Friday 20 August 2021

கருந்துளை என்னும் பெருந்துளை

கருந்துளை என்னும் பெருந்துளை  

ஆசிரியர் : ஜெயராஜ் முத்துவேல் 



கருந்துளையினை பற்றிய அறிவியல் சார்ந்த கூற்றுகளை விளக்கும் இந்த புத்தகம் இருவருக்கும் இருக்கும் இடையே நடக்கும் கேள்வி பதில்கள் போன்ற அழகாக நடைபெறுகிறது.

இந்த நூலின் ஆசிரியர் ஜெயராஜ் முத்துவேல், அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் நாகமங்கலம் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இயல்பிலே ஒரு ஆசிரியர் என்பதால் இந்த புத்தகத்தில் "கருந்துளையினை பற்றிய விவரங்களை" மிகத் தெளிவாகவும் ஒரு மாணவனுக்கு எப்படிச் சொன்னால் புரிந்துகொள்ள முடியுமோ அதுபோல மிக எளிமையாக நான்கு கட்டுரைகளாகச் சொல்லியிருக்கிறார்.     

சூரியன், கோள்கள் என்று இல்லாமல் எந்த இரண்டு பொருள்களுக்கும் இடையில் ஒரு ஈர்ப்பு இருக்கும்னு நியூட்டன் ஒரு விதியினை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அதுபோல விடுபட்டு திசைவேகத்தின் சூத்திரத்தில் அதிகமா போய்க்கொண்டே இருந்தால் அப்போது ஏற்படும் அடர்த்தியின் காரணமாக அந்த பொருள் தன்மீது விழும் எந்த பொருளையும் தப்பிக்க விடாது அப்படி ஏற்படும் ஒரு நிகழ்வு தான் இந்த கருந்துளை.   

இந்தியாவிலிருந்து சுப்பிரமணியன் சந்திர சேகர்  அவர்கள் கருந்துளை ஆய்வில் கொஞ்சம் பங்காற்றியிருக்கிறார். இவர்  நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர்  சர். சி.வி. அவர்களின் நெருங்கிய உறவினரானவார்.  இவர் சூரியனின் நிறையப்போல் 1.4 மடங்கு வரைக்கும் உள்ள வெள்ளைக்குள்ள விண்மீன் நிலைத்து இருக்கும். இந்த 1.4 மடங்கிற்கு மேல் போனால் அது சிதைந்து சுருங்கி கருந்துளையாக மாறிப்போகும் என்கிறார்.    பலூனுக்கும் காற்றுக்கும் இடையே இருக்கும் அறிவியலின் உண்மையினை கொண்டு வெப்ப அணுக்களுக்கும் மற்றும் ஈர்ப்பு விசைக்கும் இருக்கும் ஒரு விசை தான் விண்மீன்களுக்குக் காரணம் என்றும் இந்த நிகழ்வில் உள்ளே இருக்கும் எரிபொருள் தீரும் போது அதன் வெளி வட்டம் விலகிப் போய்விடும் அந்த நிகழ்வில் தோன்றுவதுதான் கருந்துளை ஆகும். இந்த எல்லைக்கு "சந்திரசேகர் லிமிட்" என்று பெயர்.   

             


      

No comments:

Post a Comment