Saturday, 31 July 2021

நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 6 - வாசிப்பனுபவம்

 நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 5

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 49


ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  ஒரு அருமையான ஜப்பானிய நவீனச் சிறுகதையினை பற்றியது தான் இந்த தொகுப்பு "நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 6".

ஹாருகி முராகமி

உலகமெங்கும் பல லட்சக்கணக்கான வாசகர்களைத் தன்வசம் கொண்ட ஒரு சமகால ஜப்பானிய எழுத்தாளர். இவரின் முதல் நாவல் 1979 ல் வெளிவந்தது அது உலகமெங்கிலும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது அதன் பிறகு முராகமி  முழுநேர எழுத்தாளராக மாறிவிட்டார். அந்த வரிசையில் 2014 ல் வெளிவந்த "ஷெஹ்ரஜாத்என்ற கதையினை பற்றித் தான் நாம் இங்கே பார்க்கப்போகிறோம்.

"ஷெஹ்ரஜாத்"

ஹாபரா, நான்கு மாதங்களுக்கு முன்பு டோக்கியோவிற்கு வடக்கே இருக்கும் ஒரு நகரத்திலிருந்து இந்த புதிய வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டான். அவனால் வெளியில் செல்லமுடியாத நிலையில் அவன் தனிமையில் இருக்கவேண்டியதாக இருந்தது அதற்காக அவனுக்கு ஒரு துணையாளராக ஒரு பெண் செவிலியர் நியமிக்கப்பட்டாள்.

அவளுக்கு அவன் பெயர் தெரியாது ஆனால் அவன் அவளுக்கு   "ஷெஹ்ரஜாத்"  வைத்துக்கொண்டான். அவள் வாரத்தில் சில நாட்கள் அவளுக்கு நியமிக்கப்பட்ட நேரத்தில் அவள் வருவாள். அவள் வரும்போது ஒரு வாரத்திற்குத் தேவையான மளிகை பொருள்கள், CD, புத்தகங்கள் மற்றும் அவனுக்குத் தேவையான பொருள்கள் என எல்லாவற்றையும் வாங்கி வருவாள். வீட்டிற்கு வந்த பிறகு வாங்கி வந்த பொருள்களைக் குளிர்சாதனப் பெட்டியில் பக்குவமாக அடிக்கி வைத்துவிட்டு பழையதும் காலாவதியானதுமான பொருள்களை அப்புறப்படுத்துவதும் என அவளின் பணிகளைச் சிறப்பாகச் செய்வாள்.

அவனுக்குத் தேவையான எல்லா சேவைகளையும் செய்வாள் பிறகு அவனால் வெளியில் செல்ல முடியாததால் அவன் ஒரு கூண்டுக் கிளிபோலவே இருக்கிறான். அவளுக்கு அவன் மீது இருக்கும் ஒரு வித ஈடுபாடு அவளை அவனுடன் கலவியில் ஈடுபடவைக்கிறது. இந்த நிகழ்வு ஒவ்வொருமுறையும் அவள் அவன் வீட்டிற்கு வரும் போது இல்லாமல் இருக்காது அது அவள் அவனுக்குச் செய்யும் ஒரு சேவையாகவே கருதினால். அவள் கலவிக்குப் பிறகு அவனுக்குக் கதை சொல்லுவாள்.

அவள் சொல்லும் கதையானது அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அப்படியாக அவள் சொல்லும் கதைகளையும் அவள் வந்து போனதையும் அவன் அவனது நாட்குறிப்பில் மறக்காமல் குறித்து வைத்துக்கொள்கிறான். அவள் சொல்லும் கதைகள் உண்மையானதா அல்லது புனையப்பட்டது அல்லது இரண்டும் கலந்ததா என்ற சந்தேகம் அவனுக்கு எப்போதும் வருவதுண்டு ஆனால் அவன் அவளிடம் கேட்கவில்லை.  மாறாக அவன் அந்த கதையில் அவன் லயித்திருந்தான் அது அவனுக்குப் பெரிய ஆசுவாசமாக இருந்தது அதனால் அவள் வரும்போதெல்லாம் அவர்களின் கலவிக்குப் பிறகு அவன் அவளிடம் கதை சொல்லச் சொல்லிக் கேட்பான்.

அப்படியாக அவள் சொல்லிய கதைதான் அவனுக்கு மிகவும் பிரமிக்க வைத்தது. அவள் தனது படிப்பின் போது அவள் கூட படித்த ஒருவன் மீது அவள் கொண்டிருந்த ஒருவகையான ஈர்ப்பின் காரணமாக அவள் அவன் வீட்டிற்கு யாருமில்லாத நேரத்தில் புகுவதைக் கடைப்பிடித்து  வந்தால். அப்படியாக அவள் மூன்று முறை சென்றிருந்தாள், ஒவ்வொரு முறையும் அவளுக்குக் கிடைத்த கிளர்ச்சியின் வெளிப்பாடும், அந்த வயதில் அவன் மீது அவளுக்கு இருந்த எல்லையில்லா ஈர்ப்பும் அவளை அவனைத் தொடர வைத்தது. ஒவ்வொரு முறையும் அவள் அவனுடைய எதாவது ஒரு பொருளைத் திருடிவருவாள் அதற்கு ஈடாக அவளின் ஒரு பொருளை மறைத்து வடித்துவிட்டு வருவாள். அப்படியா மூன்று முறை வெற்றிகரமாகச் சென்றுவந்திருந்தாள் மூன்றாவது முறை அவனுடைய உடுத்திய சட்டையினை எடுத்துவந்துவிட்டாள். மீண்டும் அடுத்த முறை போகப்போகப் போனபோது அவளால் செல்ல முடியாமல் அந்த வீட்டில் புதிதாக ஒரு பூட்டு தொங்கியது. ஒருவேளை அந்த பூட்டு அவளின் இந்த கோமாளித்தனத்திற்கு ஒரு பூட்டாக மாறியது. 

