Tuesday 24 August 2021

+1 ஒவ்வொரு படியாக முன்னேறலாம் - வாசிப்பனுபவம்

+1  ஒவ்வொரு படியாக முன்னேறலாம் 

ஆசிரியர் : என். சொக்கன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள்  79


வாழ்க்கையில் சுயமாக முன்னேற விரும்பு ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய  புத்தகம் இது. நம் முன்னேற்றத்திற்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறது என்பதினை மிக எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்கிறது இந்த புத்தகம்.

"+1 ஒவ்வொரு படியாக முன்னேறலாம் - வெற்றிக் கதவுகளைத் திறக்கலாம்" - இந்த புத்தகம் முன்னேற்றத்திற்கான வழிகளைச் சொல்கிறது. மொத்தம் 10 கட்டுரைகளாகப் பிரித்து எளிமையான நடையில் விவரித்துள்ளார்.

நாம் ஒவ்வொருவரும் ஒரு இலக்கினை அடையவேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுப்போம் அது ஒவ்வொரு வருடமும் முதல் நாள் நாம் எடுக்கிற அதே இலக்கு தான் ஆனால் பெரும்பாலும் அந்த இலக்கு நிலையாகவே இருக்கும் நாம் அதை அடையாமல் இருப்போம் அதற்கு நம் மனதில் தோன்றும் எல்லாவற்றையும் தடையாக நினைத்துக் கொள்வோம் ஆனால் நம் பக்கம் இருக்கும் தோல்வியினை ஒத்துக்கொள்ள நம் மனம் ஏனோ மறுக்கிறது. இதுதான் நமது முன்னேற்றத்தின் முதல் தடை என்கிறார் ஆசிரியர். எப்போதும் நமது இலக்கினை அடைய ஒரு எடுக்க வேண்டிய செயல்களைத் திட்டம் தீட்டி நடக்க வேண்டும்.

"டாஸ்க் பட்டியல் அல்லது டு டூ பட்டியல்"  - சிலர் நாம் என்னென்ன செய்யவேண்டும் என்பதை எழுதிவைத்து அதன் ஒவ்வொரு செயலையும் அதற்கு ஏற்ற முன்னுரிமையுடன் செயல்படவேண்டும்.

நாம் நமது இலக்குகளை அடைவதற்குத் தெளிவான சிந்தனையுடன் முயலவேண்டும். அதற்கான எல்லா வகையில் கிடைக்கும் தகவல்களைத் திறம்படத் தேர்ந்தெடுத்துத் தெரிந்துகொள்ளவேண்டும். எவ்வாறு தெரிந்து கொள்வதென்று தயக்கம் இல்லாமல் எந்த வழியில் நாம் அந்த தகவலினை திரட்டலாம் என்ற எண்ணத்தினை மனதில் ஓட்டி பார்க்கவேண்டும்.

நாம் எடுக்க வேண்டிய முடிவினை சரியாகவும், தரமாகவும் எடுக்க வேண்டும். அந்த முடிவில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நம்முடைய முடிவாகவே இருக்கவேண்டும். எப்போதும் நம்மால் ஒரு சுயமான முடிவினை எடுக்க முடியவில்லை என்றால் நாம் மற்றொருவரின் முடிவில் தான் பயணிக்க வேண்டியிருக்கும் அதனால் முடிவெடுப்பது பற்றி நன்கு ஆலோசிக்க வேண்டும்.

நாம் வெளிப்படுத்தும் பேச்சுக்கள் ரத்தின சுருக்கமாக இருக்கவேண்டும் அதே நேரத்தில் சொல்லவேண்டிய கருத்தினை விடாமல் சொல்லிவிடவேண்டும். கேட்பவர்களைக் குழப்பவும் கூடாது அதே நேரத்தில் சொல்கிற நாமும் குழம்பிவிடக்கூடாது.

நம்மிடம் எப்போதும் இந்த ஏழு கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கவேண்டும் அதாவது 1. என்ன? 2. ஏன்? 3. எப்போது? 4. எப்படி? 5.எங்கே?  6. யார்? & 7.எவ்வளவு. இந்த கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைத்துவிட்டால் நாம் அடைய வேண்டிய இலக்கினை பாதி அடைந்துவிட்டோம் என்றே சொல்லாம்.

நாம் வீணடிக்கும் நேரத்தினை அதற்குச் சமமாக உள்ள பணமதிப்பும் மற்றும் அந்த நேரத்திற்கான மதிப்பினையும் சரியாக மதிப்பிடவேண்டும் அதன் படி நேரத்தினை விரயமாக்காமல் செயல்பட்டால் நம் எண்ணங்கள் போலவே நாம் முண்டேற்றமடைவது நிச்சயம்.

நாம் செய்யும் எந்த செயலாக இருந்தாலும் அவற்றைச் சரியாகச் செய்கிறோமா இல்லையா என்ற கண்காணிப்பு அவசியம். அதற்காக நமக்கு நாமே கண்காணித்துக் கொண்டு செயல்பட்டால் சிறப்பாக முன்னேற வழிகிடைக்கும். நாம் எங்கே பின்தங்கியுள்ளோம் அல்லது எவ்வாறு மாற்றிப் பயணிக்கலாம் என பல்வேறு வழிகள் நாம் கண்காணிக்கும் போது கிடைக்கும்.

நாம் வாழும் காலத்தில் இருக்கும் அணைத்து வகையான தொழில்நுட்பங்கள் மற்றும் தகவல்கள் என எல்லாவற்றிலும் நம்மை தயார்ப்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும்.


அன்புடன் 

தேவேந்திரன் ராமையன் 

24 ஆகஸ்ட் 2021

No comments:

Post a Comment