Friday, 11 September 2020
மணிபல்லவம் - வாசிப்பு அனுபவம்
Saturday, 5 September 2020
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் !
ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் !
ஒவ்வொரு தனி மனிதனும் எதாவது ஒரு விதத்தில் பல ஆசிரியர்களை கொண்டுதான் முன்னேறி இருப்பான் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது.
வாழ்வின் முதல் நாள் தொடங்கி இன்றுவரை கற்றுக் கொடுத்து கொண்டிருக்கும் அம்மா அப்பாவிற்கு முதல் நன்றி.
அப்படி நான் கடந்து வந்த பாதையில் என்னை மெருகூட்டிய ஆசிரியர்களை நினைவுகூரவே இந்த பதிவினை இடுகிறேன்.
நான் எனது தொடக்க பள்ளி படிப்பினை செண்பகச்சேரி கிராமத்தில் இருக்கும் அரசினர் ஆரம்ப தொடக்க பள்ளியில்தான் ஆரம்பித்தேன். இந்த பள்ளியில் என்ன ஒரு மாணவனாக செதுக்கியது இரண்டு ஆசிரியர்கள். அவர்கள்தான் திரு. வ. கலியமூர்த்தி மற்றும் திரு. கணேசன் அவர்கள்.
பின்னர் திருமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எனது படிப்பினை ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்தேன். இங்கு எனக்கு அறிவு புகட்டிய ஆசிரியர்கள் திரு. ஆறுமுகம் (ஆங்கிலம்), திரு . வே. சம்பந்தம் (கணக்கு), திரு. நடராசர் (தமிழ்) திரு பி.சௌந்தரராஜன் (அறிவியல்), திரு. பூலோகம் (வரலாறு-புவியியல்) , திரு ஜி.முருகேசன் (GM) மற்றும் TR கலியமூர்த்தி (TRK), ஆகியோர்களை இந்த நாளில் நினைவுகூர்வதில் மகிழ்ச்சி.
தொடர்ந்து குத்தாலம் அரசினர் மேல்நிலை பள்ளியில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தேன். அங்கே எனது வகுப்பாசிரியர் பி.கருணாகரன் - அரசியல் பாடம், தலைமை ஆசிரியர் சம்பந்தம், கணக்கு ஆசிரியர் வி. சண்முகசுந்தரம் (VSS). கணக்கு பதிவியல் மற்றும் வணிகவியல் ஆசிரியர் அமரேசன் ஆகியோர்களையும் இந்த நாளில் வணங்குகிறேன்.
பூம்புகார் கலை கல்லூரியிலே, வணிகவியல் இளங்கலை பயின்ற போது வேறொரு விதமாக என்னை உருவாக்கிய ஆசிரியர்கள் திரு. சக்கரைவேல் (கல்லூரி முதல்வர்), வணிகவியல் துறை தலைவர், திரு எ.பழனிவேல், விரிவுரையாளர்கள் திரு. கணேசன், திரு. பன்னிர்செல்வம், திரு. கிருஷ்ணமூர்த்தி , திரு. ராஜாராம், திரு. செல்வராஜ், திரு. ராஜராஜன் மற்றும் அலமேலு அக்கா ஆகியோர்களுக்கு வணக்கம்.
பதினோராம் வகுப்பு தொட்டு கல்லூரி காலம் எனக்கு பயிற்றுவித்த ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு விதத்தில் இன்று என்னை இன்று இருக்கும் நானாக செதுக்கி இருக்கிறார்கள். என்னுள் ஒரு ஆடிட்டர் ஆக வேண்டும் என்று விதையினை விதைத்த ஆசிரியர் குத்தாலம் சீனிவாசன் அவர்களுக்கும் என்றென்றும் என்னுடைய நன்றிகளும் வணக்கங்களும்.
ஆடிட்டர் படிப்பினை கற்று கொடுத்த திரு. ஜி. சூரியநாராயணன் அவர்களுக்கும் நன்றிகளும் வணக்கங்களும்.
எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் எனக்கு க்கு எதாவது ஒன்றை கற்று கொடுக்கும் காலத்திற்கும் ஆசிரியர் தின வணக்கங்கள்.