இதுபோல அவள் இந்த கதையினை ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக்கொண்டே இருப்பாள். இறுதியில் அவள் அடுத்த முறை சொல்கிறேன் என்று மீதம் வைத்திருந்த ஒரு கதையோடு அவள் வெளியேறுகிறாள். அவனுக்கு அவள் திரும்ப வருவாளா இந்த தொடர்பு நீடிக்குமா அல்லது துண்டித்துப்போகுமா என்ற கவலையுடன் தன் எண்ணங்களை நிதானித்து ஒரு நிலையில் நிறுத்தினான். பிறகு அவள் சொன்ன அந்த "லாம்பரேக்கள் எவ்வாறு பாறையின் அடியில் தாங்கிக்கொண்டு தனக்கு மேலே சிறிய மீன்கள் வருகிறதா என்று நோட்டமிடுகிறதோ அதைப் போலவே அவன் தன்னை நினைத்துக் காத்திருக்கிறான்.

இது ஒரு அருமையான கதை. இருவருக்கும் இடையில் ஏற்படும் கலவியின் சுகத்தினையும் அவள் அவன் மீது கொண்டுள்ள பற்றும் அவனுக்காக அவள் செய்யும் அந்த சேவைகளையும் மிகவும் அருமையாகச் சொல்லிச்செல்கிறார் முராகமி.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 
31 ஜூலை 2021

நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 5 - வாசிப்பனுபவம்

 நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 5

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 50 

ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  வெவ்வேறுவிதமான பின்னணி மற்றும் சூழல்களைச் சார்ந்த மூன்று நவீனச் சிறுகதைகளைக்  கொண்ட அருமையான தொகுப்புதான் இந்த "நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 5".

டொனால்டு பார்தெல்மே (1931-1989):

அமெரிக்காவின் பின்-நவீனத்துவப் புனைவுலகின் முக்கிய பங்கு வகித்தவர். இவர் சிறுகதைகள், நாவல், பத்திரிக்கையாளர் எனத் தனது தடத்தினை பதித்தவர். இந்த தொகுப்பில் இவரின் இரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

குழந்தை: 

இந்த கதை பெற்றோர்களுக்கு ஒரு பாடமாகவும் எப்படி குழந்தைகளை அணுக வேண்டும் என்று மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். தங்கள் குழந்தை செய்த முதல் தவற்றுக்காகத் தண்டனை கொடுக்கப்படுகிறது. 

குழந்தை, புத்தகத்தின் பக்கங்களைக் கிழிக்கிறது, அதற்காகத் தண்டனையாக நான்கு மணிநேரம் தனியறையில் தங்கவேண்டும் என்பதுதான் அந்த தண்டனை. ஆனால் இந்த தவறு மேன்மேலும் கூடிக்கொண்டே தான் போகிறது. குழந்தையினை திருத்துவதற்காகத் தண்டனை கொடுக்கிறோம் ஆனால் அந்த குழந்தை அந்த தண்டனையே எடுத்துக்கொண்டு தான் தனிமையில் இருப்பதற்காகவே மீண்டும் மீண்டும் அந்த தவற்றினை செய்யத் தொடங்குகிறது. 

குழந்தைகளுக்குக் கண்டிப்பு தேவைதான் ஆனால் அதுவே ராணுவ கண்டிப்பாக இருக்கக்கூடாது. ஒரு கட்டத்தில் தனது மகளின் போக்கினை உணர்ந்த அந்த தந்தை, தன் மகள் செய்வது ஒன்றும் பெரிய தவறில்லை என்பதைப் புரிந்துகொண்டு அவளோடு சேர்ந்து அவரும் சில பக்கங்களைக் கிழிக்கத் தொடங்குகிறார். அவளின் ஆனந்தமான வாழ்வுக்குள் அப்பாவும் நுழைகிறார்.


பள்ளிக்கூடம்:

இந்த கதை, பள்ளிக்கூடத்தில் சில்மிஷம் செய்யும் சுட்டி பசங்களைப் பற்றிய சுவாரஸ்யமான கதை. குழந்தைகளுக்குக் கல்வி மட்டும் சொல்லிக்கொடுப்பதல்ல பள்ளிக்கூடம். வாழ்க்கையையும் சொல்லிக்கொடுக்கும் இடம் தான் அது. அதற்காக மாணவ மாணவியர்கள் செய்யும் தவற்றுக்கு மரம் நடச் சொல்கின்றார்கள்.

ஆதரவின்றி இருக்கும் குழந்தைகளைத் தத்தெடுப்பது மற்றும் எவ்வாறு பெற்றோர்கள் மரணமடைந்து விடுவதும் அது சில விதமான துரதிர்ஷ்டம் தான். நம்மை விட்டுப் போனவர்களின் நிலையினை கேட்பதும் அதற்கு அவர்கள் இல்லாமல் போனது அவர்கள் இறந்து போயிருக்கலாம் வாழ்க்கையின் ஒரே அர்த்தம் இறப்பு தான் என்கிறார்கள் ஆனால் இறப்பு மட்டுமே அர்த்தம் கிடையாது. வாழ்வுக்கு வாழ்வு தான் அர்த்தம் தருகிறது என்கிறார். இயற்கை உயிரினங்கள் மடிந்து போனதும் இயற்கையால் நிகழும் பல்வேறு நிகழ்வுகளும் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

ஜான் அப்டைக் (1932-2009): 

இயல்பான அன்றாட வாழ்வின் நிலைகளையும் அனுபவங்களையும் மிக நுட்பமாகக் கதைசொல்வதில் மிகவும் கை தேர்ந்தவர் இவர் . அமெரிக்க இலக்கியத்தில் கவிஞர், ஓவியர், சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் மற்றும் பத்திரிக்கை என பல்வேறு தளத்திலும் தனது வெளிப்பாடுகளை வெளிப்படுத்தினார்.

1983 ஆம் ஆண்டு "ஓ ஹென்ரி விருது" பரிசினை வென்ற "நகரம்" என்ற சிறு கதையினை பற்றித்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.

நகரம்:  வியாபார சார்பாக வேறு  ஒரு நகரத்திற்குப் பயணிக்க வேண்டிய சூழலில், விமானத்தில் பயணிக்கிறார். அந்த பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களை மிக நேர்த்தியாகவும் வியப்புடனும் சொல்லிச்செல்கிறார். 

