# கிண்டில் பதிப்பு
#எழுத்தாளர்_ஜார்ஜ் ஆர்வெல் - தமிழி்ல் க.நா.சு
சமீபத்தில் கிண்டிலில் இலவசமாக கிடைத்த “1984" என்ற பிரபலமான நாவல். ஏற்கனவே கிடைத்த விலங்கு பண்ணையும் வாங்கிவைத்திருந்தேன். நமது குழுவில் அதிமாக வாசிக்க பட்ட இந்த இரண்டு நாவல்களையும் ஒருசேர வாசித்தாக வேண்டும் என்று ஆரம்பித்தேன்.
வாசித்து முடிந்த பிறகு, முதலில் நான் இந்த கதையின் ஆசிரியர் "ஜார்ஜ் ஆர்வெல்" நினைத்து ஆச்சரியப்படுகிறேன். இப்படியொரு மகத்தான சிந்தனையை அந்த காலகட்டத்தில் வெளிப்படையாக தனது எழுத்து மூலமாக மக்களுக்கு சொல்லியிருப்பது ஒரு மாபெரும் காரியம்தான், அவரை எப்படி பாராட்டுவது? - என்னவென்று சொல்வது!!!
கிட்டத்தட்ட 1940 காலவாக்கில் எழுதப்பட்ட இவ்விரு புதினங்களும் உலக அளவில் அனைத்து மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு எல்லா மொழிகளிலும் இந்த இரண்டு நாவல்களும் பிரபலமானவை. நான் இன்னும் விலங்கு பண்ணை வாசிக்கவில்லை.
இனி 1984 நாவலுக்கு வருவோம். இந்த நாவல் முக்கியமாக, அந்த காலகட்டத்தில் வேகமாக பரவிவந்த பொதுவுடைமை மீதான எதிர்ப்பு கருத்தினை மையமாக கொண்டு புனையபட்ட ஒரு சிறப்பான நாவல். சர்வாதிகாரத்துக்கு எதிராக எழுதப்பட்டிருந்தாலும் இந்த புதினம் புரட்சி எனும் பாதை இத்தகைய சர்வாதிகாரத்தை நோக்கியதுதான் என்று நேரடியாக சொல்பவை. இந்த கருத்துக்கள் வழியே தி நடைமுறைகளை நவீனமாக சொல்லியிருப்பார்.
1940 களில் எழுதப்பட்ட, இந்த புதினத்தில் இடம்பெறும் காட்சிகள், சொல்லாடல்கள் , நடைமுறை சித்தாந்தம் மேலும் வாழ்வியல் முறைகள் என எல்லாமே அவரின் கற்பனையாக கூட எடுத்துகொண்டாலும் அத்தனையுமே இன்றைய நிலையினை பற்றிய மிக துல்லியமாக விவரித்து இருக்கிறார். ஆனால் என்ன ஒரு வித்தியாசம் இன்று நாம் அனைவரும் "ஸ்மார்ட் போன்" இல்லாமல் யாரும் இல்லை நமக்கு தெரிந்தோ அல்லது தெரியமலோ இந்த உலகம் நம்மை கண்காணிக்கின்றது எனபது ஒரு மோசமான செயல் தான் இது என்றாலும் நாம் ஒருமுறை இணையத்தில் எதாவது ஒன்றை பார்த்தாலோ அல்லது வாங்கினாலோ நம்மை கண்கானிக்க தொடங்குகின்றனர். இவ்வளவு ஏன் நாம் எங்கெல்லாம் பயணிக்கின்றோம் என்பது வரை உலகின் மிகபெரிய நிறுவனம் நம்மை கண்காணிக்கிறது உன்மையே!! இந்த அளவுக்கு நமது சுதந்திரம் பறிபோனதிற்கு இன்றய வாழ்வியல் முறை மட்டும் இல்லாமல் நாம் பன்னாட்டு பண்பாட்டின் மீது கொண்ட மோகமும் கூட ஒரு காரணம்.
