கி.மு.கி.பி
ஆசிரியர் : மதன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 131
பக்கங்கள் 160
கி.மு.கி.பி, பல்வேறு காலகட்டங்களின் வரலாற்றினை ஒரு புத்தகத்தில் கொடுப்பது என்பது கொஞ்சம் கடுமையான காரியம் தான். ஆனால் மதன் இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார். கி.மு. பலநூற்றாண்டு வருடங்களிலிருந்து கி.பி 2000 வரையினால் பல்வேறு சுவாரஸ்யமான வரலாற்றுச் சுவடுகளை இங்கே கொடுத்திருக்கிறார்.
சங்க காலத்திற்கும், சரித்திர காலத்திற்கு முன்னரும், மனித உயிர் தோன்றிய காலத்தினையும் கூடவே வளர்ந்த மனித நாகரீகத்தினையும் சிறப்பாகச் சொல்லிச்செல்கிறார்.
உலகம் தோன்றியதிலிருந்து, ஒவ்வொரு உயிரினமும் தோன்றியதை ஆரம்பித்துக் கூடவே செடி கொடிகள் பரிணாம வளர்ச்சிகளையும் பற்றிப் பேசுகிறது.
உலகின் முதல் மனிதன் ஒரு பெண் என்றும், அவர்கள் தோன்றிய இடம் ஆப்பிரிக்கா கண்டம் எனவும் அவ்வாறு தோன்றிய மனித இனம் உலகின் எல்லா முலைகளுக்கு நடந்தே சென்றது, அப்படி நடந்து சென்றது ஒரு நாளே அல்ல ஒரு வருடமோ இல்லை பல்லாயிரம் வருடங்களாக நிகழ்த்து கொண்டிருந்தது என்கிறது வரலாற்றுத் தரவுகள்.
அப்படி நடந்த சென்ற மனித இனம், சில இடங்களில் தங்க முன்வந்தது அவ்வாறு தங்கிய நேரத்தில் அங்கே ஒரு குழுவாக இருந்தது. தங்கள் தேவைகளை அங்கே தேடத்தொடங்கினார்கள். இதன் வழியே நாகரிகம் தோன்ற ஆரம்பித்தது என்கிறார். அவ்வாறு வாழ்ந்த ஆதி மனிதர்கள் சராசரியாக வாழ்ந்தது வெறும் முப்பது வயதுதான் என்கிறது.
உலகின் எல்லா பகுதிக்கும் தரைவழியாகச் செல்வதற்கான பாதைகள் இருந்ததும் அதைக் கண்டறிந்து மக்கள் பயணப்பட்டனர் ஆனால் இதற்கு ஒரு காலத்தில் ஒரு தடை வந்தது அதாவது உலகம் வெப்பமானது அதன் காரணமாகப் பனிக்கட்டிகள் உருகி தண்ணீர் அதிகமானதால் கடலும், ஆறுகளும் அதிகமாகத் தோன்ற ஆரம்பித்தது இதன் காரணமாக உலகின் பல பகுதிகள் பிரிந்துபோனது. கண்டங்கள் ஒவ்வொன்றும் தனித் தனியானது .
முதலில் தோன்றிய தீயினை பார்த்து வியந்த மனிதன் பிறகு அதனால் கிடைத்த பயன்களிலிருந்த முக்கியத்தினை தெரிந்துகொண்டதனால் தீ செயற்கையாகக் கண்டுபிடித்தான். இதுவும் நாகரீகத்தின் வளர்ச்சியேயாகும்.
நாகரிகங்கள் தோன்றியது அவர்களுக்கென வழிபாடுகள் மற்றும் தெய்வங்கள் தோன்றின அவருக்காக ஆலயங்களை மலையின் உச்சியில் ஆலயம் கட்டினார்கள். இவ்வாறாக வளர்ந்த இந்த நாகரீகம் டைக்ரீஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளின் இடையேதான் தோன்றியது என்கிறார்கள். மெசபடோமியாவில், ஊர் என்கிற ஊரைத் தொடர்ந்து பதினெட்டு நகரங்கள் தோன்றின மற்றும் நாகரிகமும் கூடவே வளர்ந்தது.
