Thursday, 3 September 2020

யானை டாக்டர் - ஜெயமோகன்

நூல்  :   யானை டாக்டர்

ஆசிரியர்  - ஜெயமோகன்  


இது ஒரு குறு நாவல். தாங்கியிருக்கும் கரு ஒரு மாமனிதனின் வாழ்வினை படம் பிடித்து காட்டுகிறது.  டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை     பற்றிய கதைதான் இந்த நாவல். 

ஆசிரியர் இந்தநூலில் யானைகளையும், அதன் இயற்கையான வாழ்விடமான காடுகளையும் மனிதன் தன் சுயநலத்திற்காக எப்படியெல்லாம் மாற்றிக் கொள்கிறான் என்றும் மிக தெளிவாக விவரித்துள்ளார். மனிதர்கள் உண்டாக்கும் சின்ன சின்ன இயற்கை மாசுபடுத்தலினாலும் எவ்வாறு இயற்கை சார் உயிரினங்கள் பாதிக்கபடுகிறது எனபதை யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நோக்கில் ஆசிரியர் விவரித்துச்செல்கிறார்.

யானை டாக்டர் நூலில் ஆசிரியர் உணர்வுபூர்வமான உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். யானைகளின் டாக்டர்  கிருஷ்ணமூர்த்தி அவர்களின்  வாழ்க்கை, அவரது அர்ப்பணிப்பு  விவரிக்கப்படுகிறது. அர்பணிப்பு பையும் மிக அழகா விவரித்திருக்கிறார். சாதாரணமாக ஒரு படித்த உயர் அதிகாரிக்கு அவருடன் பணி புரியும் சக ஊழியர்களுடன் ஒரு பிணக்கு இருக்கும். இந்த கதையினை ஆசிரியர், நாங்குநேரியில் இருந்து உயர்படிப்பு படித்து டாப்ஸ்லிப்க்கு வன அதிகாரியாக பணிக்கு செல்லும் ஒருவரிடமிருந்து ஆரம்பிக்கிறார். அப்படியாக வந்து சேரும் அதிகாரி கேட்கும் மற்றும் பார்க்கும்  ஒவ்வொருவரும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றி குறைவாக நான்கு ஐந்து வார்த்தைகளாவது  பேசாதோர் இல்லவே இல்லை என்று  அறிகிறார்.  அந்த அதிகாரிக்கு ஒரு பக்கம் அந்த  டாக்டரை பார்க்கவேண்டும் என்றும் ஒரு எண்ணம் வருகிறது. ஆனாலும் இன்னொரு பக்கம் அதை  நிறைவேற்றாமல்  தள்ளிவைக்கும் போக்கும் இருந்துகொண்டிருக்கிறது. 

அந்த அதிகாரிக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தியினை சந்திக்க இரண்டு மூன்று சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது. இருந்தாலும் என்னமோ ஒரு தயக்கம். அதிலும் ஒரு சமயம் காரில்  செல்லும்போது எதிரே  நெருக்கத்தில் டாக்டரை   பார்க்க  நேரிடுகிறது. ஆனாலும் அதிகாரிக்கு டாக்டரிடம் பேச  ஒரு  தயக்கம்.  டாக்டர் அதிகாரியின் உதவியாளர் மாரிமுத்துவிடம் நலம் விசாரித்து விட்டுச் செல்கிறார்.  

ஒரு சமயம் அதிகாரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை  உதவியாளர் மாரிமுத்து யானை டாக்டரிடம் அழைத்து செல்கிறார். வேண்டாம் என்று நினைத்தாலும், போனால் அவரை சந்திக்கலாம் என்று தன் உள்மனம் சொல்வதை கேட்டு மாரிமுத்துவுடன் அதிகாரி யானை டாக்டர் வீட்டிற்கு செல்கிறார். முதலில் தயங்கிய அவர் பின்னர் அந்த சந்திப்பு மிக அழகாக ஆரம்பிக்கிறது. கூடவே டாக்டர் உடனான நட்பு மிக அழகாக பூக்கிறது.

இதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வும் மிக அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் விரிந்து செல்கிறது. வாசிக்கும் நம்மையே அந்த அதிகாரியாக என்னும் அளவிற்கு எழுத்து நடை போடுகிறது.

டாக்டரின்  யானைகளுடனான அனுபவங்கள், அவர்  யானைகளுடன் உறவாடும்  விதம், இறந்த  யானைகளின்  உடல்களை  டாக்டர்  பிரேத பரிசோதனை செய்வது என்று அனைத்தையும் அதிகாரி கூடவே  இருந்து  பார்க்கிறார். நாளடைவில்  அந்த அதிகாரி டாக்டரை  சந்திக்காமல் ஒரு நாள் கூட இருக்கவே முடியவில்லை என்ற  அளவில்  ஆகிவிடுகிறது. 

இந்த  நூலில்  டாக்டரின் நோக்கில் ஆசிரியர்  யானைகளை எப்படி பராமரிப்பது என்றும் அவைகளுக்கு என்ன தேவை என்றும் மிக தெளிவாக எழுதி இருக்கிறார்.    

இறுதியில் அதிகாரிக்கும் டாக்டருக்கும் ஏற்பட்ட நட்பு பெரிதாக வளர்ந்து அவருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு முயற்சி  செய்வதுவரை போகிறது. 

இயற்கையினை போற்றி பாதுகாப்போம்.

வாசிப்பு அனுபவங்களுடன்

ராம. தேவேந்திரன்


     

   

No comments:

Post a Comment