யாருக்காக அழுதான்?
ஆசிரியர் - ஜெயகாந்தன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 117
பக்கங்கள் 73
ஜெயகாந்தனின் எழுத்துக்கள் பிரமிக்க வைக்கும் என்பார்கள் அது உண்மைதான். நான் இந்த புத்தகத்தினை 2020 ல் வாங்கினேன் ஆனால் முதல் சில பக்கங்கள் வாசித்து விட்டு ஓரம்கட்டிவைத்துவிட்டேன். ஏனோ இன்று என் கண்ணில் பட்டது உடனே வாசித்துவிட்டேன் அதுவும் ஒரே நாளில்.
வாசித்து முடித்த இறுதிக்கணத்தில் அவனும் அழுகிறான் கூடவே நானும் அழுதேன் இதுதான் உண்மை.
வாருங்கள் கதைக்குள் செல்வோம். அந்த ஊரின் ரயில்வே நிலையம் அருகில் வெறும் நான்கு அறைகள் கொண்ட ஒரு விடுதி இருக்கிறது. அது முதலியாருக்குச் சொந்தமானது அங்கு வரும் வாடிக்கையாளர்களை கவருவதற்காகவே மலிவு விலையில் உணவு வழங்கப்பட்டுவருகிறது .
இந்த கதை ஒரு நாள் இரவில் ஆரம்பித்து மறுநாள் மாலையில் முடிகிறது. எத்தனை கனமான இதயம் கொண்ட மனிதர்கள் வந்து செல்கிறார்கள்.
கதை இருவருக்கும் இடையே ஏற்படும் உரையாடல்களைக் கொண்டு பாதி முடிந்துவிடுகிறது. மறுநாள் விடுதி விடுமுறை என்பதால் பெரும்பாலான வேலைக்காரர்கள் அன்று இரவு இரண்டாம் ஆட்டம் சினிமா பார்க்கச் சீவி சிங்காரித்துக் கொண்டு கிளம்பிவிடுகிறார்கள். ஆனால் கோவிந்தசாமி நாயுடுவும், சோசப்பு மட்டும் போகவில்லை. அவர்களை ஆச்சரியமாகப் பார்த்த முதலியார் நாயுடுவிடம் கேட்கிறார் ஏன் நீ மட்டும் போகவில்லை என்று அது அவர் மறுநாள் அவருடைய குடும்பத்தைப் பார்க்கக் கிராமம் செல்லவேண்டி இருப்பதால் சினிமாவின் மீது ஆர்வம் இல்லை என்கிறார் ஆனால் இது எதையும் பொருட்படுத்தாமல் சோசப்பு தனது வேலையில் அந்த நேரத்திலும் மேசை எல்லாத்தியும் சுத்தம் செய்துகொண்டிருக்கிறேன்.
எப்போதும் அமைதியாகவே இருக்கும் சோசப்பு அன்று மூன்று குரங்குகள் சேர்ந்து இருக்கும் ஒரு குரங்கு பொம்மை கையில் வைத்துக்கொண்டு தூங்கப்போனான். அவனருகில் தூங்க வந்த கோவிந்தசாமி நாயுடு, சோசப்பிடம் கேட்கிறார், ஏன்டா நீ எப்போதுமே கவலையே இல்லாமல் இருக்கிறாயா, எப்படிடா என்றார். அவனின் சுபாவம் அவன் யாருக்கும் தீங்கு செய்யமாட்டான், அதுபோலவே அவன் எப்போதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்புடன் வேலை செய்துகொண்டே இருப்பான். அவன் தனது மனதில் பூட்டி வைத்திருக்கும் பல்வேறு ரகசியங்களை மனம் திறந்து சொல்கிறான். அவன் முருகேசனிலிருந்து எப்படி சோசப்பானான் பிறகு அவனது மனைவி, அவனின் நண்பன் தனது மனைவியின் கணவனானது எனத் தனது முகத்துக்குள் மறைத்து வைத்திருந்த சோகங்கள் அணைத்துக் கொட்டித்தீர்த்தான் அத்தனையும் கேட்ட கோவிந்தசாமி நீ சாதார மனிதன் இல்லடா நீ உண்மையாகவே ஆண்டவன் தான் என்று மனமுருகிச் சொல்கிறார்.
அவனுக்கு அழுகையே தெரியாது, அழித்ததும் கிடையாது. ஆனால் அன்று இரவு ஒரு ஆள் முழு போதையுடன் ரூமிற்கு வருகிறான், அவன் போதையில் தனது பரிசை தவறிவிடுகிறான். அந்த பரிசை எடுத்துக்கொடுத்த சோசப்பிடம் காலையில் மறக்காத கொடுடா என்று சொல்கிறான் ஆனால் அவன் அப்போதே முதலியாரிடம் கொடுத்துவிடுகிறேன்.
மறுநாள் காலையில், எழுந்த அவன் தனது பர்ஸை காணோம் என்றும் எங்கோயோ குடிபோதையில் தவற விட்டுவிட்டோனோ என்று கேட்கிறான். அவன் நேற்றிரவு தவறவிட்டதை மறந்துபோனான் என்று நினைத்துக் கொண்ட முதலியார் அந்த பர்ஸை மறைத்துவைத்துவிடுகிறார்.
அவன் சந்தேகமெல்லாம் சோசப்பின் மேல் தான், இதனால் சோசப்பு பெரும் சோதனைக்கும் உள்ளாகிறான், அடிக்கிறார்கள் ஆனாலும் அவன் எதுவும் பேசாமல் மௌனமாகவே இருக்கிறான். முதலாளி முதலியார் தந்து தேவைக்குப் பணம் வேண்டுமென்று இருந்ததால் அந்த பர்ஸை மறைத்துவைத்து விடுகிறான். இறுதியில் ஒரு பெரும் நாடகத்திற்குப் பிறகு மாலை ஊருக்குப் போன கோவிந்தசாமி திரும்பி வருகிறான். சம்பவத்தைத் தெரிந்துகொண்ட அவன்,சோசப்பு ஒரு தெய்வமடா அவனையா திருடன் என்று சொல்கிறீர்கள் என்று ஆவேசமடைந்த தருணத்தில் முதலியார் எப்படியோ பர்ஸை கொண்டு அவனது அறையில் வைத்துவிடுகிறார்.
இறுதியில் அவனது பர்ஸை கண்டவன், சோசப்பிடம் மன்னிப்பு கேட்கிறான் ஆனால் அவன் அப்போதும் மௌனமே சாதிக்கிறான்.
அதுவரையில் அழவே தெரியாதவன், தனது முழு பலம் கொன்டு வாய்விட்டுக் கதறி அழுகிறான்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
15 டிசம்பர் 2022
No comments:
Post a Comment