நாட்டார் கதைகள்
ஆசிரியர் : அ. கா. பெருமாள்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 49
இந்த தொகுப்பில் 15 நாட்டுப்புறக் கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு சமூகத்தின் பண்பாட்டினையும், மூதாதையர்களையும், வணங்கும் தெய்வத்தையும் பற்றிய பழைய கால கதைகள்.
இந்த புத்தகம் என் வாழ்க்கையின் சுமார் 35 வருடங்களுக்கு முன்னாள் என்னை கொண்டுசென்றுவிட்டது என்றே சொல்லவேண்டும். எனது சிறுவயது காலத்தில் தினந்தோறும் இரவு வேளைகளில் பக்கத்துக்கு வீட்டுத் தாத்தாவின் கதைகளைக் கேட்காத நாட்கள் இல்லையென்றே சொல்லலாம் அதுவும் தொல்லை தரும் தொலைக்காட்சி இல்லாத காலம் அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களே உறவு என்று வாழ்ந்த வசந்தகாலம்.
தாத்தா சொல்லும் ஒவ்வொரு கதையும் பல்வேறு பழைய காலத்துக் கதைகளைக் கொண்டிருக்கும். எங்கள் கிராமத்தின் விவசாய நிலத்தின் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் முனீஸ்வரன் கோவில் பற்றிய கதைகள் அவர் விவரிக்கும் அந்த கதை பக்குவத்தினை நான் இந்த புத்தகத்தில் இருந்து மீட்டெடுத்தேன் என்றே சொல்லவேண்டும்.
ஆசிரியர் அ. கா. பெருமாள், தமிழகத்தின் முதன்மையான நாட்டார் வழக்கியல் ஆய்வாளர், வரலாற்றுப் பேரறிஞர் மற்றும் இலக்கிய ஆய்வறிஞர் என்ற பெருமைகளுக்குச் சொந்தமானவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஒவ்வொரு மூலையிலும் சிதரி கிடைக்கும் நாட்டுப்புற வழக்காறுகளை மீதுள்ள ஆர்வத்தின் மூலம் அவற்றைச் சேகரித்து ஆராய்ந்து அதனை நூலக வெளியிட்டுள்ளார்.
அப்படியாக இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும், மிகவும் சிறப்பான கதைகள் தான். பெரும்பாலான கதைகளில் அரசருக்கோ அல்லது ஒரு தம்பதிக்கோ குழந்தை பேறு இல்லாமல் இருக்கிறது அதற்காக அவர்கள் வேண்டுதல்கள் செய்கிறார்கள். இறைவன் இவர்கள் மீது அனுதாபம் கொண்டு குழந்தை வரம் கொடுக்கிறார் ஆனால் உங்களுக்குக் குழந்தை பேறு இந்த ஜென்மத்தில் இல்லை ஆனாலும் தருகிறான் ஆனால் அந்த குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதில் மரணித்து விடும் என்ற நிபந்தனையுடன் தான் கதைகள் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் அந்த குழைந்துக்கு ஏற்படும் இறப்பினை மையமாகக் கொண்டு அவர்களைத் தெய்வமாக வழிபட ஆரம்பிக்கின்றனர்.
அனந்தாயி கதையில் குழந்தை பேறு இல்லாமல் வேண்டுதலின் பேரில் ஒரு பெண் பிறக்கிறாள் அவளுக்கு "கிருஷ்ணதம்மை" எனப் பெயரிடுகிறார்கள் ஆனால் இந்த குழந்தைக்குச் சர்ப்ப தோஷம் இருக்கிறது என்கிறார்கள் அதற்காகக் கூடவே ஒரு கீரிப்பிள்ளை வளர்க்கிறார்கள். கீரிப்பிள்ளை அந்த குழந்தையினை பாதுகாத்துவருகிறது, ஒருநாள் பாம்பு குழந்தையினை கடிக்க வருகிறது கீரி பாம்பினை கொன்றுவிட்டு குழந்தையினை பாதுகாத்துவிடுகிறது பிறகு, அப்போது அனந்தாயி வீட்டின் பின்பக்கம் உள்ள காட்டுக்குக் கீரை பறிக்கச் சென்றாள், வாயில் ரத்தத்துடன் அவளைப் பார்க்கச் சென்ற கீரியினை பார்த்த அனந்தாயி மகளைக் கொன்றுவிட்டது என்று எண்ணி கீரியினை கொன்றுவிடுகிறாள். பிறகுதான் தெரியாமல் தான் பாவம் செத்துவிட்டேன் என்று அதற்குத் தண்டனையாக யாத்திரை செல்லவேண்டும் என்றால் ஆனால் அதற்குக் கணவன் அரிகிருஷ்ணன் தானே போய்வருகிறேன் என்று யாத்திரை போகிறான் அங்கே அவனைக் கருநாகம் கொன்றுவிடுகிறது. பிறகு அவளின் உறவினர் செய்த வஞ்சகத்தால் அவள் எல்லாவற்றையும் இழந்து ஒன்றும் இல்லாமல் வேறு ஊருக்குப் பிழைப்பிற்காகச் சென்றாள். போகும் வழியில், தனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கிய மணியக்காரனின் மகள் திருமணம் நடக்கிறது மனதில் ஏற்பட்ட கவலையின் காரணமாக வேதனையறிந்த கடவுளிடம் எங்களை எடுத்துக்கொள் என்று வேண்டுகிறாள் மழை பொழிகிறது சுனை நீர் பெருக்கெடுத்து வெள்ளமாக அந்த ஊரை நோக்கிச் சென்று மணியக்காரன் வீட்டில் புகுந்து அவனின் மகள் மற்றும் மருமகனை இழுத்துச் சென்றது அப்போது அனந்தாயி சடலமாக வந்ததாதல் அங்கு அவளுக்கு "வெள்ளமாரி அம்மன்" என்று வைத்து தெய்வமாக வழிபடுகின்றனர்.
