இந்துக்களுக்கு ஒரு கடிதம்
லியோ டால்ஸ்டாய்
முன்னுரை - மோ.க. காந்தி
தமிழில் - வானதி
ரஷ்யாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான லியோ டால்ஸ்டாய் அவர்களுக்கு வங்காள பத்திரிக்கையாளரான "தாரகநாத் தாஸ்" கனடாவிலிருந்து 1902 ஆம் ஆண்டு மே 22 அன்று ஒரு கடிதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில் இந்திய மக்களின் நிலை குறித்து, அதாவது உலகப்போரில் இறப்பவர்களை விடப் பசியால் இறப்பவர்களே அதிகம் எங்கள் தேசத்தில் என்ற தகவலைச் சொல்லி அவரிடம் எங்கள் தேச மக்களின் மீது கொஞ்சம் கவனம் கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறார்.
கடிதம் பெற்றுக்கொண்ட லியோ டால்ஸ்டாய், உடனே பதில் எழுத ஆரம்பிக்கிறார் ஆனால் இந்த கடிதத்திற்காக அவர் இந்தியாவின் சமூக மற்றும் வரலாறு போன்ற பல்வேறு விதமான தகவல்களைத் திரட்டி ஒரு முழுமையான பதில் எழுதி முடிக்க ஆறு மாதம் காலம் எடுத்துக்கொண்டது. இறுதியில் இந்த கடிதத்தினை தனி நபர் கடிதமாக இல்லாமல் ஒரு பதிப்பாக டிசம்பர் 1902 ல் பதிப்பிக்கிறார். இந்த கடிதத்தில் நாகரிக உலகின் வன்முறையினை சுட்டிக் காட்டியிருக்கிறார். லியோ டால்ஸ்டாய், தனது பதில் கடிதத்தில் கிருஷ்ணரின் வாசகங்களைப் பல்வேறு இடங்களில் மேற்கோள் காட்டி அதற்குப் பதிலும் சொல்லியிருக்கிறார் அதுமட்டுமல்லாமல் "இன்னா செய்யாமை" என்ற திருக்குறள் அதிகாரத்திலிருந்து ஆறு குறள்களையும் மேற்கோள் காட்டியிருக்கிறார்.
இந்த பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு, தென்னாப்பிரிக்கா போராட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்காக லண்டன் வந்த காந்திக்குக் கிடைக்கிறது. அந்த கடிதத்தினை படித்த காந்திக்கு இந்தியாவின் விடுதலை பற்றிய நம்பிக்கையும் ஊக்கமும் கிடக்கிறது.இந்த கடிதத்தின் படித்த பிறகு காந்தி, லியோ டால்ஸ்டாய் அவர்களைத் தனது ஆசிரியராகவே ஏற்றுக்கொண்டார்.
உடனே காந்தி, டால்ஸ்டாய் க்கு கடிதம் எழுதுகிறார், அந்த கடிதத்தில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்தியர்கள் வணிகத்திலும் சமூகத்திலும் உயர்ந்து வருவதைக் கண்டு பொறாமை கொண்ட அம்மக்கள் இனம் மற்றும் நிறவெறியின் காரணமாக பல்வேறு வழக்குகளைப் பதிந்து சிறையில் அடித்து வைத்திருக்கின்றனர். ட்ரான்ஸ்வால் சிறையில் இருக்கும் பெரும்பாலோனோர் கூலி வேலை செய்பவர்கள் இவர்கள் சிறையிலிருந்தால் இவர்களின் குடும்பத்திற்கு யார் பார்ப்பது எனவே நீங்கள் இந்த மக்கள் மீது அக்கறை கொண்டு நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைக்கு இரு முடிவு கொண்டுவரவேண்டும் அதுமட்டுமல்லமால் தங்களின் "இந்துக்களுக்கு ஒரு கடிதம்" என்ற பதிப்பினை இந்திய மொழிகளில் நண்பர் ஒருவர் அவருடைய செலவில் 20,000 பிரதிகள் அச்சிட்டு விநியோகம் செய்ய விருப்பப்படுகிறார், ஆதலால் இந்த பதிப்பு தங்களுடையது தான் என்றும் மேலும் பதிப்பிக்க அனுமதியையும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டு தனது கடிதம் வழியாக எழுதினார் மேலும் தங்கள் பதிப்பில் கடைசி பத்தியில் இருக்கும் மறுபிறவிபற்றிய கருத்துக்களுக்குத் தனது தரப்பிலிருந்து ஒரு மாற்றுக் கருத்தினை கொடுத்துள்ளார். இது தொடர்பாக மூன்று கடிதங்கள் பரிமாறிப்பட்டன.
காந்தியின் கடிதம் பெற்ற டால்ஸ்டாய், 07 அக்டோபர் 1909 இல் இவ்வாறாகப் பதில் எழுதுகிறார். தங்கள் கடிதம் மிகவும் மகிழ்வினை தருகிறது மேலும் ட்ரான்ஸ்வால் சிறையில் இருக்கும் தங்கள் சகோதரர்களின் நிலைமையினை நினைத்து வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிடுகிறார். இந்துக்களுக்கு ஒரு கடிதம் நான் எழுதியது தான் என்றும் கிருஷனாவை பற்றிய புத்தகங்கள் மாஸ்கோவில் இருந்து அனுப்பச் சொல்லியிருப்பதாகவும் மறுபிறவி குறித்த எனது கருத்தில் நான் பின்வாங்கவில்லை என்றும் மேலும் எனது பதிப்பினை இந்திய மொழிகளில் பதிப்பிக்கலாம் என்று குறிப்பிட்டு அதற்குத் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.
இந்த பதில் கடிதத்துற்கு காந்தி, 10 நவம்பர் 1909 இல் நன்றி கடிதம் இவ்வாறாக எழுதியுள்ளார். தங்களின் பதிப்பினை இந்திய மொழிகளில் பதிப்பிக்க அனுமதித்தற்கு முதல் நன்றியும், தங்கள் உடல் நலம் சீராகவில்லை என்று தெரிந்தது அதற்காகத் தான் இந்த பதில் தாமதமாக எழுதுகிறேன். நான் லண்டன் வந்த காரியம் தோல்வியில் முடிந்துவிட்டது நான் மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்புகிறேன் அங்கே சென்றவுடன் கைது செய்யப்படுவேன் என்றும் தாங்கள் இந்த கடிதத்திற்குப் பதில் எழுத விழுந்தால் இந்த முகவரிக்கு அனுப்பவும் என்று தென்னாப்பிரிக்காவின் முகவரியினை குறிப்பிட்டு எழுதியுள்ளார்.
மேலும் பல்வேறு செய்திகளையும் தனது பதிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
02 அக்டோபர் 2021.
No comments:
Post a Comment