நூல் : வெள்ளயங்கிரி மலை பயணம்
ஆசிரியர் : தாமோதரன் சாது
பதிப்பு. : அமேசான் மின்நூல்
இந்த மின்னூலின் வழியே நம்மை வெள்ளயங்கிரி மலை பயணத்திற்க்கு அழைத்து செல்கிறார். வாருங்கள் நாமும் கூடவே மலையேறுவோம் ....
கொங்கு நாட்டின் தலைநகரமான கோயம்பத்தூர் தொழில் நகரம் என்பதனை தாண்டி தமிழகத்தின் முக்கியமான திருக்கோயில்கள் அமைந்திருக்கும் நகரமாகவும் இருக்கிறது. பேரூர் பட்டீஸ்வரர் கோயில், அவினாசியில் உள்ள அவிநாசியப்பர் திருக்கோயில், முருகனின் ஏழாம் படைவீடு என்று போற்றப்படும் மருதமலை முருகன் கோயில், மேட்டுப்பாளையம் பத்திரகாளியம் கோயில், கோனியம்மன்கோனியம்மன் கோயில் போன்ற பழமையான ஆன்மீகத் தலங்கள் கோவையில் அமைந்திருக்கின்றன. இவ்வரிசையில் கோவையில் தமிழகத்தின் மிக முக்கியமான சைவ திருத்தளங்களில் ஒன்றான வெள்ளியங்கிரி மலை அமைந்திருக்கிறது. தரையிலிருந்து கிட்டத்தட்ட 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த வெள்ளயங்கிரி மலைக் கோவில். இந்த கோவிலுக்கு செல் வதற்காகவே இந்த மலையில் ஏறி செல்கின்றனர் பக்தர்கள். சாகச விரும்பிகளும் இந்த மலை ஏற்றத் தை மிகவும் விரும்புகின்றனர்.
இரண்டாம் மலை பயணத்தை ஆரம்பித்தோம். இந்த மலையில் ஒருசில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. அடர்ந்த மரங்கள் நிறைந்திருக்கும் பகுதி, இம்மலையில் மிளகு திப்பிலி மூங்கில் வேங்கை போன்ற தாவர மர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சித்தர் குகை மற்றும் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.
மூன்றாவது மலையில் சில சரிவு பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும் . சரிவான பாறையில் ஏறி வழுக்கி விழுவதால் இதற்கு வழுக்குப்பாறை என பெயரிடப்பட்டது . அப்பாறைகளில் இலகுவாக ஏறிச்செல்ல படி வடிவத்தில் செதுக்கி அமைத்துள்ளனர் . மரத்தின் வேர்களுக்கு இடையே பாதை அமைந்துள்ளது . நடக்கும் போது மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். இங்கு வாழும் மக்கள் வேங்கை மரத்திலிருந்து வடியும் பாலை சிறிய தேங்காய் ஓடுகளில் சேகரித்து கடைகளில் விற்கின்றானர் . வேங்கைப் பாலால் கைக்குழந்தைகளுக்கு திலகம் இட்டால் வசீகர என்பதுடன் திருஷ்டி பாதிக்காது என இன்றும் கிராமங்களில் நம்புகின்றனர் . இம் மலையில் கைதட்டிச் சுனை என்ற தீர்த்தம் உள்ளது. கைதட்டி சுனை என்பது மூன்று பெரிய பாறைகளுக்கு நடுவில் ஒரு மூங்கில் தப்பையைச் சொருகி வைத்துருப்பார்கள். அதில் குழாயில் கொட்டுவது போல தண்ணீர் கொட்டும். இந்த தண்ணீர் பாம்பாட்டி சுனைத் தண்ணீரை விட சுவையாகவும் , அதிகமாகவும் வருகின்றன,. கை தட்டினால் தண்ணீர் வேகமாக வரும் என கூறுவது உண்டு.
நான்காவது மலை ஈச்சல் திட்டு. இதமான தென்றல் வீசும் மலை, திருநீர் மலை ,ஒட்டன் சமாதி மலை , எனவும் கூறினார்கள்.
ஐந்தாவது மலை பீமன் களியுருண்டை மலை என அழைப்பர் பெரிய களியுருண்டை வடிவில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இம்மலையில் குறிஞ்சிப் பூ செடிகள் செண்பக மரங்கள் , அதிக அளவில் தென்படுகின்றன . பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது .
ஆறாவது மலை, இதை சந்தன மலை எனவும் அடுத்து ஏழாவது மலை வெள்ளங்கிரி மலை. வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த மலையேறி போய் வெள்ளங்கிரி சிவனை தரிசிக்கவேண்டும்.
அருமையான பயணநூல்
வாசித்த மகிழ்ச்சியடன்
நன்றி
ராம தேவேந்திரன்
No comments:
Post a Comment