நன்றியுடன் ராம. தேவேந்திரன்
Thursday, 3 September 2020
சாயாவனம் - வாசிப்பு அனுபவம்
நூல் : சாயாவனம்
ஆசிரியர் : அமரர் சா. கந்தசாமி
இந்த நூலினை வாசிக்கும் போது நான் பிறந்து வளர்ந்த மண்ணில் மீண்டும் ஒரு நடை பயணம் போனது போல ஒரு உணர்வு வந்தது என்றால் அது மிகையாகாது!
கதையின் களமாக இருக்கும் மாங்குடி, மல்லிகை கொல்லை, சீர்காழி , வைத்தீஸ்வரன் கோவில், குத்தாலம், கூறைநாடு, மாதானம், மாயவரம் மற்றும் கும்மோணம் என சுற்றி உள்ள அனைத்து ஊர்களும் நான் சுற்றி திரிந்த ஊர்களே என்பதால் இந்த கதையின் மீது ஒரு அதீத ஆர்வம். ஆனால் கதையில் வரும் முக்கியமான இடம் சாயாவனம் (சீர்காழி - பூம்புகார் சாலையில் இருக்கும் ஒரு சிவன் ஆலயத்தின் ஊர் பெயர் - மயிலாடுதுறையிலிருந்து 20 கிலோ மீட்டர்).
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பான காலத்தில் இந்த கதை தொடங்கிறது, கதையின் நாயகன் சிதம்பரம் தனது சிறுவயதில் தாயுடன் பிழைப்பதற்காக இலங்கை சென்று வெகுநாட்களுக்கு பிறகு இப்போது ஒற்றை ஆளாய் திரும்பி தனது தாய் மாமன் சிவனாண்டி தேவர் ஊரான சாயாவனத்துக்கு வருகிறான். வந்தபின்னர் அந்த ஊரின் பெரிய நிலக்கிழாரான சாம்பமூர்த்தி ஐயரிடமிருந்து ஒரு பெரிய வனத்தினை வாங்கி அதில் ஒரு சர்க்கரை ஆலை அமைக்கவேண்டி அந்த காட்டினை அழிக்கிறான் அதற்க்கு அவனது மாமா சிவனாண்டி தேவர் பெரும் உதவியாக இருக்கிறார்.
காலம் காலமாக நடப்பது தான் அப்போதெல்லம் காட்டினை அழித்து விவசாயத்திற்க்காக வயல் வெளிகளை உண்டாக்கினார்கள் ஆனால் நாமோ இப்போது அந்த வயல்வெளிகளை அழித்து வீடுகளை உண்டாகிறோம்.
ஆசிரியர், இந்த கதையில் பயன்படுத்தியிருக்கும் வட்டார வழக்கு மிக அருமை. ஒரு கிராமத்து திருமணம் நடைபெரும் விதமும் அதற்க்கு வருகை தரும் உறவினர்கள் எவ்வாறு அப்போதெல்லாம் இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னேரே வருவதும் வந்து திருமண வேலைகளை கூட நின்று செய்வதும் என நமக்கெல்லாம் கிடைக்காத அந்த தருணத்தினையும் மற்றும் அந்த ஊரின் எல்லாத்திசையிலும் அந்த விழாவின் வீட்டு உறவினர்கள் காணப்படுவதையும் இந்த கதையின் வாயிலாக பல விதமாக சொல்லியிருப்பது வாசிக்கும் நாம் அந்த திருமண விழாவிறக்கு சென்று வந்த ஒரு உணர்வு வருகறது.
குறிப்பாக சிவனாண்டி தேவர் தனது மருமகள் குஞ்சம்மாளையும் மற்றும் தனது பேத்தியையும் பாப்பா என்று செல்லமாக அழைக்கும் விதம் அந்த நிலத்தில் எவ்வாறு பெண்களை பாப்பா என்று வெகுவாக அழைக்கும் குறிப்பினை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு வனத்தை அழித்து ஆலை கட்டுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை மிக அழகாக விளக்கியிருக்கிறார். ஒரு வனம் அழியும் பொது அந்த வானத்தையே தனது வாழ்விடமாக எத்தனை பிற உயிரனங்கள் இருந்திருக்கும் அவையெல்லாம் எப்படி அழியும் என்பதையும் மற்றும் நமக்கு கிடைக்கும் காற்று முதல் என பல வழிகளில் நாம் என்னவெல்லாம் இழப்போம் எல்லாம் ஏராளம் என்பதும் ஆனால் உணவு உற்பத்தி தேவையின் காரணமாக ஆலை கட்டுவதும் தேவை என்பதையும் மறைக்க முடியாது என்பன சில உண்மைகளையும் மிக அழகாக சொல்லியிருக்கிறார்.
