எந்த பக்தர்களும் அவனைக் கண்டுகொள்ளவேயில்லை. பின்ன என்ன செய்ய வரும் பக்தர்கள் அவர்களின் குமுறல்களைக் கொட்டுவதற்கே கோவிலுக்கு வருகின்றனர். பிறகு எப்படி இவனின் துதியினை கேட்பார்கள்.
அண்ணா ஒரு இடத்தில் சொல்கிறார், கடவுள் தன்னிடம் வரும் பக்தர்களிடம் சொல்கிறார், எனது பக்தர்களே, இங்கே நீங்கள் உங்கள் குறைகளையும் குமுறல்களைக் கொட்டி கோரிக்கையாக வைக்கிறீர்கள் ஆனால் கோபுர வாசலிலே ஒருவன் கூவிக்கிடக்கிறானே, அவன் ஐஸ்வர்யம் கேட்கவில்லை , வியாபாரத்தில் அதிக லாபம் கேட்கவில்லை , மகனுக்கு ஜமீன் வீட்டுப் பெண் கேட்கவில்லை, அவன் கேட்பது அவனின் அரை வயிற்றுக்குக் காஞ்சி தான். நான் முதலில் அவன் கோரிக்கையினை நிறைவேற்றிவிட்டு வருகிறேன் என்று இறைவன் சொல்லுகிறாரா இல்லை என்றே தான் சொல்ல வேண்டும் என்று மிகத் தெளிவாகத் தனது ஆழ்ந்த கருத்தினை சொல்லியிருக்கிறார்.
பஞ்சை பகலிலும் இரவிலும் கோவிலை வலம் வருவதாகவே இருந்தான், அவன் கூட்டாளிகள் அவனைத் தொடர்ந்து கேலி செய்து கிண்டல் செய்தார்கள். பஞ்சை இந்த கொடுமையிலிருந்து மாற அவன் எதற்கு முடிவே, அவன் என் முழு நேரமும் தேவனை பூஜித்துக் கொண்டே தான் இருந்தான் ஆனால் இறைவன் அவன் கோரிக்கையினை நிறைவேற்ற முன்வரவில்லை.
தன துதியினை ஏற்காத இறைவனின் என்ன செய்ய முடியும் அதனால் அவன் எடுக்கும் அந்த பயங்கரமான முடிவுதான் தான் இறைவனைத் துதித்த நாவினை வெட்டிக்கொள்கிறேன் என்று பஞ்சை சொல்கிறான். தனது நாக்கை துண்டித்து கோவிலின் முன்னர் வீசப்போகிறேன் என்று அவன் கூறியது சக ஆண்டிகளுக்கு ஒரு வியப்பாகவே இருந்தது.
ஆனால் பஞ்சை தன் நாக்கை அறுத்து வீச போகிறான் என்றதும் தான் எப்போதும் பூஜித்த சீமான் ஒரு திட்டம் போடுகிறான் அதன்படி பஞ்சையை அழைத்து சென்று தனது திட்டத்தை சொல்கிறான். ஆமாம் நீ உண்மையாகவே நாக்கை துண்டிக்க போகிறாயா என்றதும், அது உண்மைதான் என்றதும் வியப்பாக கேட்டான்.
அப்பாவி பஞ்சையை வைத்து எப்படியாவது ஒரு பெரிய பணக்காரன் ஆகவேண்டும் அன்றும் அதற்காக பஞ்சை தன நாக்கினை துண்டித்து கோவிலுக்கு காணிக்கையாக போடா போகிறான் என்று துண்டு நோட்டீசு ஊர் முழுதும் கொடுத்தான் அந்த சீமான்.
பஞ்சை தன நாக்கினை துண்டித்துக்கொண்டான் உடனே தன திட்டப்படி பஞ்சையின் காலில் விழுந்து நான் உன் பக்தர் இந்த அடியவனை தங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான். அப்படியே ஊர்மக்கள் அனைவரும் பஞ்சையினை தனது குருவாக ஏற்றுக்கொள்கிறார்கள்.
இப்படி போலியாக நடிக்கும் இந்த நாடகத்து மக்கள் எப்படி மயங்கி போய் எல்லாம் செய்கிறார்கள் ஆனால் சீமான் மட்டும் இவனை வைத்து பணம் பார்க்கிறான். எல்லோரும் தன்னை ஒரு அவதாரமாக பார்ப்பதும் சீமான் தன்னை பயன்படுத்திவருவதையும் நினைத்து பஞ்சை இந்த கேடுகெட்ட உயிரை வைத்து கொண்டிருப்பதைவிட இறப்பதே மேல் என்று தனது உயிரை விடுகிறான். சீமான் அந்த ஆசிரமத்து அதிபரானார். ஆண்டு தோறும் காணிக்கைகள் வந்து குவிந்துகொண்டே இருக்கிறது.
மூடநம்பிக்கையில் ஊரிக் கிடக்கும் இந்த நாட்டிலே, இது போல சூதுகளுக்கும், சாமியாடிகளுக்கும், அற்புதம் நடத்துவோருக்கும் இன்றும் ஆதிக்கம் நிரம்ப இருக்கிறது.
மூடநம்பிக்கைகளை களைய மக்களிடையே விழிப்புணர்வு கொடுக்க முன்வராத அனைவரையும் நான் "நாக்கிழந்தார்" என்றே சொல்வேன் என்று அண்ணா தனது கருத்தை மிக தெளிவாகவும் எளிமையாக புரியும் வண்ணமும் இந்த கதையில் சொல்லியிருக்கிறார்.
இந்த நான்கு சிறுகதைகளும் ஒவ்வொரு சிந்தனைகளை சிறப்பாக சொல்கிறது.
அன்புடன்.
தேவேந்திரன் ராமையன்
27 மே 2021
❤️❤️❤️
ReplyDeleteசிறப்பான பகிர்வு. இதில் சில கதைகள் படித்த நினைவு.
ReplyDelete