வாழ்க்கை விநோதம்
(நகைச்சுவை கட்டுரைகள்)
ஆசிரியர் - அழ. வள்ளியப்பா
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 88
1945 ல், வெளிவந்த இந்த புத்தகம் ஆசிரியரின் சொந்த அனுபவங்களை நகைச்சுவை உணர்வுடன் மிக எளிமையாக எழுதியுள்ளார். ஒவ்வொரு கட்டுரையிலும் வரும் அனுபவங்களை நாம் நமது வாழ்வில் கண்டிப்பாகச் சந்தித்த ஒரு அனுபவகமாகே இருக்கும் என்பது தான் உண்மை. படித்துத்தான் பாருங்களேன் எந்த அளவுக்கு உங்கள் அனுபவம் ஒத்துப்போகிறது என்று பாருங்களேன்.
மொத்தம் 13 கட்டுரைகள்.
சில்லறைக் கடன், இந்த கதை எனக்கு மிகவும் நெருக்கமானது. ஒருவன் என்னிடம் கடன் வாங்கி 10 வருடத்திற்கு மேல் ஆகிறது ஆனால் அவன் இதுவரை கொடுத்தபாடில்லை ஆனால் அவனது வாழ்க்கை முறை நல்லாத்தான் இருக்கிறது. இவர்களைப் போல இருக்கும் ஆசாமிகளுக்கு அடுத்தவரிடம் எப்படி கடன் வாங்கிவிட்டு கையை நீட்டிவிட்டு போவது என்பதை இவர்கள் கைதேர்ந்தவர்கள். அப்படிதான் ஆசிரியரும் கடன் கொடுத்து ஏமாந்து போகிறார்.
முடிதிருத்தகம் கடையில், முடிதிருத்திக் கொண்டிருக்கும் போது முடிவெட்டுபவர் அருகில் கேட்ட தாளத்திற்கு ஏற்ப இவரின் தலையில் விளையாடிவிட்டார், மழையில் பாதித்த போன சாலை போல அவர் தலை ஆனதும், மழைக்காலத்தில் சம்மர் கிராப் வெட்டிக்கொண்டு மீண்டும் வளர்த்துவிட்டாராம்.
அடுத்து சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்க வேண்டி நண்பர்களுடன் உல்லாச பிரயாணம் செய்ய ஆரம்பித்து, ரயில் டிக்கெட் இல்லாமல் மாயவரம் வரை டிக்கெட் எடுத்து பிறகு லேடீஸ் கம்பார்ட்மெண்ட்டில் ஏறிய பிறகு ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்.
மறதியின் லீலை என்ற கட்டுரையில் ஒரு வாசகர் பத்திரிக்கை அலுவலகத்திற்குப் பணம் அனுப்பியிருக்கிறார். அதைப் பெற்றுக்கொண்ட குமாஸ்தா பணத்தை எடுத்துக்கொண்டு அவரின் முகவரியினை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். இது போல பல்வேறு நிகழ்வுகள் இந்த கட்டுரைகள் வழியே குறிப்பிட்டுள்ளார். ஒரு அரசு ஊழியர், தம் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் 'தங்கள் தாழ்மையுள்ள ஊழியன்' என்று மறந்து எழுதியிருக்கிறார். மாணவர்கள் இருவரில் ஒருவருக்கு எல்லாப் பாடங்களிலும் நன்றாக மதிப்பெண் வருகிறது ஆனால் கணக்கு மட்டும் வரவில்லை அதேபோல அவரின் நண்பருக்குக் கணக்கு மட்டும் தான் வருமாம் அதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் கணக்கு பேப்பரில் பெயரை மாற்றி எழுதிவிடுவோம் என்று. ஆனால் மறந்து போய் தனது பெயரையே எழுதியதால் கணக்கில் இரண்டு பேப்பர் ஒரே பெயரில் இருந்ததாம்.