ஆசிரியர் ஒரு வனத்தில் இருக்கும் பலவிதமான செடி கொடிகள் முதல் நெடு மரங்கள் வரை ஒவ்வொன்றாய் பெயருடன் கொண்டு சென்ற விதம் அருமை. நாயுருவி செடி நமது உடல்களில் ஒற்றிகொள்ளும் என்றும், தேனீக்கள் முதல் எலி, காக்கை மற்ற பறவைகள், சுற்றி திரியும் மாடுகள், நரிகள் என பல்வேறுபட்ட உயிரனங்கள் அந்த வனத்தில் வாழ்வதாகவும் இந்த வனம் அழிந்தால் இவையெல்லாம் எங்கே போகுமே என்று ஒரு கேள்வியுடன் கதையினை நகர்த்தி செல்கிறார்.
இதற்க்காக இவர்கள் இந்த வனத்தினை அழிக்கும் வேலையினை ஆரம்பித்த விதம் நன்றாக இருந்தது ஆனால் போக போக வனத்தை அழிக்க எடுத்துக்கொண்ட வழியே தவறானதாக ஆகிவிட்டது அதனால் சிவனாண்டி தேவரின் புளிய மரங்கள் அழிந்து போனதும், சிதம்பரம் கட்டிய புது வீடு எரிந்து போனதும், பல உயினர்கள் நெருப்போடு சாம்பலாகி போனதும் அரும்பாடுபட்டு சீர்செய்த மூங்கில் மரங்களும் சாம்பலாகி போனதும் என நினைத்து பார்க்காத அளவுக்கு தீ அவர்களின் கனவை புரட்டி போட்டுவிட்டது என்பது ஒரு பக்கம் இருந்தாலும் முடிவில் வனம் அழிந்து சிதம்பரம் தனது இலக்கான சர்க்கரை ஆலையினை கட்டி முடிக்கிறான்.
காலப்போக்கில் அவனது ஆலையின் வெல்லத்திற்கு நல்ல சந்தையும் மதிப்பும் கிடைத்து வியாபாரத்தில் வெற்றி கொள்கிறான் ஆனால் சிவனாண்டி தேவரின் புளியமரங்கள் எரிந்து போனதால் இப்போது அவர் கையிருப்பு புளி தீர்ந்து போனதால் வைத்தீஸ்வரன் கோவில், சீர்காழி, திருவென்காடு மற்றும் காவேரிப்பட்டினம் போய் புளி கொள்முதல் செய்து வாணிபம் செய்யவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டார் என்பதும் ஆனால் அவரால் முன்பு போல தரமான சுவையான புளி கொடுக்க முடியவில்லை என்பதே வனத்தினை அழித்ததற்கு வினையாகி போனது......
அவரின் வியாபாரம் சீர்கெட்டு போனதே ஒரு எதிர் வினை.
நாமும் மரம் வளர்ப்போம் - இயற்கை அன்னையினை பாதுகாப்போம்!!
நன்றியுடன்
ராம. தேவேந்திரன்
யானை டாக்டர் - ஜெயமோகன்
நூல் : யானை டாக்டர்
ஆசிரியர் - ஜெயமோகன்
இது ஒரு குறு நாவல். தாங்கியிருக்கும் கரு ஒரு மாமனிதனின் வாழ்வினை படம் பிடித்து காட்டுகிறது. டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களை பற்றிய கதைதான் இந்த நாவல்.
ஆசிரியர் இந்தநூலில் யானைகளையும், அதன் இயற்கையான வாழ்விடமான காடுகளையும் மனிதன் தன் சுயநலத்திற்காக எப்படியெல்லாம் மாற்றிக் கொள்கிறான் என்றும் மிக தெளிவாக விவரித்துள்ளார். மனிதர்கள் உண்டாக்கும் சின்ன சின்ன இயற்கை மாசுபடுத்தலினாலும் எவ்வாறு இயற்கை சார் உயிரினங்கள் பாதிக்கபடுகிறது எனபதை யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நோக்கில் ஆசிரியர் விவரித்துச்செல்கிறார்.
