நவீன உலகச் சிறுகதைகள்
தொகுதி - 2
சிறுகதை தொகுப்பு
தமிழில் : சி. மோகன்
கிண்டில் பதிப்பு
விலை ரூபாய் 49
பக்கங்கள் 55
ஆசிரியர் சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இரண்டு நவீனச் சிறுகதைகளைக் கொண்ட அருமையான தொகுப்புதான் இந்த நவீன உலகச் சிறுகதைகள் தொகுதி - 2.
அனிபால் மோந்தேய்ரோ மச்சாதோ (1895-1964): பிரேசில் நாட்டை சேர்ந்த இவர் அரசு வழக்குரைஞராக பணிபுரிந்தவர் ஆனால் குறுகிய காலத்திலே அந்த பணியினை விட்டுவிட்டு ஆசிரியராக பணியினை ஆரம்பித்து பின்னர் தனது எழுத்துக்களை வெளியுலகத்திற்கு வெளிப்படுத்தினார்.
இவரின் கதை தான் "பியானோ" - இந்த கதையினை வில்லியம் கிராஸ்மன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் அவற்றிலிருந்து தமிழுக்கு சி. மோகன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட இந்த கதை மிகவும் சிறப்பானதொரு கதை.
பியானோ வாசிக்க ஆரம்பித்ததிலிருந்து முடிக்கும் வரை இடைவிடாமல் வாசிக்க நேர்ந்த ஒரு கதை. மூன்று தலைமுறைகளைக் கடந்த ஒரு பியானோ இப்போது தனது மகள் சாராவுக்கு திருமணம் செய்து அவள் தனது கணவனுடன் தங்கள் வீட்டிலே தனியாக வசிக்கத் தனியறை தேவைப்படுவதால் இப்போது பியானோ இருக்கும் அந்த அறையினை பயன்படுத்திக்கொள்வதற்கு மற்றும் அந்த பியானோவினை விற்றுவிடலாம் என்ற முடிவுக்கு வருகின்றார் அப்பா ஜோ டி ஒலிவெய்ரா.
பியானாவினை வாங்குவதற்காக வந்திருக்கும் ஒருவன் தரம் கெட்டவர்கள் அதனால் தான் அவர்களை தொரத்திவிட்டுவிட்டேன் என்று ஆரம்பிக்கும் இந்த கதை எப்படி இந்த பியானோ அவர்கள் வீட்டிலிருந்து இடம் பெயருகிறது என்பதை மிகவும் உணர்ச்சிப்பூர்வமான கட்சிகளுடன் நம்மை அழைத்துச் செல்கிறார் ஆசிரியர்.
ஜோ டி ஒலிவெய்ராவிற்கு தனது மூன்று தலைமுறைகள் பயன்படுத்திய, கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ரத்த உறவுகளின் கைகளால் வாசிக்க பட்ட இந்த அற்புதமான ஒரு கலை பொருளினை எப்படி வேறொருவருக்கு கொடுப்பது என்று மனமில்லாமல் இரு மனதாக தன்னுள்ளே அல்லாடிக்கொண்டிருக்கிறார். அதே சமயம் மகள் சாராவின் திருமணத்திற்கு உடைகளை வாங்குவதற்காகவும் அவள் திருமணமாகி தங்கள் வீட்டிலேயே தனியறையில் வசிப்பதற்காகவும் இந்த பியானோவினை வேற இடத்திற்கு மாற்ற வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறார். இதற்கு மனைவி ரோஸலியா வும் அவனுக்குத் துணையாக இருக்கிறாராள்.
செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கின்றனர், வெகு வானவர்கள் வருகின்றனர் ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை, இவர்களில் ஒருவன் செம்பட்டை தலைமுடியினை கொண்டவன் இவன் இரண்டு மூன்று முறைகள் வருகின்றான் ஆனால் அவனும் மற்றும் வந்து போன யாரும் வாங்கவில்லை, ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்த ஜோ டி ஒலிவெய்ரா, தனது உறவினர் ஒருவருக்கு இதைப் பரிசாகக் கொடுக்கிறேன் எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறார் அவர்களும் சரி என்று சொல்லிவிட்டு பிறகு எடுத்துக்கொள்ள மறுக்கின்றனர்.
காலம் காலமாக நம்முடனே இருக்கும் ஒரு பொருளினை நாம் பொருளாகப் பார்க்கமாட்டோம் மாறாக நம்மில் ஒரு உயிராகவே மதிப்பது மனிதர்களின் இயல்பு இந்த ஒரு சிறு உயிரோட்டத்தினை மையமாகக் கொண்டு தான் இந்தக் கதை நகர்கிறது.
யாருமே வாங்க முன் வராத நிலையில் ஜோ. டி. ஒலிவெய்ரா ஒரு முடிவுக்கு வருகிறார், எப்படியாவது இந்த பியானாவினை கொண்டு கடலில் வீசிவிடுவதென்று அதற்காகப் பெரிய ஆள்களைக் கொண்டுவந்தார் அவர்கள் இதைச் செய்ய மறுக்க பிறகு அங்கு இருக்கும் சிறுவர்களைக் கொண்டு நான் நினைத்த காரியத்தினை முடித்துவிடுகிறார்.
