Thursday 30 September 2021

ஏழு சகோதரிகள் - 2 - அசாம்

 ஏழு சகோதரிகள் - 2 - அசாம்  

வெங்கட் நாகராஜன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 70

பக்கங்கள்  


ஏழு சகோதரிகள் -2, என்ற இந்த பயண கட்டுரையில் அசாம்  மாநிலத்தில் நண்பர் வெங்கட் நாகராஜன் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் போது ஏற்பட்ட  பயண அனுபவங்களை மிகவும் அழகாகவும் எளிமையாகவும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.

நான், நண்பரின் அசாம் அதிகளவில் வாசித்திருக்கிறேன். காமாக்யா மொழிநடையும், சுற்றுலா செல்லும் இடம் மற்றும் காசிரங்கா கிடைத்த சுவாரஸ்யமான சொல்லுகிற விதம் நாமும் அவர்களில் ஒருவராக அந்த பகிர்ந்துள்ளார் சென்று வந்த ஒரு உணர்வினை கொடுக்கும் விதமாகவே இருக்கும்.

அசாம் மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது கௌஹாத்தியில் இருக்கும் "மா காமாக்யா தேவி கோவில்" மற்றும் காசிரங்கா வனமும் தான். இந்த இரண்டு இடங்களும் அங்கே கிடைத்த அனுபவங்கள் மிகவும் சுவாரஷ்யமான போக்கில் நம்மிடம்    பகிர்ந்துள்ளார்.

வாருங்கள் நாமும் நண்பருடன் கைகோர்த்து  "மா காமாக்யா தேவி கோவில்" மற்றும் "காசிரங்கா வனம்" வரை ஒரு அழகான பயணம் சென்று வருவோம்.

மா காமாக்யா தேவி கோவில்:

கௌஹாத்தி நகரில் இருக்கும் "மா காமாக்யா தேவி கோவில்"  நீலாச்சல் என்ற குன்றின் மீது அம்சமாக அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு வருடம் முழுவதும் பக்தர்கள் வருவது வழக்கமாக இருக்கிறது என்றும் மற்றும் இந்த கோவிலின் வரலாறும் அதாவது இந்த கோவில் 51 சக்தி பீடங்களாக அமைந்திருக்கிறது என்றும் மேலும் இந்த கோவிலில் என்ன என்ன விதமான பூஜைகள் செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.வழக்கம்  போல எல்லா கோவில்களில் வெளியே இருக்கும் தரகர்கள் போலவே இங்கேயும் இருக்கிறார்கள், அவர்கள் விரைவில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துகொடுக்கிறோம் என்று அதற்காகத் தொகையும் பேசுவது இந்த கோவிலும் இல்லாமல் இல்லை என்கிறார் ஆனாலும் நாம் நேரடியாகப் போவதே சிறந்தது என்று குறிப்பிடுகிறார். கோவிலின் தரிசனம் முடிந்த பிறகு வெளியில் அமைந்திருக்கும் பல்வேறு விதமான கடைகள் மற்றும் அங்கே இருக்கும் மக்கள் என ஒவ்வொன்றையும் நிழற்படங்கள் வழியே நம் கண்களுக்கு விருந்தாகக் கொடுத்திருக்கிறார்.


சாராய்  காட் பாலம்:

அசாம்  மாநிலத்தில் இருக்கும் பிரம்ம புத்திரா நதியில் வடக்கு கரையில் இருக்கும் ஒரு ஊர்ப் பெயர் சராய். இந்த ஊரில் இருக்கிறது புகழ்பெற்ற ஒரு பாலம். இந்த பாலம் 1958 ல் ஆரம்பித்து 1963 ல் பயன்பாட்டுக்கு வந்தது என்றும் இந்த பாலத்தில் இருக்கும் சிறப்பு என்னவென்றால் மேல் பகுதியில் சாலை போக்குவரத்தும் கீழே ரயில் போக்குவரத்தும் என மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த பாலம் தான்    இந்தியாவின் மற்ற பகுதிகளை வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கிறது என்றும் மேலும் அங்கே நிழல் படம் எடுத்ததற்காகப் போலீசிடம் மாட்டிக்கொண்டது என பெரும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். 


