அஜிம் ப்ரேம்ஜி
விப்ரோ வரலாறு
ஆசிரியர் என். சொக்கன்
கிண்டில் பதிப்பு
பக்கங்கள் 80
விலை ரூபாய் 49
என். சொக்கன் அவர்கள் எழுதும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்களின் வரலாற்றுக் கதைகள் வாசிப்பதற்கு மிகவும் எளிமையாகவும் அதிகளவு விவரங்களும் சேர்ந்த ஒரு அருமையான தொகுப்பாக இருக்கிறது.
இந்த புத்தகம் "விப்ரோ நிறுவனர் அஜீம் ப்ரேம்ஜி" அவர்களைப் பற்றிய அருமையான தொகுப்பு. அஜிம் ப்ரேம்ஜி, குழந்தைப் பருவத்திலிருந்து அவரின் ஒவ்வொரு முன்னேற்றமாக மிகத் தெளிவாகத் தொகுத்திருக்கிறார்.
1945 இல் மும்பையிலிருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ‘அமல்னெர்’ என்ற கிராமத்தில் தனக்கென ஒரு தாவர எண்ணெய் மற்றும் வனஸ்பதி தயாரிக்கும் தொழிற்சாலையினை அஜிம் ப்ரேம்ஜியின் தந்தையான "முஹம்மத் ஹுஸைன் ஹஷம்" ஆரம்பித்தார். முதலில் சிறிய தொழிற்சாலையாகத்தான் தொடங்கப்பட்டது. நன்றாக நடந்து கொண்டிருந்த இந்த தொழிற்சாலையில் இவர்களின் முன்னேற்றம் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துகொண்டே இருந்தது.
இவர்களின் குடும்பம் அரிசி மொத்த விற்பனையினை தொடர்ந்து செய்துவந்தனர். இவர்களின் குடும்பம் முழுவதும் உழைப்பை மட்டுமே நம்பி வளர்த்தவர்கள்.இந்த வரிசையில் "அஜிம் ப்ரேம்ஜி" யும் விதி விலக்கல்ல என்று நிரூபித்திருக்கிறார் அஜிம் ப்ரேம்ஜியும்.
எதிர்பாராத சம்பவத்தால் அதாவது அப்பா மறைந்து போனதும் அவர்களின் தொழிற்சாலையினை அஜிம் ப்ரேம்ஜி ஏற்று நடத்தவேண்டிய சூழல். தவிர்க்க முடியாமல் பொறுப்பினை ஏற்றுத் தனது தொழில் வாழ்க்கையினை ‘அமல்னெர்’ என்ற அந்த கிராமத்தில் ஆரம்பித்தார்.
ஒரு சிறிய தாவர எண்ணெய் நிறுவனத்தின், அதாவது "வெஸ்டர்ன் இந்தியா வெஜிடபிள் புராடக்ட்ஸ் லிமிடெட்" விப்ரோ என்ற பெயர் வைத்தனர். இந்த நிறுவனத்திலிருந்து இன்று உலகளவில் விப்ரோ நிறுவனத்தின் சேவை பரவியிருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நாடு இரண்டாகப் பிரிந்த போது "முஹம்மத் ஹுஸைன் ஹஷம்" அவர்களைப் பாகிஸ்தான் வருமாறு அழைப்பு விடுத்தும் எனது நாடு இந்திய நான் இங்குதான் பிறந்தேன் இங்கே தொடர்ந்து வாழவிரும்புகிறேன் என்று பதில் சொல்லிவிட்டு இங்கே தனது மீதம் வாழ்வினை வாழ்ந்து சென்றார்.
அஜிம் ப்ரேம்ஜி, எளிமையான வாழ்வினை அதிகம் விரும்புகிறவர். நிறுவனத்தில் கூட அனாவசிய செலவுகளை தவிர்த்துத்தான் மற்ற செலவினங்கள் நடைபெறும். இதுவே இவர்களின் வியாபாரத்தின் வெற்றிக்கு வித்தான வழியாக இருந்திருக்கிறது.
அம்மாவின் செல்லப் பிள்ளையான அஜிம் ப்ரேம்ஜி எப்போதும் அம்மாவின் அறிவுரைகளை ஏற்க மறுத்ததே கிடையாது. தனது தந்தை இறந்த பிறகு வெளிநாட்டுப் படிப்பினை விட்டுவிட்டு தங்கள் தொழிலினை ஏற்று நடத்தச் சொன்னதும் இந்த தொழிலுக்குப் புதிதாய் பொறுப்பேற்றிருக்கும் தன் மகன் அஜிம்ஜிக்கு, தங்கள் தொழில் சார்ந்த சில அடிப்படை விஷயங்களைச் சொல்லிக்கொடுத்துப் பொறுப்பினையும் கையில் கொடுத்துத் தொடங்கிவைத்துக் கூடவே ஒரு விஷயத்தில் உனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால் அதைப்பற்றி மற்றவர்கள் என்ன விமர்சனம் சொல்வார்களோ என்று யோசிக்காதே. எப்போதும் உன் இலக்கினை நோக்கிப் பயன்படு என்று அறிவுரையும் சொல்லிக் கொடுத்தார் அம்மா.
இந்த புதிய ஆரம்பத்திலிருந்து அந்த நிறுவனத்தினை ஒரு பெரிய வெற்றியின் சிகரத்திற்குக் கொண்டு சென்ற அஜிம் ப்ரேம்ஜிக்கு எத்தனை விதமான இடையூறுகள். முதலில் அவரின் நிறுவனத்தில் பணி புரிந்துவந்த மூத்த நிர்வாகிகளிடம் இருந்தும் மேலும் பங்குதாரர்களிடமிருந்தும் வந்த எதிர்மறையான விமர்சனம் எனத் தொடங்கி அந்த விமர்சனத்தினை எதிர்கொண்டு வெற்றி நடை போடவேண்டும் என்ற ஒரு விதையினை அவரின் மனதில் விதைக்க ஆரம்பித்த காலம் தான் அவரின் முதல் பங்குதாரர்களின் கூட்டம் தான் என்றே சொல்லவேண்டும்.
அன்புடன்
தேவேந்திரன் ராமையன்
23 ஆகஸ்ட் 2021
No comments:
Post a Comment