யானை டாக்டர் நூலில் ஆசிரியர் உணர்வுபூர்வமான உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். யானைகளின் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வாழ்க்கை, அவரது அர்ப்பணிப்பு விவரிக்கப்படுகிறது. அர்பணிப்பு பையும் மிக அழகா விவரித்திருக்கிறார். சாதாரணமாக ஒரு படித்த உயர் அதிகாரிக்கு அவருடன் பணி புரியும் சக ஊழியர்களுடன் ஒரு பிணக்கு இருக்கும். இந்த கதையினை ஆசிரியர், நாங்குநேரியில் இருந்து உயர்படிப்பு படித்து டாப்ஸ்லிப்க்கு வன அதிகாரியாக பணிக்கு செல்லும் ஒருவரிடமிருந்து ஆரம்பிக்கிறார். அப்படியாக வந்து சேரும் அதிகாரி கேட்கும் மற்றும் பார்க்கும் ஒவ்வொருவரும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றி குறைவாக நான்கு ஐந்து வார்த்தைகளாவது பேசாதோர் இல்லவே இல்லை என்று அறிகிறார். அந்த அதிகாரிக்கு ஒரு பக்கம் அந்த டாக்டரை பார்க்கவேண்டும் என்றும் ஒரு எண்ணம் வருகிறது. ஆனாலும் இன்னொரு பக்கம் அதை நிறைவேற்றாமல் தள்ளிவைக்கும் போக்கும் இருந்துகொண்டிருக்கிறது.
அந்த அதிகாரிக்கு டாக்டர் கிருஷ்ணமூர்த்தியினை சந்திக்க இரண்டு மூன்று சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது. இருந்தாலும் என்னமோ ஒரு தயக்கம். அதிலும் ஒரு சமயம் காரில் செல்லும்போது எதிரே நெருக்கத்தில் டாக்டரை பார்க்க நேரிடுகிறது. ஆனாலும் அதிகாரிக்கு டாக்டரிடம் பேச ஒரு தயக்கம். டாக்டர் அதிகாரியின் உதவியாளர் மாரிமுத்துவிடம் நலம் விசாரித்து விட்டுச் செல்கிறார்.
ஒரு சமயம் அதிகாரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை உதவியாளர் மாரிமுத்து யானை டாக்டரிடம் அழைத்து செல்கிறார். வேண்டாம் என்று நினைத்தாலும், போனால் அவரை சந்திக்கலாம் என்று தன் உள்மனம் சொல்வதை கேட்டு மாரிமுத்துவுடன் அதிகாரி யானை டாக்டர் வீட்டிற்கு செல்கிறார். முதலில் தயங்கிய அவர் பின்னர் அந்த சந்திப்பு மிக அழகாக ஆரம்பிக்கிறது. கூடவே டாக்டர் உடனான நட்பு மிக அழகாக பூக்கிறது.
இதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வும் மிக அழகாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் விரிந்து செல்கிறது. வாசிக்கும் நம்மையே அந்த அதிகாரியாக என்னும் அளவிற்கு எழுத்து நடை போடுகிறது.
டாக்டரின் யானைகளுடனான அனுபவங்கள், அவர் யானைகளுடன் உறவாடும் விதம், இறந்த யானைகளின் உடல்களை டாக்டர் பிரேத பரிசோதனை செய்வது என்று அனைத்தையும் அதிகாரி கூடவே இருந்து பார்க்கிறார். நாளடைவில் அந்த அதிகாரி டாக்டரை சந்திக்காமல் ஒரு நாள் கூட இருக்கவே முடியவில்லை என்ற அளவில் ஆகிவிடுகிறது.
இந்த நூலில் டாக்டரின் நோக்கில் ஆசிரியர் யானைகளை எப்படி பராமரிப்பது என்றும் அவைகளுக்கு என்ன தேவை என்றும் மிக தெளிவாக எழுதி இருக்கிறார்.
இறுதியில் அதிகாரிக்கும் டாக்டருக்கும் ஏற்பட்ட நட்பு பெரிதாக வளர்ந்து அவருக்கு பத்மஸ்ரீ விருதுக்கு முயற்சி செய்வதுவரை போகிறது.