பாபிலோனியாவின், ஹமுராபி, மனித இனத்தின் நாகரிகத்தின் சமுதாயம் முன்னேற்றத்திற்காகக் கனவு கண்ட ஒரு தலைவனாக ஹமுராபி உருப்பெற்றான். இவரின் ஆட்சிக்குக் கீழ் மொத்த மெசபொடேமியா பிரதேசமும் வந்தது இவ்வாறாக ஹிராமுபியின் உலகின் பாபிலோனியச் சாம்ராஜ்யமும் உலக வரலாற்றில் ஆச்சரியமான ஒரு காலம் என்கிறது வரலாறு. இவர் தான் முதலில் சட்டங்களை வகுத்திருக்கிறார், மேலும் பழிக்குப் பழி மற்றும் குற்றங்களுக்கான தண்டனைகள் என பல்வேறு சட்டங்களை வகுத்துக்கொடுத்திருக்கிறார்.
"கில்கிமெஷ்" - இது பாபிலோனியர்கள் இயற்றிய உலகின் மிகச் சிறந்த காப்பியம் என்ற முக்கியத்துவம் வாய்ந்தது. கில்கிமெஷ், என்ற ஒரு மன்னரின் உண்மை கதையின் தழுவி இந்த காப்பியம் உருவாக்கியிருக்கிறார்கள். கில்கெஷும், எங்கிடுவும் என இவர்களின் வரலாறும் அவர்கள் முதலில் ஆரம்பித்த பகைகளும் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்தது என பல்வேறு சுவரஸ்ய்மான தகவல்கள். நள்ளிரவு தேவதையின் கதைகள், பாபிலோனியர்கள் மரணத்தைப் புனிதமாகக் கருதியதும், அவ்வாறு இறந்தவர்களை வீட்டின் உட்புறத்தில் புதைத்தனர் இதனால் அவர்களின் உதவி கிடைக்கும் என்று நம்பினார்கள்.
உலகின் பாபிலோனியாவில் நாகரிகம் தோன்றிய காலத்திலே இந்தியாவில் சிந்து சமவெளி நாகரீகம் தோன்றியுள்ளது என்பதும் பற்றிய ஆராய்ச்சிகள் சொல்கிறது. மொஹஞ்சதாரோ நாகரிகம், இங்கே தோண்டிய நாகரிகம்தான் இன்றைய நாகரிகத்தின் முன்னோடி என்கின்றனர். இவர்கள் மிகவும் சுத்தமாகவும் நாகரிகமாக வாழ்ந்தனர். இவர்கள் குளிப்பதற்க்க்காக குளங்கள் கட்டியிருந்தனர் மற்றும் தானியங்களைச் சேமிக்க உயரத்தில் களஞ்சியம் கட்டினார்கள் என்றும் குறிப்பிடுகிறது. கரும்பு மற்றும் பருத்தி ஆகிய இவையிரண்டையும் கண்டுபிடித்து விவசாயம் செய்தார்கள்.
இன்றளவும் இந்தியாவில் தோன்றிய சிந்துசமவெளி நாகரீகத்தின் மக்கள் பயன்படுத்திய மொழி என்ன என்ற தரவுகள் கிடைத்தாலும், தமிழ் என்பதற்கு அதிக அளவு வாயாயிருந்தாலும் உலகம் ஏன் மறைக்கிறது என்று தெரியவில்லை.
நைல் நதியின் கரையில் தோன்றிய எகிப்து நாகரிகம் உலகின் மிக முக்கியமான நாகரிகம் எனப்படுகிறது. எகிப்தியர் ஆயிரக்கணக்கான தெய்வங்களை வழிபட்டதாகவும் குறிப்பிடுகிறது. ஒரு பெண், செயற்கை தாடியுடன் ஆண் வேடமிட்டுக் கொண்டு ஆட்சி நடத்தியது. ஆமன் ஹோடப் என்கிற எகிப்து மன்னன், சூரியன் தான் முக்கியம் என்று சொன்னதும் மட்டுமல்லாமல் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் பல்வேறு தெய்வங்களை அழித்ததும் என பல்வேறு காரணங்களால் மதபோதகர்கள் எவ்வாறு ஆட்சியினை தங்கள் வசம் வைத்துக்கொள்ளத் திட்டம் தீட்டினார்கள் என்பதும் முக்கியமான தகவல்கள். மேலும் கல்லறைகளில் வைத்திருந்த பல்வேறு விதமான பொருள்களையெல்லாம் குறிப்பிடுகிறது. எகிப்தியர்கள் மம்மி செய்வதில் கைதேர்ந்தவர்கள் ஆதலால் அவர்கள் பல்வேறு மருத்துவ குறிப்புகளை எழுதிவைத்திருந்தார்கள் எனவும் குறிப்பிடுகிறது.
