Saturday 26 December 2020

திறந்து வாசிக்கப்பட வேண்டிய மனிதர்கள். (சிறுகதை தொகுப்பு) ஆசிரியர். : இராஜேஷ் இராமு

 புத்தக_விமர்சனம்

நூல். : திறந்து வாசிக்கப்பட வேண்டிய மனிதர்கள். (சிறுகதை தொகுப்பு)
ஆசிரியர். : இ ரா ஜே ஷ் இ ரா மு
அமேசான் மின்னூல்







நல்லதொரு சிறுகதை தொகுப்பினை வாசித்த ஒரு மன நிறைவுடன் இந்த பகிர்வினை இங்கு பதிவிடுகிறேன்.
நண்பர் மருத்துவர் ராஜேஷ் ராமுவின் இந்த சிறுகதை தொகுப்பில் இடம் பெற்ற ஆறு சிறுகதைகள்:
1.கிழட்டுப் பனைமரம்
மிக அருமையான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது என்றால் அது மிகையாகாது!!இடம்பெற்ற கிழட்டு பனைமரமும் கிழவனும் எவ்வாறு பயணிக்கிறார்கள் இந்த கதையில் என்பதை அருமையாக விவரித்திருக்கிறார். சுருங்கிப் போன தேகம் கொண்ட கிழவன், தான் எல்லா மரங்களிலும் ஏறிய அனுபவங்களுடன் அவனது முதிரந்த வயதில் தனது ஒலை குடிசையின் ஒலைகள் தறர்நதிரிபதினை கண்டு ஓலை தானே தளர்ந்திருக்கிறது, சட்டம் ஒன்றும் ஆகவில்லையே" என்று சொல்லிகொண்டே புரியும் புன்னகையும் அதற்க்காகவும் பேரனின் பட்டம் அந்த நெடுநடுவென வளர்ந்த பனைமரத்தில் மாட்டிகொண்டதாலும் எப்படியாவது இந்த “கிழட்டு பனைமரத்தில்” ஏறிவிட வேண்டும் என்று மன உறுதியுடன் ஏறி விடுவதும் மிக உணர்சசிபூர்வமாகவும் எழுதியிருக்கிறார் நண்பர்.
2. கல்
“மரணிக்கும் வரை உயிர் பிழைக்கப் போராடுவதே உயிர்களின் இயல்பு.” என்பதனை மிக இயல்பாகவும், அழகாவும் கூடவே விறுவிறுப்புடன் நம்மை அந்த கடலுக்குள் கட்டுமரத்திலும் அஹ்மது மரைக்காயருடனும் பயணிக்க வைக்கிறார் நண்பர் ராஜேஷ் ராமு. போராட்டத்துடன் “தோல்வியை வரவேற்றுக் கிடப்பதைவிட. வெற்றியுடன் போராடித் தோற்கலாம். எனக்காக இல்லையென்றாலும் பரிமளத்திற்காக நான் கரை திரும்பியாக வேண்டும்”, என்று நினைத்துக் கொண்டு போராடி வருவதே கதை!!
இறுதியில் இருக்கும் கல்லின் மகிமைதான் கதையின் தலைப்பு - சரியானதே என்று சொல்லலாம்.
3. லாரி
குலதெயவத்திற்ககு நேர்த்தி கடன் செலுத்த ஒரு ஊரே பயணிக்கும் வாகனமான “லாரி” தான் இந்த கதையின் நாயகன் நாயகி... மிக அழகாக இந்த செல்கிறது கதையும் லாரியும் கூடவே வாசித்த நானும்.
4. செராஃபினா
இதில் வரும் ஒரு பெண் தேவதையை மையமாக கொண்டு வரையபட்ட ஓவியம். இது போல் எத்தனையோ தீட்டபடாத ஓவியங்கள் உலாவிகோண்டுதான் இருக்கின்றன. சமுதாயம் என்னும் சுவற்றில் அனேகமாக தீட்டபட வேண்டிய தேவதைகளின் ஓவியங்கள் ஏராளம். தனித்துவிடபட்ட ( கைவிட பட்ட பெண்) ஒரு பெண்ணின் வலியையும் அவளின் நினைவுகளையும் சுமந்து செல்கிறாள் இந்த செராஃபினா என்ற தேவதை!!
5. பொர(ற)வி
இந்த பொறவி நம்மை அழைத்து செல்லும் இடம் எல்லைகளை காத்துகொண்டிருக்கும் காத்தவராயர்களின் பிரதேசத்திற்ககு. இன்றளவும் ஊருல ஒரு தப்புத் தண்டான்னா… சுடல சும்மா விடுமா… ஊர்க் காவல் தெய்வம் இல்லையா….! அதான்… சுடல பொரவில வந்து காத்தவராயன் தலைய வாங்கிட்டுப் போயிருச்சு…” என்று இருக்கும் பெரும்பகுதி சமூகத்தின் வெளியில் தெறியாத வலியின் கதை.
6. கண்ணாமூச்சி
அம்மா அப்பா இருவருமே வேலைக்குச் செல்பவர்கள் என்றால் தினமும் தனியாக இருக்கும் அதுவுமர ஒரு குழ்ந்தையாக இருக்கும் அமீராவும் அவளுக்கும் புதிதாக கிடைக்கும் பக்கத்து வீட்டு பாட்டியும் செய்யும் கண்ணாமூச்சி விளையாட்டு தான் இந்த கதை. ஒரே குழுவிற்குள் மாற்றி மாற்றிப் பெண் எடுத்தலும் கொடுத்தலுமாக இருந்ததால், பெருமை வாய்ந்த அந்தக் குடும்பமும் குழுமக்களும் குழந்தையின்மை, மரபணு கோளாறு எனக் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருந்தனர் இந்த குழுமத்தில் பிரிந்து வந்த ஒரு குழ்நதையில்லா தம்பதியின் கடைசிகாலத்தில் கணவரை இழந்த அந்த நானிதான் அமீராவின் புதிய நண்பர் பாட்டி என்று எல்லாமும் என்று கதையினை உணர்ச்சி பூர்வமாக விளையாட்டுக்குள் நம்மை கண்ணாமூச்சி விளையாட வைத்துள்ளார் நணபர் ராஜேஷ் ராமு.
நல்லொதொரு சிறுகதை தொகுப்பினுடன் பயணித்த சில நாட்கள்...

நன்றி
தேவேந்திரன் ராமையன்

No comments:

Post a Comment