மூன்று இருக்கைகள் இருக்கும் 747 விமானத்தில் நடு இருக்கையில் அமர்ந்து இருக்க நேரிட்டது மேலும் இரண்டு பக்கங்களும் தடிமனான இளைஞர்கள் அமர்ந்து இருப்பதால் ஏற்பட்ட நெரிசலும் வேதனையும் அந்த பயணம் முழுவதும் நீண்டுகொண்டே இருந்தது. இது மிகவும் அசௌரியமாகத்தான் இருந்தது. விமானத்திலிருந்து விடுதிக்குச் சென்ற அவருக்கு மேலும் வெறுப்பான அனுபவங்கள்தான் கிடைத்தது. 

அந்த விடுதியின் நிலைமையினை மிக அருமையாக வர்ணிக்கிறார். பிறகு அவர் சந்திக்க வேண்டிய சந்திப்புகள் எனத் திட்டமிட்டிருந்தார்.

அறையினுள் சென்ற கார்சனுக்கு, அறையின் சூழல் மேலும் அவருக்கு வெறுப்பூட்டியது. கூடவே வந்த அழையா விருந்தாளியான வலி அவரை பெரிதும் துன்பப்படுத்தியது.    

அலுவல் வேலையாக நகரத்திற்கு  வந்த கார்சனுக்கு, வரும் வழியில் ஏற்பட்ட வயிற்று வலிக்கு மருத்துவம் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய சூழல் வருகிறது அதன்படி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இந்த நகரில் வந்து இறக்கிய முதல் அவர் திரும்பும் வரையில் பெற்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் நினைவுகளையும் மிகவும் ரசித்துச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

இடையே, அவரின் பழைய மனைவி தொலைப்பேசி பண்ணி நெருடலாகப் பேசியதும், மெக்சிகோவில் இருக்கும் மகன் இவருடைய பணத்தில் பேசியதும், மகள் பேசாமலே இருந்தது என ஒவ்வொரு நிகழ்வினையும் கொஞ்சம் உணர்ச்சி மற்றும் நகைச்சுவை என மிகச் சிறப்பாகச் சொல்லிச்செல்கிறார்.

எல்லாம் முடிந்து திரும்பும் வரை அந்த நகரத்தில் கார்சனுக்கு ஏற்பட்ட அனுபவங்களை மிக நுட்பமாகவும் அழகாகவும் சொல்லியிருக்கிறார் இந்த கதையின் வழியே.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

31 ஜூலை 2021 

Friday, 30 July 2021

நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 4 - வாசிப்பு அனுபவம்

நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 4

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 50 

ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டு வெவ்வேறுவிதமான சூழல்களைச் சார்ந்த நவீனச் சிறுகதைகளைக்  கொண்ட அருமையான தொகுப்புதான் இந்த "நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 4".

இதாலோ கால்வினோ (1923-1985):

இத்தாலியின் மகத்தான கலைஞன், இருபதாம் நூற்றாண்டில் இவரின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள்  என இவருடைய எழுத்துக்கள் கற்பனையும் அற்புதமும் கலந்து இழையோடும் நவீன இலக்கியமாகத் திகழ்ந்தது. அந்த வரிசையில் இவரின் "ஆதாம், ஒரு பிற்பகல்"  பற்றிய பதிவுதான் இங்கே பார்க்கப்போகிறோம்.

"ஆதாம், ஒரு பிற்பகல்" - இந்த கதையில் வரும்  மிக அழகான உரையாடல்களை மிகவும்  நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார். புதிய தோட்டக்காரனின் மகன் நீண்ட கூந்தலுடன் அந்த தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறான். அந்த வீட்டு வேலைக்கு வந்திருக்கும் பெண் மரியா-நுண்ஸியாதா, இவள் வீட்டின் அடுப்படியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறாள். 

தோட்டத்துக்குப் புதிதாக வந்த பையனை முதலில் பெண் என்று நினைத்துவிட்டு பிறகுப் பையன் என்று தீர்மானித்துக்கொண்டு அவனை அழைக்கிறாள் அவள்.

இப்படியாக ஆரம்பமாகும் இவர்களின் சந்திப்பு, அவன் அவளைத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்கிறான், நான் உனக்கு ஒரு அற்புதமான பரிசு தருகிறேன் வா என்று அவள் கை பிடித்து தோட்டத்துக்குள் அழைத்துச் செல்கிறான். அங்குச் சென்றவுடன் இருவரும் பரஸ்பரம் அறிமுகமாகச் செய்து கொள்கின்றனர். அவன் பெயர் "லீபெர்சோ" என்று தெரிந்துகொள்கிறாள். அவள் அவனின் பெயரைக் கேட்டவுடன் சிரிக்கிறாள். இவர்களின் உரையாடல்கள் மிகவும் நேர்த்தியாகவும் ரசிக்கக் கூடியதாகவும் அமைந்திருக்கிறது.

அவன், அவளுக்கு முதலில் தேரையினை கொடுக்கிறான் அவள் பயப்படுகிறாள், பிறகு பல வண்ண சில்வண்டுகளைக் கொடுக்கிறான் அவற்றையும் அவள் வேண்டாமென்கபல்லிகளைக் கொடுக்கிறான் அதுவும் அவளை வெறுப்பாகிறது இடை இடையே வீட்டிற்குப் போகவேண்டும் பாத்திரம் தேய்க்க வேண்டும் வேளையிருக்கிறது என்கிறாள் ஆனால் அவன் உனக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அவளை வேறொரு இடத்திற்கு அழைத்துச் செல்கிறான் இப்போது தவளை ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்கும் தவளையினை தருகிறான் அதுவும் அவளைக் கவரவில்லை பிறகு பாம்பு என அவன் கொடுக்கும் எதுவம் அவளுக்குப் பிடித்தாக இல்லை இறுதியில் அவளின் வீடு எஜமானி கூப்பிட்டவுடன் அவள் தோட்டத்தை விட்டு வீட்டுக்குள் விரைகிறாள். வந்து தனது வேலையினை தொடர்கிறாள். இறுதியில் அவளுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது அவன் கொடுத்த எல்லாவற்றையும் அவளின் சமையல் அறையில் வைத்துவிட்டுச் சென்றான். அவளுக்கு எல்லாமே இப்போது இருக்கிறது.

