Friday 11 September 2020

மணிபல்லவம் - வாசிப்பு அனுபவம்

மணிபல்லவம் - வாசிப்பு அனுபவம் 


ஆசிரியர் : நா. பார்த்தசாரதி   


இது ஒரு வரலாற்று (சரித்திர) நாவல்





மணிபல்லவம் நூலினை படிக்கும் போது நான் படித்த பூம்புகார் கலை கல்லூரிதான் நினைவிற்கு வருகிறது.

ஆசிரியர், காவேரி பூம்பட்டினத்தினை மிக அழகாகவும் பல வருடங்களுக்கு முன்பே ஒரு பெரிய வாணிப நகராகவும் செல்வ செழிப்புள்ள பட்டினமாகவும்  மிக அழகாக வர்ணித்திருக்கிறார். 

இந்த நூலில் கதாநாயகன் இளம்குமாரனையம், கதையின் நாயகிகளாக சுரமஞ்சரியும் மற்றும் முல்லையும்  இவர்கள் கூடவே எட்டி பட்டம் பெற்ற வெல்வந்தராக சுரமஞ்சரியின் தந்தையும் அவரின் நண்பர் ஒற்றை கண் நகைவேழம்பரும், இளம்குமாரனை வளர்த்தெடுக்கும் அருச்செல்வ முனிவர், வீர தீரராக திகழும் நீலநாக மறவரும், முல்லையின் தந்தையாக வீரசோழியா வளநாடுடையாரும், முல்லையின் சகோதரனும் கதக்கண்ணனும் இவர்களுக்கு மத்தியில் ஓவியன் மணி மார்பனும் சுரமஞ்சரியின் சகோதரியான வானவல்லியும் மற்றும் சுரமஞ்சரியின் தோழி வசந்தமலையும் கதை முழுவதும் நம் கூடவே பயணித்துக்கொண்டே வருகின்றனர். கதையின் இறுதி பாகத்தில் மூவர்களை அறிமுகப்படுகிறார் அவர்களின் கதையின் இறுதி பாகத்தில் வந்தாலும் இந்த கதையின் ஆதி அந்தமே அவர்கள் தான் என்பது இறுதி பகுதி வாசித்த பின்னர் தான் தெரியவரும் அளவிற்கு மிக சாமர்த்திய மாகவும் அழகாகவும்  நகர்த்தி இருப்பது இந்த கதையின் பெரிய பலம்.  

கதையின் களமாக எழில் கொஞ்சும் காவேரி பூம்பட்டினம் முக்கியமாக திகழ்கிறது என்றாலும் மணிபல்லவம் தீவு தான் கதையின் முக்கிய இடமாக திகழ்கிறது. காவேரி பூம்பட்டினத்தின் இன்றளவும் நடக்கும் இந்திர விழாவில் தான் கதை ஆரம்பிக்கிறது.

பெரு வீரராகிய நீலநாக மறவர் இளங்குமரனிடம் சிரித்துப் பேசிப் பழகுவதும் வெளிப்படையாக அன்பு செலுத்துவதும் மற்றவர்களுக்கு வியப்பாயிருந்ததற்குக் காரணம் உண்டு ஆனால் இளங்குமரன் அழகே உருவானதாகவும் மட்டற்ற வீரரானாகவும் வளம் வந்த காலம் அப்போது நடந்த இந்திர விழாவில் சக்கரவாள கோட்டத்தின் அருகே நடந்த மறவர் போட்டியில் பங்குகொண்டு எதிரியினை பந்தாடிய அழகையும் அவனது அழகில் மயங்கி அவனுக்கு தனது மணிமாலையினை அன்பாக கொடுக்க முயன்றாள் சுயமஞ்சரி ஆனால் சற்றும் அவள் எதிர்பாராத வகையில் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான் இளங்குமரன்.

