எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது
வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில் குளச்சல் யூசுஃப்
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூபாய் 125
பக்கங்கள் 111
மலையாள மொழியின் முதன்மையான இலக்கிய படைப்பாளிகளுள் ஒருவரான "வைக்கம் முகமது பஷீர்" எழுதிய இந்த நாவலைத் தமிழில் குளச்சல் யூசுஃப் மொழிபெயர்த்துள்ளார்.
இந்த நாவலில், அன்றாட நடக்கும் ஒரு முஸ்லீம் குடும்பத்தின் அக காட்சிகளை மையமாகக்கொண்டு அந்த குடும்பத்தின் சுற்றிலும் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளையும் சேர்த்து, எப்படி ஒரு குடும்பத்தின் உள்ளே நடைபெரும் பல்வேறு நிகழ்வுகளின் வெளிப்பாடாகவும், நாவலின் கதைக்காலத்தில் நிகழ்ந்த வெளிப்படுத்தியும் அந்த காலகட்டத்தில் நடந்த ஊடக பல்வேறு கேள்விகளையும் அவற்றுக்கு காரணமாக இருக்கும் சூழ்நிலைகளையும் சொல்லிச் செல்கிறது.
வட்டனடிமை காக்காவின் மனைவி குஞ்சுதுதச்சும்மாவு அவரின் அப்பா ஒரு யானை வைத்திருந்த தோரணையும் அவர்களின் குடும்பம் எவ்வாறு இருந்தது என்ற தகவல்களை உள்ளடக்கிய பாத்திரமாக குஞ்சுதுதச்சும்மாவு வாழ்கிறாள். ஒரு வாழ்ந்துகெட்ட குடும்பம் எவ்வாறு தங்களின் கடந்து போன காலத்தை அசைபோட்டுக்கொண்டே நிகழ்காலத்தினை கடக்கும் என்பது இந்த நாவலின் உயிர்ப்பாய் வரும் குஞ்சுதுதச்சும்மாவின் ஒவ்வொரு நிகழ்விலும் பார்க்கமுடிகிறது.
குஞ்சுதுதச்சும்மாவு எப்போதுமே தனது ஆதிக்கத்தினை வட்டனடிமையின் மீது செலுத்துவதாகக் கதை செல்கிறது.
இவர்களின் ஒரே பெண்ணான "குஞ்சுபாத்தும்மா". செல்வச் செழிப்புடன் இருந்த சமயத்தில் அவள் வளர்ந்த விதம் மிக அழகா வர்ணிப்பட்டிக்கிறது. அவளின் முகத்தில் இருக்கும் கருத்த மச்சம், அந்த கருத்த மச்சம் தான் அவளின் அதிர்ஷ்ட மச்சம் என்று அவளுக்குள் ஒரு பிம்பத்தினை விதைத்துவிட்டனர்.
அவர்கள் வாழும் அந்த வீட்டின் அக்கம் பக்கம் இருப்பவர்களில் முஸ்லீம் அல்லாதோர் எல்லோரும் காபிர்கள் என்றும் அவர்கள் அப்படிப்பட்ட காபிர்களுடன் பழகக் கூடாதென்றும் அப்படி மீறி அவர்களிடம் பழகினால் தம்மால் நல்ல வாழ்வு வாழமுடியாது என்றும் அவளின் பெற்றோர் அவ்வப்போது அவளுக்குச் சொல்லிவளர்த்தனர்.
குஞ்சுபாத்துமாவிற்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்கின்றன ஆனால் அந்த கல்யாணம் நடக்கவில்லை. கடைசி வரை முதிர்கன்னியாகவே வாழ்கிறாள்.
குஞ்சுபாத்தும்மா ஆற்றில் குளிக்கச் செல்லும் வேளையில் அவளைச் சந்திக்கும் நிறையப் பெண்கள் இவளின் அழகில் கண்டு வியப்படைந்தனர் ஆனால் குஞ்சுபாத்துமாவிற்கு அவளின் உம்மை ஆணை இட்டிருக்கிறாள் காபிர்களிடம் பேசவோ பழகவோ கூடாதென்று எனவே அவள் ஒவ்வொரு முறையும் யாரிடமும் பேசாமலே வந்து செல்வாள்.
இந்த சந்தோசமான வாழ்க்கை ஒரு கட்டத்தில் நின்று அவர்களின் செல்வா செழிப்பு மற்றும் வீடு, ஜமாத்தில் இருந்துவந்த பதவி என எல்லாமே அவர்களின் உறவினர்களால் கைவிட்டுப் போய்விட்டது. தீர்ப்பும் இவர்களுக்குப் பாதகமாகவே வந்தது.
வாழ்வில் வாழ்ந்து கெட்ட குடும்பம் என்றால் சமூகம் எப்படிப் பார்க்கும் என்பதை இங்கே ஒவ்வொரு காட்சியிலும் சொல்லியிருப்பார். தாங்கள் வாழ்ந்த வீடு போனபிறகு அங்கிருந்து புலம்பெயர்ந்து வேறொரு இடத்திற்கு வந்து ஒரு குடிசை போட்டுக்கொண்டு வாழ ஆரம்பித்தனர்.
வட்டனடிமை, மீன் விற்று நாட்களை நகர்த்தினார். வறுமையும் முதுமையும் வட்டனடிமைக்கும் அவரின் மனைவி குஞ்சுதுதச்சும்மாவுவிற்கும் வாழ்வில் நித்தமும் சமாதானமில்லாத வாழ்வே இருந்தது.
குஞ்சுத்தும்மாவிற்கு இதெல்லாம் புதிதாகி இருந்ததால் அவள் என்ன செய்வதென்று தெரியாமல் வாழ்ந்தாள். அவள் பொழுதுபோக்கெல்லாம் அவள் வீட்டின் அருகே இருக்கும் ஒரு குளம் அந்த குளத்தில் இருக்கும் மீன் மற்றும் தவளைகள் என அந்த அழகினை ரசித்துக்கொண்டே நாட்களை நகர்த்தினாள்.
அங்கே ஒரு புதிய குடும்பம் வருகிறது அவர்களும் காபிர்கள் எனவே அவள் அம்மா சொல்கிறாள். ஆனால் அந்த வீட்டில் இருக்கும் ஒரு ஆள் இவளுக்கு ஒருமுறை உதவி செய்கிறான். ஆனால் அவளுக்குத் தெரியாது அவன் அந்த வீட்டில்தான் இருக்கிறான் என்று. அவளுக்கு அந்த புதிய வீட்டு ஒரு பெண் அவள் பெயர் ஆயிஷா. இவர்களுக்கிடையே நெருங்கிய சினேகிதம் வளர்ந்தது. அவளை அவள் துட்டாபி என்றுதான் அழைப்பாள்.
அதிர்ஷ்ட மருவினை கொண்ட குஞ்சுபாத்தும்மா இப்போது அவளின் உம்மாவிற்கு ஒரு பெரிய தருத்திரியமாகவும் சுமையாகவும் ஆகிவிட்டாள் என அவள் அம்மா அவளிடமே சொல்லுவாள்.
அவளுக்கு ஏதோ பிடித்து விட்டது என்று அவளிடமிருந்து அதை விரட்ட வேண்டும் என்று மந்திரித்து அவளைப் பிரம்பால் அடிக்கிறான் அப்போது அவள் அலறும் சத்தமா "என்னை அடிக்கவேண்டாமென்று சொல்லுங்க வாப்பா", என்பதை வாசிக்கும் சமயம் நம் கண்ணிலும் ஒரு துளி கண்ணீர் விழாமல் செல்லாது.
என இந்த கதை ஒரு முஸ்லீம் குடும்பத்தில் உள்ளே இருக்கும் கதையினை வெளிப்படுத்துகிறது.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
30 அக்டோபர் 21
நல்லதொரு நூல் அறிமுகம்.
ReplyDelete