ஏதென்ஸ். கிரேக்க நாடுகளில் ஒரு சிறிய நாடன் ஏதென்ஸ் உலகின் முதலில் மக்களாட்சி போன்ற ஒரு ஆதியினையும் மக்களுக்குச் சுதந்திரமும் கொடுத்தாகவும், பல்வேறு விதமான நாகரிகங்கள் மற்றும் அறிஞர்கள் தத்துவங்கள் பிறந்த மண் எனக் குறிப்பிடுகிறது. ஏதென்ஸுக்கும் ஸ்பார்ட்டாவுக்கும் இடையேயான போர் இன்றளவும் வரலாற்றுப் பிரசித்தி பெற்றது என்கிறார்கள். பாரசீகம் ஒவ்வொருமுறையும் கிரகத்தின் மீது போர்தொடுத்தது அதன் காரணமாக ஒட்டுமொத்த கிரேக்கமும் பாரசீகத்தின் பிடியிலிருந்தது ஆனால் பிற்காலத்தில் கிரேக்கத்தின் ஏதென்ஸ் மட்டும் எதிர்த்துப் போரிட்டு வெற்றிபெறவைத்தது.
சாக்ரட்டீஸ் என்ற மகா தத்துவமேதையின் கடைசி நாட்களின் வரலாறு மிகவும் குறிப்பிடத்தக்கது, கிடைத்த எல்லா வழியினையும் தவிர்த்து நேர்மையானவன் என்று வாதாடி இறுதியில் தண்டனைக்கு உட்பட்டு விஷம் அருந்தி மரணித்தார். பிறகு பிளாட்டோ, அரிஸ்டாட்டில் என அவரின் சீடர்கள் எல்லோருடைய வரலாறும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அலெக்சாண்டர் அவர்களின் ஆட்சியையும், வெற்றியையும் அவரின் குருவான அரிஸ்டாட்டிலும் என வரலாறு மிகவும் முக்கிய தகவல்களைக் குறிப்பிடுகிறது. இந்தியாவிலிருந்து திரும்பிப் போகும் வழியில் அவர் மரணமடைந்தார் என்பதும், இந்தியாவில் சந்திரகுப்தரின் ஆட்சியையும், சாணக்கியன் தான் செய்த தவற்றுக்காகத் தண்டனை வழங்கிய நந்தர் வம்சத்தினை எவ்வாறு பழிவாங்குவது என்ற யோசிக்கும் வேளையில் வழியே கிடைத்த ஒரு சிறுவனை வாங்கிவருகிறார் அவர் தான் சந்திரகுப்தர். இவரைக் கொண்டு நந்தர் வம்சத்தினையே அழித்துவிடுகிறார் பிறகு இவரின் ஆட்சி கோலோச்சியது. பிறகு இவரின் மகன் அதன் பிறகு இவரின் பேரன் அசோகர் என வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிச் செல்கிறது இந்த புத்தகம்.
அசோகரின் ஆரம்ப காலா ஆட்சியில் இருக்கும் செய்திகள் பெரும்பாலும் முழுமையாக வரவில்லை இருந்தாலும் அவர் அரசனான பிறகு செய்த கலிங்கா போரில் செத்து மடிந்த வீரர்களைப் பார்த்து மனம் உடைந்து இனிமேல் இது போலதொரு பயங்கரமான காரியம் செய்யக் கூடாது என்று கட்டளையிட்டார் அது மட்டுமல்லாமல் இந்த போருக்கு பிறகு ஒரு புதிய தொடக்கமாக புத்த மதத்தினை பின்பற்ற ஆரம்பித்தார் என்கிறது வரலாற்றுச் சான்றுகள்.
இப்படியா ஒரு பல்லாயிரம் வருடங்களின் நடந்த பெரும்பாலான வரலாற்று நிகழ்வுகளைத் தெரிந்துகொண்ட மன நிறைவுடன் பகிர்கிறேன்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
09 செப்டம்பர் 2021
No comments:
Post a Comment