அழிவை நோக்கி பூமி
ஆசிரியர் : அ. கந்தசாமி
கிண்டில் பதிப்பு
விலை
பக்கங்கள்
இந்த புத்தகம் இன்றைய உலகம் வெப்ப மயமாவதை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கருத்துக்களையும், ஆராய்ச்சிகளையும் அவற்றின் வழியே கிடைத்த அதிர்ச்சி கொடுக்கும் தகவல்களைக் கொண்ட ஒரு அருமையான புத்தகம்.
நாம் ஒவ்வொருவரும் நமது அடுத்து வரும் சங்கத்திற்கு என்ன கொடுத்துச் செல்கிறோம், அவற்றில் எதாவது நல்லதை விட்டுச் செல்கிறோமா என்ற கேள்விகளை எழுதச்செய்யும்.
இந்த புத்தகத்தின் ஆசிரியர் அ. கந்தசாமி அவர்கள் சமீபத்தில் உயிர் பிரிந்தார் என்றும் அவரின் விருப்பப்படி இந்த தகவல்களைப் பெரும்பான்மையை மக்களுக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற அவரின் விருப்பப்படி மின்னூலாக வெளியிட்டுள்ளார்கள்.
நாம் வாழும் இந்த நாட்களின் மிகப் பெரிய சவாலான ஒரு விஷயம் நாம் தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்படுத்தும் எண்ணற்ற தீமைகள் தான் இன்றிய இயற்கையின் வளத்திற்கு மிகவும் பங்கம் விளைவிக்கிறது. மனிதன் தனது பகுத்தறிவின் மூலம் இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி தனக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக்கொள்கிறான் ஆனால் அந்த இயற்கை நாளுக்கு நாள் ஒடுங்கிக் கொண்டே செல்கிறது என்றால் அவற்றில் தவறேதுமில்லை.
இந்த புத்தகம், இன்றைய சூழலில் நாம் எவ்வாறு ஓசோன் மண்டலத்தைப் பழுதடையச் செய்கிறோம் என்றும், கரியமில வாயுவினை வெளிப்படுத்தி பூமி வெப்ப மயமாவதற்கு ஒரு பெரிய தூண்டுதலாக இருக்கிறோம்.
பூமி வெப்பமாவதின் விளைவாக, பனிப் பிரதேசம் உருகி கடல் நீர்மட்டம் உயருவதற்கு பெரும் வாய்ப்பிருக்கு என்றும் அதன் காரணமாகக் கடலோர நகரங்கள் நீரில் மூழ்கும் நிலைக்குக் கூட தள்ளப் படலம் என்றும் சொல்கிறது ஆய்வுகள் என்கிறார்.
பசுமைக் குடில் என்று கூறப்படும் இந்த பசுமை வளி மண்டலம் பாதிக்காமல் பார்த்துக்கொள்வது நமது கடமையான ஒன்று என்று சொல்கிறார். நீலகிரி போன்ற குளிர் பிரதேசத்தில் வளரும் சில தாவரங்களுக்கு அதிக குளிரும் ஆதிக்க வெப்பமும் ஒத்துக்கொள்ளாது அதற்காக அவற்றின் மீது ஒரு கண்ணாடி குடில் கட்டி அதன் வழியாக இரண்டு பருவத்தினையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறோம் அதைப் போலவேதான் இந்த பூமியின் தட்பவெட்பநிலையின சீராகவைத்துக் கொள்ள இது போன்ற ஒரு படலம் தான் இந்த பசுமைக் குடில் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மண்டலத்தினை பாதுகாப்பாக வைத்திருந்தால் நம் பூமியினை வெப்பமாகாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்.
உலக சுகாதார அமைப்பு உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து பூமி வெப்பமடைவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி ஒரு மாநாடு இந்தோனேசியாவில் நடத்தப்பட்டது. ஆனால் இந்த மாநாட்டில் சில வளர்ந்த நாடுகள் நிபந்தனையினை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
சீனா, இன்று உலகளவில் பெரிய தொழில் வளர்ச்சியினை அடைந்துள்ளது ஆனால் அவற்றின் விலையாகச் சுற்றுச் சூழல் மாசினை அதிகரித்து விட்டது என்றே சொல்லவேண்டும், கட்டுப்படுத்தமுடியாத அளவிற்குச் சுற்றுச் சூழல் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கியோட்டோ ஒப்பந்தம் 1997. இந்த ஒப்பந்தம் 36 வளர்ச்சியடைந்த நாடுகள் 1990 ஆம் ஆண்டு வெளியிட்ட கரியமில வாயுவின் அளவின் சராசரி 5.2 சதவீதத்தைக் குறைக்க வேண்டி வகைசெய்யும் ஒப்பந்தம் கையெழுத்தானது ஆனால் இதில் அமெரிக்கா கையெழுத்திட மறுத்துவிட்டது.
ஐரோப்பா ஒன்றியத்தின் சார்பாக நடத்தப்பட்ட பாலி மாநாட்டில் பல்வேறு ஆலோசனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்காவுடன் அணுசக்திக்காக ஒரு உடன்பாட்டிற்குக் கையெழுத்திட்டது அதன் வழியாக 15% அணுசக்தி உற்பத்தியில் வெளிநாட்டினர் முதலீடு செய்யலாம் என்று வழி செய்தது ஆனால் இதற்கு இந்தியா கொடுத்த விலை இந்தியாவின் இறையாண்மையினை அமெரிக்காவிடம் இழக்க நேரிடும் என்கிறார்.
சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டம், இதன் மூலம் பூமி, காற்று மற்றும் கடல் என எதுவும் பாதிக்காமல் நல்லதொரு இயற்கை வாழ்வியல் கிடைக்கும் என்கிறார்.
இந்தியாவிற்கு உலக சுகாதார நிறுவனம் பின் வரும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. பூமி வெப்பமாவதால் இந்தியாவில் தோற்று நோய்கள் அதிகரிக்கும், காற்று மற்றும் தண்ணீரால் நோய்கள் பரவும் போன்ற பல்வேறு நோய்கள் வரும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான ஆலோசனைக் குழு அமைத்து அதன் வழியாகச் சுற்றுச்சூழல் பற்றிய தேசிய திட்டத்தை வரையறை செய்து, செயலாக்கத் திட்டங்கள் நடைமுறைப்படுத்த ஆலோசனைகள் வழங்கும்.
அரசாங்கம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனும் தானாக முன்வந்து உலக வெப்பமாவதைத் தடுக்க தன்னால் முடிந்த வரை உதவி செய்ய முன்வரவேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு நவீன பழக்கத்திலும் எவ்வாறு எரிசக்தியினை சேமிக்க முடியுமோ அவ்வாறெல்லாம் கொஞ்சம் சிந்தித்தால் உலகுக்கு நாமும் உதவிசெய்ய முடியும்.
No comments:
Post a Comment