டார்த்தீனியம்
ஆசிரியர் : ஜெயமோகன்
ஸ்டோரி டெல் - கதை ஓசை
ஜெயமோகன் இணையதளம்
பக்கம் 54
டார்த்தீனியம் - கணையாழி 1992 இதழில் வெளிவந்த குறுநாவல்- தி.ஜானகி ராமன் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. இந்த குறுநாவலை முதலில் ஸ்டோரி டெல் ஆப்பில் கேட்டு ரசித்தேன். அதன் ஆர்வம் என்னை எழுத்து வடிவில் வாசிக்கத் தூண்டியது. கிண்டிலில் கிடைக்கவில்லை - பிறகு ஆசிரியர் ஜெயமோகன் இணையதளத்தில் வாசித்தேன். வாசித்து முடித்த பின்னர் எதோ ஒரு வலையில் மாட்டிக்கொண்ட பிரமை.
அழகான குடும்பம், அலுவலகத்தில் வேலை பார்க்கும் அப்பா, வீட்டோடு இருக்கும் அம்மா இவர்களுக்கு ஒரு மகன் இவர்களுடன் உறவாய் வாழும் கருப்பன் என்ற நாய், கனகு என்ற பசுவும் அதன் குட்டி மக்குரூணீ என இவர்கள் வீடே ஒரு அருமையான வீடாக அந்த ஊரில் இருக்கிறது.
அப்படியான வீட்டில் எழும் ஒரு பிரச்சினை அது ஆலமரமாக வளர்ந்து அந்த குடும்பத்தினை சின்னா பின்னமாக ஆக்கிய கதைதான் இது.
அப்பா அலுவலகத்திலிருந்து வந்த போது தனது கையில் ஒரு செடியை எடுத்து வந்து அதை உடனே இரவோடு இரவாக நட்டுவைக்கின்றனர். அன்றிரவே மகனுக்கும் மனைவிக்கும் ஒரு சில நிகழ்வுகள் நடக்கிறது அதைக் காரணம் காட்டி மறுநாள் காலையில் இதை பிடுங்கிவிட வேண்டும் என்று கேட்கின்றனர். ஆனால் அப்பா மறுத்துவிடுகிறார். இதை என்றாய் டாக்டரிடம் இருந்து வாங்கிவந்தேன் இது வெளிநாட்டிலிருந்து வந்தது என்று சொல்லி இதை நான் தூக்கியெறியமாட்டேன் என்று முடிவாகச் சொல்லுகிறார்.
அந்த செடி நாளுக்கு நாள் வளர்ந்து அவர்களின் வீட்டையே ஆக்கிரமித்து ஒவ்வொரு உயிரையும் பலி வாங்குகிறது. முதலில் கனகு பிறகு மக்குரூணீ, பிறகு அம்மா அப்படியே கருப்பன் தனது நிலையினை மாற்றி அவனும் அப்பாவும் அந்த செடியுடன் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.அது கருநாகம் போல வளருகிறது.
அவன் அங்கிருந்து தப்பித்து வெளியில் சென்றுவிடுகிறான். வேளையிலும் சேர்ந்துவிடுகிறான். அம்மா இறந்த தகவல் தெரிந்து தனது பயிற்சியிலிருந்து ஊருக்கு வருகிறான் அப்படி அவன் வருவதற்குள் அவனின் அம்மா எரியூட்டப்படுகிறாள்.
அவனையும் அந்த கருநாகம் ஆட்கொண்டுவிடுகிறது. அவன் திரும்பிப் போகும்போது அவனுக்கு உடல்நிலை சரியில்லால்மற் இருக்கிறது அவன் உடல் முழுவதும் விசம் ஏறியிருந்தது என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.
பிறகு ஒரு நேரத்தில் அப்பாவும் இறந்துவிட்டதாகவும் அப்போதுதான் கருப்பன் வெளியில் வந்ததாகவும் அது ஊரில் ஒரு சிலரைக் கடித்து அவர்களும் இறந்து விட்டதாகவும் சொல்கின்றனர். திரும்ப அந்த ஊருக்குப் போக அவனுக்கு மனதில் ஒரு ஓரத்தில் கூட இடமில்லாமல் இருந்தான். அவன் அதன் காரணமாக பல்வேறு இடங்களுக்குச் சுற்றித்திரிந்தான். அவன் மனமும் உடலும் வலுப்பெற்றது.
இறுதியில் ஒரு கணத்தில் அவன் மனதில் அவனுக்கே தோன்றியது அதுவரை அவன் வாழ்ந்த வாழ்விற்குள் ஒரு மாயை இருந்தது என்றும் கட்டாயம் அடுத்த விடுமுறை ஊருக்கு போக வேண்டும் என்றும் அப்படியே ஊருக்கு வருகிறான். அவன் கண்களில் படும் காட்சிகள் எல்லாம் அவனை மேலும் அதிர்ச்சியடைய வைக்கிறது.
ஒற்றை செடி வீட்டிற்குள் வந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் சிதறடித்து விட்டது ஒரு பிரமையாகவே இருக்கிறது. டார்த்தினியும் என்ற அந்த ஒற்றை செடி எப்படி ஆட்கொண்டது என்பதை அருமையாகச் சொல்கிறது.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
19 டிசம்பர் 2022
No comments:
Post a Comment