இந்த கதை ஆதாம் ஏவாள் இவர்களின் தொட்டது பிரவேசமாகத் தான் தோன்றுகிறது அந்த நிகழ்வுகளைப் புனைவாகக் கொண்ட ஒரு அழகிய இளஞ்ஜோடிகளின் அற்புதமான உரையாடல்கள்.

யுகியோ மிஷிமா (1925-1970):

நவீன ஜப்பானிய இலக்கியத்தின் மேதை, கலாச்சார ஆளுமையாளர், அரசியல், கலை, இலக்கியம் என வாழ்வில் பல்வேறு கட்டங்களில் தன்னை உட்படுத்திக்கொண்டவர் இவர். இவர் தனது உயிரினை அவரே மாய்த்துக்கொண்டார். அதுவும் அவரின் சினிமாவில் வரும் ஒரு காட்சியினை போலவே அவரின் உயிரினை மாய்த்துக்கொண்டார்.

இவரின் முக்கியமான படைப்புகளில் ஒன்றான "மூன்று மில்லியன் யென்". என்ற சிறுகதையினை பற்றித் தான் இங்குப் பார்க்கப்போகிறோம்.   

"மூன்று மில்லியன் யென்" -  1960 ல் வெளிவந்த இந்த கதை ஜப்பானில் போருக்குப் பிந்தைய, அமெரிக்கமயமாக்கப்பட்ட நுகர்வோர் கலாச்சாரம் மற்றும் முதலாளித்துவ பண மதிப்புகளுக்கான சீரழிவைக் கருத்தில் கொண்டு வெளிவந்தது தான். 

போருக்கு பிந்தைய ஜப்பானில் வாழ்நிலைக்குத் தேவையான பொருளாதாரம் என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அதனால் புதிதாகத் திருமணமான "கென்ஷோ" மற்றும் அவனின் மனைவி "கியோகோ" இவர்கள் இருவரும் தங்கள் எதிர்காலத்திற்க்காக  இன்றிரவு ஒரு முதியவளைச் சந்திப்பதற்காகச் செல்கின்றனர்.

அந்த சந்திப்பு புதிதாக இருக்கும் "நியூ வோர்ல்டுவணிக வளாகத்திற்கு வருகிறார்கள். இங்கு இரவு ஒன்பது மணிக்குத்தான் அவளுடைய சந்திப்பு அதுவரையில் அந்த வளாகத்தில் இருக்கும் அனைத்து மாடுகளுக்கும் செல்கின்றனர். அங்கே இருக்கும் எல்லாவற்றையும் அனுபவித்துப் பார்க்கத்தான் ஆசை ஆனால் அவர்களின் திட்டம் இங்கே தடை விதிக்கிறது.

புதிதாகத் திருமணமான இவர்கள் தங்களுக்குக் குழந்தை பிறப்பதே இரண்டு ஆண்டுகளுக்கு பிறகுதான் என்றும் அதற்கு முன்னாள் சரிவர எல்லாவற்றையும் தங்களின் திட்டமிட்ட படி  நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை.  இதற்காக இவர்களின் அனுபவிக்கும் ஒவ்வொரு அனுபவத்தையும் நன்றாக இருவரும் சேர்ந்து தீர்மானித்து பிறகுதான் அவற்றைச் செய்கின்றனர்  ஏனெனில் பொருளாதாரம் மிகவும் முக்கியமானது அதனால் தான் இந்த முடிவு.

நியூ  வேர்ல்ட் வணிக வளாகத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு  அனுபவத்தையும் மிகவும் அழகாகவும் கொஞ்சம் நகைச்சுவையுடனும் சீராகக் கொண்டுசெல்கிறார். ஒரு விளையாட்டில் "மூன்று மில்லியன் யென்கிராக்கர் பரிசாகக் கிடைக்கிறது. அதனைச் சுவைத்துக்கொண்டே அந்த வளாகத்தினை சுற்றி வருகிறார்கள்.

புதிய தம்பதிகளுக்கு இடையே இருக்கும் நெருக்கமும் உல்லாசமும் ஆங்காங்கே மிகவும் சிறப்பாக இருக்கிறது. அந்த நாள் முடிந்த நிலையில் அவர்களுக்காகக் காத்திருந்த முதியவளிடம் வந்தார்கள். 

இந்த இளம் தம்பதிகள் தங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வின் அங்கமாக இருக்கும் ரகசியத்தினை செல்வ சீமாட்டிகளுக்கு விற்றுவிடுகின்றனர். மிகவும் வளமான எதிர்காலத்தை வாங்க அவர்கள் தங்களுக்குச் சிறந்ததை விற்றுவிட்டனர், மேலும் மிஷிமா போருக்குப் பிந்தைய ஜப்பானைப் பற்றியும் சொல்ல முடியும் என்று தெளிவாக நம்பினார்.      


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

30 ஜூலை 2021


நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 3 - வாசிப்பு அனுபவம்

 நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 3

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 40

ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மூன்று வெவ்வேறுவிதமான சூழல்களைச் சார்ந்த நவீனச் சிறுகதைகளைக்  கொண்ட அருமையான தொகுப்புதான் இந்த "நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 3".

விளாதிமிர் நபகோவ்(1899-1977):

இவர் ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தவர். ஆரம்பக்காலத்தில்  தனது படைப்புகளை ரஷ்ய மொழியில் எழுதியவர் பின்னாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பிறகு முழு நேர எழுத்தாளராக மாறினார். இறுதியில் சுவிட்சர்லாந்துக்குக் குடிபெயர்ந்து அங்கேயே இறந்து போனார்.

இவரின் வெகுவான படைப்புகளில், மிகச் சிறந்த படைப்பாக  "சந்தேகங்களும் குறியீடுகளும்"   என்ற சிறுகதையாகச் சொல்கிறார்.  

