இன்று - நாவல் - ஒரு பார்வை
ஆசிரியர் - அசோகமித்திரன்

இன்று - இது நெருக்கடி காலகட்டத்தில் ஏற்பட்ட பல்வேறுவிதமான சந்தர்ப்பங்களையும் தன்னகத்தே கொண்டு தன்னை ஒரு ஆக சிறந்த நாவலாக உருப்பெற்று கொண்டுள்ளது. இதன் உள்ளே பல்வேறு சிறுகதைகள் அல்லது கட்டுரைகள் எனத் தன்னை உள்ளடக்கிக்கொண்டு நாவலாக தன்னை செதுக்கிக்கொள்ள ஆசிரியரை மிக இலகுவாக பயன்படுத்திக்கொண்டுள்ளது.
இந்த நாவல் சொல்லி செல்லும் ஒவ்வொரு கதையும் ஒரு நாட்டில் ஏற்படும் அவசர காலகட்டத்தில் எழுதியவை, எனவே அந்த காலக்கட்டத்தில் நடந்த பல்வேறு பிரச்சினைகளை தனக்கே உரித்த வகையில் ஆசிரியர் கன கச்சிதமாகவும் அதற்குள்ளே சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை உள்ளடக்கி மிக நன்றாக தனது சிந்தனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
1984 காலகட்டத்தில் வெளிவந்த இந்த நாவலின் மூலமாக முதலாவதாக ரஷ்ய எழுத்தாளரான லியோ டால்ஸ்டாய் அவர்களை பற்றி பேசத்தொடங்குகிறார். இவரை பற்றிய தனது இரண்டு கட்டுரைகளில் தனது எண்ணங்களையும் அவர் தனது எழுதுக்களின் மூலமாக உலக இலக்கியதிற்கு தனது பங்களிப்பினை எவ்வாறெல்லாம் அர்பணித்துள்ளார் என்றும் மேலும் தற்காலத்தில் அவரை பற்றி வாசிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது என்ற தனது ஆதங்கத்தினையும் கோடிட்டுக்காட்டி செல்கிறார் அசோகமித்திரன்.
இரண்டாவதாக "ஒரு மனிதனுக்கு வேண்டிய நிலம் எவ்வளவு? என்ற தலைப்பில், தமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்குச் சென்று விடுதலை வீரர்கள் தங்கியிருந்த இடத்தில் ஒரு முன்னாள் விடுதலை வீரரைச் சந்திக்கிறார். அங்கே அவர் வாழும் நிலைமை அதில் அவருக்கு ஏற்படும் பல்வேறு இன்னல்கள் கூடவே அங்கே அவலமாக நடந்தேறும் பல்வேறு அரசியல்கள் மற்றும் மொழிசார்ந்த மற்றும் நிலம் சார்ந்த புறக்கணிப்பு எனத் தனது ஆதங்கத்தினை ஆணித்தனமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் நிலையும் அவர் தங்கியிருக்கும் சூழலும் பார்க்கும் பொழுது ஏற்படும் நிலைமையினை மிகவும் மனம் வருந்திச் சொல்கிறார் அதே சமயத்தில் அந்த முதியவர் தன்னை பற்றிக் கவலைப்படாமல் தன்னை சார்ந்தவர்களின் நலனின் அக்கறை கொள்வதும் அவர் தான் இருக்கும் கொஞ்சம் காலம் போக மீதி காலம் என்ன ஆகப்போகிறது என்று தனது கவலையினை வெளிப்படுத்துகிறார்.
அடுத்தது ஒரு எழுத்தாளரைப் பேட்டி எடுக்கும் நிருபர், அந்த காலகட்டத்தில் அவர் எவ்வாறு ஒரு எழுத்தாளரைக் கேள்விக்கணைகளால் தொடுக்கிறார் என்பதையும் அதனால் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அரசியல் களம் எனத் தனது கருத்துக்களை மிகவும் நுட்பாகமாகவே பதியவைத்திருக்கிறார்.
ஒருவருக்கு, தனது மனைவியின் மூன்றாவது பிரசவம் பார்க்க நேரிட்ட காலத்தில் அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடி காலகட்டத்தில் அவருக்கு ஏற்படும் பல்வேறு இன்னல்கள் மற்றும் அவருக்கு இருக்கும் பணியின் விடுப்பு மட்டும் பண பிரச்சினை என எல்லாவற்றையும் அதற்கும் மேல் அவர்களின் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி அதற்கு அவர்களுக்கு ஏற்படும் பல்வேறு இடையூறுகள் என அந்த நெருக்கடி காலத்தின் காட்சிகளை நம் கண்முன்னே காட்டி செல்கிறார் ஆசிரியர்.
வேறொரு மொழி பேசும் இளைஞன் ராணுவ பயிற்சிக்காகத் தாம்பரம் வந்தவன், அவனுக்கு அங்கே நடந்தேறும் பல்வேறு மொழி மற்றும் இனப் பிரச்சினைகளைத் தனது கடிதத்தின் மூலமாக அவன் தனது தாய்க்கு தனக்கு ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளைத் தெளிவாகவும் கூடவே அவன் எவ்வாறெல்லாம் தனது தாயையும் தாய் மண்ணையும் வீட்டையும் மற்றும் உறவுகளையும் பிரிந்து பயிற்சிக்காக இங்கு வந்து பிறகு அவன் மனதில் ஏற்பட்ட வருத்தத்தைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறான்.
மற்றொரு நிகழ்வாகச் சமுதாயத்தில் இன்றளவும் நடந்தேறும் வரதட்சிணை பற்றிய ஒரு கதை அவற்றில் மகன் தனது தாயிக்குப் பாதுகாப்பு கொடுக்கலாம் ஆனால் தனிக்குடித்தனம் செல்வது மட்டும் பெண்ணிற்குத் திருமணத்திற்காகக் கேட்கப்படும் வரதட்சணை எனத் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
மேலும் அவசரக் காலத்தில் மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கொடுத்த கெடுபிடி காலத்தில் ஒரு மாநில அரசாங்கம் எவ்வாறெல்லாம் பாதிப்படைந்தது என்பதையும் கூடவே எப்படி அந்த மாநில அரசாங்கம் இரவோடு இரவாகத் தகர்க்கப்பட்டது என்பதையும் தனது எழுத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நாவலின் மூலமாக ஆசிரியர் 1970 காலகட்டத்தில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளினால் அவருக்கு ஏற்பட்ட தாக்கத்தினை தனது எழுத்துக்களால் மிக நுட்பமாக பதிவு செய்துள்ளார்.
தேவேந்திரன் ராமையன்
No comments:
Post a Comment