தோட்டியின் மகன் - வாசிப்பனுபவம்
காலச்சுவடு வெளியீடு
ஆசிரியர் - தகழி சிவசங்கர பிள்ளை (மலையாளம்)
தமிழில் - சுந்தர ராமசாமி
இந்தியன் கிளாசிக் நாவல்
விலை ரூபாய் 195
பக்கங்கள் 173
'தோட்டியின் மகன்' எனும் நாவல் தகழி சிவசங்கரப்பிள்ளை அவர்களால் மலையாளத்தில் 1947 - ல் எழுதப்பட்ட 'தோட்டியின் மக' எனும் நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். தமிழ் மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்கள் தனது ஆரம்பகாலத்தில், எழுத்து உலகுக்கு தெரியாத காலமான அவரின் இருபது வயதில் தமிழில் இந்த நூலினை மொழிபெயர்த்துள்ளார். இவரின் மொழிபெயர்ப்பு முதலில் அவர்களின் தோழர்கள் இந்த தலைப்புக்கு அத்தனை வரவேற்பு கிடைக்க வில்லை என்றும் பிறகு மூத்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி ஒருவழியாக, 1957 மார்ச் முதல் 1958 ஜூன் வரை சிறுகதையாக அப்போது வெளிவந்த தமிழ் மாத இதழனான சரஸ்வதியில் மொழிபெயர்ப்பு தொடர்கதையாக வெளியிடப்பட்டது.
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட இந்த பொக்கிஷம் 2000ம் ஆண்டில்களில்தான் முதன் முதலில் அச்சாக நாவலுரு பெற்றது. முதல் பாதிப்பு 6 மார்ச் 2000 இல் வெளிவந்தது.
கேரளத்தின் ஆலப்புழை என்ற நகரின் நகரசபையில் "மலமள்ளும் தொழிலினை" செய்துவருகின்ற தோட்டிகளின் வாழ்க்கை முறையினை, அவர்களின் உணர்வுகள், அவர்களின் வெளிப்பாடுகள், உடைகள், கலாச்சாரம், உணவுமுறை, மற்றும் காதல் போன்றவற்றினை அடித்தளமாக கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.
நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ இந்த நாவல் இலக்கியத்தில் மட்டுமல்ல, சமூகப் பார்வையிலும் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது என்றால் அது மிகையாகாது.
இந்த நாவலில், எழுத்துலகில் அதுநாள் வரை யாரும் இலக்கியத்தில் எழுதாத, பின்பற்றாத, பார்க்காத ஒரு புதிய "களம் - சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு - தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்டதும் மற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டதும் மான வேறொரு மாறுபட்ட வாழ்வியல் முறையினை உலகதின் பொதுக் கவனத்துக்கு எடுத்து வந்தது இந்த "தோட்டியின் மகன்" என்ற இந்திய கிளாசிக் நாவல்.
இந்த நாவல், ஒரு வயதான தோட்டி இசக்கி முத்து, நோய்வாய்ப்பட்டு தள்ளாடும் தருவாயில் தனது இறுதிநாளில், தன்னால் முடியாத போது தன் மகன் "சுடலைமுத்துவை" எப்படியாவது தன்னோட வேலையில் சேர்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் தன மகனை, ஓவர்சிசியரை போய் பார்க்க சொல்கிறார். அப்படியாக போகும் போது ஓவர்சிசியர் சொல்கிறார் இசக்கிமுத்து வரவில்லையென்றால் நான் வேற ஆளை வைத்துக்கொள்கிறேன் என்றது அதை வந்து சுடலை முத்து அப்பனிடம் சொன்னது, தனது தள்ளாத நிலையிலும் எப்படியாவது அந்த வேலையினை தன் மகனுக்கு பெற்று கொடுக்கவேண்டும் என்று ஆரம்பிக்கும் இந்த வாழக்கையில் தனது மகன் அந்த தோட்டி வேலையின் பெற்றுக்கொள்கிறான்.
