Sunday, 20 June 2021

தந்தையர் தின வாழ்த்துகள்



 அகிலமும் அடங்கும் அப்பா என்ற ஒற்றை வார்த்தைக்கு 

அப்பா கூட இருந்தால் !!!

ஆயிரத்திற்கு மேல்  வழி கிடைக்கும்! 

இயலாது என்பதே இல்லாமல் போகும்!

ஈகையின் அர்த்தம் புரியும்

உலகமாக   உனக்கு இருப்பவர் 

ஊர்களில் உனக்கு அடையாளம் 

என்றும் பக்க பலமாய் இருப்பவர் 

ஏணிப்படியாய் ஏற்றிவிட்டவர் அப்பா

ஐயம் கொள்ளாமல் பார்த்துக்கொண்டவர் அப்பா

ஒழுக்கம் கற்றுக்கொடுத்தவர் அப்பா

ஓர் யுகமானாலும் மாறாது  அப்பா கொடுத்த முகவரி

.....
ஓய்வின்றி உனக்காக உழைப்பவர் அப்பா  

அன்புடன் 

இவன் 

தேவேந்திரன் ராமையன் 

1 comment:

  1. அப்பா - தந்தையர் தினத்திற்கான பதிவு நன்று. பாராட்டுகள்.

    ReplyDelete