சந்தேகங்களும் குறியீடுகளும்: இந்த கதை, வயதான பெற்றோர்கள் தங்களது மகன் நான்காண்டுக்காலமாகத் தொடர்ந்து குணப்படுத்த முடியாத நோயில் இருக்கும் மகனுக்கு, இந்த பிறந்த நாள் பரிசாக என்ன கொடுக்கலாம் என்ற சந்தேகத்துடன் பரிசீலிக்கின்றனர் . அவர்கள் தங்கள் மகனின் பிறந்த நாளினை கொண்டாட அவனிருக்கும் இடத்திற்குச் செல்கின்றார்கள் ஆனால் அவர்களின் பயணத்தில்  வழியெங்கிலும் எதிர்பார்க்காத பல்வேறு தடைகள். ஒருவழியாக போய்ச்சேர்கின்றனர் ஆனால் அவனைப் பார்ப்பது இப்போது அவனுக்கு நன்றாக இருக்காது என்று செவிலியர் சொல்கிறாள். மனமுடைந்தவர்கள் வாங்கி சென்ற பரிசுப் பொருள்களை அங்கே வைத்துவிட்டு வராமல் பிறகு கொண்டு போகலாம் என்று திரும்புகின்றார்கள்.  மகனுக்கு இருக்கும் இந்த வினோதமான நோயானது, கண்ணுக்குப் புலப்படாத அசுர சக்தி தான் தன் மகனை வாதப்படுத்துகிறது என்று தீர்க்கமாக நினைத்தாள் அம்மா. 

தங்கள் மகனின் நிலைமையினை கண்ட இந்த வயோதிக பெற்றோர்கள் இடையே நடக்கும் உரையாடல்கள் பாசம் மற்றும் உணர்ச்சியின் உச்சக்கட்டம். இறுதியில் அவர் ஒரு முடிவெடுக்கிறார் இனிமேல் மகனை அங்கே விடவேண்டாம் நமது வீட்டுக்கே கொண்டுவந்துவிடுவோம்    என்று கலந்து பேசிக்கொண்டிருக்கும்போது மீண்டும் மீண்டும் ஒலிக்கும் தவறான தொலைப்பேசி அழைப்பு இவர்களின் நிலையினை கொஞ்சம் இடையூறு கொடுத்தது. தன் மகனை நாளைக்கு வீட்டிற்கே அழைத்துவரப் போகிறோம் என்ற நிறைவில் அவனுக்கு வாங்கி வந்த பரிசுப்பொருள்களை ஆவலுடன் உற்று நோக்குகிறார் அவற்றின் வண்ணங்களை ரசித்துக்கொண்டிருக்கிறார் அந்த நாடு ராத்திரியில்.

ஜார்ஜ் லூயி போர்ஹே (1899-1986): அர்ஜெண்டினாவில் பிறந்த இவர் தனது 56ஆவது வயதில் கண் பார்வையினை முற்றிலும் இழந்தவர் தொடர்ந்து கொடுத்த இலக்கியப் படைப்புகள் ஏராளம். இருபதாம் நூற்றாண்டின் சிறுகதை உலகில் சிகரம் என்று தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். இறுதியில் தனது 87 ஆவது வயதில் ஜெனிவாவில் இறந்தார். 

பாபிலோனில் லாட்டரி:    இந்த கதை பாபிலோனில் லாட்டரி எவ்வாறு உருவானது மற்றும் அதன் பின்னணி என்ன,யாரெல்லாம் இவற்றால் ஏமாற்றப்படுகிறார்கள், எப்படி தண்டனை வழங்கப்படுகிறது என ஒரு வரலாறே சொல்கிறது. மத ரீதியாகவும், மக்களின் வாழ்நிலை ரீதியாகவும் எளியோர் வலியோர் எனப் பாகுபாடுகள் நிறைந்த சமுதாயத்தில் எவ்வாறு அடிமைகள் இருக்கிறார்கள் என்றும், லாட்டரி நடத்தும் முறை அவற்றில் எவ்வாறு அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டம் கொண்ட நம்பர்களை உருவாக்குவது என பல்வேறு நிலைகளை விளக்கமாகச் சொல்லிச் செல்கிறது இந்த கதை. லாட்டரி நடத்தும் கம்பெனி மிகவும் வலிமையானது என்றாலும் மக்கள் படும் அல்லல் மேலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் பாபிலோன் அதிர்ஷ்டத்தின் எல்லையில்லா விளையாட்டு என்று சொல்வதே சிறந்தது என்கிறார்கள். இந்த கதையின் வழியே லொட்டரியில் இருக்கும் எல்லாவிதமான பிரச்சினைகளும் பட்டியலிட்டுச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

டெடுயூஸ் பரோவ்ஸ்கி (1922-1951): பொலிஷ் நாட்டில் பிறந்த இவர், மிகச் சிறந்த கவிஞராக இருந்தார். சிறுகதைகள் , பத்திரிக்கைகள் என பல்வேறு விதத்தில் தனது படைப்புகளை மிகவும் ஆக்கபூர்வமாக  வெளிக்காட்டினார். அரசியல் காரணத்தால் வெகுகாலம் தலைமறைவாக வாழ்ந்த இவர் கடைசியில் கைது செய்து வதை முகாமில் இரண்டாண்டுகள் இருக்க நேரிட்டது. இவரின் எழுத்துக்களில் பெரும்பான்மை மிகவும் அரசியல் மையமாக வைத்து இருக்கிறது.

"இரவு உணவு" -  இந்த சிறுகதை வதை முகாமில் நடக்கும் ஒரு இரவின் கொடுமைகளை முக்கியமாகப் பிரதிபலிக்கிறது. இவரின் எழுத்து கதை சொல்லும் அழகு வசீகரமாகவே இருக்கிறது. இரவு உணவிற்காகக் காத்திருக்கும் வதை முகாமில் இருக்கும் எல்லோரும் எவ்வாறு தங்கள் மனநிலை இருந்தது, அந்த இரவு எப்படி உலகத்தில் இருக்கிறது என்பதை அங்கே பகல் போய் இரவு தொடங்க ஆரம்பமாகிற இயற்கை அழகினை வெகு அற்புதமாக வர்ணிக்கிறார். அவ்வாறு இருக்கும் இயற்கையின் ரம்மியத்தில் திடீரென வரும் புயல்வேகத்தில் ஆவேசமாக வீசும் காற்று என்று சொல்லிக்கொண்டே பிறகு அந்த அமைதியாக இருந்த அந்த வதை முகாமில் திடீரென வரும் ஒரு புயல்.