தனது பரிசினை ஏற்று கொள்ளாததால் கோவம் கொண்ட சுரமஞ்சரி அவனது ஓவியத்தினை எழுதிக்கொடுக்க ஓவியன் மணிமார்பனிடம் வேண்டினாள் அதற்காக ஓவியன் மணிமார்பன் இளம்குமாரினிடம் வேண்டிக்கொண்டதற்காக இளங்குமரன் பாண்டிய நாட்டில் இருந்த ஓவியனின் வருமானத்திற்காக ஒரு பேருதவியாக இருக்குமென்று இணங்கினான் இதற்காக அவன் சரமஞ்சரி வீட்டிற்கே போகவேண்டிய சூழல் உருவாகிறது அப்போதுதான் சுரமஞ்சரியின் தந்தை இளம்குமாரனை பார்க்க நேரிடுகிறது.

இளம்குமாரனை சந்தித்த சுரமஞ்சரியின் தந்தையும் அவரது நண்பனான நகைவேழம்பரும்  அவனை ஒரு ஜென்ம எதிரியாக பார்த்தது அவனுக்கு சற்றே வியப்பாக இருந்தது.

இளம்குரனுக்கு தனது பிறப்பை ரகசியம் ஏதும் தெரியாமலே  சிறுவயதிலிருந்தே அருச்செல்வ முனிவரின் தவச்சாலையில் தான் வளர்ந்து வருகிறான் ஆனால் முனிவர் அவனை ஒரு வீரனாக வேண்டும் என்று நீல நாக மறவரின் ஆலமர முற்றத்தில் இருக்கும் படைக்கல சாலைக்கு வீர தீர  பயிற்சிக்கு அனுப்பிவிடுகிறார்  அபப்டியே அவனும் ஒப்பற்ற ஒரு வீரனாக வளம் வருகிறான்.  இதற்கிடையே பெருசெல்வரும் நகைவேழம்பரும் சேர்ந்து அருள்செல்வ முனிவரையும் இளம்குமாரனையும் தீர்த்துக்கட்ட ஆட்கள் அனுப்பிறார்கள் ஆனால் அந்த சமயம் நண்பன கதக்கண்ணன் அவ்விடம் வருகவே அந்த திட்டம் அடித்து நொறுக்கப்பட்டு முனியவரையும் இளம்குமாரனையும் தனது வீட்டிற்கே அழைத்து வந்து விடுகிறான் ஆனால் மறுநாள் அவர்கள் அருள்செல்வ முனிவரின் தவ சாலைக்கு தீ வைக்க திட்டமிடுகின்றனர் இதனை அறிந்த முனிவர் அவர்களுக்கு முன்னரே தவ சாலைக்கு தீ வைத்துவிட்டு வளநாடுடையாரின் உதவியோடு மணிபல்லவம் தீவிற்கு இரவோடு இரவாக பயணித்து விடுகிறார் ஆனால் வளநாடுடையரிடம் ஒரு வாக்கு வாங்கிக்கொள்கிறார் அதாவது உலகுக்கு நான் தீயில் இறந்தாகவே இருக்கட்டும் என்றும் கண்டிப்பாக அடுத்த இளம்குமாரனை மணிபல்லவத்திற்கு அழைத்து வரவேண்டும் என்றும்.   