இந்த கதையின் களமாக, இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வந்த சர்வாதிகார ஆட்சி நடக்கும் என்ற ஒரு கற்பனையான தேசம், அங்கு நடக்கும் "ஒற்றை கட்சி" ஆட்சி முறை, அதன் பிரதான தலைவரான "பிக் பிரதர்" எனப்படும் "மூத்த அண்ணன்", தமிழ் மொழிப்பெயர்ப்பில் முத்தண்ணா என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . அந்த காலத்தின் வாழும் குறைந்தது 15% மக்களை மூளைச்சலவை செய்யப்பட்டு அவர்கள் கட்சியின் வேலைகளை செய்வதற்காக அடிமைகளாக ஆக்கப்படுகின்றனர். மற்ற 85% மக்களை "ப்ரோல்கள்" என்கின்ற சாமானி மனிதர்களாக வாழ்கின்றனர். இவர்கள் பொதுவாக அடிமை தனமான வாழ்க்கியினையே வாழ்கின்றார்கள் இவர்களின் வாழ்க்கை ஒரு இரண்டகாலமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
"வின்ஸ்டன்" என்கின்ற அந்த கட்சி சார்ந்த ஒரு அரசு ஊழியன் தனது வாழ்க்கையை கதைகளாக சொல்லும் விதமாக இந்த கதை செல்கிறது. அவனுக்கு இந்த கட்சியின் கட்டமைப்பும் கொள்கைகளும் பிடிக்கவில்லை. இருந்தாலும் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையினை அவன் செவ்வனே செய்து வந்தான். அவனின் வேலையே பழைய வரலாறுகளை திருத்தி அமைக்க செய்வதே அவனின் முழுநேர வேலை. அதனால் அவனுக்கு தெரியவரும் பொய் வரலாறை தாண்டி உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு நிலைக்கு அவன் மனம் அவனை தள்ளிவிடுகிறது, ஆனால் அப்படி செய்வது அல்லது அப்படி நினைப்பது கூட சட்டவிரோதம் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும் இருந்தாலும் இந்த கட்டமைப்புகளில் இருந்து வெளிவர ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று அவன் எந்நேரமும் யோசித்துக்கொண்டேயிருக்கிறான்.
அந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கும் "டெலிஸ்க்ரின் & ஒலிவாங்கிகளை" தாண்டி, அரசுக்கு எதிராக சிந்திப்பவர்களை கைது செய்ய உளவு பார்க்கும் சிந்தனை குற்றத்துறை, அதற்கு உளவாளிகளாக செயல்படும் குழந்தைகள் என அந்த வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. தங்கள் பெற்றோர்களையே காட்டிக்கொடுக்கும் குழந்தை உளவாளிகள் என வாசிக்கும் போது அந்த நிமிடம் நம்மை மிரள வைக்கும் ஏகப்பட்ட கற்பனை காட்சிகள். அப்படித்தான் 9 வயது மகள் தனது தந்தையை, அவர் தூங்கும் பொழுது அரசுக்கு எதிராக தூக்கத்தில் ஏதோ குரல் எழுப்பினார் என்று அரசாங்கத்திடம் காட்டிகொடுப்பது என்கிற போது எப்படி சின்ன குழைந்தைகளை கூட மூளைச்சலவை செய்யப்பட்டு அரசாங்கத்திற்கு உளவாளி யாக செயல்பட வைத்துள்ளனர் என்றால் அது எப்படி இருக்கும்.
மொத்தத்தில் இந்த கதை ஒரு சர்வாதிகாரத்தின் உச்ச நிலை என்று தான் சொல்லவேண்டும். இங்கு பெரும்பாலும் குடும்பம், பாசம், காதல், உறவுமுறைகள், என்கின்ற மனித வர்க்கம் சார்ந்த எந்த மனித நேயமிக்க செயலும் மற்றும் நிலையும் இல்லமால் இருக்கவேண்டும் என்றே அந்த ஒற்றை கட்சியின் நிர்வாகத்தின் பிரதான முடிவாகயிருக்கிறது.
மக்களை எப்படி சிந்தனையற்ற அடிமைகளாக மாற்ற வேண்டும் அதற்காக என்னென்ன செய்ய வேண்டும் என தெளிவாக திட்டமிடும் அதிகார வர்க்கம் ஒரு பக்கம் திட்டம் தீட்டிக்கொண்டே தான் இருக்கிறது. அந்த கட்சியை பொறுத்தமட்டில் ஆண் பெண் கூடல் என்பது கூட தங்கள் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை உருவாக்குவதற்காக மட்டும்தான் இருக்க வேண்டுமே தவிர அவற்றில் எந்த விதமான ஆசையும் பாசமும் அல்லது காதலுடன் சேர்ந்த கூடல் இருந்தால் அது அவர்கள் அரசுக்கு இழைக்கும் தேச துரோகமாகும்.