ஆத்திரமுடையார் என்ற கதையில் வரும் தலைவரின் பெயர் தான் இது. நீண்ட நாட்களுக்கு பிறகு திருமணமானவர் ஒரு நாள் அவர் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும்போது தன்னை கவனிக்காமல் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள் என்பதற்காகக் கொன்றுவிடுகிறான். மனைவியைக் கொன்ற பாவத்திற்காக எல்லாத்தையும் விட்டுவிட்டு வேறொரு ஊருக்குச் சென்றான். பிறகு அந்த ஊரில் ஒரு பண்டாரம் வீட்டில் தண்ணீர் குடிக்கச் சென்றான் அப்போது பண்டாரத்தின் மகளைப் பார்த்து அவளுக்கு ஒரு மாப்பிள்ளை இருக்கிறது என்று சொல்லிவிட்டு மறுநாள் அவனே மாப்பிள்ளையாக வந்தது கோபப்பட்ட கிழவி ஏசுகிறாள். கல்யாணமும் முடிகிறது அந்த நேரத்தில் அந்த ஊருக்குத் திருடர்கள் வருகின்றனர் அவர்களை எல்லாரையும் வென்று ஊரையும் மக்களையும் காப்பாற்றியதற்காக அந்த ஊரே அவரை கொண்டாட ஆரம்பித்தது. நீண்ட நாள் வாழ்ந்து மறைத்த அவரை தெய்வமாக வழிப்பட்டனர்.
உச்சினி கோவிலின் பூசாரியாக இருந்தவருக்கு ஏழு பெண் குழந்தைகள் அவர்கள் திருமண வயது தாண்டியும் கல்யாணமா செய்யப் பொருளாதாரம் இல்லை இறைவனிடம் வேண்டினான், இறைவன் கனவில் வந்து தங்கம் இருக்கிற இடத்தை சொல்லி எடுத்துக்கொள் என்கிறார். அந்த தங்கத்தை விற்கச் சென்ற போது வெள்ளையர்களின் சோதனையில் அவரை சந்தேகப்பட்டு அவரை கோவிலுக்கே அழைத்துச் சென்றனர். காளி அவர்களை விரட்டி அடித்தது. பிறகு பூசாரி காளி கோவிலினை புதுப்பித்து பூசை செய்தார் கூடவே பெண்களுக்குத் திருமணமும் செய்துவைத்தார்.
கட்டிலாவதானம் கதையில், காட்டிலிருந்த ஒரு மரத்தில் மலையிசைக்கியம்மை வாசம் இருந்தாள். அந்த மரத்தினை வெட்டி கட்டில் செய்தனர். கோவைக்கொண்ட அவள் அந்த கட்டிலில் உறங்குபவர்களை எல்லாம் கொன்று தீர்த்துவிட்டாள். விவரம் தெரிந்தவுடன் எல்லோரும் சேர்ந்து கட்டிலைச் சுடுகாட்டில் வைத்து எரித்தனர் ஆனால் அதில் ஒரு கால் மட்டும் தெறித்து வந்த வெளியில் மாட்டிக்கொண்டது, மறுநாள் அந்த வழியே வந்தால் நாடாத்தி அந்த கட்டையினை விறகு என்று எடுத்து வந்து வீட்டில் அடுப்பெரித்தாள் அவளையும் கொன்றது. இறுதியில் இசக்கியம்மாளுக்குக் கோயில் கட்டி வழிபட்டனர்.