இரண்டாம் பாகத்தில் திருநாங்கூருக்கு அடிகளார் தமது மாணவனான நீல நாக மற்றவரிடம் இளம்குமாரனை என்னிடம் மறக்காமல் அடுத்த முறை என்னை காண வரும்போது அழைத்து வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறார் தனது ஆசானின் ஆணைக்கிணங்க இளம்குமாரனை அங்கு அழைத்து செல்கிறார். இதுவரையில் ஒரு முரடான திரிந்த இளம்குமார் இந்த தவச்சாலையில் அறிவு மயமாக வளர்கிறான் அவன் இங்கு ஆன்மிகத்தில் அவன் மனம் மலர்கிறது; வளர்கிறது; மணம் விரிக்கிறது. மனிதர்களுக்கு உடலின் செழுமையாலும், தோலின் மினுமினுப்பாலும், அவயவங்களின் அழகாலும் வருகின்ற கவர்ச்சி நிலையற்றது, ஆனால் அறிவினால் வருகிற அழகு நிலையானது; உயர்ந்தது; இணையற்றது. ஏற்கெனவே பேரழகனான இளங்குமரன் இப்போது அறிவின் அழியா அழகையும் எய்தப் போகிறான். அந்த அறிவழகின் மலர்ச்சியில் அவன் ஆனால் அத்தகைய முழுமையான ஆசிரியப் பெருந்தகை ஒருவரை நேற்று வரை அவன் சந்திக்க நேர்ந்ததில்லை. நீலநாகமறவர் அவனுக்குப் போர்த்துறைக் கலைகளைக் கற்பித்த ஆசிரியரானாலும் அவரிடம் நாங்கூர் அடிகளிடமிருந்ததைப் போன்ற மென்மையையும் குழந்தையுள்ளத்தையும் கண்டு இளங்குமரன் நல்லதொரு சிறந்த மாணவனாக விளங்குகிறான் அதனிடையே விசாகை என்னும் ஒரு பெண் துறவி உலகத்தார் இன்பத்திற்காக தனது ஆடம்பர வாழ்வினை துறந்து இப்போது துறவியாக இருப்பதும் இந்த பாகத்தில் சிறப்பாக இருக்கிறது.

மூன்றாம் பாகத்தில்  இளங்குமரன் ஞான அறிவுபெற்று பூம்புகார் நகரில் நடைபெறும் இந்திர விழாவில் கலந்து கொண்டு அறிவு போரில் கலந்து கொண்டு எதிராளிகள் எல்லோரையும் அறிவினால் வீழ்த்தி பெருமையடைந்தான் ஆனாலும் அறிவின் முதிர்ச்சியில் இளம்குமாரன் எந்த வித செருக்கும் இல்லாமல் இருந்தது எல்லோரிடமும் ஒரு வியப்பாக இருந்தது. இந்த  இந்திர விழா நேரத்தில் சொற்போரில் கலந்து கொண்டிருந்த இளம்குமாரனை பார்த்த சுரமஞ்சரியின் தந்தையும் அவரது நண்பர் நகை வேழம்பரும் இந்த முறை ஒரு புதிய யுத்தியை கொண்டு சுரமஞ்சரிக்கே தெரியாமல் அவளிடம் பூ கூடைகளை கொடுத்து அதனுள் பாம்புகளை மறைத்து விட்டு இளம்குமாரனை அழிக்க திட்டம் தீட்டினர் ஆனால் இதிலும் அவன் தப்பித்து விடுகிறான்.

நான்காம் பருவத்தில், இளம்குமாரனை எப்படியோ சமாதன படுத்தி மணிபல்லவத்திற்கு அழைத்து கொண்டு செல்கிறார் ஆனால் அருச்செல்வ முனிவர் உயிருடன் இருக்கிறார் என்பது வளநாடுடையரை தவிர வேறு யாருக்கும் தெரியாத ஒரு விஷயமாக தான் இருக்கிறது.   இளங்குமரன் மற்றும் வளநாடுடையார், மணிமார்பன் அவனது துணைவி பதுமை எல்லோரும் கப்பல் ஏறி மணிபல்லவத்திற்கு செல்வதை கண்ட நகைவேழம்பர் அந்த கப்பலினை தொடர்ந்து சென்று எப்படியாவது இளம்குமாரனை அழிக்க வேண்டும் என்று பின்தொடர்கிறார் ஆனால் இந்த முறையும் தோல்வியுடனே திருப்புகிறார். இந்த தோல்வியின் எதிரொலியாக நகைவேழம்பருக்கும் பெருநிதி செல்வருக்கும் அவ்வப்போது வந்த போகும் கருத்து வேறுபாடும்   சண்டையும் உச்சத்திற்கு சென்று இறுதியில் நகைவேழம்பரையும் தீர்த்து கட்டிவிடுகிறார்.