அதைப்போலவே சலவை காரரின் ஒரு சில அனுபவங்களை குறிப்பிட்டுள்ளார். கோவிலுக்குப் போய் செருப்பை வெளியில் விட்டுவிட்டு பிறகு தரிசனம் முடிந்து வந்து பார்த்தல் செருப்பு காணோம் அப்போது அவர் சொன்ன அதே வார்த்தைகளைச் சொன்னாராம் மற்றவர் அதாவது ஏதாவது பரதன் உன்மேல் இருக்கும் அன்பில் பெருக்கால் எடுத்துப்போயிருப்பான் என்றாராம்.
பல மேதாவிகள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு விநோதமாக வாழ்வார்கள் என்றும் அதே போல அவருக்கு ஏற்பட்ட ஒரு சில அனுபவங்களைக் குறிப்பிடுகிறார்.
தனக்குப் பலநாளாக மேடையில் பேச வேண்டும் என்ற ஆசை இருந்ததால், அதற்காக ஒரு நேரம் வந்த போது அதைப்பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று முயல்கிறார் ஆனால் அவருக்கு அதுவரையில் பேசிய அனுபவம் இல்லையென்பதால் அவரை பேசவேண்டாம் என்றார்கள். ஆனால் இறுதியில் அவரை பேசச்சொல்லி அவரால் பேசாமல் போய்விட்டதைக் குறிப்பிடுகிறார்.
கரிக்கார், கரியில் இயங்கும் இந்த வாகனத்தில் பயணித்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ஒரு நாள் அவரின் நண்பரின் வீட்டுக்கு விருந்திற்காகச் சென்றாராம் அன்று பார்த்து அவர் பயணித்த வண்டி அவரை படு மோசம் செய்துவிட்டதாம். ஒருவழியாக அவர் நண்பர் வீட்டிற்குச் சென்ற பிறகு அவர்களெல்லாம் சாப்பாட்டை முடித்துவிட்டுத் தூங்கியே விட்டார்களாம். பாவம் என்ன செய்வது அன்றிரவு பட்டினியாகவே அவர்கள் வீட்டில் உறங்கினாராம்.
லஞ்சம் வாங்குவதை அருமையாக விவரிக்கிறார் அதாவது வரியில்லாத வருமானம் என்று பல்வேறு விதமான லஞ்சங்களைக் குறிப்பிடுகிறார்.
அலுவலகத்திற்கு வரும் தொலைப்பேசியை எடுக்கும் மேலாளரின் வீட்டு வேலைக்காரனுக்குக் கிடைக்கும் அனுபவத்தால் ஏற்படும் இடர்பாடுகளை விளக்குகிறார்.
பணப்பித்து என்ற கட்டுரையில் கஞ்சனாக இருந்து என்ன சாதிக்கப்போகிறோம் என்று மிக அருமையாக விவரிக்கிறார். பணத்தைச் சேமிக்க பல்வேறு வழியிருக்க, தனது வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி அதைச் சேர்க்க வேண்டாம் என்று சொல்கிறார். பணம் செலவழிக்க பல்வேறு நல்ல வழிகள் இருக்கிறது அதுபோலவே பணம் செலவாகிக்கொண்டே தான் இருக்கவேண்டும்.
வெள்ளைக்காரரும் வெள்ளிக்கிழமையும் என்ற தலைப்பில், நாம் பார்க்கும் நல்ல நேரம், ராகு காலம் போன்ற பல்வேறு விதமான வழக்கத்தினை பார்த்து பலரும் பேசுவது பற்றி அவர் குறிப்பிடுகிறார். அதே சமயத்தில் வெள்ளைக்காரர்கள் பார்க்கும் பல்வேறு சகுனத்தினை பற்றிக் குறிப்பிடுகிறார். அவர்கள் வெள்ளிக்கிழமையில் எதுவும் புதிதாகச் செய்ய மாட்டார்கள் அது போலவே 13 நம்பர் அவர்களுக்கு உதவாது. அவர்கள் 13 நம்பர் என்றாலே அலர்ஜி தான்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
23 டிசம்பர் 2022
No comments:
Post a Comment