Saturday, 9 January 2021

என் தூரிகையின்ஓவியங்கள் - வாசிப்பு அனுபவம்

நூல் : என் தூரிகையின்ஓவியங்கள்
- கவிதை தொகுப்பு
ஆசிரியர் : பா. சுதாகர்
அமேசான் மின்னூல்

பக்கங்கள் : 91




கவிதைகள் என்றாலே அவை தாங்கி, மறைத்து வரும் கருத்துகளை புரிந்து கொண்டு வாசிப்பதே ஒரு வாசகனுக்கு ஒரு தனி புரிதல் வேண்டும் கவிதை கதைகளை போல அல்ல.
பா. சுதாகரின், என் தூரிகையின் ஓவியங்கள் கவிதை தொகுப்பு பல கோணங்களில் பல வண்ணங்களால் வரையபட்ட ஓவியங்களின் தொகுப்பு என்றே சொல்லவேண்டும். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதமாக தவழ்கிறது.
என்னை மிகவும் கவர்ந்தது என்று சொல்வதைவிட, பாதித்த வரிகள் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் “வலி” யின் பிரதிபலிப்பாக கேட்கும் இந்த கேள்வி நான் யார் ? ?

"என்னை யாரென்று எண்ணிப் பார்க்கிறேன்"
தாயாய்
மகளாய்
தாரமாய்
தங்கையாய்
தோழியாய்
காதலியாய்
மன்னிக்க
முடியாத
மறைமுக
எதிரியாய்
இப்படியாய்
எனக்கு
எத்தனையோ
வேடங்கள்.
பெண்ணென
பிறந்திடல்
வரமா
சாபமா
எதுவும்
தெரியாமல்
எத்தனையோ
எதிர்வினை
ஆணுக்கும்
பெண்ணுக்கும்
அடிப்படை
பேதங்கள்
உடலில் தான்
என்றாலும்,
எதிர்கொள்ளும்
பார்வையில்
எத்தனை
பேதங்கள்?
எனக்கென
வாழாமல்
பிறர்க்கென
வாழ்ந்தே
பாதிப்பிறவி
பயனற்றுப்
போனது
என்றேனும்
ஒரு நாள்
நான்
இறந்து
போனதும்,
மண்ணோடு
மண்ணாய்
மறைந்திடும் என்
திறமைகள்,
நான்
உயிரோடு
இருக்கையில்
கொல்கிறது
அனுதினம்.
ஆனாலும்
உங்களுக்கு
அதுவெல்லாம்
தெரியாது
சொல்வதற்கு
உங்களிடம் தான்
எத்தனையோ
குறைகள்

//
- ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் குறை சொல்லாமல் இருப்பதற்க்கு இங்கு யாருமில்லை!!!

"விமர்சனம்"
விமர்சித்த பின்
என்னிடத்தில் நீயும்
உன்னிடத்தில் நானும்
இருந்து
வாசித்து பார்த்தால்
தெரியும்
இதில் தவிர்கக
வேண்டியதே ஏராளம் என...

"இரவு பயணம் "
இரவில் இரயில் பயணத்தில்
ஏங்கும் புதுமணத் தம்பதிகளின்
மனதினை படம் பிடித்து
காட்டும்
கவிதை
அழகான இரவு பயணம்...

"எத்தனை இன்பம்"
என்ற வரிகளில் தெரியும் வலிகள் நாம் தொலைத்த கிராமத்து வாழ்க்கையின் சுவடுகளாக....

"நான்"
என்ற கவிதையில் வரும் நானாகவே வாழத்தோன்றியது ..... எத்தனை விதமான நம்பிக்கை நான் என்ற எனக்குள்...

"நிலவுக் காதலியிடம்"
எத்தனை கேள்விகள்??
விடை கிடைக்குமா?

"கைவளையல் சத்தமிட"
எண்ணற்ற கனவுகளுடன்
அத்தை மகளின்
அத்தானுக்கான
ஏக்கமானாலும் அழகா
“கைவளையல் சத்தமிட
கால்விரலும் கோலமிட
காத்திருக்கேன் மாமனுக்கு
வேறுதுணை யாரெனக்கு”

- எத்தனை ஏக்கமானாலும் மாமன் தான் மருந்தென்று காத்திருக்கும் மணப்பெண் அழகே!!
"உன்னோடு நான்"

அலைபேசி
அனைவரின்
வாழ்விலும்
அகலாத
ஒன்றாய்
அனுதினமும் ....
//
ஈரத் தலையோடு
இன்முகம்
காட்டுகின்ற,
இளநங்கை
போன்றங்கே
பல தென்னை
மரங்கள்!
ஏற்றுக் கொள்
எனச் சொல்லி
என் மீது
படர்ந்திட்ட,
மழைத்துளிகள்
ஒவ்வொன்றும்
இனிப்பவைகள்!
//
"இல்லத்தரசி"

கனவுக்
குப்பைகளை
கைகழுவித்
தள்ளி விட்டு,
யதார்த்த
வாழ்க்கைக்கு
எப்பொழுதோ
பழகியவள்!
சுதந்திரக்
காற்றையெல்லாம்
சுவாசிக்கத்
தெரியாமல்,
அடிமைத்
தளையினையும்
அனுபவித்
திருப்பவள்!
தனக்காக
வாழாமல்
பிறர்க்கென
வாழ்ந்திருந்து,
தனக்கென
இருந்ததோர்
வாழ்வினைத்
தொலைத்தவள்!
அடுப்படியில்
அனுதினமும்
இடுப் பொடிய
கிடந்தாலும்,
அலுத்துக்
கொள்ளாத
சமையல்
காரியவள்!
வருங்காலம்
என்பதையே
முற்றிலும்
மறந்துவிட்டு,
நிகழ்காலக்
கடமைகளில்
நெஞ்சம்
நிறைபவள்!
இல்லத்தரசி
யென்ற
பட்டமொன்றை
சுமந்து கொண்டு,
இல்லத்
தடிமையாய்
இன்முகம்
காட்டுபவள்!
முற்றும்
துறந்து விட்ட
முனிவனைப் போல்
வாழ்ந்தாலும்,
சாபங்கள்
மட்டுமே
வாழ்க்கையிலே
பெற்றவள்!

// - நிதரசனமான உண்மை

வாழ்த்துகள் சகோ 💐💐

தங்கள் எழுத்து பயணம் சிறந்து தொடர வாழ்த்துகள்..

இந்த நூலினை வாங்குவதற்கு

https://read.amazon.in/kp/kshare?asin=B08QZ4THV8&id=irpxlcf7fjeitoz2fmwhruspyq&fbclid=IwAR07BeR8V4OwDhMXyGLjhnBUGC1acVDAXlbb9rB8DEGeQ7jbm3ra6aFJoWA&reshareId=TNP8SD0G6W4T3FTV1Z8Q&reshareChannel=system

அன்புடன் ,

தேவேந்திரன் ராமையன்
07 ஜனவரி 2021

1 comment:

  1. நல்லதொரு நூல் அறிமுகம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete