மாதொருபாகன்
பெருமாள் முருகன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 115/50
பக்கங்கள் 285
பெருமாள் முருகனின் மாதொருபாகன், குழந்தை இல்லாமல் இருக்கும் ஒரு தம்பதியினரைப் பற்றிய மிக அருமையான நாவல் இது. ஆரம்பத்தில் இந்த நாவலுக்கு பெரும்பான்மையான மக்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. காரணம் இந்த நாவலில் இவர் சொல்லும் ஒரு தெய்வ நம்பிக்கையின் ஆதாரமாக குழந்தை பேரு இல்லாத பெண்கள் பெருநோம்பிக்கு போவதைப் பற்றிப் பேசும் கதைதான் இந்த மாதொருபாகன்.
மாமனார் வீட்டில் காளி வைத்துக் கிளப்பிய பூவரச மரத்தின் நிழலில் உட்கார்ந்திருக்கும் காளியின் இயல்பான வாழ்க்கையில் ஆரம்பித்து தனது வீட்டுத் தொண்டியில் வளர்த்த பூவரச மரத்தின் கிளையில் கயிறு போட்டு தற்கொலை முயற்சிசெய்வது வரை இந்த மாதொருபாகன் பயணிக்கிறான்.
காளி மற்றும் பொன்னா புதிதாகக் கல்யாணம் ஆன தம்பதிகள். சீராயின் ஒரே மகனான காளி, சிறுவயது முதல் அம்மாவோடு மட்டும் தான் வளர்ந்தான் அப்பா இளம் வயதிலே இறந்து போனதால் தனியாகவே வாழ்ந்த குடும்பம் சீராயின் குடும்பம். தனது பிள்ளையினை நல்ல குணத்தோடு வளர்த்தால் சீராயி.
முத்து, காளியின் உயிர் கூட்டாளி, இவர்களின் நெருங்கிய நட்பால் முத்துவின் தங்கையான பொன்னாவை காளி கட்டிக்கொண்டான். இளமைப் பருவத்தில் அப்படி இப்படி இருந்த காளி பொன்னாவை கட்டிய பிறகு அவன் அவளே கதி என்று இருந்தேவிட்டான்.
இந்த கதையில் வரும் சொல்லாடல்கள் எல்லாம் அந்த புவிப்பரப்பையும் அங்கே வாழும் மனிதர்களின் இயல்பான உரையாடல்கள் அப்படியே உயிரோட்டத்துடன் செல்கிறது. இதுவே இந்த கதையின் பலமாகவே இருக்கிறது.
குழந்தை இல்லாமல் போகவே, காலப்போக்கில் காளியின் முக்கியமான இடமாக அவனது "தொண்டு பட்டி" மாறிப் போனது. அவன் உறங்குவதும் பகல் பொழுதினை கழிப்பதும் அந்த தொண்டு பட்டியில் தான்.
"கள்ளும், சாராயமும் இவர்களின் வாழ்வில் கூடவே வருகிறது. மாமனும் மச்சானும் சேர்ந்து சாராயமும் கள்ளும் குடிக்கும் பழக்கம் காளியும் முத்துவும் சேர்ந்து செய்யும் பொது தெரிகிறது.
ஒவ்வொரு வரியிலும் அந்த மண்ணின் வாசமும் அங்கே விளையும் விவசாயமும் அதை அனுபவிக்கும் மனிதர்களும், ஆடுகளும், மாடுகளும் அவர்களின் கூடவே ஓடி விளையாடிச் செல்லும் பறவைகளும் என எல்லாவற்றையும் அருமையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
பொன்னாவுக்கு, குழந்தை இல்லை என்பதால், அவளின் கிராமத்தில் மற்றும் உறவினர்கள் வீட்டில் நடக்கும் எல்லா சுப காரியத்திலும் அவளை ஒதுக்கி வைக்கிறார்கள். அதனால் அவள் அடையும் வேதனை வலி அளவிட முடியாதது தான். இந்த சமூகத்தில் குழந்தைப் பேறு இல்லாவிட்டால் பெறப்படும் அவமானம் அதனால் அந்த பெண் படும் துயரம், வலி, வேதனை என ஒரு பெண் எதிர்கொள்ளும் எல்லாவிதமான சமுதாய சீண்டல்களையெல்லாம் பட்டியலிட்டுச் சொல்கிறார் கதையின் போக்கில் பொன்னாவின் ஒவ்வொரு நாளும் ஏற்படும் நிகழ்வுகளில் விளக்குகிறார் ஆசிரியர்.
காளியும், பொன்னாவும் வாழும் வாழ்க்கையில் குழந்தை இல்லையென்பதைத் தவிர வேறேதும் குறையில்லாமல் வாழும் வாழ்க்கை, தொண்டு பட்டி, அங்கே இருக்கும் கட்டுத்தரையும் ஆடுகளும், மாடுகளும், கோழிகளும் அங்கிருக்கும் மரங்களில் வாழும் பறைவைகளும் எனத் தொண்டு பாட்டியில் காளி அருமையாக வாழ்கிறான்.
கரட்டூர் தேவாத்தா மாசாமியின் திருவிழாவான "பெரு நோன்பி திருவிழா" கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த பகுதி மக்களுக்குக் குழந்தை இல்லையெனில், பெண்கள் பெரு நோன்பியன்று இரவு சாமி வரம் தேடிச் செல்வது வழக்கம் என்றும் அதற்காகக் கடந்த இரண்டு வருடமாகக் காளியின் அம்மா சீராயி பொன்னாவை போகச் சொல்கிறாள் ஆனால் காளியின் மனம் வேதனை படும் என்று பொன்னா போக மறுத்துவிட்டாள். இப்படியே காலம் உருண்டோடிக்கொண்டேயிருந்தது ஆனால் இந்த வருடம் சீராயி மற்றும் பொன்னாவின் வீட்டில் அனைவரும் சேர்ந்து மச்சான் முத்துவிடம் சொல்லி காலியிடம் பேசச் சொல்லி அவன் சம்மதித்துவிட்டான் என்று பொன்னாவிடம் பொய் சொல்லவிட்டு அவளை பெரு நோன்பிற்குப் போகச் சம்மதித்து அவளை அழைத்துச் செல்கிறார்கள் பொன்னாவின் பெற்றோர்.
நாடு இரவில் இந்த தகவல் தெரிந்து கொண்ட காளியின் மனம் படும் வேதனை கொஞ்சமல்ல. இந்த பெருத்த மனவேதனையினால் அவன் தனது தொண்டு பட்டியில் இருக்கும் பூவரசு கிளையில் மாட்டிக்கொள்ளப்போகிறான். அப்போது சீராயி வந்து காப்பாற்றிவிடுகிறாள். இப்படியே செல்கிறது இந்த மாதொருபாகன்.
ஆசிரியரின் இந்த கதையின் முடிவை மக்கள் எதிர்த்ததின் விளைவாக இந்த கதையின் தொடர்ச்சியாக "அர்த்தநாரி" மற்றும் "ஆலவாயன்" என தொடர்ச்சியாக எழுதியிருக்கிறார்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
26 ஜனவரி 2022
No comments:
Post a Comment