இயற்கையினை போற்றி பாதுகாப்போம்.
Sunday, 23 August 2020
ஊர் திரும்புதல் - 23
அந்த நாட்களில் ஊரே புது நெல் வாசனையால் நிரம்பி இருக்கும். அவன் அவனது ஊர்ப் பண்ணை வயல்களுக்கு மட்டும்தான் அறுப்புக்கு போவது வழக்கம். அவனது படிப்பு காலத்தில் அந்த ஓரிரெண்டு வாரங்கள் மட்டும் எப்போதும் அவன் விடுமுறை எடுப்பான். அவன் மட்டுமல்ல அவன் வயதில் இருக்கும் ஐந்தாறு நண்பர்களும் எப்போதும் இதைச் செய்வார்கள். ஏனென்றால், அவன் அறுவடைக்கு ஒருநாள் போனால் குறைந்தது ஒரு கலம் நெல் கூலியாகக் கிடைக்கும். அப்படியே அந்த பதினைந்து நாட்களில் சுமாராக ஒரு பத்து மூட்டை நெல் சேர்ந்துவிடும். அதனால் மூன்று நான்கு மாதங்களுக்கு சாப்பாடுக்கு தேவையான நெல் கிடைத்துவிடும். அவன் ஊரில் இருக்கும் மற்ற வேலைக்கு செல்லும் வாலிபர்களும், அந்த அறுவடை நாட்களில் வேறெந்த வேலைக்கும் போகாமல், அறுவடைக்கு மட்டும் போவது வழக்கம்.
தாளடி வயலில் அறுவடைக்கு முன்னரே உளுந்து பயறு தூவப்பட்டு விதைக்கப்பட்டிருக்கும். அறுவடை நேரத்தில் இருக்கும். உளுந்துப் பயிறு அறுவடை நேரத்தில் ஒரு சான் உயரம் வளர்ந்து இருக்கும். தவறுதலாக அதை அறுத்துவிடாமல், லாவகமாக நெற்பயிரினை மட்டும் அறுக்க வேண்டும். நெற்கதிர்களை அறுவடை செய்வது என்பது சாதாரண வேலை இல்லை. அதுவும் கதிர்களை அறுத்து தாள்களின் மீது போடவேண்டும். அதற்கும் ஒரு அளவு உண்டு. ஏனெனில் மறுநாள் அதனை கட்டி களத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக அந்தக் கதிர்கள் காய்ந்து இருக்க வேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்து கதிர் அறுக்க வேண்டும். இல்லையெனில் வேலை தெரிந்தவர்கள் கோபப்படுவார்கள்.
அறுவடைக்கு பயன்படுத்தும் கதிர் அரிவாள் பெரிதாக வளைந்து கூர்மையாக இருக்கும். அதனைக் கொண்டு அறுவடை செய்வது சிலருக்கு நிரம்பவே கடினமான வேலைதான். அப்படித்தான் அவனுக்கும் முதல்நாள் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் அவன் மற்ற ஆட்களுக்கு சமமாகவும் அவனது பங்கினை சரியாக அறுவடை செய்துவிடுவான். நெல் அறுவடை எப்போதும் ஒரு குழுவாக செய்யும் வேலை. சிலர் வேகமாக அறுத்து விட்டு பின்னால் இருப்பவர்களின் கதிர்களையும் அறுத்துக் கொடுப்பார்கள்.
ஊர் திரும்புதல் - 7
ஊர் திரும்புதல் - 8
ஊர் திரும்புதல் - 9
ஊர் திரும்புதல் - 10
ஊர் திரும்புதல் - 11
ஊர் திரும்புதல் - 12
ஊர் திரும்புதல் - 14
ஊர் திரும்புதல் - 15
ஊர் திரும்புதல் - 16
ஊர் திரும்புதல் -17
ஊர் திரும்புதல் - 18
ஊர்திரும்புதல் - 19
ஊர்திரும்புதல் - 20
ஊர் திரும்புதல் - 21
Tuesday, 11 August 2020
கரை தொடா அலைகள் - சிறுகதை தொகுப்பு
கரை தொடா அலைகள் - சிறுகதை தொகுப்பு
ஆசிரியர் : மனிதரில் புனிதர் பா. அய்யாசாமி
சமீபத்தில் கிண்டிலில், ஆசிரியர் மனிதரில் புனிதர் பா. அய்யாசாமி அவர்களின் இரண்டாவது சிறுகதை தொகுப்பான கரை தொடா அலைகள் வாசிக்க வாய்ப்புக்கிடைத்தது.
