நவீன உலகச் சிறுகதைகள்
தொகுதி -1
சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : ஃப்ரன்ஸ் காஃப்கா
தமிழில் : சி. மோகன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 44
ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "ஃப்ரன்ஸ் காஃப்கா" அவர்களின் இரண்டு சிறுகதைகளைக் கொண்ட ஒரு தொகுப்புதான் இந்த "நவீன உலகச் சிறுகதைகள்".
இருபதாம் நூற்றாண்டின் உரைநடையில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திய ஒரு படைப்பாளி தான் ஃப்ரன்ஸ் காஃப்கா என்கிறார். இவரின் படைப்புகள் பெரும்பாலும் தனிமை, ரகசியம், பயம், குழப்பம், அதிகாரம், குற்றம், தோல்வி மற்றும் காதல் எனத் தனது வாழ்நாளில் அனுபவித்த பல்வேறு நிகழ்வுகளை மையமாகக் கொண்டே இவரின் படைப்புகள் இருக்கும் என்கிறார்.
1883 ல் பிறந்து 1924 ல் நோயினால் இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார் ஆனால் அவர் விட்டுச் சென்ற அவரின் எழுத்துக்கள் இந்த பரந்த உலகில் எதோ ஒரு மூலையில் உயிர்ப்பித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதோ என்னால் இங்கே ...
இரண்டு சிறுகதைகள் கொண்டுள்ளது இந்த தொகுப்பு.
"தீர்ப்பு" இந்த கதையினை அவர் ஒரே இரவில் எழுதி முடித்ததாகச் சொல்லப்படுகிறது. ஜார்ஜ் அவனுடைய நண்பனுக்கு ஒரு கடிதம் எழுதுவதாகத் தொடங்கும் இந்த கதையில், ஜார்ஜ் தன் அம்மாவினை இழந்து தந்தையோடு அதே வீட்டில் தனியறையில் வசிக்கிறான். தனக்குத் திருமணம் நிச்சயமான விவரத்தை அவனிடம் சொல்லும் பொருட்டு அந்த கடிதம் எழுதியதாகச் சொல்லிக்கொண்டு அவன் வருகிறான்.
தனது கடித தொடர்பினை தனது தந்தைக்குச் சொல்வதற்காக அவரின் அறைக்குச் செல்கிறான் ஆனால் அந்த அறை இருண்டு கிடக்கிறது. ஆனால் அவன் தந்தை அந்த அறையில் சாளரத்தின் ஓரமாக அமர்ந்து செய்தித்தாள் வாசிக்கிறார். இருவருக்கும் ஏற்படும் உரையாடல்கள் பாசத்தில் ஆரம்பித்து இருவரின் உண்மையான முகத்திரையினை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் ஆழமாக விவாதங்களைக் கொண்டிருக்கிறது.
அந்த நண்பன் உண்மையில் இருக்கிறானா இல்லையா என்ற கேள்வி இருவரின் உரையாடல்களுக்கு நடுவே நமக்கு எழுகிறது. அவன் உண்மையில் இருக்கிறான் என்றும் அவனுக்கு அனைத்து விவரங்களையும் நானே கடிதம் எழுதுகிறேன் என்றும் அவனின் தந்தை கூறும்போது அது ஊர்ஜிதமாகிறது.
இறுதியில் தந்து மகன் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக அவர் கூறும் தீர்ப்பு தான் நீ தண்ணீரில் மூழ்கி மரித்துப்போவாய் எனவும் பிறகு அவரும் விழுந்து விடுகிறார் ஆவேசமாக அங்கிருந்து புறப்படும் ஜார்ஜ் வழியில் இருக்கும் ஆற்றில் குதித்து விடுகிறான்.
கிராம மருத்துவர்: ஒரு மருத்துவர் சொல்லும் விதமாக கதை நகர்கிறது, மருத்துவரின் ஒரு நோயாளி கிராமத்தில் மிகவும் சிரமத்தில் இருக்கிறார் அவருக்கு உடனே மருத்துவன் தேவை அதற்காகத் தான் நான் கிளம்பி இருக்கிறேன் ஆனால் என் குதிரை நேற்றிரவு இறந்து போய்விட்டது, வேறு வழியில்லாமல் பணிப்பெண் கிராமத்தில் யாரிடமாவது குதிரை கடன் வாங்கச் சென்றுள்ளாள் ஆனால் அவளோ தனியாகத்தான் திரும்புகிறாள் என்று புலம்பிக்கொண்டே நிற்கிறார்.
தந்து வீட்டுக் குதிரை பராமரிப்பாளன் செய்யும் அற்புதத்தில் இரண்டு குதிரைகள் வருகிறது ஆனால் அவனையும் உடன் அழைக்கிறார் ஆனால் அவன் மறுக்கிறான் வீட்டுப் பணிப்பெண்ணின் மீது அவனின் பார்வை போகிறது அங்கே சில அசம்பாவிதங்கள் நடக்கிறது ஆனால் குதிரைவண்டி வெள்ளத்தில் அடித்துப் போன மரம்போல வெகு விரைவில் நோயாளியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.
அந்த பண்ணை வீட்டில் நோயுற்று இருக்கும் இளைஞன் தான் சாவ விரும்புகிறேன் என்கிறான் அதற்கு அவர் மனம் கடினப்படுகிறார் இடையில் தன் வீட்டுப் பணிப்பெண் இப்படியான ஒரு நிலைக்குத் தள்ளி விட்டோமே என்று மனம் வருந்துகிறார். மீண்டும் நிதானித்துக்கொண்டு அந்த நோயாளியினை நெருங்குகிறார். இப்போது அவரின் கண்களுக்குத் தெரிகிறது அவன் இடுப்பில் இருக்கும் புழு புழுத்த புண், அவன் இப்போது கேட்கிறான் நீங்கள் என்னைக் காப்பாற்றிவிடுவீர்களா? என்று.
மனம் நொந்துபோய், தனக்குள்ளே நினைத்துக் கொள்கிறார் இவ்வாறாக "பாதிரியார் வீட்டில் அமர்ந்துகொண்டு தன் ஆடையினை கழற்றிக்கொண்டு இருப்பர் ஆனால் மருத்துவரோ தன கருனை மிக்க ரணசிகிச்சைக் கையோடு சர்வ வல்லமை பொருந்தியவராக இருக்கவேண்டும் என்றும் அவர் முயன்றார். ஆனால் அவர்களின் வஞ்சகத்தால் அவர் அவர்களிடம் மாட்டிக்கொள்கிறார். நீண்ட முயற்சிக்குப் பிறகு அங்கிருந்து தப்பித்து வருகிறார் ஆனால் தன் வீட்டுப் பணிப்பெண் நிலைமையினை நினைத்து வருந்துகிறார். இறுதியில் நான் ஏமாற்றப்பட்டேன் என்ற நிலையில் நிற்கிறார்.
இரண்டு கதைகளும் ஒரு வித்தியாசமான கதையாக இருக்கிறது. உணர்ச்சிகளின் வெளிப்பாடு தான் இந்த மருத்துவரின் கதை அதேபோல ஒரு மகனின் தந்தை மனதில் ஏற்படும் காயம் அதன் விளைவாக அவர் கொடுக்கும் தீர்ப்பு .
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
28 ஜூலை 2021
No comments:
Post a Comment