அமைதியின் ஆழ்ந்த நேரத்தில் எல்லோரும் இரவு உணவிற்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேளையில் இருபது ரஷ்ய வீரர்கள் கைகளை முட்கம்பிகளால் பின்புறமாகக் கட்டப்பட்டு அழைத்து வருகின்றார்கள்.

பிறகு எல்லோருக்கும் இன்று இரவு உணவு இல்லையெனச் சத்தமாக அறிவிக்கிறார்கள். பசியுடன் நிற்கும் அந்த வீரர்களைப் புதிதாக வந்த ராணுவ வீரர்கள் பின்புறமாகத் துப்பாக்கி ஏந்தி அவர்களை கமாண்டர் அறிவித்தவுடன் சுட்டுக் கொள்கின்றனர், பிறகு பிரேதங்களை ஓரத்தில் குவித்துவிட்டுச் செல்கின்றனர்.

என மிக உருக்கமாக வெளிப்படும் வதை முகாமின் வதைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். வாசிக்கும் போது மனதில் ஒருவிதமான அதிர்வு உணர்வுகள் எழுகிறது.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

30 ஜூலை 2021

Thursday, 29 July 2021

நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 2 - வாசிப்பு அனுபவம்

 நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி - 2

சிறுகதை தொகுப்பு 

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 55


ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டு நவீனச் சிறுகதைகளைக் கொண்ட அருமையான தொகுப்புதான் இந்த நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 2.

அனிபால் மோந்தேய்ரோ மச்சாதோ (1895-1964): பிரேசில் நாட்டை சேர்ந்த இவர்  அரசு வழக்குரைஞராக பணிபுரிந்தவர் ஆனால் குறுகிய காலத்திலே அந்த பணியினை விட்டுவிட்டு ஆசிரியராக  பணியினை ஆரம்பித்து பின்னர் தனது எழுத்துக்களை வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தினார்.

இவரின் கதை தான் "பியானோ" -  இந்த கதையினை வில்லியம் கிராஸ்மன் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தார் அவற்றிலிருந்து  தமிழுக்கு  சி. மோகன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்த கதை மிகவும் சிறப்பானதொரு கதை. 

பியானோ வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை இடைவிடாமல் வாசிக்க நேர்ந்த ஒரு கதை. மூன்று தலைமுறைகளைக் கடந்த ஒரு பியானோ இப்போது தனது மகள் சாராவுக்கு திருமணம் செய்து அவள் தனது கணவனுடன் தங்கள் வீட்டிலே தனியாக  வசிக்கத் தனியறை தேவைப்படுவதால் இப்போது பியானோ இருக்கும் அந்த அறையினை பயன்படுத்திக்கொள்வதற்கு மற்றும் அந்த பியானோவினை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வருகின்றார்  அப்பா ஜோ டி  ஒலிவெய்ரா. 

பியானாவினை வாங்குவதற்காக வந்திருக்கும் ஒருவன்  தரம் கெட்டவர்கள் அதனால் தான்  அவர்களை தொரத்திவிட்டுவிட்டேன் என்று ஆரம்பிக்கும் இந்த கதை எப்படி இந்த பியானோ அவர்கள் வீட்டிலிருந்து இடம் பெயருகிறது என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமான கட்சிகளுடன் நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.

ஜோ டி  ஒலிவெய்ராவிற்கு தனது மூன்று தலைமுறைகள் பயன்படுத்திய, கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ரத்த உறவுகளின் கைகளால் வாசிக்க பட்ட இந்த அற்புதமான ஒரு கலை பொருளினை எப்படி வேறொருவருக்கு  கொடுப்பது என்று மனமில்லாமல் இரு மனதாக தன்னுள்ளே அல்லாடிக்கொண்டிருக்கிறார். அதே சமயம் மகள் சாராவின் திருமணத்திற்கு உடைகளை வாங்குவதற்காகவும் அவள் திருமணமாகி தங்கள் வீட்டிலேயே தனியறையில் வசிப்பதற்காகவும் இந்த பியானோவினை வேற இடத்திற்கு மாற்ற  வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறார். இதற்கு மனைவி ரோஸலியா வும் அவனுக்குத் துணையாக இருக்கிறாராள்.

செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கின்றனர், வெகு வானவர்கள் வருகின்றனர் ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை, இவர்களில் ஒருவன் செம்பட்டை தலைமுடியினை கொண்டவன் இவன் இரண்டு மூன்று முறைகள் வருகின்றான் ஆனால் அவனும் மற்றும் வந்து போன யாரும் வாங்கவில்லை, ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த ஜோ டி ஒலிவெய்ரா, தனது உறவினர் ஒருவருக்கு இதைப் பரிசாகக் கொடுக்கிறேன் எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார் அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு பிறகு எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர்.

காலம் காலமாக நம்முடனே இருக்கும் ஒரு பொருளினை நாம் பொருளாகப் பார்க்கமாட்டோம் மாறாக நம்மில் ஒரு உயிராகவே மதிப்பது மனிதர்களின் இயல்பு இந்த ஒரு சிறு உயிரோட்டத்தினை மையமாகக் கொண்டு தான் இந்தக் கதை நகர்கிறது. 

யாருமே வாங்க முன் வராத நிலையில் ஜோ. டி. ஒலிவெய்ரா  ஒரு முடிவுக்கு வருகிறார், எப்படியாவது இந்த பியானாவினை கொண்டு கடலில் வீசிவிடுவதென்று அதற்காகப் பெரிய ஆள்களைக் கொண்டுவந்தார் அவர்கள் இதைச் செய்ய மறுக்க பிறகு அங்கு இருக்கும் சிறுவர்களைக் கொண்டு நான் நினைத்த காரியத்தினை முடித்துவிடுகிறார்.

