விருந்தாளி
ஆசிரியர் : ஆல்பெர் காம்யு
தமிழில் - கா.நா. சு.
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 32
'விருந்தாளி' என்னும் தலைப்பில் ஆல்பெர் காம்யு அவர்களால் 1957ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இந்த கதை அல்ஜீரியா நாட்டில் நடப்பதாக அமைந்துள்ளது. மேலும் இந்த கதை 'ஒரு கைதியின் பயணம்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.
1913 ல் அல்ஜீரியாவில் பிறந்த கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அங்கேயே வாழ்ந்து பல்வேறு தொழில்கள் செய்து, பின்னர் பிரான்ஸில் குடியேறினார். தனது எழுத்துக்கள் மூலமாக பல்வேறு விதமான அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். இவரின் பல்வேறு படைப்புகள் வெளிவந்துள்ளது. அவற்றுள் 1957ல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்த விருந்தாளி என்ற கதையும் அவரின் மனப்பான்மையினை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது.
பள்ளத்தாக்கின் உச்சியில் ஒரு அப்பள்ளிக்கூடம் அதை நிர்வகிக்கும் ஆசிரியர் டாரு அவர்கள். கடும் குளிரிலும் அவரும் மற்றும் அந்த பகுதியில் வாழும் மக்களும் வாழ்கின்றனர். அவர்களுக்கு உதவிபுரிய வேண்டி தனது முழு வாழ்வையும் அர்ப்பணிக்கிறார். அதற்காக அங்கே ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்தி வருகிறார் மேலும் அந்த பகுதி மக்களுக்கென அரசாங்கம் கொடுக்கும் கோதுமை மற்றும் உணவுப் பொருள்களை அவரின் பள்ளிக்கூடத்தில் வைத்துக் கொண்டு அனைவருக்கும் பகிர்ந்து பிரித்துக் கொடுப்பதும் அவரின் ஒரு முக்கிய வேலையாகக் கொண்டிருக்கிறார்.
அன்று பள்ளத்தாக்கின் கீழிருந்து அவரை நோக்கி இருவர் வருகிறார்கள் அதில் ஒருவன் குதிரை மீதமர்ந்தும் மற்றவன் நடந்தும் வருகிறான். அவர்கள் நெருங்கி வந்தவுடன் அவருக்குப் புரிந்துவிடுகிறது, அவரை நோக்கி வருபவரின் ஒருவன் போலீஸ் என்றும் அவன்கூடவே வருவது ஒரு கைதியாக இருக்கும் என்று யூகித்துக்கொள்கிறார். கடுமையான பனி பெய்துகொண்டிருந்த நேரம் கூடவே கடுங்குளிர் அந்த பகுதியினை வெகுவாக மூடிக்கொண்டிருந்தது.
அவர்கள் வந்துசேர்கின்றனர், பிறகு போலீஸ் அவனுடன் வந்த கைதியினை டாருவிடம் ஒப்படைத்துவிட்டு அவனை அடுத்த பகுதியில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனலில் கொண்டு சேர்க்குமாறு சொல்லிவிட்டு அவர் சென்றுவிடுகிறார்.
டாரு, அந்த கைதியை ஒரு விருந்தாளி போலவே பாவித்து அவனுக்கு உன்ன உணவும் குளிருக்கு உடுத்திக்கொள்ளக் கம்பளியும் கொடுத்து அவனை உபசரிக்கிறார். கூடவே அவரின் மனம் அவனைக் கொண்டு ஒப்படைக்க மனமில்லாமல் தீவிர யோசனையில் இருக்கிறார்.
மறுநாள் காலை அவரும் அந்த கைதியும் செல்கின்றனர். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் டாரு, கைதியிடம் சொல்கிறார். இவருக்கும் தான் நான் வருவேன். இந்த இந்த பணத்தை வைத்துக்கொள், போலீசிடம் போனால் அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள் அதனால் இந்த பக்கமாகச் செல் அங்கே உனது மக்கள் இருப்பார்கள் அவர்கள் உன்னைப் பார்த்துக்கொள்வார்கள் என்று சொல்லிவிட்டு அவர் திரும்பிவிடுகிறார். ஆனால் அந்த கைதி போலிஷ்காரர்கள் மற்றும் நீதிபதிகள் இருக்கும் பக்கம் நோக்கியே நடக்கிறான்.
திரும்பி வந்த டாரு, தனது அறையில் இருக்கும் பிரான்ஸ் தேசத்து நதிகளின் வரைபடத்தில் எழுதியிருந்த வார்த்தைகள் அவரை நோக்கிச் சொல்கின்றன" நீ எங்கள் சகோதரனை போலீஸில் ஒப்படைத்துவிட்டாய் அதற்கான தண்டனை உனக்குண்டு"...
டாரு, தன்னிடம் வந்து சேர்ந்த கைதியை அவர் ஒரு விருந்தாளியாகவே கருதி அப்படியே பாவித்து அவனிடம் பணமும் கொடுத்து அவனைப் போலீசிடம் ஒப்படைக்காமல் உன்விருப்பப்படி நீ செல் என்று தான் சொல்கிறார் ஆனால் அவர் மனம் அவரை ஒரு குற்றவாளியாகவே கருதுகிறது.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
20 டிசம்பர் 2022
No comments:
Post a Comment