முதல் நாள் வேளையில் சுடலைமுத்துவிற்கு அனைத்தும் புதியதாக இருக்கிறது, ஒரு உணவகத்தின் பின் வாசல் வழியே சென்று சுத்தம் செய்யவேண்டும், செய்துமுடித்த பிறகு உணவு கொடுப்பார்கள் ஆனால் இவன் வேண்டாம் என்று சொல்லிவிடுகிறான் அது போலவே அன்று முழுவதும் வேலை செய்துவிட்டு யாரிடமும் எதுவும் வாங்காமல் வீட்டுக்கு வந்து சேர்கிறான், வீட்டில் தகப்பன் ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினிகிடக்கிறான், தன மகன் வீட்டிற்கு வரும் சத்தம் கேட்டு மொவனே ஏதாவது கஞ்சி வாங்கிவந்தியா என்றுதும், அவனால் பெற்ற அப்பனுக்கு பதில் ஏதும் சொல்லமுடியவில்லை. உடனே தான் வேலைசெய்த உணவகத்திற்கு சென்று எதாவது கஞ்சி கேட்கிறான், அனால் அவர்கள் ஒன்றும் கொடுக்காமல் எச்சிலையினை பார் என்றதும் வேறு வழியில் காலையில் சுத்தம் செய்த ஜட்ஜ் அய்யாவை பார்க்க போகிறான் அனால் அவன் நேரம் அங்கேயும் அவர் பூஜையில் இருக்கிறார் பார்க்க முடியாது என்று காவலாளி சொல்கிறான். விரக்தியில் வீடு வந்து சேருகிறான் வீட்டில் தந்தை இறந்து கிடக்கிறான்.
இறந்த அப்பனை எங்கே கொண்டு போய் புதைப்பது என்று தெரியவில்லை, ஒருவன் சொல்கிறான் சர்ச்சுக்கு போய்விடலாம் அங்கே எல்லாம் இலவசம் என்கிறான் மற்றொருவன் சொல்கிறான் சுடுகாட்டுக்கு போகலாம் ஆனால் அங்கே செலவாகும் என்கிறான் ஆனால் கையில் காசு ஏதும் இல்லாமல் எப்படி செயவது என்று யோசனையின் பின்னனர் மலக்கிடங்கு அருகே ஒரு மாமரத்தின் அடியில் புதைகின்றனர். ஆனால் மறுநாள் அவன் நேரம் நாய்கள் நோண்டிவிடுகிறது மேலாளர் வந்து நடந்தை தெரிந்துகொள்கிறான்.
தகப்பனை இழந்த சுடலைமுத்துவிற்கு பிச்சாண்டி பக்க பலமாக இருக்கிறான். மறுநாள் மீண்டும் அவன் வேலைக்கு போகிறான், அவன் மனதில் இருக்கும் லட்சியம் வேறு, எப்படியாவது ஒரு நிலம் வாங்க வேண்டும், வீடு கட்டவேண்டும், சமூகத்தில் ஒரு அந்தஸ்தில் இருக்கவேண்டும் என்பதே அவன் முதல் லட்சியம். ஆனால் தான் பிறந்ததோ ஒரு தோட்டிக்கு, என்னால் பிறகு எப்படி இதெல்லாம் சாத்தியமாகும் என்ற எண்ணம் அவனுக்கு வந்து போகாமலில்லை.
இவர்கள் வாழும் இடம் எவ்வளவு கொடுமையாக இருக்கிறது என்பதை தெளிவாக விளக்கிரியிருப்பர். தோட்டிகளின் வேலை எப்படி ஆனால் அவர்களின் வாழ்விடம் அவ்வளவு கொடுமையாக இருக்கும். தோட்டிகளிடையே வரும் சண்டை சச்சரவு, இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது என அவர்களின் அந்த வாழ்வியலினை மிக நுட்பமாக படம் பிடித்து காட்டியிருக்கிறார்.
சுடலை முத்து, தான் செய்யும் வேலைக்கும் மற்ற சகாக்களும் சேர்ந்து எப்படியாவது ஒரு சங்கம் ஆரம்பிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறான் அதற்க்கு எல்லோரிடமும் சொல்லி சம்மதமும் வாங்கிவிடுகிறான் ஆனால் இறுதியில் அவன் அந்த சங்கத்தில் சேராமல் மற்ற எல்லோரையும் சேர்த்து விட்டுவிட்டு நழுவிக்கொள்கிறான். காரணம் பேசவந்த அந்த ஆள் சரியானவன் அல்ல என்பதே அவனின் முடிவு ஆனால் அவன் தான் அவனை அழைத்துவந்தான்.