கடலில் வீசிய பிறகுதான் மேலும் பிரச்சினைகள் அவரை சூழ்ந்துகொள்கிறது. அரசாங்கத்தால் பல்வேறு நெருக்கடிகள், அரசாங்க அனுமதியில்லாமல் எந்த ஒரு பொருளையும் கடலில் வீசக் கூடாது என்றும் அதற்காக அவரை விசாரணை செய்கின்றனர். நாம் இப்போது யுத்த காலத்தில் இருக்கிறோம் அதனால் இது போல் செய்வது தவறென்று சொல்கின்றார்கள்.
இறுதியில் எல்லாம் முடிந்தபிறகு நம்முடன் வாழ்ந்த ஒரு சக உயிர் பிறந்ததது போல அவர்கள் வீடு கலை இழந்து துக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறது.
மிக அழகாகவும் உணர்ச்சியுடனும் கதையினை முடித்திருக்கிறார் அதாவது இறுதியில் தனது மகள் சாரா மணமுடிக்க வேண்டும் பிறகு அவளுடைய கணவருடன் அவள் இங்கு வாழவேண்டும் என்றும் அதற்காகத்தான் இந்த தனியறை உருவாவதற்காக பியானோவினை அப்புறப்படுத்தினார்கள் ஆனால் சாராவின் கணவருக்கு பியானோ மிகவும் பிடித்தது என்றதும் ஜோ டி ஒலிவெய்ரா அடையும் துயரம் எல்லையில்லாதது மட்டுமல்லாமல் மற்றொரு புறம் அந்த செம்பட்டை தலைக்காரன் வருகிறான், இந்த முறை அவன் பிணயோவிற்கு என்ன விலையானாலும் கொடுத்த வாங்கிக் கொண்டு போக தயாராக வந்திருக்கிறான்.
ஜோ. டி. ஒலிவெய்ரா வின் மனதை விட வாசித்த நமது மனம் அல்லாடுகின்றது அய்யோ பாவம் ஏன் இப்படி செய்தாரென்று.
ஸீந்தியா ஓசிக் -1928: மிகச் சிறந்த ஒரு பெண் எழுத்தாளர். இவரின் இந்த கதை ஜெர்மானியர்களின் தொழில்நுட்பத்தால் வெளியான விஷ வாயுவின் விளைவாக இருக்கும் ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு தான் "சால்வை" என்று கதையினை கொடுத்திருக்கிறார்.
சால்வை: விஷ வாயுவின் நேரடி தாக்கத்தால் நிகழ்ந்த கொடூரத்தின் வெளிப்பதாக அமைந்த கதைகளிலே இந்த சால்வை மிகச் சிறந்த கதையாகும் என்கிறார்கள். ரோஸா, ஸ்டெல்லா மாறும் மாக்தா என மூன்று பெண்களின் கதையினை மிக நேர்த்தியாகச் சொல்லிச் செல்கிறார். வாயு தாங்கியதால் இவர்களின் உடல் நலம் மிகவும் மோசமாக இருப்பதும் இவர்கள் உடலே வெறும் எலும்பு மட்டுமே இருப்பதாகச் சொல்கிறார்.
மாக்தா, சின்ன குழந்தை போலவே இருக்கிறாள் அவளுக்கு வேண்டிய பால் கூட ரோஸாவின் மார்பில் சுரக்கவில்லை வெறும் மார்பை மட்டும் சப்பி கொண்டியிருக்கும் மாக்த்தாவிற்கு கிடைக்கும் ஒரு பெரிய உயிர்நாடியாக வருவதே " சால்வை", இந்த மந்திர சால்வை அவளுக்குத் தேவையான உணவு கொடுக்கிறது அதாவது அதைச் சப்பினால் பாலுக்கு ஈடாகக் கொஞ்சம் வேற ஒரு திரவம் ஊரும் அதுவே போதும் மாக்த்தாவிற்கு.
இவர்கள் எல்லோரும் காற்று போலவே மெலிந்து இருக்கிறார்கள், ரோஸாவிற்கு எப்போதும் ஒரு பயம் எப்படியாவது ஸ்டெல்லா மாக்தா வை கொன்று தின்றுவிடுவாள் என்று ஆனால் அதற்காக அவள் மிகவும் சிரத்தை எடுத்துப் பாதுகாத்துக் கொள்கிறாள்.
இறுதியில் மாக்தா காற்றில் பறந்தது போய் உயிர்விடுகிறாள் அவற்றைக் கண்களால் பார்த்துக் கொண்டிருக்கும் ரோஸாவால் அவளின் உடல் எலும்புகளைப் போய் பொறுக்கி எடுத்துவர ஓட முடியவில்லை அப்படி மீறி ஓடினாள் அவளைச் சுட்டுவிடுவார்கள் என்ற அச்சம்.
இவர்களின் வாழ்க்கை இந்த அச்சத்தின் உச்சத்தில் பயணிக்கிறது.
நல்ல அருமையான இரண்டு சிறுகதைகளை வாசித்த உணர்வோடு இந்த பதிவினை பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
29 ஜூலை 2021
No comments:
Post a Comment