கடலில் வீசிய பிறகுதான் மேலும் பிரச்சினைகள் அவரை சூழ்ந்துகொள்கிறது. அரசாங்கத்தால் பல்வேறு நெருக்கடிகள், அரசாங்க அனுமதியில்லாமல் எந்த ஒரு பொருளையும் கடலில் வீசக் கூடாது என்றும் அதற்காக அவரை விசாரணை செய்கின்றனர். நாம் இப்போது யுத்த காலத்தில் இருக்கிறோம் அதனால் இது போல் செய்வது தவறென்று சொல்கின்றார்கள்.

இறுதியில் எல்லாம் முடிந்தபிறகு நம்முடன் வாழ்ந்த ஒரு சக உயிர் பிறந்ததது போல அவர்கள் வீடு கலை இழந்து துக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறது.

மிக அழகாகவும் உணர்ச்சியுடனும் கதையினை முடித்திருக்கிறார் அதாவது இறுதியில் தனது மகள் சாரா மணமுடிக்க வேண்டும் பிறகு அவளுடைய கணவருடன் அவள் இங்கு வாழவேண்டும் என்றும் அதற்காகத்தான்  இந்த தனியறை உருவாவதற்காக பியானோவினை அப்புறப்படுத்தினார்கள் ஆனால் சாராவின் கணவருக்கு பியானோ மிகவும் பிடித்தது என்றதும் ஜோ டி ஒலிவெய்ரா அடையும் துயரம் எல்லையில்லாதது மட்டுமல்லாமல் மற்றொரு புறம் அந்த செம்பட்டை தலைக்காரன் வருகிறான், இந்த முறை அவன் பிணயோவிற்கு என்ன விலையானாலும் கொடுத்த வாங்கிக் கொண்டு போக தயாராக வந்திருக்கிறான்.

ஜோ. டி. ஒலிவெய்ரா வின் மனதை விட வாசித்த நமது மனம் அல்லாடுகின்றது அய்யோ பாவம் ஏன் இப்படி செய்தாரென்று.


ஸீந்தியா ஓசிக் -1928:  மிகச் சிறந்த ஒரு பெண் எழுத்தாளர். இவரின் இந்த கதை ஜெர்மானியர்களின் தொழில்நுட்பத்தால் வெளியான விஷ வாயுவின் விளைவாக இருக்கும் ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு தான் "சால்வை" என்று கதையினை கொடுத்திருக்கிறார். 

சால்வை:  விஷ வாயுவின் நேரடி தாக்கத்தால் நிகழ்ந்த கொடூரத்தின் வெளிப்பதாக அமைந்த கதைகளிலே இந்த சால்வை மிகச் சிறந்த கதையாகும் என்கிறார்கள். ரோஸா, ஸ்டெல்லா மாறும் மாக்தா என மூன்று பெண்களின் கதையினை மிக நேர்த்தியாகச் சொல்லிச் செல்கிறார். வாயு தாங்கியதால் இவர்களின் உடல் நலம் மிகவும் மோசமாக இருப்பதும் இவர்கள் உடலே வெறும் எலும்பு மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார்.

மாக்தா, சின்ன குழந்தை போலவே இருக்கிறாள் அவளுக்கு வேண்டிய பால் கூட ரோஸாவின் மார்பில் சுரக்கவில்லை வெறும் மார்பை மட்டும் சப்பி கொண்டியிருக்கும் மாக்த்தாவிற்கு கிடைக்கும் ஒரு பெரிய உயிர்நாடியாக வருவதே " சால்வை", இந்த மந்திர சால்வை அவளுக்குத் தேவையான உணவு கொடுக்கிறது அதாவது அதைச் சப்பினால் பாலுக்கு ஈடாகக் கொஞ்சம் வேற ஒரு திரவம் ஊரும் அதுவே போதும் மாக்த்தாவிற்கு.

இவர்கள் எல்லோரும் காற்று போலவே மெலிந்து இருக்கிறார்கள், ரோஸாவிற்கு எப்போதும் ஒரு பயம் எப்படியாவது ஸ்டெல்லா மாக்தா வை கொன்று தின்றுவிடுவாள் என்று ஆனால் அதற்காக அவள் மிகவும் சிரத்தை எடுத்துப் பாதுகாத்துக் கொள்கிறாள். 

இறுதியில் மாக்தா காற்றில் பறந்தது போய் உயிர்விடுகிறாள் அவற்றைக் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும் ரோஸாவால் அவளின் உடல் எலும்புகளைப் போய் பொறுக்கி எடுத்துவர ஓட முடியவில்லை அப்படி மீறி ஓடினாள் அவளைச் சுட்டுவிடுவார்கள் என்ற அச்சம். 

இவர்களின் வாழ்க்கை இந்த அச்சத்தின் உச்சத்தில் பயணிக்கிறது.


நல்ல அருமையான இரண்டு சிறுகதைகளை வாசித்த உணர்வோடு இந்த பதிவினை பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

29 ஜூலை 2021

Wednesday, 28 July 2021

நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி -1 - வாசிப்பு அனுபவம்

 நவீன உலகச் சிறுகதைகள் 

தொகுதி -1

சிறுகதை தொகுப்பு 

ஆசிரியர் :  ஃப்ரன்ஸ் காஃப்கா   

தமிழில் : சி. மோகன் 

கிண்டில் பதிப்பு 

விலை ரூபாய் 49

பக்கங்கள் 44



ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "ஃப்ரன்ஸ் காஃப்கா" அவர்களின் இரண்டு சிறுகதைகளைக் கொண்ட ஒரு  தொகுப்புதான் இந்த "நவீன உலகச் சிறுகதைகள்"

இருபதாம் நூற்றாண்டின் உரைநடையில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திய ஒரு படைப்பாளி தான் ஃப்ரன்ஸ் காஃப்கா என்கிறார்.  இவரின் படைப்புகள் பெரும்பாலும் தனிமை, ரகசியம், பயம், குழப்பம், அதிகாரம், குற்றம், தோல்வி மற்றும் காதல் எனத் தனது வாழ்நாளில் அனுபவித்த பல்வேறு நிகழ்வுகளை மையமாகக் கொண்டே இவரின் படைப்புகள் இருக்கும் என்கிறார்.