பின்னர் சுடலைமுத்துவை, முனிசிபல் சேர்மன் மற்றும் மேற்பார்வையாளரும் சேர்ந்து திட்டுகின்றனர், பிறகு அவன் நான் அந்த சங்கத்தில் இல்லை என்றதும் நீ தான் அந்த சங்கத்தை உடைக்க வேண்டும் மீண்டும் தங்களுக்கு உகந்த ஒரு சங்கத்தினை ஆரம்பிக்க வேண்டும் ஆனால் அது தோட்டிகளுக்கானது என்றே இருக்க வேண்டும் ஆனால் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும், அதை நன்றாகவே செய்து முடித்தான் சுடலைமுத்து.
சுடலை முத்து, வள்ளியினை காதல் செய்து திருமணம் செய்துகொள்கிறான். அவளை அவன் யாரிடமும் பேச அனுமதிக்கலாமல் அவளை தனிமை படுத்தி வைக்கிறான். அவள் மற்ற தோட்டிச்சிகளிடம் பழகினால் கெட்டுபோய்விடுவாள் என்று அவன் நம்பினான்.
தான் சம்பாதித்த பணத்தை மற்ற தோட்டிகளுக்கு வட்டிக்கு விட்டு காசு சேர்க்க ஆரம்பித்தான் அவனது கனவு எல்லாம் அவன் ஒரு அந்தஸ்த்துக்கு வரவேண்டும் என்பது தான் அதற்காக அவன் எப்போதும் தனித்தே இருந்தான்.
நம்ம உலகத்தில் இப்போது நம்மையெல்லாம் நடுங்க வைக்கும் கொரோன போல அப்போது வந்த அந்த ஒரு தோற்று நோய் "வைசூரி" என்ற காய்ச்சல் அது வந்தால் ஒருவழியாக எல்லோரையும் துடைத்து கொண்டு போய்விடும் அப்படி வரும்போது முதலில் பாதிக்கப்படுவர்கள் தோட்டிகள் தான். அப்படி வந்த போது ஆங்காங்கே பல உயிர்கள் இறந்தன. அப்போது சக தோட்டி சுந்தரத்தின் மனைவிக்கு வைசூரி வந்த போது சுடலைமுத்து அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கட்டாயமப்படுத்துகிறான் அந்த வேளையில் அந்த அம்மாவின் கதறல் கண்முன்னே இருந்து மறையவே மறுக்கிறது.
வைசூரியில் நிறைய தோட்டிகள் இறந்துபோனதும் மீண்டும் திருநெல்வேலிக்கு போய் புதிய தொட்டிகளை கொண்டுவருகின்றனர். இங்கே பழைய ஒருசில தோட்டிகள் மீதம் இருக்கின்றனர் அதில் பிச்சாண்டியும் இருக்கிறான். மீண்டும் தோட்டிகளுக்கு எல்லாம் ஒரு சங்கம் வேண்டும் அதற்க்கு பிச்சாண்டி தான் பொறுப்பு என்று முடிவானவுடன் எல்லா வேலைகளும் நடக்கிறது இப்போது சுடலை தனது நண்பன் மட்டுமல்லாமல் ஆபத்தில் உதவியவன் என்றும் பாராமல் அவன் மீது ஒரு திருட்டு பழி சுமத்தி அவன் பெயருக்கு களங்கம் விளைவிக்குறான்.
எந்த பாவமும் அறியாத பிச்சாண்டியின் குடும்பம் சிதைந்து போகிறது. சுடலை வைசூரி சமயத்தில் அந்த சேரியை விட்டே வெளியில் போய் குடும்பம் நடத்தினான்.
சுடலைக்கு வள்ளிக்கும் ஒரு ஆன் குழந்தை பிறக்கிறது ஆனால் அவன் மனம் ஏனோ இத்தனை நாட்கள் இருந்த அந்த ஆவல் இப்போது இல்லாமல் போகிறது. சமூகத்தில் தோட்டிகள் இப்படி தான் பெயர் வைக்கவேண்டும் என்று ஒரு நிர்பந்தம் இருந்தது. ஆனால் இவன் தன் மகனுக்கு மோகன் என்றும் பேபி என்றும் பெயர் வைத்தான்.
தான் ஒரு தோட்டி என்பது ஒருகாலமும் தனது பிள்ளைக்கு தெரியக்கூடாது என்று அவன் காப்பாற்றிக்கொண்டே வந்தான் ஆனால் காலம் அவனுக்கு கைகொடுக்கவில்லை அவனின் மகன் அதை தெரிந்து கொள்கிறான்.
