Saturday 5 September 2020

ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் !

 ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் ! 


ஒவ்வொரு தனி மனிதனும் எதாவது ஒரு விதத்தில் பல ஆசிரியர்களை கொண்டுதான் முன்னேறி இருப்பான் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. 

வாழ்வின் முதல் நாள் தொடங்கி இன்றுவரை கற்றுக்  கொடுத்து கொண்டிருக்கும் அம்மா அப்பாவிற்கு முதல் நன்றி. 

அப்படி நான் கடந்து வந்த பாதையில் என்னை மெருகூட்டிய ஆசிரியர்களை நினைவுகூரவே  இந்த பதிவினை இடுகிறேன்.

நான் எனது தொடக்க பள்ளி படிப்பினை செண்பகச்சேரி கிராமத்தில் இருக்கும் அரசினர் ஆரம்ப தொடக்க பள்ளியில்தான் ஆரம்பித்தேன். இந்த பள்ளியில் என்ன ஒரு மாணவனாக செதுக்கியது  இரண்டு ஆசிரியர்கள். அவர்கள்தான்  திரு. வ. கலியமூர்த்தி மற்றும் திரு. கணேசன் அவர்கள்.

பின்னர் திருமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எனது படிப்பினை ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தேன். இங்கு எனக்கு அறிவு புகட்டிய ஆசிரியர்கள்  திரு. ஆறுமுகம் (ஆங்கிலம்), திரு . வே. சம்பந்தம் (கணக்கு), திரு. நடராசர் (தமிழ்) திரு  பி.சௌந்தரராஜன் (அறிவியல்), திரு. பூலோகம் (வரலாறு-புவியியல்) , திரு ஜி.முருகேசன் (GM)  மற்றும்   TR கலியமூர்த்தி (TRK), ஆகியோர்களை  இந்த  நாளில்  நினைவுகூர்வதில்  மகிழ்ச்சி.

தொடர்ந்து குத்தாலம் அரசினர் மேல்நிலை பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தேன். அங்கே எனது வகுப்பாசிரியர் பி.கருணாகரன் - அரசியல் பாடம், தலைமை ஆசிரியர் சம்பந்தம், கணக்கு ஆசிரியர் வி. சண்முகசுந்தரம் (VSS). கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் ஆசிரியர் அமரேசன் ஆகியோர்களையும்  இந்த  நாளில்  வணங்குகிறேன்.  

பூம்புகார் கலை கல்லூரியிலே, வணிகவியல்  இளங்கலை பயின்ற போது வேறொரு விதமாக என்னை உருவாக்கிய  ஆசிரியர்கள் திரு. சக்கரைவேல் (கல்லூரி முதல்வர்), வணிகவியல் துறை தலைவர், திரு எ.பழனிவேல், விரிவுரையாளர்கள் திரு. கணேசன், திரு. பன்னிர்செல்வம், திரு. கிருஷ்ணமூர்த்தி ,    திரு. ராஜாராம், திரு. செல்வராஜ், திரு. ராஜராஜன் மற்றும் அலமேலு அக்கா ஆகியோர்களுக்கு  வணக்கம்.

தினோராம் வகுப்பு தொட்டு கல்லூரி காலம் எனக்கு  பயிற்றுவித்த  ஒவ்வொரு  ஆசிரியரும் ஒரு விதத்தில்  இன்று  என்னை  இன்று  இருக்கும் நானாக  செதுக்கி  இருக்கிறார்கள்.  என்னுள்   ஒரு ஆடிட்டர் ஆக வேண்டும் என்று விதையினை விதைத்த ஆசிரியர் குத்தாலம் சீனிவாசன் அவர்களுக்கும் என்றென்றும்  என்னுடைய  நன்றிகளும்  வணக்கங்களும்.

ஆடிட்டர் படிப்பினை கற்று கொடுத்த திரு. ஜி. சூரியநாராயணன் அவர்களுக்கும் நன்றிகளும்  வணக்கங்களும்.  

எல்லாவற்றுக்கும்  மேலாக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் எனக்கு க்கு எதாவது ஒன்றை கற்று கொடுக்கும் காலத்திற்கும் ஆசிரியர்  தின  வணக்கங்கள்.  

 

நன்றியுடன் ராம. தேவேந்திரன்         



   

No comments:

Post a Comment