இந்த கடுமையான காலத்திலும் கதையின் நாயகன் "வின்ஸ்டன்" கூடவே வேலை செய்யும் "ஜூலியா" என்ற ஒரு பெண்ணை காதலிக்கிறான். இவர்கள் இருவரும் அரசுக்கு தெரியாமல் பல்வேறு இடங்களில் கூடுகின்றனர். இவர்கள் வாழ்க்கையில் கிடைக்கும் இந்த சொற்ப நேரங்களை தங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்திற்க்காக இணைகிறார்கள் இந்த உறவு நீடிக்கிறது ஆனாலும் இருவருக்கும் தெரியும் என்றாவது ஒரு நாள் மாட்டிக்கொள்வோம் இருந்தாலும் இன்று கிடைக்கும் இன்பம் போதும் என்று அவர்களின் காலம் செல்கிறது. காலப்போக்கில் நாயகன் அவளுடன் இணைந்து தேசத்துக்கு எதிரான புரட்சியில் ஈடுபட விரும்புகிறான்.
இந்த நாவலின் மூலமாக அன்று சொல்லவந்த நிறைய, இன்று நாம் வாழும் நாட்களில் சில சர்வாதிரிகளால் நமது பழமைகளும், பழைய வரலாற்றை மாற்றப்படுவது மூலம் சுவடு தெரியாமல் செய்யப்படுகிறது. ஏராளமான பழமை நம்மில் இருந்து தொலைந்து போய்விட்டது அதற்க்கு சில சர்வாதிகார அரசியல்தான் காரணம் என்றுதான் சிந்திக்க தோன்றுகிறது.
அரசுக்கு எதிராக புரட்சி செய்ய போக அவர்கள் நாடும் ஒரு அதிகாரி முதலில் நன்றாக நம்ப வைத்து பின்னர் இவர்களை வஞ்சம் தீர்க்கிறேன். இந்த இருவரும் தங்கும் ஒரு வீட்டில் இவர்களை அறியாமலே இவர்கள் வாழும் வாழ்க்கையினை மறைத்து வைத்த சாதனைகள் வழியே கண்காணிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்படுகிறார்கள். இதற்க்கு பிறகு இவர்கள் படும் கொடுமைகள் வாசிக்கும் போதே மனம் கலங்குகிறது எண்ணிலடங்கா சித்திரவதைகள் என கொடுமையின் உச்சம்.
இறுதியில் இருவரும் விடுதலை பெற்று வாழும்போது ஒருவரை ஒருவர் சந்திக்கும் அந்த தருணம் எத்தனையோ வேறுபாடுகளை மீறி ஒரு மனித இனத்தின் காதல் மீண்டும் தழைத்தோங்குவதினை மனிதநேயமிக்க மனிதகுலத்தின் அன்பின் மாறாத இயல்பாக சொல்லியிருக்கிறார்.
எனக்கு மிகவும் பாதித்த பகுதியாக "வின்ஸ்டன்" சிறையில் படும் சித்திரவதைகள் வாசிக்கும்போதே மனம் கணக்க ஆரம்பித்துவிட்டது. இதுபோல சம்பவங்கள் இன்றளவும் சிறைகளிலும் காவல்துறையிலும் நடக்கிறதென்பது நாம் பார்த்தும் பார்க்காமலும் செல்ல முடியுமே தவிர வேறென்ன செய்ய முடியும்?
மொத்தத்தில் இன்றைய உலகின் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் எதார்த்த வாழ்வியலை மிக தெளிவாக "வின்ஸ்டன்" என்ற கதாபாத்திரத்தின் மூலமாக அவனின் நாட்குறிப்பில் எழுதி சென்றுள்ளார் ஆசிரியர் ஜார்ஜ் ஆர் வெல்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
16 ஏப்ரல் 2021
No comments:
Post a Comment