ஒட்டு தோட்டியின் மகன் படிக்க கூடாது என்று இயற்ற படாத சட்டம் இருந்தது, ஆனால் சுடலைமுத்து கைகூலிகொடுத்து தனது மகனை பள்ளிக்கூடம் அனுப்பிபான். வள்ளியும் அவனை நன்றாக கவனித்து வந்தாள்.
தன் மீதியிருக்கும் மலநாற்றம் தன் மகன் மீது படக்கூடாதென்று அவன் தன் மகனை ஒருநாள் கூட தொட்டதே இல்லை. அவன் லட்சியம் எல்லாம் மோகனை எப்படியாவது ஒரு பெரிய ஆளாக ஆக்ககவேண்டும் என்பதுதான். இந்த கருத்துக்கு வள்ளிக்கும் சுடலைக்கு வரும் வார்த்தை பரிமாற்றங்கள் உணர்வுகளில்லை அது இந்த உலகத்தின் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் ஆழமான அழுகுரல் என்று சொன்னால் அது தவறில்லை தான்.
தன்னை பற்றி தன் மகன் தெரிந்துகொள்ளகூடாது என்று நினைத்த சுடலை, அன்று தன் மகனுக்கு பள்ளிக்கூடத்தில் கிடைத்த அவமானத்தால் அவன் தன் தகப்பன் ஒரு தோட்டி என்று தெரிந்து கொள்கிறான் அதனால் அவன் தன் அம்மாவிடம் சொல்கிறான் இனிமேல் அப்பாவை தோட்டி வேலைக்கு போகவேண்டாம் என்று சொல்லு என்கிறான். இதை கேட்ட சுடலை பேச்சற்று நிற்கிறான்.
சரி எப்படியாவது வேற ஊருக்கு போய்விடலாம் என்றால் அவன் இதுவரை சேர்த்து கொடுத்திருந்த காசு ஓவர்சியர் கொடுக்க மறுக்கிறார்.
மீண்டு ஒரு காய்ச்சல் காலரா வருகிறது அது அந்த சுடுகாட்டை எப்போதும் தீயாகவே வைத்திருக்கிறது அத்தனை மரணம் எல்லாம் கொடூரமான கலராவால். அப்போது சுடுகாட்டுக்கு ஒரு காவலாளி வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட சுடலை அந்த வேலையினை பெற்றுக்கொள்கிறான் இனிமேல் நான் தோட்டியில்லை காவலாளி என்று மனதுக்கு ஒரு நிம்மதியுடன் இருக்கிறான்.
சுடலைமுத்துவும் வள்ளியும் காலராவுக்கு துணையாக காலன் எடுத்துக்கொள்கிறேன் மோகன் அனாதையாக விடப்படுகிறான்.
சுடலைமுத்துவால் பாதிக்கப்பட்ட பிச்சாண்டியின் மகன் பொறுக்கிதான் இப்போது மோகனின் நண்பன். மற்றொரு நண்பன் சுந்தரத்தின் மகன். இதுபோல வஞ்சிக்கபட்டவர்களின் வாரிசுகள் தான் இப்போது அவன் பொத்தி பொத்தி வளர்த்த மோகனின் அனைத்தும்.
விதி, தனது மகன் மீது தன் கைபட்டால் கூட அவனுக்கு அந்த தோட்டியின் நாற்றம் வந்துவிடும் என்று பொத்தி பொத்தி வைத்த அந்த மோகன் இப்போது அதே ஆலப்புழா நகரின் தோட்டிகளில் ஒருவன் என்றே கதை முடிகிறது.
தன் அப்பனின் காசை கொடுக்காமல் ஏமாற்றிய கேசவனின் பங்களாவை தீ வைத்து சிதைத்து விடுகிறான் சுடலைமுத்துவின் வாரிசு..
சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.
ஒரு மனித இனம் மற்ற சக மனிதர்களால் எவ்வாறெல்லாம் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர் என்றால் அது இன்றளவும் நடக்கின்றது தான் இல்லையென்று சொல்லவே முடியாது. அதிகாரமும் ஆணவமும் இருக்கும் வரை அடிமைகள் இனம் அழிவதே இல்லை....
கதையின் தாக்கத்தில் இருந்து மீண்டுவர நாளாகும்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
03 ஜூன் 2021
சிறப்பானதொரு நூல் பற்றிய பதிவு. படித்து பல நாட்கள் வரை நூல் தந்த தாக்கத்திலிருந்து வெளி வர இயலாது என்பது அனுபவத்தில் உணர்ந்த ஒன்று.
ReplyDelete