1883 ல் பிறந்து 1924 ல் நோயினால் இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார் ஆனால் அவர் விட்டுச் சென்ற அவரின் எழுத்துக்கள் இந்த பரந்த உலகில் எதோ ஒரு மூலையில் உயிர்ப்பித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதோ என்னால் இங்கே ...

இரண்டு சிறுகதைகள் கொண்டுள்ளது இந்த தொகுப்பு.

"தீர்ப்பு" இந்த கதையினை அவர் ஒரே இரவில் எழுதி முடித்ததாகச் சொல்லப்படுகிறது.   ஜார்ஜ் அவனுடைய நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதுவதாகத் தொடங்கும் இந்த கதையில், ஜார்ஜ் தன் அம்மாவினை இழந்து தந்தையோடு அதே வீட்டில் தனியறையில் வசிக்கிறான். தனக்குத் திருமணம் நிச்சயமான விவரத்தை அவனிடம் சொல்லும் பொருட்டு அந்த கடிதம் எழுதியதாகச் சொல்லிக்கொண்டு அவன் வருகிறான். 

தனது கடித தொடர்பினை தனது தந்தைக்குச் சொல்வதற்காக அவரின் அறைக்குச் செல்கிறான் ஆனால் அந்த அறை இருண்டு கிடக்கிறது. ஆனால் அவன் தந்தை அந்த அறையில் சாளரத்தின் ஓரமாக அமர்ந்து செய்தித்தாள் வாசிக்கிறார். இருவருக்கும் ஏற்படும் உரையாடல்கள் பாசத்தில் ஆரம்பித்து இருவரின் உண்மையான முகத்திரையினை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் ஆழமாக விவாதங்களைக் கொண்டிருக்கிறது.

அந்த நண்பன் உண்மையில் இருக்கிறானா இல்லையா என்ற கேள்வி இருவரின் உரையாடல்களுக்கு நடுவே நமக்கு எழுகிறது. அவன் உண்மையில் இருக்கிறான் என்றும் அவனுக்கு அனைத்து விவரங்களையும் நானே கடிதம் எழுதுகிறேன் என்றும் அவனின் தந்தை கூறும்போது அது ஊர்ஜிதமாகிறது

இறுதியில் தந்து மகன் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக அவர் கூறும் தீர்ப்பு தான் நீ தண்ணீரில் மூழ்கி மரித்துப்போவாய் எனவும் பிறகு அவரும் விழுந்து விடுகிறார் ஆவேசமாக அங்கிருந்து புறப்படும் ஜார்ஜ் வழியில் இருக்கும் ஆற்றில் குதித்து விடுகிறான்.   


கிராம மருத்துவர்: ஒரு மருத்துவர் சொல்லும் விதமாக கதை நகர்கிறது, மருத்துவரின் ஒரு நோயாளி கிராமத்தில் மிகவும் சிரமத்தில் இருக்கிறார் அவருக்கு உடனே மருத்துவன் தேவை அதற்காகத் தான் நான் கிளம்பி இருக்கிறேன் ஆனால் என் குதிரை நேற்றிரவு இறந்து போய்விட்டது, வேறு வழியில்லாமல் பணிப்பெண் கிராமத்தில் யாரிடமாவது குதிரை கடன் வாங்கச் சென்றுள்ளாள் ஆனால் அவளோ தனியாகத்தான் திரும்புகிறாள் என்று புலம்பிக்கொண்டே நிற்கிறார்.

தந்து வீட்டுக் குதிரை பராமரிப்பாளன் செய்யும் அற்புதத்தில் இரண்டு குதிரைகள் வருகிறது ஆனால் அவனையும் உடன் அழைக்கிறார் ஆனால் அவன் மறுக்கிறான் வீட்டுப் பணிப்பெண்ணின் மீது அவனின் பார்வை போகிறது அங்கே சில அசம்பாவிதங்கள் நடக்கிறது ஆனால் குதிரைவண்டி வெள்ளத்தில் அடித்துப் போன மரம்போல வெகு விரைவில் நோயாளியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது

அந்த பண்ணை வீட்டில் நோயுற்று இருக்கும் இளைஞன் தான் சாவ விரும்புகிறேன் என்கிறான் அதற்கு அவர் மனம் கடினப்படுகிறார் இடையில் தன் வீட்டுப் பணிப்பெண் இப்படியான ஒரு நிலைக்குத் தள்ளி விட்டோமே என்று மனம் வருந்துகிறார். மீண்டும் நிதானித்துக்கொண்டு அந்த நோயாளியினை நெருங்குகிறார். இப்போது அவரின் கண்களுக்குத் தெரிகிறது அவன் இடுப்பில் இருக்கும் புழு புழுத்த புண், அவன் இப்போது கேட்கிறான் நீங்கள் என்னைக் காப்பாற்றிவிடுவீர்களா? என்று. 

மனம் நொந்துபோய், தனக்குள்ளே நினைத்துக் கொள்கிறார் இவ்வாறாக "பாதிரியார் வீட்டில் அமர்ந்துகொண்டு தன் ஆடையினை கழற்றிக்கொண்டு இருப்பர் ஆனால் மருத்துவரோ தன கருனை மிக்க ரணசிகிச்சைக் கையோடு சர்வ வல்லமை பொருந்தியவராக இருக்கவேண்டும் என்றும் அவர் முயன்றார். ஆனால் அவர்களின் வஞ்சகத்தால் அவர் அவர்களிடம் மாட்டிக்கொள்கிறார். நீண்ட முயற்சிக்குப் பிறகு அங்கிருந்து தப்பித்து வருகிறார் ஆனால் தன் வீட்டுப் பணிப்பெண் நிலைமையினை நினைத்து வருந்துகிறார். இறுதியில் நான் ஏமாற்றப்பட்டேன் என்ற நிலையில் நிற்கிறார். 


இரண்டு கதைகளும் ஒரு வித்தியாசமான கதையாக இருக்கிறது. உணர்ச்சிகளின் வெளிப்பாடு தான் இந்த மருத்துவரின் கதை அதேபோல ஒரு மகனின் தந்தை மனதில் ஏற்படும் காயம் அதன் விளைவாக அவர் கொடுக்கும் தீர்ப்பு . 


அன்புடன்,

தேவேந்திரன் ராமையன் 

28 ஜூலை 2021