சிதம்பர நாடார் கதையில் வரும், நாடாச்சிக்கு குழந்தைப் பேறு இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. எல்லா தலங்களுக்குச் சென்று பலன் இல்லாமல் திரும்பி வரும் வழியில் ஒரு குறத்தியினை பார்க்கிறாள் அவள் குறி சொல்கிறாள், உன் குலதெய்வம் கோவில் சிதிலமடைந்து இருக்கிறது அதனைச் சீர் செய்தால் பேறு உண்டு என்றாள். அப்படியே ஒரு ஆண் குழந்தை பெறுவாய் அவனுக்குச் சிதம்பரம் என்று பெயர் வை, ஆனால் அவன் 28 வயதில் ரூ பிராமண பெண்ணால் இறப்பான் என்றும் சொன்னாள். அதுபோலவே குறிப்பிட்ட காலத்தில் அந்த பிராமண பெண் பாம்புக்கடித்து இறந்துவிடுகிறாள், மயானத்தில் எரிகிற வேளையில் அங்கே வரும் சிதம்பரம் செய்தி கேட்டு அவளைப் பிழைக்க வைக்கிறான் அவள் அவன் கூடவே வருகிறாள். மனம் செய்துகொள்கின்றனர், கற்பகமாகிறாள் பிறகு பிறந்த வீட்டிற்குச் செல்கின்றாள் அங்கே பிராமண உறவினர்கள் சிதம்பர நாடாரைக் கொன்றுவிடுகின்றனர் செய்தியை அறிந்த மனைவியும் நாக்கினை பிடுங்கிக்கொண்டு இறந்துவிடுகிறாள். ஆவியாக பழிவாங்கினார்கள் பிறகு கோவில் எடுத்து வழிபட்டனர்.
தடிவீரசாமி கதை, இந்த கதையில் வரம்பெற்ற வந்த மகனுக்குக் கண்டம் இருக்கிறது. அதுபோலவே ஊர் பெரியவரின்மகளைக் காதல் திருமணம் செய்ததில் ஏற்பட்ட கொலை. கொலையுண்ட மந்திரமூர்த்தி ஆவியாக வந்து பழிவாங்கினான் பிறகு அவனுக்கு கோவில் எடுத்து வழிபட்டனர்.
தோட்டுக்காரி அம்மன், இந்த கதையில் தோட்டுக்காரி என்ற பெண்ணை சிறைபிடித்த காரணத்தினால் ஏற்பட்ட சண்டையில் இழந்தது ஒரு வம்சம். தோட்டுக்காரி தன்னைச் சார்ந்தவர்கள் உள்ளவரும் இறந்துவிட்டார்கள் என்று இறைவனை வேண்டி நெருப்புக்குழி வேண்டினாள் அதில் பாய்ந்து உயிர்நீத்தாள் அப்போது அங்கு வந்த குமரப்பனும் கூடவே விழுந்தாள். தோட்டுக்காரி தெய்வமானாள்.
இதுபோலவே இடம்பெற்ற அதிக கதைகளில் பெண்ணுக்காகவும், சாதிக்காகவும் அழிந்த வம்சங்கள் ஏராளம் அவ்வாறு ஏற்பட்ட கொலைகள் அழிவுகள் என இறுதியில் எல்லாருக்கும் ஒரு விதத்தில் தெய்வமாக இருந்து அருள்பாலிக்கின்றனர்.
முகத்துப்பட்டன் கதையில், ஒரு பிராமணன் சக்கிலியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியில் ஏற்பட்ட கொலை அதற்காக உடன்கட்டை ஏறின மனைவிகள் இன்று "சொரிமுத்து அய்யனார்" என அருள்பாலிக்கிறார்.
வன்னியடி மறவன் கதையிலும் மனைவிக்குக் குழந்தை இல்லாமல் வெளியேறுகிறாள் அவளுக்கு வேறொருவரிடம் வாழ்ந்து குழந்தைகள் பிறக்கிறது. அந்த குழந்தைகள் வளர்ந்து பிறகு திருமண வேண்டி வரும் நேரத்தில் சாதியின் பெயரில் இவர்கள் கள்ளர் வேலை செய்யவேண்டி நிர்ப்பந்தம் வருகிறது அப்போது அவர்களைக் கொலைசெய்யப்படுகிறார்கள். இவர்களுக்குக் கோயில் கட்டி வழிபட்டனர்.
வெங்கல ராசன் கதையிலும் இரண்டு பெண்களால் ஏற்பட்ட காரணத்தால் வம்சம் அழிந்து போகிறது அதற்குக் காரணமாக இருந்தவர்களை இவர்கள் பழிவாங்குகின்றனர். இதை அறிந்துகொண்ட மன்னர் கோவில் கட்டி வழிபட்டார்.
அன்புடன்.
தேவேந்திரன் ராமையன்
14 செப்டெம்பர் 2021
No comments:
Post a Comment