எழுத்தாளர் எமது மயிலாடுதுறை மண்ணின் மைந்தர். அவர் எழுதிய மற்றைய நூல்கள்: உயிரோவியம், சுட்ட தோண்டிகள், அழமட்டுமா விழிகள். இந்த தொகுப்பில், 'முன்னாள் காதலி' தொடங்கி, 'பிரியா வரம்', என பதிமூன்று சிறுகதைகளை பெரிதும் பாச உணர்ச்சியின் போக்கிலே எழுதியிருக்கிறார்.
பொதுவாக ஒரு ஆசிரியர் எப்போதும் அவர்களின் மண்ணின் வாசனையுடனே ஒரு கதையினை எழுத முற்படுவார்கள் என்பது உண்மையே. நமது தொகுப்பின் ஆசிரியரும் விதிவிலக்கு இல்லை. ஒவ்வொரு கதையிலும் மயிலாடுதுறையையும், அதனைச் சுற்றி உள்ள ஊர்களையும் கதைகளில் பதிவு செய்திருக்கிறார்.
முன்னாள் காதலி:
ஓரே தெருவில் வசித்தும், ஓரே பள்ளியில் பயின்றும், இரண்டு மனங்களும் நேசித்து ஓன்று சேர்ந்து வாழ்வதென்பது சில அல்ல பல நேரங்களில் ஒரு பெரிய போராட்டம்தான். அப்படித்தான், அவர் தனது முன்னாள் காதலி சாந்தியினை, நிகழ்காலத்தில் கணவனை இழந்த ஒரு விதவையாக இரண்டு குழந்தைகளுடன் வெகு நாட்களுக்கு பின்னர் அதே தெருவில் சந்திக்கிறார். மன வேதனையினால் அவரே மறுமணம் செய்துகொள்கிறேன் என்றும் சொல்கிறார். அதற்கு அப்பாவின் முட்டுக்கட்டை அவரை சாதாரண மனிதராகவே திருப்பி விட்டது. சாந்தியும் இட்லிக்கடை போட்டு தனக்கென ஒரு வாழ்க்கை அமைத்துக்கொள்கிறார். போராடி பிள்ளைகளை வளர்க்கிறார். வளர்ந்த மகனும் இறந்துவிட, மீண்டும் அதே இட்லிக்கடை, கடைசியில் இட்லிக்கடை பணம் கொடுத்ததோ இல்லையோ அந்த பெண்மணிக்கு காச நோய் வந்துவிடுகிறது. அருகில் கூட வந்து பேசாத அவருடைய மகளிடம் இருந்து விலக்கி, கதாநாயகன் தன்னுடைய முன்னாள் காதலியை ஒரு அன்பு இல்லத்தில் சென்று சேர்த்துவிடுகிறார். சேர்கிறார். அந்தப்பெண்மணி கடைசி மூச்சினை அன்பு இல்லத்தில் விடுகிறார். அந்த முன்னால்காதலியின் இறுதிச்சடங்குகளை கதாநாயகனே செய்கிறார்.
ஆணைக் கால் குவளை:
இந்த கதை ஒரு நடுத்தர குடும்பத்தின் எதார்த்த வாழ்வியலை மிக அழகாக விவரிக்கிறது. நம்மில் பலரும் இன்றளவும் சில பொருள்களின் மீது உயிரினும் மேலான சில பற்றுகளை வைத்திருப்போம். அதையே இந்த கதை சொல்கிறது. கிராமத்தில் வறுமையில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஆணைக் கால் குவளையில் சுண்ணாம்பினால் சேட்டு அடகுக்கடையில் எழுதிய எழுத்து மறையாமலே இருக்கும் என்பது தெரிந்த உண்மையே.
இனிய தோழா :
இந்த கதை ஒரு தெருவில் வசிக்கும் ஒரு ஆணும் பெண்ணும் எவ்வளவு நட்புடன் வளர்க்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு இடையே இருக்கும் நட்பின் மீதான நம்பிக்கையும் அழகாக எழுதியிருக்கிறார்.