காசிரங்கா வனம் பூங்கா:   

இந்த பூங்கா,  கௌஹாத்தியிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கொஹ்ரா கேட் என்ற இடத்தில் அமைத்துள்ளது. இந்த பூங்கா அமைந்திருக்கும் வனத்தின் பரப்பளவு சுமார் 429 சதுர கிலோ மீட்டர் அளவிற்கு அமைந்திருக்கிறது. மேலும் இந்த பூங்கா பிரம்ம புத்திரா, மோரா திப்லு மற்றும் மோரா தன்சிரி போன்ற நதிகளால் சூழ்ந்துள்ளது மேலும் பூங்காவின் நடு நடுவே 49 முதல் 800 மீட்டர் வரையிலான சிறு சிறு குன்றுகள் இருக்கிறது. இந்த குன்றுகள் மழைக்காலங்களில் விலங்குகள் எல்லாம் குன்றின் மீது தங்கிடும்அதுபோக இந்த பூங்கா வருடத்தில் ஏழு மாதங்கள் மட்டும் அதாவது நவம்பர் முதல் மே மாதம் வரை மட்டுமே திறந்திருக்கும் மற்ற மாதங்கள் மழை என்பதால் மூடியிருக்கும் என காசிரங்கா வனப்பூங்காவினை பற்றிய தகவல்கள் கொடுத்திருக்கிறார்.

இந்த பூங்காவிற்கு வருவதற்கு எத்தனை விதமான போக்குவரத்துக்கு வசதிகள் இருக்கிறது என்றும் அங்கே தங்குவதற்கு இருக்கும் வசதிகள் என    இங்கே வர விரும்போவருக்கு தேவையான தகவல்கள் தெளிவாக இருக்கிறது            

இந்த பூங்காவில் கட்டாயம் அனுபவிக்க வேண்டிய ஒன்று என்று "யானைச் சவாரி" யினை குறிப்பிடுகிறார். சில இடங்களுக்கு யானையின் மீது நான்கு இந்து நபர்கள் அமர்ந்து வனத்தில் இருக்கும் பெரும்பாலான உயிரினங்களைப் பார்வையிட முடிகிறது அதுவும் யானையின் மீது அமர்ந்து உயரமான இடத்தில் இருந்து பார்க்கும் போது வேறுவிதமான அனுபவம் என்கிறார். இவ்வாறு அழைத்துப் போகும் யானைகள் நன்று பழக்கிய யானைகள் மட்டுமல்லாமல் போகும் வழியெல்லாம் இருக்கும் யானை புல்லினை மேய்ந்துகொண்டே அது பயணிக்குமாம்

இந்த வனத்தில் மிகவும் அதிகளவு இருப்பது காண்டாமிருகம் தான் என்றும் எந்த பக்கம் திரும்பினாலும் காண்டாமிருகம் கண்ணில் படாமல் இருக்காது எனவும் அடுத்துப் பயணப்பட்ட ஜீப் சவாரியும், இந்த சவாரியின் போது கடந்து சென்ற மரப்பாலாம், அந்த பாலத்தில் ஜீப் ஏறும் போது எப்படியும் இது கீழே விழும் என்ற பயத்துடன் பயணித்த அனுபவமும்    அதில் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் கண்டு ரசித்த காண்டா மிருகம், காட்டுச் சேவல்,  மான்கள், காட்டெருமைகள் மற்றும் பல்வேறு விதமான பறவைகள்  என ஏராளம்.

இந்த நூலின் வழியே அசாம் மாநிலத்தின் சுற்றுலா பகுதிகளுக்கு சென்று வந்த ஒரு உணர்வுடன் பகிர்கிறேன்.


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

30 செப்டெம்பர் 2021

No comments:

Post a Comment