மான்ஹாட்டன் ரகசிய திட்டம்
ஆசிரியர் : ஜெயராஜ் முத்துவேல்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 58
அறிவியல் வளர்ச்சி நமக்கு பெரும்பாலான வகையில் நன்மைகளைச் செய்திருந்தாலும் அதன் மற்றொரு பக்கம் ஈடு செய்ய முடியாத பல்வேறு தீமைகளைத் தரக்கூடிய வகையில் தான் இருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மைதான்.
அந்த வகையில் இந்த சிறிய நூலின் வழியே ஆசிரியர் மிகவும் தெளிவாகவும் எளிய முறையிலும் நாம் தெரிந்து கொள்ளக் கூடிய வழியில் "மான்ஹாட்டன் திட்டத்தின்" ரகசியத்தினை விவரிக்கிறார்.
முதலில் எல்லோரும் அறிவியல் பற்றித் தெரிந்து கொள்வது கொஞ்சம் கடினமானது தான் என்பதைத் தெரிந்துகொண்ட ஆசிரியர் (ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்பது கூடுதல் தகவல்) எப்படி தனது மாணவர்களுக்கு ஒரு கருத்தினை சொல்லிக்கொடுக்க முடியுமோ அதுபோலவே இந்த புத்தகத்தின் வழியே, வாசிக்கும் நமக்கெல்லாம் அறிவியலின் பல்வேறு வார்த்தைகளை மிகச் சாதாரணமான உதாரணங்களுடன் சொல்கிறார்.
அணு என்றால் என்ன என்பதில் இருந்து, அணுக்கரு, துகள்கள், கதிரியக்கம், கதிர்வீச்சு, அணுக்கரு பிளவு மற்றும் அணுக்கரு ஆற்றல் என ஒவ்வொன்றாய் தெளிவாக விவரிப்பதுடன் அணு - வினை கண்டு பிடித்தவர் யார், ஏன் கண்டுபிடித்தனர், அதனால் என்ன விதமான பயன்கள் என பல்வேறு வகையானமிகவும் சுவாரஸ்யமான விவரங்களை நமக்குத் தெரியப்படுத்துகிறார்.
உலகின்முதலில் அணுகுண்டு கண்டுபிடித்தது முதல் அதனைக் கண்டுபிடிக்கக் காரணமானவர்கள் யாரென்றும், ஏன் அவர்கள் அதனை ரகசியமாக கண்டுபிடித்தனர் என்பதும் மற்றும் அந்த ரகசியமாகக் கண்டுபிடித்த முதல் அணுகுண்டுவினை எங்கே சோதனை செய்தார்கள், சோதனை செய்த இடத்தின் தகவல்கள் என பல்வேறு விவரங்களைத் தெரியப்படுத்துகிறார்.
வெளி உலகிற்கே தெரியாமல் முதல் முதலில் கண்டுபிடித்த அணுகுண்டு அதனை வெற்றிகரமாகச் சோதனை செய்தது மட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் மீது இந்த அணுகுண்டுகளை வீசியது வரை என அணைத்து விவரங்களும் இந்த சிறிய புத்தகத்தின் வழியே ஆசிரியர் தெரியப்படுகிறார்.
மொத்தத்தில் இந்த சிறிய புத்தகம் மிக அருமையான தகவல்களை கொண்டிக்கிறது. இது போன்ற தகவல்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கிய ஆசிரியருக்கு நன்றி.
அன்புடன்
தேவேந்திரன் ராமையன்
22 செப்டம்பர் 2022
No comments:
Post a Comment