ஈதலிசை:
காதல் திருமணம் செய்து கொண்ட மகனிடம் சேராமல் இருந்த பெற்றோர், தனது மகளின் வாழ்வுக்காக மகனிடம் வருகிறார்கள். தனது சகோதரிக்கு உதவி கேட்டு மகன் கொடுக்க மறுக்கும் போது, அவர்கள் ஒதுக்கிவைத்த மருமகள், தனது நகைகளை கொடுத்து உதவ சொல்வதில் தெரிகிறது அவளின் ஈதல் குணம்.
ஆபீஸ் பாய்:
ஒன்றாக படித்து வளர்கிறார்கள் சங்கரும், பிரியாவும். சங்கர் மேல்படிப்பு படிக்காமல் ஒரு அலுவகத்தில் ஆபிஸ் பாய் வேலை செய்வதும், அதே ஆபிசில் பிரியா வேலைக்கு சேர்வதும், இவர்களுக்கு இடையே இருக்கும் நடிப்பினை அழகாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
ஓய்வு ஊழியம் :
இந்த கதையில் ஒரு மருமகன் தனது மாமனாரை ஒரு மகனாக இருந்து, ஓய்வு காலத்தில் பாசத்துடன் பார்த்துக்கொள்வதை சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
கரை தொடா அலைகள்:
சுனாமியில் இழந்த தனது ஒரே மகனை கண்டுபிடிக்க முடியாதலால் ஒவ்வொரு வருடமும், சுனாமி தினத்தன்று, வேளாங்கண்ணி சென்று நினைவுகூர்தலை வழக்கமாக வைத்திருந்த அந்த பெற்றோர், நடப்பு வருடம் தங்களது வளர்ப்பு நாயினை கூடவே அழைத்து செல்கின்றனர். இந்த முறை அங்கே வந்திருந்த ஒரு இளைஞனை கண்டு அவர்களின் நாய் போய் தழுவிக்கொள்கிறது. இதை அறிந்த அவர்கள் அவனை விசாரித்தனர். அதில் அவன் தான் அவர்களின் தொலைந்துபோன மகன் என்பது தெரிந்தும் அவர்களால் அவனை சொந்தம் கொண்டாடமுடியாமல் தவிக்கின்றனர். அவன் தொலைத்த தினத்திலிருந்து வேறு ஒரு பெண் அவனை வளர்த்து வந்திருக்கிறாள். அவளுடன்தான் அவர்களுடைய மகன் அங்கே வந்திருந்தான். கடைசியில் வளர்த்த தாயிடம் அதை சொல்லி அவன்தான் தங்கள் மகன் என்று தெரிந்தும், ஒரு பிள்ளையினை இழந்து துடிப்பது எவ்வளவு துயரம் என்பதை உணர்ந்த அவர்கள், அவனை வளர்த்த தாயிடமே விட்டு விட்டு மனிதாபிமானத்துடன் திரும்புகின்றனர்.
காதல் ஓய்வதில்லை:
நாச்சியார் கோவிலில் நடந்த ஒரு அழகிய காதல் கதை இது. கடைசி வரைக்கும் நிறைவேறாத காதலானது அது. பல ஆண்டுகளுக்கு பின்னர் தங்கள் பூர்விக ஊருக்கு திரும்ப வந்த காதலன் கலையிழந்த தனது காதலியை சந்திக்க நேரிடுகிறது. அவன் நினைவாகவே இருந்து திருமணமே செய்யாமல் இருந்த அவனுடைய காதலி காயத்ரிக்கு ஆறுதலாக பேசியவனிடம், அவனுடைய குடும்பம் எப்படி இருக்கிறது என்று கேட்டுவிட்டு அவள் தனக்கே உரித்தான தனிமையில் மீண்டும் ஆழ்ந்துவிடுகிறாள்.
காவல்காரன்:
இந்த கதையில் காவல் காக்க வேண்டிய காவல்காரனை விட ஒரு நாய் ரொம்ப நன்றியுள்ளது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறார்.