இறுதி பருவத்தில் அமுதசாகரன் தன் தலைவராகிய பெருவணிகருக்கு வாய்க்கப் போகும் மங்கல மனையாளைக் காண்பதற்கு ஆவல் கொண்டான். கையில் மாலையேந்திக் குனிந்த தலை நிமிராமல் தோழிகளோடு அந்தக் கூடத்துக்குள் நுழைந்த பெண்ணைப் பார்த்தபோது அமுதசாகரனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. 'சற்று முன் பூம்பொழிலில் பந்தாடிக் கொண்டிருந்த அந்தப் பெண்தானா மருதி?' என்று மாலையை ஏந்திக்கொண்டு வரும் மற்றொரு பூமாலையாக அவள் வந்து கொண்டிருக்கும் கோலத்தை நோக்கி அமுதசாகரன் வியந்தான். அவன் வியப்பை அதிர்ச்சியாகவே மாற்றும் எதிர்பாராத காரியத்தைச் செய்தாள் அந்தப் பெண். அருகில் வந்ததும் தைரியமாக நிமிர்ந்து எல்லாரையும் ஏறிட்டுப் பார்த்த பின்பு, அந்த ஏழைக்கவி அமுதசாகரனின் கழுத்தில் மாலையிட்டுவிட்டுச் சிரித்துக்கொண்டே சென்றாள். இப்படியாக இந்த தம்பதிகளின் ஒரே மகன் தான் இந்த இளங்குமரன், தன்னை புறம்தள்ளி விட்டு தனது கவியை மணந்ததால் சினம் கொண்ட பெருநிதி செல்வர் அவர்கள் இருவரையும் கொன்று விட்டு பின்னர் மருதியின் சகோதரனான காலாந்தகரையும் கொன்று தனது பகைமையை தீர்த்துக்கொண்ட பெருநிதி செல்வரைதான் இளங்குமரன் தனது ஞானத்தால் வென்று இறுதியில் சுரமஞ்சரியிடம் தோற்று ஞானரம் விட்டு இல்லறம் தொடங்கினான். 

சோழ நாட்டு நகரங்களில் எல்லாம் பெருநகரமான பூம்புகாரின் செல்வச் செழிப்புமிக்க வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ இந்திர விழாக்களை அறிவித்து வள்ளுவ முதுமகன் நகருக்கு முரசறைவான்! இன்னும் எத்தனையோ ஆடிப்பெருக்குகளுக்குக் காவிரியில் வெள்ளம் வரும்; தணியும். மழை பெய்யும். வெயில் காயும். பருவ காலங்களால் விளையும் புதுப்புது மாறுதல்கள் காவிரிக்கரை வாழ்க்கையில் எத்துணை எத்துணையோ நிகழ்ச்சிகளைப் படைக்கும். சமயவாதிகளும் ஞானிகளும் சந்திப்பார்கள், அளவளாவுவார்கள், பிரிவார்கள். அறிவும் செல்வமும் ஓங்கி வளரும். அந்தக் கோநகரத்துக் கவிகளின் நாவில் புதுப்புதுக் கவிதைகள் பிறக்கும். இளம் பிள்ளைகள் பலர் தோன்று வார்கள். மூத்துத் தளர்ந்தவர்கள். பலர் இறப்பார்கள். அரசர்கள் மாறுவார்கள். அரசாட்சி மாறும், ஏறும், தாழும். வாணிகருடைய வாழ்க்கை வளரும், தளரும், மாபெரும் துறைமுகத்தில் கப்பல்கள் வரும், போகும், நிற்கும், மிதக்கும்.  ஆசிரியரின் இந்த மன ஆசைகள் எல்லாம் இப்போது இல்லாமல் போனதே உண்மை அப்படி சிறப்பாக இருந்த பூம்புகார் பெரு வணிக துறைமுகம் இப்போது வெறும் பூம்புகார் என்றே இருக்கிறது. இப்படி எல்லாம் நடந்ததின் ஒரு சுவடு கூட இல்லையே .......

நன்றி 
வாசிப்பு அனுபவங்களுடன் 
தேவேந்திரன் ராமையன்  








 
       

No comments:

Post a Comment