வா தமிழா ! பொருளாதாரம் பயில்வோம்
ஆசிரியர்: பா.ச. பாலசிங் சந்திரசேகர்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 52
இந்த புத்தகம் எளிமையான முறையில் பொருளாதாரத்தினை கற்றுத்தருகிறது. அடிப்படை பொருளாதாரம் பற்றியும், பொருளாதாரம் எவ்வாறு மக்களின் வாழ்நிலையினை சேர்த்து மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார்.
ஒவ்வொரு மனிதனும் தெரிந்துகொள்ள வேண்டியது ஏனெனில் நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கையுடன் ஒன்றற கலந்து தான் பொருளாதாரம். நாம் வாழத் தேவையான ஆதாரமே பொருள் தான் அதைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த புத்தகம் எளிமையாக இருக்கிறது.
ஆசிரியர், நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள் மற்றும் கேட்கும் கேள்விகள், அரசியல் களத்தில் பேசப்படும் வார்த்தைகள் என ஒவ்வொரு பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு மிக நேர்த்தியாக இந்த புத்தகம் விவரிக்கிறது.
அடிப்படையில் பொருளாதாரம் நான்கு வகையாகப் பிரிக்கலாம் அவைகள்
1. பாரம்பரியப் பொருளாதாரம்
பாரம்பரிய பொருளாதாரம் என்பது நாம் பண்டைய காலத்தில் வாழ்ந்த மற்றும் பழகிவந்த ஒரு பொருளாதார முறையே இந்த முறை. இங்கே பெரும்பாலும் தன்னிறைவு பொருளாதாரம் இருந்துவந்தது ஆனால் காலப்போக்கில் இந்த முறை மேன்மேலும் மாறிவருகிறது. இந்த முறையில் பெரும்பாலும் கூட்டு குடும்பாகவே வாழ்ந்து வந்தனர். இயற்கை விவசாயம், மீன்பிடிப்பது போன்ற வகையான வாழ்க்கையினை இவர்கள் பின்பற்றினார்கள். இதனால் இவர்கள் எப்போதும் தங்களுக்குத் தேவையான தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வார்கள். இன்றைய சூழ்நிலையில் இந்த வகையான பொருளாதாரம் முற்றிலும் வழக்கொழிந்து போய்விட்டது என்றே சொல்லலாலாம்.
2. கட்டளைப் பொருளாதாரம்
இந்த பொருளாதாரம், அரசாங்கம் எடுக்கும் முடிவை பொறுத்தே இருக்கும். வெவ்வேறு நேரங்களில் மாற்று அரசியல் பேசுபவர்கள் இந்த பொருளாதாரத்தினை பற்றிப் பேசுவார்கள். உதாரணத்திற்குச் சொல்லலாம் என்றால் நம் நாட்டில் பயன்பாட்டிலிருக்கும் ஐந்தாண்டு திட்டம். அரசாங்கம் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட எல்லா கொள்கைகளை உருவாக்கும் அதன்படி பல்வேறு புதிய முடிவுகள் எடுக்க நேரிடும். இந்த முறையில் அரசாங்கம் எடுக்கும் முடிவு தான் இறுதி. இந்த முடிவுகள் சில நேரத்தில் மக்களின் நிறை குறைகளைப் பார்ப்பது கிடையாது, தேவைக்கு போதுமான உற்பத்தி இருக்காது ஏனெனில் அரசாங்கம் முடிவெடுக்க வேண்டி இருப்பதால் இவற்றில் பெரும் தடைகள் இருக்கும் .
3. சந்தைப் பொருளாதாரம்
பொருளின் விலையினை சந்தையே நிர்ணயிக்கிறது. இந்த முறை பொருளாதாரம் பொருளின் உற்பத்தி மற்றும் அதற்கான தேவையினை பொறுத்துத் தான் விலை நிர்ணயமாகும் அதாவது உற்பத்தி கூடுதலாக இருந்து அதன் தேவை இல்லாமல் இருந்தால் விலை குறைவாகத்தான் இருக்கும் அதே வேளையில் உற்பத்தி குறைவாகவும் தேவை அதிகமாகவும் இருந்தால் விலை அதிகமாக இருக்கும். இந்த முறையில் விலை ஏறும்போது அதிக உற்பத்தியாளர்கள் உள்ளே வருவார்கள் உற்பத்தி அதிகரிக்கும் பொருளாதாரமும் மேம்படும் இறுதியில் இங்கே அரசாங்கமும், வலிமை மிகுந்த முதலாளிகளும் மட்டுமே பங்குபெறுவார்கள். சில பொருள்கள் விலை குறைவாகவும், தரமாகவும் வரும் அதே சமயத்தில் முதலாளிகளின் லாப நோக்கம் கூடவே பயணிக்கும். போகப் போக விலையேற்றம் ஏற்படும்.
4. கலப்புப் பொருளாதாரம்
இந்த பொருளாதார முறை மேற்சொன்ன மூன்று முறையிலும் இருக்கும் சில நல்ல காரணிகளை மட்டும் எடுத்து எல்லாம் கலந்த ஒரு பொருளாதார முறையினை பின்பற்றுவது. பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் இந்த முறைகளே பின்பற்றப்படுகின்றன. இங்கேயும் முதலிகள் காக்கப்படுவது உறுதியாக்கப்படும்.
மேலும் இந்த புத்தகம், நம் நாட்டின் முக்கிய தொழிலான விவசாய உற்பத்தியின் லாபங்களை எவ்வாறு வணிக நிறுவனங்கள் சுரண்டு செல்கிறது என்பதையும், விவசாயிகள் தங்கள் பொருளின் முழு பயனையும் பெற்றுக்கொள்வது வேறொருவரே.
தமிழ் மண்ணின் பணிகள் பெரும்பாலும் தமிழர்களுக்கே கொடுக்கப்படவேண்டும் என்றும் அதனால் எவ்வாறு நமது மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்பதைப் பற்றியும் அதில் குறிப்பாகத் தனியார் வேலைவாய்ப்பு, அரசாங்க வேலைவாய்ப்பு மற்றும் ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பு எனப் பிரித்து அந்தந்த வேலைவாய்ப்பில் கிடைக்கக்கூடிய குறைந்தபட்ச வாய்பினையாவது வழங்கினால் தான் நமது தன்னிறைவு பொருளாதாரம் மிகச் சிறப்பாக இயங்கும்.
மேலும் பொருளாதாரத்தில் எவ்வாறு மற்ற மொழிகள் ஆதிக்கத்தினால் சில இடையூறு வருகிறது என்கிறார். என் மொழி என் உரிமை என்று முழங்கினால் நமது மொழியின் சார்ந்த பொருளாதாரம் செல்வனே செயல்படும் என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார். அதாவது நம் மீது திணிக்கப்படும் ஒரு மொழியின் ஊடாக நமது வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது சில இடங்களில் சொல்லும் கருத்துக்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
எல்லோரும் வாசித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய மிகவும் அடிப்படையான பொருளாதாரம் பற்றிய மிக எளிமையான புத்தகம்.
ஆசிரியருக்கு நன்றி.
அன்புடன்
தேவேந்திரன் ராமையன்
18 செப்டெம்பர் 2021
No comments:
Post a Comment