சுமைத் தாங்கி:
பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் ஒரே பகுதியில் வசிப்பதும் அவர்கள் பணி புரிவதையும் அழகாக மண் வாசனையுடன் சொல்லியிருப்பதும் இறுதியில் ஓட்டுனர் தன் உயிரை கொடுத்து பயணிகளின் உயிர்களை காப்பாற்றுவதும் பின்னர் ஓட்டுனரின் மகளையே தனது மருமகளாக்கி கொள்வதும் என மணி ஒரு சுமை தாங்கியாகவே வாழ்கிறார்.
நட்பதிகாரம்:
இந்த கதையில் கூடவே படிக்கும் நண்பனின் கடினமான சூழ்நிலையினை தெரிந்து அவனுக்கு நேரடியாக பணம் கொடுத்து உதவினால் நன்றாக வாழ்ந்த அவர்களுக்கு அது ஒரு இழிவாக இருக்கும் என்பதினை குறிப்பறிந்து, தனது தந்தை வழியாக அவர்களின் கட்டுமான நிறுவனத்திற்கு தேவையான எல்லா மூலபொருள்களையும் அந்த நண்பனின் தந்தை நடத்தும் நிறுவனத்திடம் வாங்க சொல்லி கேட்டுக்கொள்கிறான். இப்படியாக தனது நண்பனுக்கு ஒரு பெரிய உதவியினை அவனுக்கு தெரியாமலே செய்து தனது நட்புக்கு பெருமை சேர்த்தான்.
பச்சை துண்டு:
கதிராமங்கலத்தில் பிறந்து வளர்ந்து இளைஞன் புவனேஷ் பெங்களூரில் பணி புரிய சென்றதால், அங்கு அவனது நண்பனின் பெற்றோர்கள் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி சோதிடம் பார்ப்பதற்காக வந்தார்கள். அவர்களை கிராமத்தின் வாசனையுடன் வரவேற்று உபசரித்து வைத்தீஸ்வரன் கோவில், பூம்புகார் மற்றும் சுற்றுப்புறத்தில் இருக்கும் பல கோவில்களுக்கு சென்று வந்தனர். குளிப்பதற்கு மோட்டார் போட்டவுடன் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வந்ததால் அதிர்ச்சியடைந்த நண்பனின் அப்பா ஏன் இப்படி வருகிறது என்று கேட்கிறார். அதற்கு காரணம் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம். ஆசிரியர் கதையில் மேற்படி திட்டங்களை பற்றி விளக்குகிறார். அது ஆசிரியரின் ஊர் மீதான அக்கரையினை காட்டுகிறது.
பிரியாத வரம் :
திருமணமாகி 32 வருடங்கள் ஆன ஒரு தம்பதியின் பிள்ளைகள், அவர்களுடைய திருமணம் முடிந்தவுடன், தனியே குடித்தனம் போய்விடுகிறார்கள். வாழ்வில் பல ஏற்ற இறங்களினால் கிடைக்கும் எல்லா அனுபவங்களும் இறுதிக்காலத்தில் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழும்போதும் காலம் விட்டுவைப்பதில்லை என்பதே உண்மை. இருவரும் கரங்கள் கோர்த்தபடி ஓய்ந்து போவது அன்பின் எல்லை.
நல்லதொரு சிறுகதை தொகுப்பினை வாசித்த இனிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
ராம.தேவேந்திரன்
Saturday, 8 August 2020
தாலிபன் புத்தகம் வாசிப்பு அனுபவம்
அந்த விடைகளை தேடியே நான் ஆசிரியரின் 'தாலிபன்', நூலை வாசிக்கத் தொடங்கினேன். எனது நம்பிக்கை வீண்போகவில்லை!. நான் தேடிக்கொண்டிருந்த பதில்கள் ஒவ்வொன்றுக்கும், ஆசிரியர் மிக மிக அழகாக, ஒவ்வொரு அத்தியாயமாக, இந்த புத்தகத்தில் பூச்சரம் போல தொடுத்து கொடுத்துள்ளார்.
ஆசிரியரின் மற்ற புத்தகங்களை போலவே, நிறைய செய்திகளை உள்ளடக்கிய ஒரு நூல் இது. தாலிபன்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பும் எவரும் இந்த நூலினை வாசிக்கலாம்.
இனிய வாசிப்பு அனுபவங்களுடன்
நன்றி
ராம. தேவேந்திரன்








