Saturday 28 August 2021

கிளியோபாட்ரா - வரலாறு

கிளியோபாட்ரா - வரலாறு  

ஆசிரியர் : முகில் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 150

பக்கங்கள் 


இந்த புத்தகம் எகிப்தின் பேரழகி என வர்ணிக்கப்படும் கிளியோபாட்ராவின் வரலாற்றினை பற்றிப் பேசுகிறது ஆனால் இந்த புத்தகத்தில் ரோம் பேரரசின் பெரும் பகுதியும் கிளியோபாட்ராவின் முன்னோர்கள் எனப் பல தலைமுறையின் வரலாற்றினை சிறப்பாகச் சொல்கிறது.

ஆசிரியர் முகிலினுடைய புத்தகங்களில், நான் வாசிக்கும் இரண்டாவது புத்தகம் இந்த கிளியோபாட்ரா.    

கிளியோபாட்ராவின் அழகு முதல், அவள் இருப்பு, மரணம் வரை, ஒவ்வோர் அத்தியாயமும் ஆச்சரியங்களாலும் சர்ச்சைகளாலும் சூழப்பட்டுள்ளது. விவாதங்களின்றி வரலாறு ஏற்றுக்கொண்ட ஒரே விஷயம், ரோம் பேரரசின் பிடியில் எகிப்து இரையாகாமல் தப்பியதற்கு ஒரே காரணம், கிளியோபாட்ரா. பின் இரையானதற்குக் காரணமும் அவளே.

கிளியோபாட்ராவிற்கு முன் என்று அவளின் முன்பான பல தலைமுறைகள் விவரம் காலவரிசையின் அடிப்படையில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. இவளின் தந்தை தால்மி மற்றும் அவரின் அரசியல் போக்கு அதற்காக அவர் ரோமில் தஞ்சமடைந்தது பிறகு தனக்கு எகிப்தின் ஆட்சி அதிகாரம் வேண்டித் திரும்பி வந்தது அதற்குத் துணையாக ரோமின் ஜூலியஸ் சீசரின் உதவியுடன் வந்தது என வ வரலாற்றில் நடந்த பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு.

அலெக்ஸாண்டரிய வந்த சீசர் முதலில் தால்மிக்குத்தான் உதவ வந்தான் ஆனால் பல்வேறு இடையூறுகளுக்குப் பிறகு கிளியோபாட்ரா அவனைச் சென்று சந்தித்த தருணத்தில் தனது 52 வயதிலும் அந்த பேரழகியின் மீது கொண்ட கிரக்கத்தால் அவளுக்கு உதவ அவன் அலெக்சாண்டிரியாவிலே தூங்கிவிட்டான்.

இதற்கு இடையே ஏற்பட்ட போர்கள் அவற்றில் வெற்றி பெற்று கிளியோபாட்ராவிற்கே எகிப்தின் ஆட்சி அரியணை கொடுத்துவிட்டு ரோமிற்குத் திரும்பச் செல்கிறான் இதற்கு இடையில் இவர்களுக்கு ஒரு ஆண் வாரிசு பிறக்கிறது அதற்கு சிசரியன் என்று பெயர் சூடுகிறாள். அவனை சீசரின் வாரிசாக அறிவிக்க வேண்டி பல்வேறு உத்திகளை கிளியோபாட்ரா செய்கிறாள் ஆனால் இறுதியில் நடக்காமல் போகிறது.

ஒரு கட்டத்தில் சீசர் கிளியோபாட்ராவை ரோமிற்கு அழைக்கிறான் அவளும் அங்கே அரச முறை பயணமாக வரவேண்டும் என்ற உடன்பாட்டின் பெயரில் செல்கிறாள். ஆனால் இந்த பயணம் அவளுக்கு ஏமாற்றத்தினை கொடுக்கிறது ஆம் அந்த பயணத்தின் போது செனட்டில் சீசர்ப்ரூட்டஸ் மற்றும் உறுப்பினர்களால்  கொலை செய்யப்படுகிறான். இந்த செய்தியினை அறிந்த கிளியோபாட்ரா திரும்பவும் எகிப்து விரைகிறாள்.

பிறகு எகிப்து பாதுகாப்பிற்காக சீசரின் நண்பர் ஆண்டனி போர் புரிந்து வெற்றியினை தேடிக் கொடுக்கிறான். இவர்களுக்கு ஆரம்பத்தில் மசியாத காதல் பிறகு இருவருக்கும் இவர்களின் அரவணைப்பும் உதவியும் தேவை இருந்தது இதுவே காதலாக மலர்ந்தது.

சீசரின் அரசியல் வாரிசான ஆக்டேவியஸிடம்  இருந்த வந்த பல்வேறு நெருக்கடிகள் இவர்களை இடையூறு செய்தன. ஆக்டேவியஸ் முன்னேறி முன்னேறி வர வர இவர்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம் இறுதியில் இவள் தனது மரணம் எப்படி நடக்கவேண்டும் என்று பல்வேறு விச பரிச்சைகளைச் செய்து பார்த்தாள். ஆனால் ஆண்டனி தற்கொலை செய்துகொள்ள முற்பட்டு அதனைச் செய்தும் இறுதியில் கிளியோபாட்ராவின் மடியில் மரணித்தார் என்கிறது வரலாறு. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இவளும் அங்கேயே மரணித்தாள்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

28 ஆகஸ்ட் 2021   

No comments:

Post a Comment